Thursday, July 20, 2006

128.Anjcheel enaatha aaNmai-asokavanam

(3 மாதம் கழித்து....) தன் முன் நின்ற அந்த கைதியை அதிர்ச்சியுடன் நோக்கினார் சிறை அதிகாரி ஜியோங்.தன் வாழ்க்கையில் அவர் பார்க்கும் இரண்டாவது இந்தியர் அந்த கைதி.ஆனால் இருவருக்கும் தான் எத்தனை வித்யாசம்? இப்படியும் அகோரமாக ஒரு பெண் இருக்க முடியும் என்பதை ஜியோங் அன்று தான் அறிந்தார்.சாப்பிட உணவே கிடைக்காத வட கொரியாவில் தொப்பை இருப்பதே வெகு அபூர்வம்.அப்படி இருக்க தொப்பை வயிற்றோடு,அகோரமாக முகத்திலும் உடலிலும் தழும்புகளோடு குண்டாக ஒரு இந்திய பெண் ,அதுவும் இரு கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவள் எதிரே நின்றால் அவர் அதிரத்தானே செய்வார்? அந்த கைதியின் பயோடேட்டாவை சுவாரசியத்துடன் நோக்கினார் ஜியோங்."பெயர் பாலமணி.வயது 40....நாடு இந்தியா..இந்தியர்கள் அனைவரும் ஒஷாராவை எப்படியோ சினேகிதம் பிடித்துக்கொள்கிறீர்கள்" என்றார்."இதற்கு முன் வந்த பெண் மீது சிறு துரும்பும் விழக்கூடாது என ராணுவ மந்திரி வெகு கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்.உன்னையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள சொல்லி நேற்று ரகசியமாக ஒஷாராவின் செயலாளரிடமிருந்து போன் வருகிறது..." "நிற்காதே உட்கார்." என்றார்.அந்த பெண் மிகவும் சிரமப்பட்டு உட்கார்ந்தாள். "எனக்கு முன் அமரும் முதல் கைதி நீதான்" என்றார் ஜியோங்."நடக்கவே இத்தனை சிரமப்படுகிறாயே.நீ எதற்கு இரண்டு அரசு உயர் அதிகாரிகளை கொலைகள் செய்தாய்?" "என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தனர்" என்றாள் பாலாமணி. "உன்னிடமா?"என நம்ப முடியாமல் சிரித்தார் ஜியோங். "நான் முன்பு நன்றாகத்தான் இருந்தேன்.சில மாதங்களுக்கு முன் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.அதன் பின் முடி கொட்டி விட்டது,உடலெங்கும் விகாரமாக தழும்புகள் வந்துவிட்டன.உடல் பருத்து விட்டது.அந்த ஆபரேஷன் செய்தபின் ஹார்மோன் ரீப்ளேச்பன்ட் தெரபி எடுத்துக்கொள்ளததால் ஒஸ்டிரோபொஸில் எனும் எலும்பு நோய் வந்துவிட்டது" என்றாள் பாலாமணி. "ஏன் அந்த தெரபி செய்து கொள்ளவில்லை?" என கேட்டார் ஜியோங். "செய்ய நேரமில்லை.அதற்குள் வேறு முக்கியமான வேலைகள் வந்துவிட்டன" என்றாள் பாலாமணி. "உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது.சரி..உன்னை சிறையில் எந்த வேலையும் வாங்கவில்லை.மூணு வேளை நல்ல உணவு அறையிலேயே வந்து தர சொல்கிறேன்.உன்னை எப்படியும் தூக்கில் தான் போடுவார்கள்.அதுவரை நன்றாக கவனித்துக்கொள்ள சொல்கிறேன்" என்றார் ஜியோங். "என்னை அந்த இந்தியப்பெண் இருக்கும் அறையில் அடைக்க முடியுமா?" என கேட்டாள் பாலமணி. "அது உயர் பாதுகாப்பு சிறை.நியாயத்துக்கு செய்யக்கூடாது.ஆனால் ஒஷாரா என் கிராமத்துக்கு செய்த உதவி கொஞ்ச நஞ்சமல்ல" என்றார் ஜியோங்."சரி அதே அறையில் உன்னை அடைக்கிறேன்" --- தனிமை சிறையில் உமா அசோகவனத்து சீதை போல் சோகமயமாக இருப்பாள் என சந்துருவாக இருந்தபோது பாலாமணி கற்பனை செய்து வைத்திருந்தாள்.ஆனால் உமா ஒன்றும் அப்படி சோகமாக இருப்பது போல் தெரியவில்லை.முகத்தில் அந்த குறும்பு சொட்டும் களை அப்படியே இருந்தது.லேசாக இளைத்தது போல் இருந்தாள். "இது பாலமணி.உன்னோடு இருக்க உனக்கு ஆட்சேபம் இல்லையே?" என்றார் ஜியோங். "நீங்கள் தமிழா?" என ஆர்வத்துடன் கேட்டாள் உமா. "ஆமாம்" என சொன்னாள் பாலமணி. "வருகிறேன்.இருவரையும் நன்றாக கவனித்துகொள்ள வார்டர்களுக்கு சொல்லி விட்டு போகிறேன்.ஏதேனும் வேண்டுமானால் என்னை அணுகுங்கள்.ஆனால் தப்பி செல்ல மட்டும் முயலாதீர்கள்.அப்படி போனிர்களானால் என் மனைவியும் மகளும் இந்த சிறைக்கு வந்துவிடுவார்கள்" என்றார் ஜியோங்.அறையை பூட்டி விட்டு சென்றார். -- பாலமணி போல் ஒரு பிறவியை உமா பார்த்ததே இல்லை.அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். "உங்களுக்கு எந்த ஊர்?" என கேட்டாள். "நத்தம்" என்றாள் பாலமணி. "என் ஊர் தேவகோட்டை.பழனி போகும்போது நத்தம் வழியாகத்தான் போவோம்" என உற்சாகத்துடன் சொன்னாள் உமா. "காரைக்குடி,தேவகோட்டையில் எனக்கு நிறையெ பேரை தெரியும்.உன் அப்பா,அம்மா யார்?" என கேட்டாள் பாலாமணி. "அப்பா பெயர் சொர்ணபாண்டியன்.அழகப்பா பல்கலைகழகத்தில் புரபசர்" என்றாள் உமா. "அவரை நன்றாக தெரியும்" என்றாள் பாலாமணி. "இன்னொரு அதிசயம்.சொன்னால் நம்ப மாட்டீர்கள்.என் அம்மா பெயர் கூட பாலாமணிதான்" என்றாள் உமா. "நிஜமாகவா" என்றாள் பாலமணி.. "என் மாமனார் அருணா நகர் கம்பன்,கற்பகம் பள்ளியில் வாத்தியாராக இருந்தார்.பெயர் மூக்கையன்.அவரை தெரியுமா?" என கேட்டாள் உமா. "நன்றாக தெரியும்.அவரையும் அவர் மகன் சந்திரசேகரனையும் சிறுவயதில் பார்த்தது.நன்றாக இருக்கிறார்களா?" என கேட்டாள் பாலாமணி. "நன்றாக சவுக்கியமாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களுக்கென்ன குறைச்சல்" என முணுமுணுத்தாள் உமா. (Thodarum)
Post a Comment