Saturday, December 30, 2006

219.சொர்க்கவாசல் திறந்த விக்ரம்

ஒருவர் உலகப்புகழ் பெற்ற யேல் பல்கலைகழகத்தில் எம்.ஏ பட்டம் பெறுகிறா. அதன்பின் யுனிவர்சிடி ஆஃப் சிகாகோவில் முனைவர் பட்டம் பெறுகிறார்.ஃபுல்ஃப்ரைட் ஸ்காலர் ஆக சிறப்பும் பெறுகிறார் என் வைத்துக்கொள்வோம்.அடுத்ததாக அவர் என்ன செய்வார்?

பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றில் 250K சம்பளம் வாங்கிக்கொண்டு யாட் ஒன்றை வாங்கிக்கொண்டு ஜாலியாக விடுமுறை எடுத்துக்கொண்டு காலத்தை கழிப்பார் என்று தான் நினைப்போம்.

ஆனால் விக்ரம் அகூலா அப்படி செய்யவில்லை.

பத்தாண்டுகள் மைக்ரோ பைனான்ஸ் துறையில் அனுபவம் பெற்றார். அதன்பின் நேராக இந்தியா வந்தார். எஸ்.கே.எஸ் மைக்ரோ பைனான்ஸ் எனும் கம்பனியை துவக்கினார். கம்பனியின் நோக்கம் கந்துவட்டியில் சிக்கி தவிக்கும் மிக வறுமையான பகுதிகளில் இருக்கும் அடித்தட்டு ஏழை பெண்களுக்கு கடனுதவியும், இன்சூரன்சும் அளிப்பது.

எஸ்.கே.எஸ் இன்று உலகின் அதிக வளர்ச்சி பெறும் மைக்ரோபைனான்ஸ் நிறுவனமாக மாறி உள்ளது.இதுவரை $72 மில்லியன்(280 கோடி) ரூபாய் கடனை 300,000 பெண்களுக்கு வழங்கி உள்ளது.ஓன வருடம் மட்டும் $50 மியன் கடனை வழங்கி உள்ளது.இந்தியாவின் மிக வறுமையான 11 மாநிலங்களில்(சட்டிஸ்கார்,ஜார்கண்ட், அந்திரா, ராஜஸ்தான்,ஒரிசா, ம.பி, உ.பி,,பீகார்) செயல்பட்டு வரும் இந்நிறுவனம் அடுத்த வருடம் 7 லட்சம் பயனாளிகளை இலக்காக வைத்திருக்கிறது.

பணக்காரர்களுக்கே கடன் தந்தால் பணம் திரும்ப வருவதில்லை.அப்படி இருக்க ஏழைகளுக்கு கடன் தந்தால் பணம் திரும்பி வரவா போகிறது என்று நினைக்கிறீர்களா?அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்.விக்ரமின் நிறுவனத்தில் 98% கடன்கள் சொன்ன தேதியில் வசூலாகின்றனவாம்.

விக்ரமின் நிறுவனத்தில் கடனுதவி பெறுபவர்கள் ஒரு நாளைக்கு $2க்கும் குறைவான வருமானத்தில் வாழ்பவர்கள்.அவர்களுக்கு சுமார் 5000 ரூபாய் அளவு கடனுதவி வழங்குகிறார் விக்ரம். கடன் பெறுபவ்ர்கள் அந்த கடனை ஆடு/கோழி வளர்த்தல், பழம்/காய்கறி வாங்கி விற்பது, மண்பானை செய்வது, கூடை முனைவது போன்றவற்றுக்கு பயன்படுத்துகிறார்களாம். ஆபத்துகாலங்களில் வட்டி இல்லாத கடன் கூட வழங்குகிறாராம் விக்ரம் அகூலா. அதுபோக கடனாளிகளுக்கு இன்சுரன்ஸ் வசதியும் செய்து தருகிறாராம். அதுபோக எஸ்.கே.எஸ் கல்விநிறுவனங்கள் மூலமாக பள்ளியிலிருந்து பாதியில் நின்ற பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியும் அளிக்கப்படுகிறதாம்.

இவரது சேவையை பாராட்டி டைம் பத்திரிக்கை இவரை "புதிய உலகை உருவாக்கும் நூறு சிற்பிகளுல் ஒருவர்" என்று கவ்ரவ்திருக்கிறது.

காசு,பணம், வசதி,ஆடம்பரம் என அனைத்தும் நிரம்பிய வாழ்வை உதறி விட்டு "நாடென்ன செய்தது எனக்கு?" என கேட்காமல் 'நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?" என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டதால் தான் கிட்டத்தட்ட 7 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு சொர்க்க வாசலை திறக்க விக்ரம் அகூலாவால் முடிந்திருக்கிறது.

வைகுண்ட ஏகாதசியான இன்று விக்ரமனை வாழ்த்தி வணங்குவோம்.

அட...நான் திரிவிக்ரமனை சொன்னேனுங்க.

அனைவருக்கும் எனது இனிய வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள்.

23 comments:

SP.VR. SUBBIAH said...

அவருடைய மின்னஞ்சல் முகவரியைப் பிடித்துக் கொடுங்கள் மிஸ்டர் செல்வன்
பாராட்டி ஒரு வாழ்த்துமடல் அனுப்புகிறேன்

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு செல்வன்...

Unknown said...

வாத்தியார் ஐயா,

அவரது மின்னஞ்சல் முகவரி இல்லை என்றாலும் அவரது வலைதளத்தில் அவரை தொடர்பு கொள்ள கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு இதோ

http://www.sksindia.com/contactus.htm

Unknown said...

மிக்க நன்றி பாலாஜி

VSK said...

நலிந்த பலருக்கு சொர்க்கவாசல்லக இருந்துவரும் இவரைப் பற்றி ஒரு பதிவு மூலம் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி, செல்வன்!

த்ரீ சியர்ஸ் டு விக்ரமன்!

VSK said...

This is the comment I have sent to the id!

I came to know of your noble work thru one of my friends' Tamil Blog

http://holyox.blogspot.com/2006/12/219.html

I appreciate what you do for the downtrodden and wish you all the best!

Anonymous said...

very good posting sir,
Please write like these people.Its giving a good driving post for the people,those who read your blogg.

Unknown said...

எஸ்.கே

விக்ரமுக்கு மடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி.இதுபோன்ற மால்கள் அவருக்கு நிச்ச்யம் ஊக்குவிப்பு அளிப்பதாக இருக்கும். ஏழைகளுக்கு சொர்க்கவாசலை திறக்கும் இவரை போல் பலர் இந்தியாவின் பல இடங்களில் இருப்பார்கள்.அவர்களை முடிந்தவரை வெளிச்ச்கதுக்கு கொண்டுவருவது அவர்களை போல் செயல்பட பலரை ஊக்குவிக்கும் என கருதுகிறேன்.

Unknown said...

Anonymous,

Thanks.I will post more about such patriots.

Thanks
selvan

குமரன் (Kumaran) said...

திருவிக்ரமனையும் வாழ்த்தி வணங்குவோம். இந்த விக்ரமையும் வாழ்த்தி வணங்குவோம். தைவ மனுஷ்ய ரூபேண - கடவுள் மனித உருவில் வருவார் என்று தானே பெரியவர்களும் சொல்லியிருக்கிறார்கள். இந்த மைக்ரோ பைனான்ஸ் பற்றி நானும் இங்கே சில வார இதழ்களில் படித்திருக்கிறேன் செல்வன். இவரைப் பற்றி படித்ததாக நினைவில்லை. இன்று படித்து அறிந்து கொண்டேன். நன்றி.

கால்கரி சிவா said...

செல்வன், மிக நல்ல தகவல்கள். வாழ்க விக்ரம்.

சமீபத்தில் நோபல் பரிசு பெற்று பங்களாதேசத்தை சேர்ந்தவரும் இதைத் தானே செய்தார்.

BadNewsIndia said...

வழக்கம் போல் இன்னுமோரு கலக்கல் ஊருக்கு தேவையான பதிவு.

தொடரட்டும் செல்வன்.

நீங்க சொல்லவில்லை என்றால், விக்ரம் பற்றி கண்டிப்பா பலருக்கு தெரிந்து இருக்காது.

Spread positive air like this, atleast once a month.
We badly need this in our blog world.

கோபிநாத் said...

அருமையான பதிவு செல்வன்..

உண்மையில் அவரும் ஓரு கடவுள் தான்..

Santhosh said...

செல்வன்,
ஒரு நல்ல நபரை பற்றி அறிமுகம் செய்து இருக்கிங்க. நீங்க ஏன் இது மாதிரியான சாதனையாளர்களுக்காகவே ஒரு வலைபதிவை துவங்கக்கூடாது?

Unknown said...

குமரன்,

நன்றி.இந்தியாவுக்கு இவரை போல் மனித ருபத்தில் வரும் நிறைய கடவுள்கள் தேவை.அப்படி ஒரு கடவுளாக பல இந்திய இளைஞர்கள் உருவெடுக்க வேண்டும்.

சிவா,

ஆம்.வங்கதேசத்தவரை போல் விக்ரமுக்கும் விரைவில் நோபல் பரிசு கிடைக்கும் என நம்புவோம்.

Unknown said...

பேட் நியூஸ் இந்தியா

மிக்க நன்றி.நிச்சயம் இதுபோல் பல பாஸிடிவான செய்திகளை எழுத உள்ளேன்.

கோபினாத்,

உண்மைதான். குமரன் சொன்னது போல்
தைவ மனுஷ்ய ரூபேண - கடவுள் மனித உருவில் வருவார் என்றுதான் சொல்லவேண்டும்

Unknown said...

நன்றி சந்தோஷ். இதுபோல் நிறைய செய்திகள் கிடைக்கும் என்று தெரிந்தால் கண்டிப்பாக இன்னொரு வலைபூவை தொடங்குவேன்.

Anonymous said...

Its very happy to know like these Great Person. Thanks to $elvan

Anonymous said...

தகவலுக்கு நன்றி - நல்ல பதிவு

நரியா said...

அருமையான பதிவு செல்வன். இந்த மாதிரி ப்ளாக் படித்தால் தான் பல விவரங்கள் தெரிய வருகிறது.

திரு விக்ரமன் அவர்களின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்.

Unknown said...

வணக்கம் நாரியா

நலமா?நீங்கள் பதிவுபோட்டு பலநாட்கள் ஆனமாதிரி இருக்கிறது.வேலைபளு அதிகமா?
விக்ரம் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவரே

நரியா said...

வணக்கம் செல்வன். நலம். நீங்கள் நலமா? வேலை பளு அதிகம் தான். இருப்பினும் தமிழுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று இந்த புத்தாண்டில் உறுதி எடுத்துள்ளேன்.

Unknown said...

நல்ல முடிவு நாரியா.நான் நலம். புத்தாண்டில் நல்ல பதிவுகளை இட்டு உங்கள் தமிழ்ப்பணியை தொடர வாழ்த்துகிறேன்.

அன்புடன்
செல்வன்