Wednesday, July 12, 2006

123.manliness which dint say dont fear

(I copied and pasted unicode from mac.One friend told me that if i do so it will be ok.Tell me if it doesnt work.pls post your feedback in english) சந்துருவும் அரவிந்தும் சைக்கிளை அழுத்தி அழுத்தி ஓய்ந்து போயினர்.அரவிந்த்சாமிக்காவது தாக்கு பிடிக்க முடிந்தது.சந்துருவால் முடியவில்லை.10 மைல் ஓட்டுவதற்குள் மூச்சு வாங்கினான்.15வது மைலில் படுத்து விட்டான். "கிழிந்தது" என்றார் அரவிந்த்."இன்னும் 80 மைலுக்கு மேல் போக வேண்டும்.பகலில் போக முடியாது.இரவில் பதுங்கி பதுங்கி தான் போக முடியும்.நீ சைக்கிள் ஓட்டும் அழகு இதுவா" என்றார். மரத்தடியில் உட்கார்ந்து ஓய்வெடுத்தனர். "உன் மனைவியை பற்றி சொல்.உங்களுக்கு எப்போது கல்யாணமானது?" என்றார் அரவிந்த். "ஒரு வருடத்துக்கு முன்" என்றான் சந்துரு.மனைவியை பற்றி பேச்செடுத்ததும் அவன் முகத்தில் ஒரு ஒளி வந்துவிட்டது."நிச்சயிக்கப்பட்ட திருமணம்.அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறேன்" என்றான். "திருமணத்துக்கு முன் அவளோடு பேசினாயா?" என கேட்டார் அரவிந்த். "இல்லை.எனக்கு சேல்ஸ்மேன் வேலை.நான் அப்போது இந்தூரில் இருந்தேன்.போட்டோ அனுப்பினார்கள்.மிகவும் பிடித்திருந்தது.அம்மா,அப்பா போய் பார்த்து வந்தார்கள்.கல்யாணத்துக்கு 2 நாள் முந்தி தான் ஊர் வந்தேன்" என்றான் சந்துரு. "கல்யாணத்துக்கு முன் ஒருதரம் கூட பேசவில்லையா?" என கேட்டார் அரவிந்த்சாமி. "இல்லை" என்றான் சந்துரு. "கல்யாணத்துக்கு பின் என்ன நடந்தது?" என கேட்டார் அரவிந்த்சாமி "இதை எல்லாம் ஏன் கேட்கிறீர்கள்?பர்சனல் விஷயம்" என்றான் சந்துரு. "வக்கிலிடமும்,டாக்டரிடமும் உண்மையை மறைக்க கூடாது" என்றார் அரவிந்த். "நீங்கள் வக்கிலுமல்ல.டாக்டருமல்ல" என்றான் சந்துரு. அரவிந்த் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். "சரி கிளம்பலாம்" என்றான் சந்துரு. "இரு என்ன அவசரம்" என்றார் அரவிந்த்."ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்.கோபிக்காமல் பதில் சொல்.நிஜமாகவே உன் மனைவி இன்னொருவனுடன் ஓடிப்போயிருந்தால் என்ன செய்வாய்?" என்று கேட்டார். சந்துருவின் முகம் மெதுவாக மாறியது.கண்களில் ரத்த சிவப்பு ஏறியது.16 பேரை வெட்டியபோது வந்த வெறி அவன் கண்களில் வந்து அமர்ந்தது. "கண்டதுண்டமாக வெட்டுவேன்.அவளையும்,அவள் கூட போனவனையும் இழுத்து வைத்து வெட்டி கொல்வேன்" என கூச்சல் போட்டான் சந்துரு. "ஏன் கத்துகிறாய்?ஒரு பேச்சுக்கு என முன்பே சொன்னேனே" என்றார் அரவிந்த்சாமி. "என்னால் தாங்க முடியவில்லை" என்றான் சந்துரு.அவன் கண்ணில் பல நாட்கள் கழித்து முதல் முறையாக கண்ணீர் வழிந்தது."அவளுக்கு என்ன ஆனதோ?யார் கையில் சிக்கி என்ன சீரழிகிறாளோ என வேதனை பட்டு தினமும் செத்துக்கொண்டிருக்கிறேன்" என அழுதான். "உங்கள் கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததா?" என மீண்டும் கேட்டார் அரவிந்த். "ஏன் மீண்டும் மீண்டும் இதையே கேட்கிறீர்கள்?" என்றான் சந்துரு.ஏதோ சந்தேகம் அவன் மனதில் எட்டி பார்த்தது."உண்மையை சொல்லுங்கள்.உங்களுக்கு ஏதோ விஷயம் தெரிந்திருக்கிறது.இல்லையெனில் இதையே துருவி,துருவி கேட்க மாட்டீர்கள்.யார் நீங்கள்?என் மனைவியை எங்கே அனுப்பினீர்கள்?அவள் எங்கே?எவனோடாவது ஓடிப்போயிருந்தால் சொல்லிவிடுங்கள்.சனியன் விட்டதென்று இந்தியா போய் வேறு வேலையை பார்க்கிறேன்" என்றான். "நீ உண்மையை பேசினால் தான் நான் பேச முடியும்" என்றார் அரவிந்த்."நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்" என்றார். "முடியாது" என தலையை அசைத்தான் சந்துரு. "அப்போது என்னை எதுவும் கேட்காதே" என்றார் அரவிந்த். சற்று நேரம் தலையை குனிந்து அமர்ந்திருந்தான் சந்துரு.ஏதேதோ சிந்தனைகள் அவன் மனதில் ஓடின.சிறிது நேரம் கழித்து எழுந்தான். "நீங்கள் பேசியது அனைத்தையும் என் மனதை விட்டு தூக்கி எறிந்து விட்டேன்" என உறுதியுடன் சொன்னான்." என் மனைவி உத்தமி.பதிவிரதை.கலியுக சீதை.அவளை பற்றி தவறாக நினைத்த என் நெஞ்சை சூடு போட்டாலும் பாவம் தீராது.ஐயா அரவிந்து.நீ செய்த அனைத்து உதவிக்கும் நன்றி.இனி இது என் பிரச்சனை.நான் பார்த்துக் கொள்கிறேன்.என் மனைவியை தவறாக பேசிய நீ இனி என் கண்ணில் பட்டால் உன்னை வெட்டி கொன்று விடுவேன்" என்றான். சைக்கிளை எடுத்தான்."நீங்கள் யாரும் வேண்டாம்." என்றான்."நான் ஆண்மகன்.என் மனைவியை காக்க எனக்கு தெரியும்.உலகம் முழுவதையும் அழித்தேனும் அவளை மீட்பேன்" என சூளுரைத்தான். யாங் யாங் நோக்கி சைக்கிளை வெறியுடன் அழுத்தினான். புள்ளியாக அவன் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தார் பிட்சு. வடகொரியா மிகவும் ஏழ்மையான தேசம்.மற்ற ஆசியநாடுகளில் ஆயிரம் தான் கஷ்டம் இருந்தாலும் மக்கள் முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும்.இங்கே அதுவும் இருக்காது.நாளை உயிர் வாழ்வோமா என்பதே அங்கு நிச்சயமில்லை.போலிஸ் எப்போது யாரை பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.எந்த அரசு அதிகாரியை பற்றி வாயை திறந்து ஏதாவ்து சொன்னாலும் சொன்னவருக்கு சங்கு உறுதி. சிறைகளில் பாலியல் பலாத்காரம் சர்வசாதாரணம்.கிட்டத்த்ட்ட 18 மணிநேரம் சிறைகளில் வேலை வாங்குவார்கள்.மக்களுக்கு ரேஷன் ஒரு நாளைக்கு 300 கிராம் உணவு மட்டுமே.விடுமுறைநாட்களில் அதுவும் கட். இப்படி ஏழ்மையான தேசத்தில் ரோடுகள் தேவை இல்லை.அங்கே இருக்கும் சில கார்களும் யான் யாஙில் மட்டுமே ஓடும்.யாங் யாங் தாண்டினால் படுகேவலமாக சாலைகள் இருக்கும்.அந்த சாலையில் சைக்கிளை அழுத்தி போவது சாதாரன விஷயமல்ல. ஏதோ வெறியில் சந்துரு சைக்கிளை அழுத்த துவங்கினான்.ஆனால் கொஞ்ச நேரம் ஓட்டியதும் தான் எங்கே போகிறோம் என்பதே தெரியவில்லை.கும்மிருட்டு.இரு மருங்கிலும் அடர்ந்த காடு.சைக்கிளில் விளக்கு வெகு மங்கலாக எரிந்தது.குளிர் உடலை குத்தி கிழித்தது.கோடை வந்துவிட்டது எனினும் இரவில் 30 டிகிரி குளிர் அடித்தது. சிறிது நேரம் கழிந்த பின் சைக்கிள் லைட் உயிர் விட்டது.பனி விழத்துவங்கியது.காலை ஆனால் சைக்கிளில் போக முடியாது.போலிஸ் நிறுத்தி கேட்டால் சொல்ல எந்த பதிலும் இல்லை. இன்னும் மிஞ்சினால் ஒரு மணிநேரமே ஓட்ட முடியும்.அதன்பின் பதுங்க இடம் தேட வேண்டும்.அந்த பிட்சு இருந்திருந்தால் யோசனை சொல்லியிருப்பான்.ஆனால் அவன் என்ன கேள்வி கேட்டுவிட்டான்?சந்துருவுக்கு மனசே ஆறவில்லை. பனியில் எதிரே என்ன இருக்கிறது என்பது கூட தெரியவில்லை.வேகத்தை கூட்டினான்.எதிரே வெள்ளையாக ஏதோ வருவது போல் தெரிந்தது.பிரேக்கை அழுத்த,அழுத்த...அது வந்து சைக்கிள் மேல் மோதியது. தூக்கி வீசப்பட்டு சந்துரு கீழே விழுந்தான்.அடுத்த வினாடி மயங்கி விழுந்தான். -- பிட்சுவை அதிகாலை நேரத்தில் எதிர்பார்க்காத இளங்கோ அதிர்ச்சி அடைந்தார்."என்ன ஆச்சு?ஏன் தனியாக திரும்பி வருகிறாய் அரவிந்த்?" என கேட்டார். "சந்துரு ஒரு மடையன்.மூர்க்கன்" என திட்டினான் அரவிந்த்.நடந்ததை முழுவதும் சொன்னான். தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார் இளங்கோ. இளங்கோ வீட்டுக்கு முன் ஒரு கார் வந்து நின்றது.உள்ளிருந்து அவர்கள் ஏரியா மடத்தின் தலைமை பிட்சு அவசர அவசரமாக இறங்கி ஓடி வந்தார். "சந்துரு கார் மீது இரவில் மோதி அடிபட்டு கிடக்கிறான்.சுற்று வட்டாரத்தில் நீங்கள் தான் டாக்டர்.வாருங்கள் " என்றார். அரவிந்தும்,இளங்கோவும் அடித்து பிடித்துக்கொண்டு காரில் ஏறினர். சந்துரு சைக்கிளில் கஷ்டப்பட்டு கடந்த 30 மைல்களை கார் 20 நிமிடத்தில் கடந்தது.ஒரு கொரிய கிராமத்தில் புகுந்தது.அங்கே இருந்த மடத்தில் கட்டிலில் சந்துரு படுத்திருந்தான். உடனடியாக அவனை சோதனை செய்தார் இளங்கோ.உயிருக்கு ஆபத்தில்லை எனினும் எலும்பு முறிவு இருக்கும் போல் தோன்றியது. "அவனை எப்படியும் காப்பாற்றி விடு இளங்கோ" என ஒரு குரல் கேட்டது.திரும்பினால் ஒரு பிட்சு நின்றிருந்தார். "என் கார் மீது தான் அவன் மோதினான்" என்றார் அவர்.அவருக்கு வயது எப்படியும் 70க்கு மேல் இருக்கும் என தோன்றியது.ஆனால் இன்னும் நடுத்தர வயதின் இளமையோடு தான் இருந்தார்.நரை,சுருக்கம் எதுவும் முகத்தில் இல்லை. அவரை பார்த்ததும் இளங்கோ பேச்சிழந்து நின்றார்.அரவிந்தும் தான்.அவரை அடையாளம் காண்பதில் அவர்களுக்கு சிரமமே இல்லை. அவர் தான் ஷென்ரிக்கியோ மதத்தின் முதல்வன்,தலைமை மதகுரு லீ ஒஷாரா. "அவும் ஷெக்ன்ரிக்கியோ" என பரவசத்துடன் சொன்னபடி பணிந்தனர் சீடர்கள் அனைவரும்.இளங்கோவும்,அரவிந்தும் கூடத்தான். "அவும் ஷென்ரிக்கியோ.இறைவன் காப்பான் எழுங்கள்" என்றார் லீ ஒஷாரா.அனைவரும் எழுந்தனர். "இரவில் பனி விழுந்தது.காரில் விளக்கு மிக மங்கலாக எரிந்தது.இந்த பாழாய் போன தேசத்தில் கார் ஸ்பேர் பார்ட்ஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காதே.காலையில் மாற்றலாம் என்றிருந்தேன்.அதற்குள் இவன் வந்து மோதிவிட்டான்" என்றார் லீ ஒஷாரா. பேச்சிழந்து நின்றார் இளங்கோ. "மருந்து எதுவும் வேண்டுமா?யாங் யாங் போய் வாங்கி வர சொல்கிறேன்" என்றார். "எலும்பு முறிவு இருக்கும் போலிருக்கிறது.பேன்டேஜ் துணி கூட இல்லை" என்றார் இளங்கோ. "யாங் யாங்கில் கூட அது கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.இருப்பினும் மேயரிடமே பேசி வேண்டியவற்றை வாங்க சொல்கிறேன்.யாங்,யாங் யாராவது போகவேண்டுமே?நீங்கள் மருந்து பட்டியலை எழுதுங்கள்.நான் மற்றவற்றை பார்த்துக்கொள்கிறேன்" என்றார். வேண்டிய மருந்துகளை ஒரு சீட்டில் எழுதி தந்தார் இளங்கோ. "தேன்மொழி" என அழைத்தார் லீ ஒஷாரா. டீனேஜ் வயதில் ஒரு இந்திய பெண் வந்து அவர் முன் நின்றாள். "இந்த மருந்துகள் உடனடியாக வேண்டும்.புரிகிறதா" என்றார் ஒஷாரா. தேன்மொழி ஒஷாராவை பார்க்கவில்லை.மருந்து சீட்டையும் பார்க்கவில்லை. எதிரே நின்ற இளங்கோவையே பார்த்தாள்."அப்பா.." என முணுமுணுத்தாள். அறையில் கனத்த மவுனம் நிலவியது. (தொடரும்)

14 comments:

Unknown said...

Added one more section just now.Thanks a lot to SK of aaththigam.blogspot.com who helped me a great deal in this.Pls post ur feedback in english.I dont have access to tamil in mac and cannot read tamil.So might not be able to post tamilfeedbacks until I know whats in them.So pls post feedbacks in english till.

sorry for the trouble

anbudan
selvan

பாலசந்தர் கணேசன். said...

Very nice to start with. But where is the next part?

Unknown said...

thnks balachander ganesan

I first posted till chanduru starts of in cycle and added the next part where he gets hit by a car.That is the 2nd part

Are u reading the full story from beginning?Just curious

நாமக்கல் சிபி said...

We r able to read...

Unknown said...

thanks balaji

SK made this possible.Thanks goes to him

நாகை சிவா said...

Nice Selvan!
Thanks to SK also!
I am having one doubt abt the name of Thenmozhli, they didnt change their names..........

Unknown said...

Thnx nagai siva
No,they dint change their names.

anbudan
selvan

பாலசந்தர் கணேசன். said...

No $elvan. I read the entire article. In the end I saw thodarum? that is the reason I asked where is the next part. When are you going to publish it

Unknown said...

Balachandar ganesan

I will post the next part tomorrow morning

Unknown said...

ashlyn,
If I give titles in tamil blogger takes it as question marks.I did that and had problems.So am giving titles in english.
chanduru will do heroics,after some time.:-))

நாகை சிவா said...

Selvan, No need for clues.
Keep it as suspense.
keep Going.
Cheers

Unknown said...

You are right nagai siva

Henceforth no more clues.

இலவசக்கொத்தனார் said...

was in indore? namma kaipuvaiya sollareenga? oho. avarudhan herova? ippo puriyudhu. :)


oru hit padam kudutha udane avarai periya aala aakiduveengale! avarukku enna punch dialogue vachchu irukeenga? :)

Unknown said...

indorenu vandha udane kaippuva?ippadi sandai kilappi vida innum eththanai peer kilambirukkiingka?:-)))