அமெரிக்க கம்பனிகள் கீதையின் மேல் காதல் கொள்ள துவங்கியிருப்பதாக தெரிவிக்கும் பிஸினஸ் வீக் அதை பற்றி ஒரு சிறப்பு கட்டுரை எழுதியுள்ளது. கீதையில் உள்ள நிர்வாக மற்றும் சுயமுன்னேற்ற கோட்பாடுகள் அமெரிக்க கம்பனிகளை பெரிதும் கவர்வதாக பிஸினஸ் வீக் குறிப்பிட்டுள்ளது.
ஸ்வாமி பார்த்தசாரதி எனும் வேதாந்த உபன்யாசகர் உலகின் மிகப்புகழ் பெற்ற பிஸினஸ் பல்கலைக்கழகமான வார்ட்டனில் கீதையை பயன்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என மாணவர்களுக்கு வகுப்பெடுத்தாராம். அமெரிக்காவின் நிதி மற்றும் முதலீட்டு வணிகர்கள்(வென்சர் கேபிடலீஸ்டஸ்) நிரந்தரமாக மன அழுத்தத்தில் சிக்கியிருப்பவர்கள். அவர்களுக்கு ரை, நியூயார்க்கில் ஸ்வாமி பார்த்தசாரதி நடத்திய வகுப்பில் பொருளை தேடி உள்மன அமைதியை தொலைப்பதை பற்றி கீதை சொல்லியிருப்பதை குறிப்பிட்டு பேசினார் என்கிறது பிஸினஸ் வீக்.
லீமன் பிரதர்ஸ் எனும் கம்பனியில் பார்த்தசாரதியிடம் ஒரு இன்வஸ்ட்மண்ட் பாங்கர் தனது சகபணியாளர்கள் உருவாக்கும் அவஸ்தையை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதற்கு பார்த்தசாரதி "அவர்களை உன் மனதிலிருந்து அகற்றிவிடு" "உன் வாழ்வை நீ தான் உருவாக்குகிறாய்" என்று பதில் சொன்னதை குறிப்பிட்டு சிலாகிக்கிறது பிஸினஸ் வீக்.
ஸ்வாமி பார்த்தசாரதியின் உரைகள் ஒரு சாம்பிள் தான் என்கிறது பிஸினஸ் வீக். அமெரிக்க கம்பனிகள் இந்திய தத்துவத்திலும் நூல்களாலும் கவரப்படுகின்றன என்கிறது பிஸினஸ் வீக். அமெரிக்க கம்பனிகள் இந்திய தத்துவத்தை தழுவுகின்றன (American firms embrace Indian philosophy) என்றே சொல்லி சிலாகிக்கிறது பிஸினஸ் வீக்.
பகவதகீதை என்றில்லை, பல இந்திய தொன்மையான நூல்கள் அமெரிக்க கார்ப்பரேட்களாலும் கன்சல்டன்ட்களாலும் பயன்படுத்தப்படுகின்றனவாம். அமெர
இந்திய நூல்கள் போதாது என்று இந்தியர்கள் புகழ் பெற்ற மானேஜ்மன்ட் குருக்களாகவும் புகழ் பெறுகின்றனராம். சி.கே பிரஹலாத், ராம்சரண், விஜய் கோவிந்தராஜன் போன்ற கன்சல்டன்ட்கள் உலகின் புகழ் பெற்ர பிஸினஸ் குருக்களாக இருக்கின்றனர் என்கிறது பிஸினஸ் வீக்.
"கெல்லாக், வார்ட்டன், ஹார்வர்ட், டார்மவுத் ஆகிய புகழ் பெற்ற ஐவி லீக் பிஸினஸ் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் இந்திய கலாச்சாரத்தையும், அதன் சிறப்பியல்புகளையும் அறிந்து கொள்கின்றனர்" என கெல்லாக் பிஸினஸ் ஸ்கூலின் டீனான தீபக் ஜெயின் தெரிவிக்கிறார்.
வணிகம் என்பது லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது எனும் இந்திய கொள்கை வெகுவாக வரவேற்பு பெறுவதாக சொல்கிறது பிஸினஸ் வீக். வணிகம் சமூக நலனை தான் முக்கியமாக கருதவேண்டும் எனும் இந்திய கலாச்சார கோட்பாடு வணிக நிர்வாக உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும் என்றும் பிஸினஸ் வீக் கணிக்கிறது.
கீதை வழி நிர்வாகத்தை "இன்க்ளூசிவ் கேபிடலிசம்(Inclusive capitalism)" என்கிறார் சி.கே பிரஹலாத். சமூகநலனையும், லாபத்தையும் கம்பனிகள் ஒருங்கே உருவாக்க வேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படை.
கீதை வழி நிர்வாகத்தை "கர்மா கேபிடலிஸம்" என்றே அழைக்கிறது பிஸினஸ் வீக். என்ரான், டெக்னாலஜி பப்பிள் என வெறுத்து போயிருக்கும் அமெரிக்கர்கள் கீதையை மனதார காதலிக்கின்றனராம். அமெரிக்காவின் தற்போதைய புகழ் பெற்ற கிழக்கின் மானேஜ்மெண்ட் நூல் கீதைதான் என சொல்லுகிறது பிஸினஸ் வீக். ஸ்ப்ரிண்ட் நெக்ஸ்டெல் கார்ப்பரேஷனின் மானேஜர் ஒருவர் எழுதிய "Bhagavad Gita on Effective Leadership" என்ற நூல் விற்பனையில் சக்கைபோடு போட்டதாம்.
ஜெனெரல் எலக்ட்ரிக்கின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி எம்மெல்டுக்கு பயிற்சி அளிக்கும் ராம்சரண் "கடமையை சுயநலத்தை விட பெரிதாக வலியுறுத்தும் கீதை கார்ப்பர்ரெட் நிர்வாகத்துக்கு அளப்பரிய பொருத்தம் வாய்ந்தது" என்கிறார்.
இந்திய தத்துவமரபு அமெரிக்க கம்பனிகளுக்குக்கு மிகப் பொருத்தமானது என புகழாரம் சூட்டுகிறது பிஸினஸ் வீக். சந்தையியல் துறைக்கும் கீதை பொருத்தமானது, சிறப்பு வாய்ந்தது என சொல்கிறது பிஸினஸ் வீக்.
"எவன் என்னை பிறப்பற்றவன் என்றும் அநாதியானவன் என்றும் உலகங்களுக்கெல்லாம் தலைவன் என்றும் அறிகிறானோ அவனே தன்னை அறிந்தவன். என்னை நன்றாக அறிந்த மனிதனே தன்னை நன்றாக அறிந்தவனாகிறான்.அவனே மனச்சாந்தி அடைகிறான்" - கீதையில் கண்ணன்.
(நன்றி பிஸினஸ் வீக்)
29 comments:
அன்பின் செல்வன்,
மிக்க நன்றி. இந்த கட்டுரையை இங்கே இட்டமைக்கு. படிக்கவும், நினைக்கவும்
மகிழ்வாக உள்ளது.
சட் ட்சூவின் "ஆர்ட் ஆப் வார்" இடத்தை கீதை பிடித்துள்ளது. இதே போல காலப் போக்கில் மற்றொரு புத்தகம் கீதையின் இடத்திற்க்கு வரலாம். நிலையாமையை கருத்தில் கொண்டு இன்புற்றால் நாளை கவலையும் வராது....
தங்களின் இந்த கட்டுரையை ...
http://www.tamilpayani.com/tamilsatiram/viewtopic.php?p=2244#2244
... ல் மறுவெளியிட்டு உள்ளேன்.
அன்புடன்,
சிவா
இக்கட்டுரைக்கு மிகவும் நன்றி.
கீதையின் மகத்துவம் அறியாதவர்கள் அஞ்ஞானிகள் என கண்ணன் கூறினான். நம்மூரில் கீதையை இழித்தும் பழித்தும் பேசும் முட்டாள்கள் ஏராளமானோர் இருக்க அமெரிக்கர்களாவது புத்திசாலிகளாக இருப்பதை கண்டு சந்தோஷம்.
தொடர்ந்து கீதையை பற்றி பல கட்டுரைகள் எழுதுங்கள். அதில் உள்ள ஆன்மிக புதையல்களை வெளியே கொண்டு வாருங்கள்.
//அவர்களை உன் மனதிலிருந்து அகற்றிவிடு" "உன் வாழ்வை நீ தான் உருவாக்குகிறாய்" //
இதையெல்லாம் கேட்டே அமெரிக்கர்கள் மெய் சிலிர்ப்பதைப் பார்க்கும் போது, நம்ம பித்தானந்தாவை பேக் பண்ணி உங்கூருக்கு அனுப்பிடலாமான்னு தோணுது :)))
(ஸ்வாமிஜி, ஐடியா சொன்ன சிஷ்யைக்கு ஒவ்வொரு சிற்றுரையின் முடிவிலும் 25% கமிஷன் வந்தாக வேண்டும், ஆமாம் சொல்லிட்டேன் ;) )
பொன்ஸ்,
:-))))
//இதையெல்லாம் கேட்டே அமெரிக்கர்கள் மெய் சிலிர்ப்பதைப் பார்க்கும் போது, நம்ம பித்தானந்தாவை பேக் பண்ணி உங்கூருக்கு அனுப்பிடலாமான்னு தோணுது :)))//
இதெல்லாம் நம்மூருக்கு பழசு. அவங்களுக்கு புதுசு.
இங்கே வந்த புதுசில் வால்மார்ட்டை பார்த்து பிரமித்து நின்றேன். இப்ப பழகிடுச்சு. பிரமிப்பா இல்லை.
என்னடா மனுசன் இன்னும் இதை பத்தி எழுதவே இல்லையேன்னு பார்த்தேன்....
நன்றி சிவா
அனானிமஸ்,
கீதையை பற்றி முழுக்க எழுத இயலாது.ஆன்மிக பதிவுகள் எழுதும்போது கீதையை பற்றி அவ்வப்போது எழுதுகிறேன்.
நன்றி
செல்வன்
சன் ஸ்டூவை ரொம்ப காலம் பிடித்து தொங்கிகொண்டு இருந்திருக்கிறார்கள்.
இனிமே கீதை...ஹ்ஹ்ஹி.
பார்க்கலாம் அடுத்த பாதாஞ்சலி யோகம் அப்பிடீன்னு எவனாச்சும் ஆரம்பிக்கலாம்.
சமுத்ரா
என்னோட ஃபேவரைட் கார்ல் வான் க்ளாஸ்விட்ஸின் "த வார்". சன்ட்ஸூவை படித்ததில்லை. அல்ரைஸும், ஜாக் ட்ரவுட்டும் க்ளாஸ்விட்சை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
கர்மா கேபிடலிசம் அப்படின்னு இப்பத்தான் மெதுமெதுவா கீதை மானேஜ்மெண்டில் தலை காட்டுது.எங்க பல்கலைகழக் கணிததுறையில் ராமானுஜன் பெயரில் ஆய்வுக்கூடமே இருக்கு. நாமக்கல் எங்க ஊருக்கு ரொம்ப பக்கம்ன்னு சொல்லிக்கிட்டேன்:-))
Amazing post selvan.I am really ashamed of myself for not reading Geetha till now.You really opened my eyes.
மிக்க நன்றி தினேஷ்.
நானும் கீதையை முழுக்க படித்ததில்லை. இனிமேல் தான் படிக்க வேண்டும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் நிருவாக மேலாண்மை (MBA) பட்டங்களுக்காக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அவற்றுக்கான பாடத்தில், சுமார் 1000 திருக்குறள்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் கருத்துகள் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் சேர்க்கப்பட்டுள்ளன! என்று,
THE HINDU நாளேட்டிற்கு, அமெரிக்க வாழ் பேராசிரியர் ஒருவர் கட்டுரை வரைந்திருக்கிறார். அக்கட்டுரை, 31.12.199 அன்று, திருவள்ளுவர் அரைப்பக்க படத்துடன், இரண்டு பக்கக் கட்டுரையாக வந்துள்ளது.
இது உண்மை. திருக்குறள் நிருவாக மேலாண்மைப் பற்றிப் பேசுகிறது. பகவத் கீதை போர்க்களத்தில் கூறப்பட்டது.நிருவாகத் திறனைக் கூறுவதாகக் கூறுவது விந்தயிருக்கிறது.
முனைவர் இர.வாசுதேவன்
ஏகாதிபத்திய அமெரிக்காவில் பார்ப்பனீய கீதை கொண்டாடப்படுவதில் ஆச்சர்யமில்லைன்னு இதுவரைக்கும் பகுத்தறிவுச் சிங்கங்கள் யாரும் பாய(சொல்ல)லியே!
போர்க்களத்திற்கும் உலகளாவிய சந்தைக்களத்திற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை! கீதை தான் செய்யவேண்டியதை உணர்வுகளோடு குழப்பித் தடுமாறும் அர்ஜூனன் போன்ற கம்பெனி எக்ஸிக்யூடிவ்களுக்கும் வெகுவாய் பொருந்தும்!
செல்வன்,
யூ மீன் Principles of War by Carl von Clausewitz ?
//நாமக்கல் எங்க ஊருக்கு ரொம்ப பக்கம்ன்னு சொல்லிக்கிட்டேன்:-)) //
ரொம்ப பக்கந்தானே? என்ன கட்டைவண்டியில் போனா நாலு நாள் ஆகும்.
//யூ மீன் Principles of War by Carl von Clausewitz ?//
Yes.
//ரொம்ப பக்கந்தானே? என்ன கட்டைவண்டியில் போனா நாலு நாள் ஆகும். //
ஆவ்வ்..தலை.நியாயமா இது?அதுவும் கொங்கு மண்டலம் தானே?நாமக்கல்லுக்கு மிஞ்சி, மிஞ்சிபோனா 2 மணிநேரம் ஆகுமா பஸ்ஸில் போறதுக்கு?:-)))
//போர்க்களத்திற்கும் உலகளாவிய சந்தைக்களத்திற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை! கீதை தான் செய்யவேண்டியதை உணர்வுகளோடு குழப்பித் தடுமாறும் அர்ஜூனன் போன்ற கம்பெனி எக்ஸிக்யூடிவ்களுக்கும் வெகுவாய் பொருந்தும்! //
மிக்க உண்மை. சரியான உதாரணம். நன்றி ஹரிஹரன்
Thanx for sharing the info.
செல்வன், ஸ்காட் ஆதம்ஸ் இன் Joy of Workplace" என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? அதில் நம்ம டில்பெர்ட்தான் ஹீரோ. புத்தகத்தின் முடிவுரை அப்படியே கீதையின் கோட்பாடுகள் இருக்கும்.
டில்பெர்ட் அமெரிக்க காரப்ரேட் உலகின் மானசீக கதாநாயகன்
பி.கு. விநோதமான நோயால் பேசும் திறனை இழந்த ஸ்காட் அதிசயமாக அதிலிருந்து மீண்டு வருகிறார்
செல்வன்,
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
அந்த புத்தகங்களை பற்றி தெரிந்தால் அதை பற்றியும் எழுதலாமே :-)
செல்வன்,
1995இல் ஸ்டீவன் பிரஸ்பீல்ட் ஏற்கெனவே இதனை பிரபலப்படுத்தியிருக்கிறார்.
லெஜண்ட் ஆ·ப் பகர்வான்ஸ்
இந்த படம் கீதையை அடியொற்றி எடுக்கப்பட்ட திரைப்படம்
இது பழைய செய்தியாச்சே செல்வன். இந்தக் கட்டுரையை இப்போது தான் படிக்கிறீர்களா? கீதையை மேலாண்மைக்காகப் பயன்படுத்துவதும் நெடுநாட்களாக இருக்கிறதே.
லெஜண்ட் ஆஃப் பாகர்வான்ஸ் திரைப்படத்தில் கீதையைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நீங்க சொல்லித்தான் தெரியும் எழில்!.
அமெரிக்காவில் அடிக்கடி இந்த மாதிரி குடும்ப/தத்துவக் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து படம் எடுத்து விடுவார்கள். படம் காட்டுவதோடு சரி ; )
செல்வன்... விரிவான அறிமுகத்துக்கு என்னுடைய நன்றி.
எழில் நன்றி
அந்த சுட்டியை படித்து பார்த்தேன். படம் பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டி விட்டது. டிசம்பர் விடுமுறையில் கண்டிப்பாக பார்க்கிறேன்.
உங்கள் வருகைக்கு நன்றி
செல்வன்
மிக்க நன்றி சீனு
சிவா,
அந்த புத்தகத்தை படித்ததில்லை. டில்பெர்ட் பற்றி பல கார்ட்டூன்களை பார்த்துள்ளேன். அந்த புத்தகத்தை தேடி படிக்க வேண்டும்.
நன்றி
செல்வன்
பாலாஜி
பல புத்தகங்கள் இருப்பதே பிஸினஸ் வீக் படித்துதான் தெரிந்தது. லைப்ரரியில் கிடைத்தால் ஓசியில் படிக்கலாம். அமேசானில் வாங்கி கட்டுப்படியகுமா?:-))
இனி தான் தேட வேண்டும். கிடைப்பவற்றை பற்றி நிச்சயம் எழுதுகிறேன்.
குமரன்,
இந்தியாவில் கீதை பயன்படுத்தப்பட்டாலும் பிஸினஸ் வீக் போன்ற பெரிய பத்திரிக்கைகளில் வெளீவந்தபிறகு தான் நிறைய பேரை அந்த செய்தி சென்று அடைகிறது.
பாலா
//அமெரிக்காவில் அடிக்கடி இந்த மாதிரி குடும்ப/தத்துவக் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து படம் எடுத்து விடுவார்கள். படம் காட்டுவதோடு சரி ; )//
உண்மைதான். ஆனால் சில புத்தகங்கள் அந்த நிலையை தாண்டி அடுத்த நிலைக்கு போவதுண்டு. இஸ்கானால் ஏற்கனவே ஹரே க்ரிஷ்ணா இயக்கம் இங்கே பாப்புலர்(ஓரளவு நெகடிவ் பப்ளிசிடி என்றும் சொல்லலாம்:)
கீதை ஆர்ட் ஆப் வாரின் இடத்தை தக்கவைக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
//இந்தியாவில் கீதை பயன்படுத்தப்பட்டாலும் பிஸினஸ் வீக் போன்ற பெரிய பத்திரிக்கைகளில் வெளீவந்தபிறகு தான் நிறைய பேரை அந்த செய்தி சென்று அடைகிறது//
மிகவும் உண்மை செல்வன்!
கிருஷ்ணனை, டெபோனேர், ப்ளேபாய் போன்ற பத்திரிகைகளே பயன்படுத்தி வந்தன, பலசமயம் உண்மைக்குப் புறம்பான தகவல்களும் கொடுத்து!
இன்று பிஸினஸ் வீக் என்றால் நாளை டைம், WSJ என்று அடுத்த நிலைக்கு இட்டுச் செல்வதும் அவசியம்.
அதற்குள் பாருங்கள், பிசினஸ் கீதா என்று பேர் மாற்றித் தூசி தட்டி நமக்கே கொடுத்து விடுவார்கள்! (யோகாவைப் போல)
நான் பணி புரியும் வங்கியின் மேலாண்மை இயக்குனர் அறைக்கு முதன் முதலில் சென்ற போது, கீதா சாரம் வால் போஸ்டரைப் பாத்து கொஞ்ச நேரம் அசந்து போனேன்! பொதுவாகப் படித்தாலும்...இது போன்று வெளிப்படையாக ஒட்டி வைக்கத் தயங்குவார்கள், esp when New York markets are conservative.
ஆனால் அவர் சொன்னார்:
Whatever is yours today will be someone else's tomorrow.
இந்த வாசகம் தான் அவருக்குப் புத்துணர்ச்சி கொடுக்கிறதாம்; ஏன்னு கேட்டாச் சிரிப்பீங்க! Whatever (debt) is yours today will be someone else's (debt) tomorrow. என்று சொல்லிச் சிரித்தார்! :-) பின்னர் வழக்கம் போல "jus kiddin" என்றார்!
செல்வன் கீதாங்கிற கன்னிகையை அமெரிக்கா காதலிக்குதா!!!??
நாஸ்த்தீகக் குஞ்சுகள் உதுக்கு
என்ன சொல்லப் போகுத்துகளோ
தெரியல்ல?
Post a Comment