Monday, August 14, 2006

138.பெப்சியை வாழ்த்துவோம் வாருங்கள்

இதை விட மகிழ்ச்சியான சுதந்திர தினம் நமக்கு கிடைக்குமா என தெரியவில்லை.உலகின் மாபெரும் சாதனை ஒன்றை ஒரு இந்தியப்பெண் படைத்திருக்கிறார்.ஆம்,பெப்சியின் புதிய CEO(Chief executive officer)வாக இந்திரா நூயி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கார்பரேட் உலகில் இது எத்தனை பெரிய சாதனை என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.பெப்சியின் மிக உயர்ந்த பொறுப்பு இது.உலகின் மிகப்பெரும் புகழ்பெற்ற நிறுவனத்தில் தலைமை பொறுப்பை ஒரு இந்தியர்,அதுவும் ஒரு பெண் சுதந்திர திருநாளில் ஏற்றது இந்தியா முழுக்க பெருமை சேர்க்கும் விஷயம்.குறிப்பாக ஆண் ஆதிக்கம் நிறைந்த வணிக உலகில் இது ஒரு மாபெரும் சாதனை. பெண்மை வாழ்கவெண்று கூத்தாடடா..... பெப்சிக்கு என் நன்றி.இந்திராவுக்கு என் வாழ்த்துக்கள் அடுத்து சிகரம் தொடுவாரா சசிதரூர்?

32 comments:

ENNAR said...

செல்வன்
அந்த அம்மையாருக்கு எனது வாழ்துக்கள்

Unknown said...

நன்றி என்னார் ஐயா

Unknown said...

Yes, it's a monumental achievement.

தருமி said...

சிகரம் தொடுவாரா ..?// உங்கள் ஹேஷ்யம் என்ன?

மணியன் said...

இந்திரா நூயியின் வெற்றிக்கு பெப்சியை ஏன் வாழ்த்தவேண்டும் ? அவரது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரத்திற்கு வாழ்த்துக்கள்!

அமெரிக்கர்களை நோக்கி விரல் நீட்டிய வீராங்கனை அல்லவா அவர் :)

துபாய் ராஜா said...

செல்வன்,திரு.இந்திரா நூயிக்கும்,
வாய்ப்பு தந்த பெப்சிக்கும் வாழ்த்துக்கள்.

சசிதரூரையும் வாழ்த்தி வரவேற்போம்

Unknown said...

ரமணி,ஹயாத்,மணியன் ஐயா,பார்ட்னர் மற்றும் துபாய் ராஜா

வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி.

ஹயாத்,
தப்புங்க.திறமையால் முன்னேறிய ஒரு பெண்ணின் வெற்றிக்கு வேறு காரணம் எல்லாம் சொல்லக்கூடாது.மணியன் ஐயா சொல்வது போல் இது அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்.நம்ம கம்பனிகளில் தலைகீழாய் நின்றாலும் ஒரு பெண்ணை இப்படி தலைமை பொறுப்பில் உட்கார விடுவார்களா,சொல்லுங்கள்.

பார்ட்னர்,

சசிதரூர் வெல்வார் என நம்புவோம்.அவர் கேரளர் என்பதால் ஆதிதமிழர் என்று சொல்லி நாம் இன்னும் கொஞ்சம் அதிகம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

Boston Bala said...

பல காலமாக இவர் படிப்படியாக முன்னேறி, சில வருடங்களுக்கு முன்பே அநேகமாக அடுத்த #1 என்று பரவலாக தெரிந்திருந்தாலும், 'இந்த சமயத்தில்' தலைமைப் பொறுப்பு கொடுப்பதில் ஹயாத் சொன்ன காரணத்தினால்தான் என்று பரவலாக வதந்தி கிளம்பியிருக்கிறது.

Unknown said...

இன்னொரு மகிழ்ச்சியான செய்தி,.
இந்திரா நூயி சென்னையில் பிறந்தவர்.

http://news.bbc.co.uk/2/hi/business/4791137.stm

Unknown said...

பாலா

வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இந்திரா நூயிதான் அடுத்த என 2005லேயே சொல்லிவிட்டது.உலகின் வலிமை வாய்ந்த 50 பெண்களில் ஒருவராக அவரை 2005லேயே தேர்ந்தெடுத்துவிட்டது.

http://news.sawf.org/Lifestyle/3737.aspx

பெப்சியை இதனால் எல்லாம் குடிக்க வேண்டும் என நான் சொல்லவில்லை:)அதுவேறு,இதுவேறு.

புதுமை விரும்பி said...

செய்திக்கு நன்றி செல்வன்

நாமக்கல் சிபி said...

WOW!!! Its really a great achievement...

(But I prefer Coke than Pepsi :-))

Unknown said...

Thank you puthumai virumbi and balaji.

Balaji...ha..ha...I too like coke:))),but maybe I will like pepsi a little bit more from today:))

நாமக்கல் சிபி said...
This comment has been removed by a blog administrator.
கால்கரி சிவா said...

பெப்ஸி கோக் இந்த இரு கம்பனிகளும் பானங்களை மட்டும் செய்வதில்லை மேலும் பற்பல உணவு பொருட்களும் செய்கின்றன.

ஒரு பெரிய் கம்பெனியில் ஒரு இந்திய பெண்மணி அது இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றிதான்

வாழ்த்துகள்.

சசியிம் வெற்றிப் பெற்று ஐ.நா சபையில் அமர வாழ்த்துக்கள்

ஒரு திராவிடன்_1 உலகை ஆளப்போவதை பார்க்க விருப்பம்

Sivabalan said...

செல்வன்,

// இந்திரா நூயி சென்னையில் பிறந்தவர். //

Just Missங்க 500கி.மீ தள்ளி நம் ஊர்ல பிறந்திருக்கலாம்.. சரி விடுங்க...

இந்திரா நூயிக்கு வாழ்த்துக்கள்

சிறில் அலெக்ஸ் said...

நல்ல சேதி..

இன்னும் வேண்டும்

:)

VSK said...

//
நல்ல சேதி..

இன்னும் வேண்டும்//

:))

தமிழர்கள், இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு நிகழ்வு இது!

முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இன்றும் புடவை கட்டித்தான் செல்வாராம்.

கனெக்டிகட்டில் உள்ள அவரது வீடு பூஜை அறை மிகவும் பிரசித்தமாம்.

திருப்பதி பாலாஜி கோயிலுக்கு வருடம் தவறாமல் செல்பவராம்.

கணவர் பெயர் ராஜ்.

சென்னை கிருத்துவக் கல்லூரி மாணவி!

வாழ்த்துகள்!

:))

Sundar Padmanaban said...

செல்வன்

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு அவரை திருச்சியில் ஐந்து நிமிடங்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை இப்போது நினைவுகூர்கிறேன். அப்போது நிதித்துறைக்கு தலைமைப் பொறுப்பு வகித்துக்கொண்டிருந்தார். கடுமையான உழைப்பாளி. குறிக்கோள்களை அடைவதைப் பற்றிச் சிந்தித்து பாடுபடுபவர் என்று அவரைப் பற்றி அறிந்திருக்கிறேன்.

அவருக்கு வாழ்த்துகள். உங்கள் பதிவிற்கு நன்றி.

Unknown said...

சிவா

சசிதரூரின் பேச்சை இணைப்பாக பதிவில் சேர்த்திருக்கிறேன்.படித்து பாருங்கள்.இன்னொரு அப்துல் கலாம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

Unknown said...

சிவபாலன்

ஆமாங்க.அவங்க கோவையில் பிறந்திருக்கலாம் தான்..என்ன பண்ண?சென்னைக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிச்சுடுச்சு

அருமையான தகவல்கள் எஸ்.கே,நன்றி.

பார்ச்சுன் 500 கம்பனியில்(இந்திய கம்பனிகள் தவிர்த்து) பதவிக்கு வரும் முதல் இந்தியர் இவர் என நினைக்கிறேன்.(சரியாக தெரியவில்லை)அப்படி பதவிக்கு வரும் முதல் இந்தியர் சென்னை பெண் என்றால் மிக பெருமையாக இருக்கிறது.

"கலக்கிட்டம்மா கண்ணு" என மந்தைவெளி மன்னார் வாழ்த்தினால் புரிந்துகொள்வார்:-)))))

Unknown said...

சுந்தர்,

நேரிலேயே சந்தித்துளீர்களா?மிகுந்த மகிழ்ச்சி.NRI இந்தியர்கள் அமெரிக்காவில் இப்படி பின்னி எடுப்பதை கண்டால் விரைவில் அமெரிக்கா இந்தியர்களின் காலனி ஆகிவிடும் என தோன்றுகிறது:)))

பரிட்சை முடிந்ததும் அவரைப்பற்றி மேலதிக தகவல்களுடன் இன்னொரு பதிவிடலாம் என இருக்கிறேன்.நீங்கள் இட்டாலும் சரியே.

நன்றி சுந்தர்

சிவமுருகன் said...

செல்வன் சார்,
//138.பெப்சியை வாழ்த்துவோம் வாருங்கள்" //

அந்த அம்மையாருக்கு தான் எனது வாழ்துக்கள்.

Amar said...

வாழ்த்திவிட்டால் போகிறது.

அந்த அம்மையாரையும் பெப்சி - இரண்டையும் சேர்த்து.

அம்மையாரை - அவரின் சாதனைக்கு.

பெப்சியை - அனுமதிக்கபட்ட அளவைவிட சில மடங்கு அதிகமாக விஷம் இருக்குமாறு தயாரிப்புகளை செய்ததற்க்கு.

டீயிலும் தினமும் குடிக்கும் பாலிலும் அனுமதிக்கபடும் அளவைவிட 20,000 மடங்கு அதிக நச்சு பொருட்கள் இருக்காம்..அதனால் பாலுக்கு பெப்சியே பரவாயில்லை. :-)

Anonymous said...

http://www.6bridges.com/my_story.asp?DataID=1013&SectionTitle=My%20Story

Please read the above article!!. Gives a brief bio of Indira Nooyi and her way up in the corporate ladder.

She's really a great inspiration for many indian women.

- Moorthi

Unknown said...

நன்றி சமுத்ரா,சிவமுருகன்,அனானிமஸ்

Anonymous said...

அப்படியே எட்டப்பபூபதிக்கு ஒரு வாழ்த்து மடலும், மன்மோகன் சிங்கிற்கு பாராட்டுப் பத்திரமும், தொண்டைமானுக்கு ஒரு கட்டளைக்கலித்துறையும், ப.சிதம்பரத்திற்கு ஒரு பாராட்டுமடலும், டாலருக்காக திறந்து காட்டி, தேசத்தின் மானத்தை வித்த ஐசுவரியாவுக்கும்,சுசுமிதா சென்னுக்கும் இன்னும் கூட்டிக்கொடுக்க இருக்கும் பல டாலர் அடிமைகளுக்கு வரவேற்புப் பத்திரமும் எழுதி விடுங்கள், செல்வன்! ரொம்ப நல்லா இருக்கும்!!

--கட்டபொம்மன், மருதுபாண்டியர் கேட்டுக்கொண்டதற்காக, சின்ன கட்டபொம்மன.

Unknown said...

கட்டபொம்மன் துரை,

பேருக்கேத்த மாதிரி வசனமும் நல்லா இருக்கு.ரசித்தேன்:)))

அன்புடன்
செல்வன்

Anonymous said...

The real challenge comes only after she has taken over as CEO.
All the best for her assignment.
- Anand

Unknown said...

True anand.Thanks

Anonymous said...

இட ஒதுக்கீடுன்னு பேசிக்கிட்டு இருக்கிறவர்களால் இந்தப் பெருமையை அடைய முடியவில்லை, தகுதி திறமையால்தான் அம்மையார் இப்பதவியை அடைந்தார்கள் என்பதை நிறைய பேர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

80 லட்சம் மக்கள் கொண்ட எங்களது தாம்ப்ராஸ், எங்காத்து குலக்கொழுந்தை வாழ்த்துகிறது.

பெப்சியைக் குடிங்க!
ஆத்துல கொண்டாடுங்க!

Unknown said...

Anonymous,

/80 லட்சம் மக்கள் கொண்ட எங்களது தாம்ப்ராஸ்../

So Tambras will form the next govt?You have a good sense of humor:)))