Thursday, June 01, 2006

96.ஜார்ஜு புஷ்ஷு...காப்பாத்து.....

வெள்ளை மாளிகையில் ஜார்ஜ்புஷ் ஆபீசில் உட்கார்ந்திருக்கிறார்.தொலைபேசி ஒலிக்கிறது.எடுக்கிறார் குரல்:அலோ...புஷ் அண்னன் இருக்காருங்களா? புஷ்:நான் தான் புஷ் பேசறேன்.நீங்க யாரு பேசறது? குரல்:ஐயா..சார்ஜு புஷ்ஷு...நீங்க தான் எங்களை காப்பாத்தணும்.எங்க நாட்டுல சர்வாதிகாரம் தலை விரிச்சு ஆடுது.உடனடியா படை எடுங்க. புஷ்:அப்படியா?கவலைபடாதீங்க செஞ்சுடலாம்.உங்க நாடு சர்வாதிகார நாடா? குரல்:ஆமாங்க.ஆப்பிரிக்காவுல நெபுருங்கற நாடுங்க.சர்வாதிகாரி மொபுடோ ரொம்பவும் தொல்லை கொடுக்கறாருங்கோவ். புஷ்:ஓ..சர்வாதிகார நாடா?கவலைபடாதீங்க..ஜனநாயகத்தை மலர செஞ்சுடலாம். குரல்: நன்றிங்க புஷ் அண்னாத்தே புஷ்:சரி..உங்க சர்வாதிகாரி அணுகுண்டு மாத்ரி ஆபத்தான ஆயுதத்தை வெச்சிருக்காரா? குரல்:ஆமாங்க.அணுகுண்டு,கெமிக்கல் குண்டு எல்லாம் வெச்சிருக்காருங்க புஷ்:ஓ..அப்ப விடவே கூடாது.உடனடியா படை எடுத்து ஜனநாயகத்தை மலர் செய்துடலாம். குரல்:நன்றிங்க..புஷ் அண்ணாத்தே..சீக்கிரம் வந்துடுங்க...போனை வெச்சுடட்டுங்களா? புஷ்:இருங்க..இருங்க..உங்க நாட்டுல பெட்ரோல் இருக்கா? குரல்: இல்லைங்க புஷ்:வைடா போனை..

33 comments:

Unknown said...

இது ஈமெயிலில் வந்த ஒரு ஜோக்.சற்று மாற்றி தமிழ்படுத்தி இட்டேன்

நாகை சிவா said...

ஹி..... ஹி...............
அது உண்மைதானுங்க

பிரதீப் said...

சரிதான் :))

Unknown said...

எது உண்மை நாகை சிவா?:-))

Unknown said...

பிரதீப்....தலையை கிண்டலடித்தால் ஆட்டோ வராது.ஹெலிகாப்டர் தான் வரும்.தலை ரேஞ்சே வேற:-)))

சந்திப்பு said...

செல்வன் புஷ்ஷின் சர்வதேசிய சர்வாதிகாரத்தை நச்சுன்னு வெளிப்படுத்தியிருக்கீங்க...
வாழ்த்துக்கள்.

Unknown said...

சிங்காரவேலர் அண்ணா,

அது சும்மா ரவுசுக்கு எழுதுன பதிவு.அண்ணாத்தை ஹெலிகாப்டர் அனுப்பிடுவாரோன்னு நானே பயந்து கெடக்கேன்:-))

பிரதீப் said...

தலை இங்கே ஹைதராபாத் ஐ எஸ் பிக்கு வந்தார். பக்கத்து பில்டிங் எங்க அலுவலகம்.

எங்களுக்கெல்லாம் மாடிக்குப் போயோ ஜன்னல்கள் பக்கத்தில் நின்றோ பார்த்தால் சுடப்படும் அபாயம் உண்டென்று எச்சரிக்கப் பட்டது

சந்திப்பு said...
This comment has been removed by a blog administrator.
சந்திப்பு said...

செல்வன் தவறுக்கு வருந்துகிறேன். சிங்காரவேலர் அது வேறு ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு வரும் தளம். எனவே என்னுடைய சந்திப்பு என்பது இயல்பாக இருக்கிறது என்று பதிவிட்டு விட்டேன்.
சந்திப்பு : கே. செல்வப்பெருமாள்.

Please delete before one.

நாகை சிவா said...

//எது உண்மை நாகை சிவா?:-))// பெட்ரோல் இருந்தா தான் அந்த நாட்டில் ஜனநாயகத்தை மலர வைப்பார் உலக காவலர் புஷ்.

Geetha Sambasivam said...

செல்வன்,
எப்போ பதிவு போடுவீங்க, எப்போ சாப்பிடுவீங்க? எப்போ தூங்குவீங்க? நேரம் எப்படிக் கிடைக்குது?
சும்மாக் கலக்குறீங்க போங்க. கண் பட்டுடப் போகுது. வீட்டிலே என்னைத் திட்டப் போறாங்க.

Anonymous said...

Enga thalaivar bushai kevalapaduthiya ungalai engal catholica samuthayamum, antha yesuvum mannikka mattaar.

Unknown said...

//Enga thalaivar bushai kevalapaduthiya ungalai engal catholica samuthayamum, antha yesuvum mannikka mattaar. //
கிச்சுகிச்சு மூட்டாதீங்க அண்ணே.புஷ் மெதடிஸ்ட் கிறிஸ்தவர்.கத்தோலிக்கர் கிடையாது.புஷ்ஷை எதிர்த்து போட்டி போட்ட கெர்ரி தான் கத்தோலிக்கர்.என்னவோ வர வர தமிழ்மணத்தில் காமடியான ஆட்கள் நிறைய பேர் உருவாயிட்டாங்க போல.

கால்கரி சிவா said...

அது சும்மா ரவுசுக்கு எழுதுன பதிவு.அண்ணாத்தை ஹெலிகாப்டர் அனுப்பிடுவாரோன்னு நானே பயந்து கெடக்கேன்:-))

அதெல்லாம் அனுப்ப மாட்டாருங்க உங்க வீட்டிலே பெட்ரோல் கிணறா இருக்கு

Karthik Jayanth said...

செல்வன்,

தல ஊர்லயே இருந்துகிட்டு தலயவே கிண்டல் பண்ணுறான்ன்னா அவனுக்கு எவ்வளவு இருக்கணும்ன்னு யாரோ பரட்ட மாதிரி பத்த வச்சதுனால உங்களை அட்டாக் பண்ண CentComm's F--22 Team ஒரு Strategic Plan னோட ரெடியா இருக்காம் பாத்துகோங்க சொல்லிட்டேன்.

Unknown said...

என் பயத்தை தெளிய வைத்த கால்கரி சிவா வாழ்க.

கனடாவில் நிறைய எண்ணை இருக்காமே??பாத்து சிவா..ஜாக்கிரதை:-)))))

Unknown said...

//தல ஊர்லயே இருந்துகிட்டு தலயவே கிண்டல் பண்ணுறான்ன்னா அவனுக்கு எவ்வளவு இருக்கணும்ன்னு யாரோ பரட்ட மாதிரி பத்த வச்சதுனால உங்களை அட்டாக் பண்ண CentComm's F--22 Team ஒரு Strategic Plan னோட ரெடியா இருக்காம் பாத்துகோங்க சொல்லிட்டேன். //

அனுப்புறது தான் அனுப்பறாங்க..பெண் கமாண்டோ forceசை அனுப்ப சொல்லி ரெகமண்ட் பண்ணுங்களேன்...ஹி..ஹி..

Unknown said...

பிரதீப் நிஜமா இது?அட பாவமே...சரி விடுங்கள் ஒரு நாள் கூத்து

Unknown said...

ஆமாங்க நாகை சிவா.ஏழை நாட்டுக்கு சனநாயகம் எதுக்கு?:-))

Unknown said...

நன்றி தலைவா..குமரா...

VSK said...

:((???

Unknown said...

ஏனுங்க எஸ்.கே?என்ன ஆச்சு?தலையை திட்டிட்டேன்னு வருத்தமா?அமெரிக்கால இருந்துகிட்டு தலையயே கிண்டலடிக்க முடியுதுன்னா அதுதாங்க அமெரிக்க ஜனநாயகத்தோட பெருமை.

Unknown said...

அதனால் என்ன தோழர் சந்திப்பு?சிங்காரவேலர் தளத்துக்கு என் வாழ்த்துக்கள்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

Sivabalan said...

செல்வன்,

Liberal Thoughts...

Conservative Questions எதுவும் வரவில்லை போல் இருக்கு...

Unknown said...

Liberal Thoughts...

Conservative Questions எதுவும் வரவில்லை போல் இருக்கு... //

Thank you sivabalan.World catholic foundationnu oru feedback irukkum.paarunga.:-))

Sivabalan said...

// புஷ் மெதடிஸ்ட் கிறிஸ்தவர்.கத்தோலிக்கர் கிடையாது //

இது இது செல்வன்..

சரியான பதில்.

Unknown said...

நன்றி சிவபாலன்.புஷ் மெதடிஸ்ட் எனும் புராட்டஸ்டண்ட் பிரிவை சேர்ந்தவர்

சிறில் அலெக்ஸ் said...

அழகான தமிழாக்கம். போட்டுத்தாக்குங்கோ.

Unknown said...

வாங்க அலெக்ஸ்...முதல் தரம் என் வலைபதிவுக்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்..மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..கருத்துக்கு நன்றி

அன்புடன்
செல்வன்

சிறில் அலெக்ஸ் said...

//என்னவோ வர வர தமிழ்மணத்தில் காமடியான ஆட்கள் நிறைய பேர் உருவாயிட்டாங்க போல.//

நெத்தி அடிங்கோ..
பதிவைவிட இது கலக்கல்.

Unknown said...

நன்றி அலெக்ஸ்,

காமடி பதிவை எல்லாம் சீரியசா எடுத்துகிட்டு சண்டைக்கு வர்ராங்க.கொஞ்ச நாள் முந்தி 66% இந்தியர்கள் புஷ்ஷை விரும்புகிறார்கள் என ஒரு கட்டுரை போட்டேன்.அதுக்கு சில காம்ரேடுகள் சண்டைக்கு வந்தாங்க.

எல்லா கருத்துக்கும் இங்க ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் இருக்காங்க போல

Unknown said...

Testing how my new avathar appears in feedback box