Wednesday, July 19, 2006

127.anjchel enaatha aaNmai

1 மாதம் கழித்து... "நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.என்ன செய்யப்போகிறீர்கள்?" என கேட்டார் இளங்கோ "புரியவில்லை" என கவலையுடன் சொன்னான் சந்துரு."ஒஷாரா பேசுகிறார்..பேசுகிறார்..பேசிக்கொண்டே இருக்கிறார்.அவர்கள் அவளை விடுதலை செய்வதாக இல்லை.அரவிந்த் உளவாளிகளை வைத்து விடுதலை செய்கிறேன் என்றான்.அதுவும் ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை.அவள் எங்கே இருக்கிறாள் என்பது கூட தெரியவில்லை" "இன்று சாயந்திரம் இது பற்றி பேச ஒருவர் நம் வீட்டுக்கு வருவதாக அரவிந்த் சொன்னான்" என்றார் இளங்கோ. -- அன்று சாயந்திரம் அவர்களை சந்திக்க வந்தவரை சந்துருவுக்கு அடையாளம் தெரிந்தது.அவர் அவனோடு விமானத்தில் கொரியா வந்தவர்.ஒல்லியாக இருந்தார்.ஆனால் உடல் மிக உறுதியாக இருந்தது.தன் பெயர் சுதர்சன் என்றார்.ஆனால் அது புனை பெயர் என்று சந்துருவுக்கு தெரிந்தது.சரளமாக இந்தியில் பேசினார். "ஒஷாராவை பற்றி தப்பு கணக்கு போட்டு கொரியாவில் நுழைந்தோம்.அவர் அப்பாவி.ஆனால் இந்த அரசு முட்டாள்தனமான சர்வாதிகார அரசு.இந்த சங்கத்தை தன் வசப்படுத்த கடும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.ஒஷாரா இருக்கும் வரை அது நடக்காது" என்றார் சுதர்சன் "என் மனைவி எங்கே/" என கேட்டான் சந்துரு. "உன் மனைவியை நீ இனி மறந்துவிடுவது தான் நல்லது.கொரியாவின் மிகப்பாதுகாப்பான சிறையில் ராஜத்துரோகம் செய்தவர்களை அடைத்து வைக்கும் உயர் பாதுகாப்பு பிரிவில் அவள் இருக்கிறாள்.உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமோ தெரியாதோ.அவளுக்கு மரன தண்டனை விதித்து விட்டார்கள்.இன்னும் சில மாதங்களில் சுட்டுக்கொல்லபடுவாள்" என்றார் "ஐயோ.." என அலறினான் சந்துரு. "நீங்கள் அனைவரும் கொரியாவை விட்டு உடனடியாக தப்பி செல்வது நல்லது" என்றார் சுதர்சன். "மகேசு இல்லாமல் திரும்ப மட்டேன்" என்றான் சந்துரு. "உமாவை விடுவிக்க எந்த வழியும் இல்லையா?" என்றார் இளங்கோ. "எந்த பேச்சுவார்த்தையும் பயன் தரவில்லை.அவளுக்கு ஏதோ பயங்கர ரகசியங்கள் தெரிந்திருக்கின்றன.ஒஷாரா என்ன முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை" என்றார் சுதர்சன். "ஜெயிலிலிருந்து தப்ப வைக்க முடியாதா/" என்றான் அரவிந்த். "உனக்கு புரியவில்லை" என எரிச்சலுடன் சொன்னார் சுதர்சன்."கிட்டத்தட்ட 2000 கமாண்டோக்கள் ,டாங்கிகள்,விமான எதிர்ப்பு பீரங்கிகள் என மிகப்பாதுகாப்பாக கொன்சான் எனும் இடத்தில் அடர்ந்த காடுகளின் மத்தியில் அந்த சிறை இருக்கிறது.தீவிர ராஜத்துரோகம் செய்த பெண்களுக்கான சிறை அது.உண்மையில் சொல்லப்போனால் ராஜத்துரோகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தான் அங்கு அதிகம்.1960ல் அதை கட்டியதிலிருந்து இதுவரை ஒருவர் கூட அதிலிருந்து உயிரோடோ,பிணமாகவோ தப்பி வந்ததில்லை" "உடைக்க முடியாத ஜெயில் என எதுவும் இல்லை" என்றான் சந்துரு."எத்தனை கோடி பேர் காவலிருந்தாலும் அவளை மீட்பேன்." "எப்படி மீட்பாய்/" என கேலியுடன் கேட்டார் சுதர்சன். "ஜெயிலுக்குள் புகுவேன்.புகுந்து என்ன செய்வது என நோட்டமிட்டு ஏதோ செய்து மீட்டு வருவேன்.வெளியிலிருந்து ஜெயிலை உடைப்பதை விட உள்ளிருந்து உடைப்பது எளிது" என்றான். "உன் மூச்சு காற்று கூட உள்ளே போகாது.அதனுள் நுழைய கொரிய அரசால் நியமிக்கப்பட்ட கமாண்டோவாக இருக்கவேண்டும்.அந்த வழி சாத்தியமில்லை.நீ என்ன தான் செய்வாய்?எப்படி உள்ளே நுழைவாய்/" எனகேட்டார் சுதர்சன். "சிறையில் நுழைய கமாண்டோவாக இருக்க வேண்டிய அவசியமில்லை.கைதியாக கூட நுழையலாம்" என்றான் சந்துரு. "உனக்கு காது கேட்கலை போல.அது ராஜத்துரோகம் செய்த பெண் கைதிகளுக்கான சிறை" என்றார் சுதர்சன். "எதாவது ராஜத்துரோகம் செய்தால் போகிறது.பிடித்து சிறையில் அடைப்பார்கள் அல்லவா?" என கேட்டான் சந்துரு. "ஆண் கைதிகளை அங்கே அடைக்க மாட்டார்கள்" என எரிச்சலுடன் சொன்னார் சுதர்சன். "பெண்ணாக மாறி ராஜத்துரோகம் செய்தால்?.." என கேட்டான் சந்துரு. "என்ன உளறுகிறாய்?பெண்ணாக எப்படி மாறுவாய்?அவ்வை சண்முகி போல் மேக்கப் போடுவாயா?கைதி ஆணா,பெண்ணா என கண்டுபிடிக்க தெரியாத கிறுக்கர்களா கொரிய போலிஸ்காரர்கள்?" என கோபத்துடன் கேட்டார் சுதர்சன். "கோபிக்காமல் பொறுமையாக கேளுங்கள்.பெண்னாக மேக்கப் போடுகிறேன் என சொல்லவில்லை. ஆபரேஷன் செய்துகொண்டு முழு பெண்ணாக மாறி ஏதோ ஒரு அரசு அதிகாரியை கொலை செய்தால் அந்த ஜெயிலுக்குள் போய்விடலாம் அல்லவா?" என்றான் சந்துரு. வாயடைத்து நின்றார் சுதர்சன். "பெண்ணாக மாறுவது யார்?அது எப்படிப்பட்ட சிக்கலான ஆப்பரேஷன் தெரியுமா?அந்த ஆபரேஷனை செய்யப்போவது யார்" என அதிர்ச்சியுடன் கேட்டான் அரவிந்த். "மாறப்போவது நான்.ஆபரேஷ்னை செய்யபோவது பாலியல் நிபுணர் இளங்கோ" என்றான் சந்துரு. அனைவரும் வாயடைத்து போய் நின்றனர். (தொடரும்)
Post a Comment