Thursday, June 08, 2006

102.பேய் இருக்கா,இல்லையா?

தேடலின் நோக்கம் என்ன? நாம் ஏன் கேள்வி கேட்கிறோம்? கேள்விகளின் மூலம் எதை தேடுகிறோம்? "உண்மையை தேடுகிறோம்" என லாஜிகல் பாஸிடிவிசம் (logical positivism)சொன்னது.வாக்கியங்களை விஞ்ஞான ஆய்வின் மூலம் "உண்மை" "பொய்" "பொருளற்றவை" என பிரிக்க முடியும் என லாஜிகல் பாஸிடுவிஸ்டுகள் நம்பினர்.விஞ்ஞான ஆய்வின் மூலம் நிருப்பிக்கபடுபவை "உண்மை",நிருப்பிகப்படாதவை "பொய்",ஆய்வுக்கே உட்படுத்த முடியாதவை "பொருளற்றவை-அதாவது மெடா பிஸிக்ஸ்(Meta physics)" உதாரணம் செவ்வாய் கிரகம் இருக்கிறது - உண்மை பூமிக்கு இரண்டாம் நிலவு இருக்கிறது - பொய் பேய் இருக்கிறது - மெடா பிஸிக்ஸ், ஜல்லியடி "இரண்டாம் நிலவு இருக்கிறது" எனும் வாக்கியத்துக்கும் "பேய் இருக்கிறது" எனும் வாக்கியத்துக்கும் என்ன வித்த்யாசம்?இரண்டாம் நிலவு உண்டா இல்லையா என்பதை பரிசோதனை மூலம் அறிய முடியும்.பேய் இருக்கிறதா இல்லையா என்பதை எந்த பரிசோதனை மூலமும் அறிய முடியாதது.ஆகவே அது ஜல்லியடி. உலகின் பெரும்பாலான ஆய்வுத்துறைகள் லாஜிகல் பாஸிடிவிசத்தையே தம் ஆய்வுக்கு பயன்படுத்துகின்றன.புள்ளியியல் துறையில் hypothesis testing என்பது லாஜிகல் பாஸிடிவிசத்தை அடிப்படையாக கொண்டதுதான்.இப்படி லாஜிகல் பாசிடிவிசம் விஞ்ஞானத்துறையையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது அதற்கு ஒரு எமன் வந்து சேர்ந்தான்,பிரக்மாடிசம் எனும் வடிவில். உண்மை என்றால் என்ன? இந்த கேள்வியை பிரக்மாடிசம்(pragmatism) வேறு கோணத்தில் அணுகுகிறது.உண்மை என்பதையே அது மறுதலிக்கிறது.அரிஸ்டாடிலின் கரஸ்பான்டன்ஸ் தியரி ஆப் ட்ரூத்தை(correspondence theory of truth) மறுப்பதென்பது பிரக்மாடிஸ்டுகளுக்கு மிகவும் குஷியான ஒரு விஷயம்.அப்ஜக்டிவ் ட்ரூத்(Objective truth) என எதுவுமே கிடையாது என நிறுவும் பிரக்மாடிஸ்டுகள் அதன் பின் ஒரு பெரும் குண்டை தூக்கிப்போடுகின்றனர். "எந்த வர்ணணையில் அதிக லாபம் கிடைக்கிறதோ அதுவே உண்மை" முதல்பார்வையில் இதை தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.உதாரணமாக "திருடுவது சரி" என்ற ஒரு வர்ணனையையும் "திருடுவது தப்பு" என்ற இன்னொரு வர்ணனையும் ஒப்பிட்டால் அதிக லாபம் திருடுவதில் என தெரியவந்தால் பிரக்மாடிசம் "திருடுவது சரி" என்ற வர்ணனையையே தேர்ந்தெடுக்குமா என கேள்வி எழலாம்.ஆனால் பிரக்மாடிஸ்டுகள் லிபெரலிசத்தை ஆராதிப்பவர்கள்.ரிச்சர்ட் ரோர்ட்டி சொல்வது போல் "ஒரு லிபெரல் கொடூரம் என்பது மிகவும் கேவலமான செயல் என நினைப்பவன்"(A liberal is one who believes that cruelty is the worst thing to do) என்று சொல்லிவிட்டதால் பிரக்மாடிஸ்டுகளை பொறுத்தவரை திருடுவது தப்புதான்.மாரல் ரிலேடுவிஸ்டுகளிடமிருந்து பிரக்மாடிஸ்டுகளை பிரிப்பது இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தான். "எது நன்மை பயக்குமோ அதுவே உண்மை.எதில் அதிக பலன் கிடைக்கிறதோ அதுவே உண்மை" பிரக்மாடிசத்தின் அடிநாதமே இக்கோட்பாடு தான்.ஒரு விதத்தில் தமிழரான நமக்கு இக்கோட்பாடு அன்னியமானதல்ல.ஐயன் சொன்னதுபோல் "புரைதீர்த்த நன்மை பயக்கும் வாக்கியஙளையே பிரக்மாடிஸ்டுகள் மெய்" என உரைத்தனர். ஆக விஞ்ஞான உலகில் இரு குழப்பங்கள் ஏற்பட்டன.நாம் அறிவியல் ஆய்வின் மூலம் எதை தேடுகிறோம் எனும் கேள்விக்கு இரு பதில்கள் முன்வைக்கப்பட்டன "உண்மையை தேடுகிறோம்" - லாஜிகல் பாசிடிவிசம் "லாபம் தேடுகிறோம்" - பிரக்மாடிசம் பிரக்மாடிசத்தை பொறுத்தவரை உண்மை என்பது Ill defined.எந்த கேள்விக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் உண்டு என சொல்லும் பிரக்மாடிசம் அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் வந்தால் அந்த விடைகளில் எது நமக்கு அதிக பலன் தருகிறதோ அதையே உண்மை என ஏற்க வேண்டும் என சொல்கிறது. ஆனால் ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருக்க முடியும் என்பதையே லாஜிகல் பாசிடிவிசம் ஏற்க மறுக்கிறது."உண்மை,பொய்" என்ற இரட்டை நிலைகளிலேயே அது எந்த வாக்கியத்தையும் அணுகுகிறது.6+6= என்ற கேள்விக்கு ஒரே பதில் தானே இருக்க முடியும்?12 என்பதை தவிர வேறு எந்த விடை வந்தாலும் அது தவறுதானே? பிரக்மாடிசத்தை பொறுத்தவரை 6+6= என்ன என்பது நம் பார்வை கோணத்தை பொறுத்து அமையும்.6+6= 1(டஜன்) என்பதும் சரியான விடைதானே? 6+6=1 என்ற வர்ணனையயும் 6+6=12 என்ற இந்த இரு வர்ணனைகளுல் எது நமக்கு அதிக பலன் தருகிறதோ அதுவே உண்மை என்பர் பிரக்மாடிஸ்டுகள்.12 மட்டுமே உண்மை என்பர் லாஜிகல் பாஸிடிவிஸ்டுகள். இந்த இரு கோட்பாடுகளுல் பிரக்மாடிசமே தத்துவ உலகின் வரவேற்பை பெற்றது.லாஜிகல் பாசிடிவிசத்தை பின்பற்றும் தத்துவஞானிகள் எண்ணிக்கை அருகிக்கொண்டே வருகிறது.இந்த இரண்டு கோட்பாடுகளையும் அடிப்படையில் அறிவியல் உலகம் இரு கூறுகளாக பிரிந்தது.நேசுரல் சயன்ஸ் எனப்படும் துறைகளில் லாஜிகல் பாசிடிவிச முறையில் செய்யப்படும் ஆய்வுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.புள்ளியியல் துறை லாஜிகல் பாசிடிவிச முறையிலேயே வளர்க்கப்படுகிறது.புள்ளியியல் கோட்பாடுகள் உண்மை,பொய் என்ற அடிப்படையிலேயே அமைக்கப்படுகின்றன.(Either null hypothesis is true or false.If null hypothesis is false then alternate hypothesis is true.) பிரக்மாடிசம் சோஷியல் சயன்ஸ் துறைகளில் மெல்ல மெல்ல காலடி எடுத்து வைக்கிறது.சோஷியாலஜி,ஆந்ரபாலஜி துறைகளில் பிரக்மாடிச ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.சந்தையியல்,மேலான்மையியல்,மனோதத்துவம் ஆகிய துறைகளில் லாஜிகல் பாசிடிவச்த்தின் ஆதிக்கம் மிக அதிகமாக இருப்பினும் பிரக்மாடிச முறை ஆய்வு அங்கேயும் வரத்துவங்கி விட்டது.ஜர்னல் ஆப் கன்ஸ்யூமர் ரிசர்ச்சில் க்வாலிடேடிவ் ஆய்வு முறைகளை ஊக்குவிக்கின்றனர்.க்வாலிடேடிவ் புள்ளியியல் சாப்ட்வேர்களும்(nu*dist) உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரக்மாடிசம் அறிவியல் ஆய்வுத்துறைகளை ஆக்கிரமிக்கும் காலம் வர இன்னும் ஒரு நூற்றாண்டாவது ஆகும் என தோன்றுகிறது.ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக இருக்காது.பாசிடிவிச ஆய்வுமுறைகள் மிகவும் பிரபலமடைந்து கொண்டே போகின்றன. பிரக்மாடிச மொழியில் சொல்ல வேண்டுமென்றால் "பாசிடிவிசம் பொய் என்றாலும் பிரக்மாடிசத்தை விட அதிக பயன் தருவதால் அதுவே உண்மை".அதாவது முரண்நகை என சொல்லபடுவதற்கு ஒரு உதாரணம் இது Divine irony போல் தோன்றுகிறது... (என் இந்த கட்டுரை திண்ணையில் வெளியானது.பிரசுரித்த திண்ணைக்கு என் நன்றி)

49 comments:

Gurusamy Thangavel said...

செல்வன்,
இக்கட்டுரையை முன்பு நீங்கள் திண்ணையில் எழுதியிருந்தீர்களா? நல்ல கட்டுரை. லாஜிக்கல் பாஸிடிவிசம் பற்றி மேலும் தெளிவுபடுத்தியது.

Unknown said...

ஆம் தங்கவேல்.கட்டுரையை எடிட் செய்து திண்ணை லிங்கை இணைத்து வெளியிடும்போது உங்கள் பின்னூட்டம் வந்தது.நன்றி.

வவ்வால் said...

வணக்கம் செல்வன்

இந்த பதிவு கொஞ்சம் தலைக்கு மேலே போகுது ஆனாலும் ஏதோ புரிஞ்சா போலவும் இருக்கு :-))

கண்ணதாசன் எளிமையாக இதையே "தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் தெரியாமல் போனாலே வேதாந்தம்! கள்ளிக்கு ஏது முள்ளில் வேலி போடி தங்கச்சி ,காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி" என பாடி வைத்துவிட்டார்!

பட்டணத்து ராசா said...

இந்த உண்மை என்பதில் டைம்(காலம்) அப்படிங்கற சங்கதி இருக்கே? பூமிக்கு இரண்டாவது நிலவு இருக்கு அப்படிங்கறத பூமிய சுத்திதான் எலலாங்கற காலகட்டதில சொன்னா?

Unknown said...

வவ்வால்,

உண்மைதான்.கொஞ்சம் heavyயா எழுதிட்டமோன்னு தோணுது.நாளை ஏதாவது லைட்டா எழுதறேன்.

Unknown said...

நன்றி ராசா

இதற்கு பதில் நாளை காலை இடுகிறேன்.இப்ப நள்ளிரவு தாண்டியாச்சு.தூக்கம் கண்ணை சுத்துது

அன்புடன்
செல்வன்

வஜ்ரா said...

டூ மச் philosophy செல்வன்.

இதை யெல்லாம் புரிய வைக்க வேண்டுமென்றால், நிரய எடுத்துக் காட்டுகள் கொடுக்கவேண்டும். Text book examples சரிவராது. Real life examples வேண்டும்.

நல்ல பதிவு. ஆராய்ச்சி மாணவர் என்று இருக்கிறது உங்கள் Profile ல். எகனாமிக்ஸ் ஆராய்ச்சியா?

G.Ragavan said...

லேசா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு இருக்குற மாதிரி இருக்கு....புரிஞ்ச மாதிரியும் இருக்கு.

சிவமுருகன் said...

செல்வன் சார்,
//உண்மை என்றால் என்ன?//

உண்மையிலும் மூன்று வகையுள்ளது

பொதுவான உண்மை
பொய்யான உண்மை
உண்மையான உண்மை
(நன்றி ஐயா அறிவொளி அவர்கள்)

ROSAVASANTH said...

கட்டுரைக்கான சில ரெஃபரன்ஸ் என்று சில சுட்டிகளை குறிப்பிடுவது உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது. எனது 'பகுத்தறிவின் காட்டுமிராண்டித்தனம்' பதிவில் உண்மை என்பதன் வேறு அணுகுமுறை பற்றி மெல்லியதாய் பேசியிருப்பேன். இன்னமும் பேசும் நோக்கம் உள்ளது. இந்த கட்டுரை தெளிவான மொழியில் எழுதப்பட்டுள்ளது.

எனக்கு என்ன குழப்பம் என்றால் இதை எழுதிய நீங்கள் சிம்புவையும் என்னையும் சேர்த்து எழுதிய அபத்த பதிவை( என்று நான் நினைப்பதை) எப்படி எழுதினீர்கள் என்பதுதான். எப்படி அபத்தம் என்று விளக்கம் கேட்டு மல்லுக்கு நிற்காதீர்கள். எனது சென்ற வார முதல் பதிவிலேயே, என் பதிவு எதிர்கொண்ட விதத்தை பற்றி எழுதியிருக்கிறேன்.ஒரிஜினல் பதிவிலேயே மிக தெளிவாக சொல்வதன் பொருள், அதன் சந்தர்ப்பம், மற்றும் தேவை பற்றி சொல்லி பதிந்திருக்கிறேன். உங்களின் பதிவை (எனக்கான எதிர்வினையை) நான் முழுவதும் படிக்கவில்லை. பாதிக்கு மேல் தாங்கமுடிவில்லை. இந்த வார பதிவுகளில் நீங்கள் காண்பிக்கும் முதிர்ச்சியை பார்த்து இதை ஏனோ சொல்லத் தோன்றியது. நன்றி!

மணியன் said...

உண்மை எது, பொய் எதுனு ஒண்ணும் புரியலை :))

குமரன் (Kumaran) said...

ரொம்ப நல்ல கட்டுரை செல்வன். எனக்கென்னவோ தொடக்கத்திலே இருந்து ப்ராக்மாடிசம் தான் பிடித்தது என்று நினைக்கிறேன். 'Either you are with me or with my enemy' என்ற லாஜிக்கும் 'உண்மை, உண்மை இல்லாதது பொய்' என்ற லாஜிக்கும் சரியாகப் படுவதில்லை.

பொன்ஸ்~~Poorna said...

//லேசா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு இருக்குற மாதிரி இருக்கு....புரிஞ்ச மாதிரியும் இருக்கு. //
அதே அதே..

குன்றக்குடியார்னு நினைக்கிறேன்... எங்க பள்ளிக்கு வந்தப்போ சொன்னது இது:
உண்மை என்பது நான்கு வகைப்படும்:
1. உண்மையான உண்மை
2. பொய்யான உண்மை
3. அந்த நிமிட உண்மை
4. நிலையான உண்மை

இதுக்கு ஒவ்வொண்ணுக்கும் விளக்கம் சொன்னாரு.. ரொம்ப பிராக்டிகலா..

அதை நினைவுப் படுத்திவிட்டது!!

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா. இதுக்கு மேல எதாவது சொல்லணும்ன்னா புரியணும். நமக்கு.....ஹிஹி...

VSK said...

வாழ்வியலில் நாம் அனைவரும் சந்திப்பது இந்த லாஜிகல் பாஸிடிவிஸம் தன்ன் முழு நேரமும்!

இவ்வளவு மதிப்பெண் எடுத்தால் நீ தேர்வு; இல்லையேல் தோல்வி என்பதே உண்மை!

ஆறும், ஆறும் பனிரண்டு என்பது தவிர்த்து, ஒரு டஜன் என்பது ஒரு விதண்டாவதமாகப் படுமே அல்லாது, 'உண்மை' ஆகாது!

வேண்டுமானால், ஒரு டஜன் என்பது 12 என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஒருவிரலைக் காட்டி 'இது பாபா; இப்போது, நான் விரலைச் சாய்க்கிறேன்; இது 'சாய் பாபா' எனும் அர்த்தமற்ற சிரிப்புத் துணுக்குப் போன்றதே இதுவும்!

'ப்ரக்மாடிஸம்' என்பதே ஒரு தோற்ற[!!] மயக்கம் தான்!

நடுநிலை என்ற ஒன்றே கிடையாது!

ஒன்று நீ என் மகன்/ள் அல்லது இல்லை!
டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தெளிவு செய்து கொள்ளலாம்!

ஒன்று நான் உன் பக்கம், இல்லை, அந்தப் பக்கம்!
இதுதான் சத்தியம்!

நான் நடுநிலை வகிக்கிறேன் என்பதெல்லம், சமயம் கிடைத்தவுடன்,
சைடு எடுக்கும் மனோநிலை தவிற வேறில்லை!

"இல்லை"யென்று சொல்லுபவரே,
ப்ரக்மாடிஸத்தின் துணை நாடிடுவார்!

இருந்தால் சிவம்!
இல்லையேல், சவம்!

இதுதான் "உண்மை"!!!

சிறில் அலெக்ஸ் said...

கான் ஏர் படத்தில் ஒரு காட்சியில் தொடர் கொலை செய்தவனைப் பார்த்து நிக்கொலாஸ்கேஜ் பைத்தியம் என்பார். அவன் கேஜிடம் திரும்பி "எது பைத்தியம். என்னைக்கேட்டால் ஏதோ ஒரு அலுவலகத்தில் மாங்கு மாங்குன்னு வேலை பார்த்துட்டு ரிட்டையர்மண்ட் ஆயி சோர்ந்துபோனபிறகு வாழ்க்கைய அனுபவிக்கலாம்னு நினைக்கிறதுதான் பைத்தியக்காரத்தனம்" என்பான்.

வாழ்க்கையைபற்றி பல தத்துவங்கள்...

ஏனோ நியாபகம் வந்தது சொல்கிறேன்.

Sivabalan said...

செல்வன்,

மிக நல்ல பதிவு.

நீங்கள் உங்கள் பதிவின் மூலம் தமிழில் கூட இது போன்ற பதிவுகள் உள்ளன என நீருப்பிக்கின்றீர்கள்.

// பிரக்மாடிஸ்டுகள் லிபெரலிசத்தை ஆராதிப்பவர்கள்.//
என்பதால் ஏனோ பிரக்மாடிசத்தின் மீதுதான் எனக்கு ஆர்வம் அதிகமாகிறது.

In hypothesis testing, 1% of Error in sampling and 5% of Error in sampling கையாளப்படுகிறது என நினைக்கிறேன். இதுவே பிரக்மாடிசத்திற்கு அத்துறையில் Breaking Point ஆக இருக்கலாம் என நினைக்கிறேன்.

மிக்க நன்றி.

Unknown said...

//இந்த உண்மை என்பதில் டைம்(காலம்) அப்படிங்கற சங்கதி இருக்கே? பூமிக்கு இரண்டாவது நிலவு இருக்கு அப்படிங்கறத பூமிய சுத்திதான் எலலாங்கற காலகட்டதில சொன்னா? ///

ராசா
உண்மை என்பது பலவகையா சொல்லுவாங்க. Absolute truth என்பது காலம்,தேசம் ஆகிய வர்த்தமானங்களை தாண்டியது.(எ.கா:God is there)

ரிலேடிவிசம் என்பது உண்மை கால தேச கலாச்சார எல்லைகளுக்குட்பட்டதுன்னு சொல்வது.ஒரே வாக்கியம் உங்களை பொறுத்தவரை உண்மை,என்னை பொறுத்தவரை பொய் (எ.கா: குளிருது)

Unknown said...

//லேசா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு இருக்குற மாதிரி இருக்கு....புரிஞ்ச மாதிரியும் இருக்கு. //

வாங்க ராகவன்

கொஞ்சம் heavyயா எழுதிட்டமோன்னு தோணுது.இனி லேசான பதிவுகள் தான் இந்த வாரம் முழுக்க.நன்றி ராகவன்

Unknown said...

வாங்க வஜ்ரா ஷங்கர்

நான் சந்தையியல் (மார்க்கெட்டிங்) மாணவன்.ஒரே கட்டுரையில் சொல்ல முடியக்கூடிய விஷயமில்லை தான்.இனி மேல் இதை தொடர்ந்து எழுதும் எண்ணம் உண்டு(பதிவில் இல்லையென்றாலும் இணைய இதழ்களிலாவது)

நன்றி வஜ்ரா

Unknown said...

//பொதுவான உண்மை
பொய்யான உண்மை
உண்மையான உண்மை
(நன்றி ஐயா அறிவொளி அவர்கள்) ///


சிவமுருகன்

அறிவொளி ஐயா சொன்னது Logical positivism என்ற முறையில் சரியாக இருக்கலாம்.உண்மையான உண்மை என்பது absolute truth என்ற பொருளில் வரும் என நினைக்கிறேன்

பொன்ஸ்~~Poorna said...

நானும் ஐயா அறிவொளி சொன்னதைத் தான் சொல்ல வந்தேன்.. சரியா தப்பா நினைச்சிகிட்டு இருக்கேன் :)

Unknown said...

வாருங்கள் ரோசா வசந்த்

//கட்டுரைக்கான சில ரெஃபரன்ஸ் என்று சில சுட்டிகளை குறிப்பிடுவது உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது. எனது 'பகுத்தறிவின் காட்டுமிராண்டித்தனம்' பதிவில் உண்மை என்பதன் வேறு அணுகுமுறை பற்றி மெல்லியதாய் பேசியிருப்பேன். இன்னமும் பேசும் நோக்கம் உள்ளது. இந்த கட்டுரை தெளிவான மொழியில் எழுதப்பட்டுள்ளது//

நன்றி.இது என் தத்துவ வகுப்பில் நடந்த விவாதங்களை நினைவில் கொண்டுவந்து எழுதியது.புத்தகம்,சுட்டி என எதுவும் ரெபெர் செய்யவில்லை.ஆனால் சுட்டி தந்திருந்தால் மேலும் ஆழ்ந்து படித்திருக்க உதவியாக இருந்திருக்கும் தான்.உங்கள் பகுத்தறிவு பதிவை படித்தேன்.ஜைன முனிவரின் நிர்வாணத்தில் துவங்கி பகுத்தறிவை மறுவரையறை செய்வது குறித்து அருமையாக எழுதியிருந்தீர்கள்.

//எனக்கு என்ன குழப்பம் என்றால் இதை எழுதிய நீங்கள் சிம்புவையும் என்னையும் சேர்த்து எழுதிய அபத்த பதிவை( என்று நான் நினைப்பதை) எப்படி எழுதினீர்கள் என்பதுதான். எப்படி அபத்தம் என்று விளக்கம் கேட்டு மல்லுக்கு நிற்காதீர்கள்//

மல்லுக்கு ஒன்றும் நிற்கவில்லை:-)))

ஒரே விஷயத்தை பலர் பலவிதமாக பார்ப்பார்கள்.நீங்கள் ஒரு விமர்சனம் எழுதினீர்கள்.அதை படித்து அப்போதிருந்த மனோநிலையில் நான் அந்த பதிவை எழுதினேன்.உங்கள் பதிவை ரசித்திருந்தால் அதை விமர்சனம் செய்திருக்க மாட்டேன்.ஒரே விஷயத்தை இருவரும் அணுகும் முறையும் வேறு என்பதை தவிர இப்போது சொல்ல ஏதுமில்லை.

நடந்தது எப்படி இருப்பினும் நீங்கள் அதற்கு எப்படி ரியாக்ட் செய்வீர்கள் என நான் யூகித்தது சரியாக தான் இருக்கிறது.ஒரு இலக்கியவாதியை போல் ரியாக்ட் செய்வீர்கள் என நினைத்தேன்.அதே தான் நடந்திருக்கிறது.ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வது தமிழ்மணத்தில் வெட்டு குத்தில் போய் முடியும் நிலை தான் நீடிக்கிறது.இது ஆரோக்கியமான சூழலாக தெரியவில்லை.அதனால் தான் நான் இதுவரை எந்த பதிவரையும்(உங்களை தவிர்த்து) விமர்சித்ததே இல்லை.உங்களை மட்டும் விமர்சிக்க காரனம் நீங்கள் மற்றவர்களை போல் இல்லை என்ற என் எண்ணம் தான் காரனம்.

திண்ணையில் இன்று ஜோதிர்லதா கிரிஜாவை விமர்சித்து எழுதினேன்.அதற்கு என்ன மாதிரி விமர்சனம் அவரிடமிருந்து வரும் என ஒரு யூகம் இருக்கிறது.ஆரோக்கியமான முறையில் தான் அவரிடமிருந்து பதில் வரும்.அது போன்ற எழுத்தாளர்களை மட்டுமே விமர்சிக்க விரும்புகிறேன்.

தமிழ் வலைபதிவு உலகில் சிறந்த இலக்கியவாதிகள் என 3 பேரை நினைத்துள்ளேன்.அதில் ஒருவர் நீங்கள்.மற்ற இருவர் பற்றியும் இனி வருங்காலங்களில் எழுதுவேன்.

Unknown said...

பொன்ஸ்
பாசிடிவிச முறையில் நீங்கள் சொன்னதை பின்வருமாறு அழைப்பர்

உண்மை என்பது நான்கு வகைப்படும்:

1. உண்மையான உண்மை=absolute truth
2. பொய்யான உண்மை=(I dont know about this)

3. அந்த நிமிட உண்மை=relativism

4. நிலையான உண்மை=eternal truth

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

செல்வன்,
நன்றி.
இது போன்ற பதிவுகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பமும், வேண்டுகோளும்.
லேசான பதிவுகளுக்கா பஞ்சம்? உங்களுக்கு இது போன்றவை குறித்து எழுத ஆர்வம் உண்டெனில், வாசிக்க நிறையப் பேர் உண்டென்று நம்புகிறேன்.
- வித்யா

Unknown said...

அவசரப்படாதீர்கள் எஸ்.கே

"No man ever steps in the same river twice, for it's not the same river and he's not the same man" என்றொரு தத்துவம் கிழக்கத்திய நாடுகளின் புத்தகங்களில் உண்டு.சிந்தித்தால் இத்தத்துவமே க்வாண்டம் தத்துவத்தின் அடிப்படை என தெரியவரும்(ஜல்லின்னு சொல்லாதீங்க.இது ஜப்பானிய பழமொழி:-))))

///ஒன்று நீ என் மகன்/ள் அல்லது இல்லை!
டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தெளிவு செய்து கொள்ளலாம்!///

டி.என்.ஏ. பரிசோதனை 100% நம்பகமானது அல்ல.99% உறுதியாகத்தான் சொல்ல முடியும்:-))))

மேலும் இது மகன்,மகள்,ஆண்,பெண்,நான் ஆகியோரை நீங்கள் எப்படி வரையறை செய்கிறீர்கள் என்பதை பொறுத்தது.

உண்மை என்பது விஞ்ஞானத்தின்/அறிவின்/தேடலின் எதிரி எஸ்.கே.இதை ஒரே பதிவில் விளக்கவே முடியாது,மானிட இனம் வாழ உண்மை அழித்தொழிக்கப்படவேண்டும்(அதாவது மறுகட்டமைப்பு செய்யப்படவேண்டும்).இது பற்றி தொடர்ந்து பதிவுகள் இடுகிறேன்.

நன்றி
செல்வன்

Unknown said...

எஸ்.கே

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனின்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

இந்த இரண்டு குறள்களும் உரைக்கும் தத்துவமே பிரக்மாடிசம்.இவற்றை நீங்கள் மறுக்கிறீர்களா என சொல்லுங்கள்.

Unknown said...

அலெக்ஸ்

நீங்கள் சொன்னது உண்மைதான்.பார்க்கும் பார்வையை பொறுத்துதான் பைத்தியம் யார்,நல்லவன் யார் என்பது முடிவாகும்.The underlying philosophy is When you point a finger at somebody 3 fingers point at you.

நன்றி அலெக்ஸ்

Unknown said...

//In hypothesis testing, 1% of Error in sampling and 5% of Error in sampling கையாளப்படுகிறது என நினைக்கிறேன். இதுவே பிரக்மாடிசத்திற்கு அத்துறையில் Breaking Point ஆக இருக்கலாம் என நினைக்கிறேன்.//

Sivabalan

5% and 1% denote .01 and .05 alpha level in sampling.This indicates the probablity that the sample which we have has not come from the population.

Thanks sivabalan
selvan

Unknown said...

வித்யாசாகரன்
நிச்சயம் இது பற்றி தொடர்ந்து எழுதுவேன்.படிக்க வாசகர்கள் இருக்க கவலை என்ன?இணைய இதழ்களிலும் இவற்ரை பிரசுரிக்கின்றனர்.ஆக கண்டிப்பாக எழுதுவேன்

நன்றி
அன்புடன்
செல்வன்

Unknown said...

மணியன்:-)))

கண்ணால் காண்பதும் உண்மையல்ல,காதால் கேட்பதும் உண்மையல்ல.தீர விசாரிப்பதே மெய்.

ரவி said...

செல்வன்...அருமையான பதிவு....புரிய கொஞ்ச நேரம் ஆனது...ஆனால் யோசிக்கவைத்தது....

நன்றி...

Unknown said...

மிக்க நன்றி செந்தழல் ரவி

தாணு said...

``தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்''- அது உண்மையைத் தேடியோ அல்லது மாயையைத் தேடியோ!

Gurusamy Thangavel said...

செல்வன்,
//உண்மை என்பது விஞ்ஞானத்தின்/அறிவின்/தேடலின் எதிரி//

எவ்வாறு என அறிய ஆவலாக உள்ளேன். விரைவில் எழுதவும்.

VSK said...

'புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின், பொய்மையும் வாய்மை போன்றதே' என வள்ளுவர் சொல்லுகிறார்.[292]

வெறுமே, நன்மை பயக்குமெனின் என்று சொல்லிவிட்டுப் போகவில்லை!

அப்படிச் சொல்லியிருந்தால், அதுதான் ப்ரக்மாடிஸம்.

ஆனால், அவர் சொன்னது, புரை தீர்ந்த== குற்றமில்லாத, குற்றமற்ற, நன்மை பயந்தால்தான் அது வாய்மை ஆகும் என்கிறார்.

நீங்கள் சொல்லுகிற ப்ராக்மாடிஸ உண்மையில், "அதிகப்படியான நன்மை" எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

வள்ளுவனோ, "குற்றமற்ற நன்
மை" என்கிறார்.

முன்னது ப்ராக்மாடிஸம் என்றால்,
பின்னதுதான் பாஸிடிவிஸ உண்மை.

இரண்டாவது குறளிலும் [திருக்குறளில் இதுதான் முந்தையது![291]], வள்ளுவர் இதே கருத்தினையே வலியுறுத்துகிறார்.

எந்த ஒரு உயிர்க்கும் தீங்கு இலாத , செய்யாத சொற்களே வாய்மை எனப்படும் என்கிறார்.

இது எப்படி ப்ராக்மாடிஸம் ஆகும்?

பாஸிடிவிஸ உண்மை என்பது முழுமையானது. absolute]அப்சொல்யூட்.

ப்ராக்மடிஸ உண்மையோ, அதிகப்படியானது. மேக்ஸிமம்.[Maximum]

எனவே, நீங்கள் சொன்னது போல, இவ்விரண்டு குறள்களும், ப்ராக்மாடிஸத்தை வலியுறுத்துகின்றன என்னும் உங்கள் வாதத்தை நான் ஏற்க மறுக்கிறேன்.

விஞ்ஞானம், அறிவு, தேடல் இவையெல்லாமே "உண்மையைத் தேடியே" என்பது என் துணிபு.

Unknown said...

உண்மையை பற்றி எழுதுகிறேன் தங்கவேல்.எழுதியதும் உங்கள் பதிவில் தகவல் இடுகிறேன்.நன்றி தங்கவேல்

Unknown said...

//உள்ளேன் ஐயா. இதுக்கு மேல எதாவது சொல்லணும்ன்னா புரியணும். நமக்கு.....ஹிஹி... //

ஆகா...பதிவில் வேறு கருத்து இருந்தும் நட்புக்காக தலையை காட்டிய நண்பா கொத்தனார்..வாழ்க நீ எம்மான்.

Unknown said...

//ரொம்ப நல்ல கட்டுரை செல்வன். எனக்கென்னவோ தொடக்கத்திலே இருந்து ப்ராக்மாடிசம் தான் பிடித்தது என்று நினைக்கிறேன். 'Either you are with me or with my enemy' என்ற லாஜிக்கும் 'உண்மை, உண்மை இல்லாதது பொய்' என்ற லாஜிக்கும் சரியாகப் படுவதில்லை. //

குமரன்

இதே தான் நானும் சொல்ரேன்.எஸ்.கே ஒத்துக்காமல் இருக்கிறார்."நல்லவன்" "கெட்டவன்" அப்படின்னு யாரையும் நாம இரண்டு பிரிவாக பிரிக்கவே முடியாது.ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு ராமனும் இருப்பான்,ராவணனும் இருப்பான்.

//'உண்மை, உண்மை இல்லாதது பொய்' // இதுவும் நீங்கள் சொன்ன மாதிரி தப்பான லாஜிக்தான்

'நன்றி குமரன்

Unknown said...

//6+6 = 1 என்பது தப்பு. "=" உடைய definition is "both sides must have equal unit of measures, So 6 dozens + 6 dozens = 12 dozens" . //

ஒரு உதாரணம் சொன்னா அதுல உள்ள கருத்தை புரிஞ்சுக்கணுமே தவிர வார்த்தையை பிடித்துக்கொண்டு தொங்ககூடாது.

//நீங்க உங்க காலேஜ்ல படிக்கறது எனக்கு புரியலை. //

அதெல்லாம் புத்திசாலிகளுக்கு மட்டுமே புரியும்.உங்களுக்கு எப்படி புரியும்?:-)))

Unknown said...

//நீங்கள் சொல்லுகிற ப்ராக்மாடிஸ உண்மையில், "அதிகப்படியான நன்மை" எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

வள்ளுவனோ, "குற்றமற்ற நன்
மை" என்கிறார்.//

"குற்றமற்ற உண்மை" என்பது நிஜவாழ்வில் செயல்படுத்டுவது மிகவும் கடினம் எஸ்.கே.திருக்குறளை/கீதையை சொன்னாலே சிலருக்கு பிடிக்காது.அதற்காக சொல்லாமல் இருக்க முடியுமா?"அதிகப்படியான நன்மை" என்பது செயல்படுத்துவதற்கு எளிது.It is more practical than குற்றமற்ற உண்மை.

//எந்த ஒரு உயிர்க்கும் தீங்கு இலாத , செய்யாத சொற்களே வாய்மை எனப்படும் என்கிறார்.

இது எப்படி ப்ராக்மாடிஸம் ஆகும்?//

இது practically impossible.நம்மால் முடிந்தது கூடுமானவரை நன்மை தரும் சொற்களை பேசுவதுதான்.எந்த வார்த்தையை நாம் பேசி யார் மனம் காயப்படும் என தெரியாது.நம்மால் முடிந்தவரை நல்ல வார்த்தைகளை சொல்ல இயலுமல்லவா?

//விஞ்ஞானம், அறிவு, தேடல் இவையெல்லாமே "உண்மையைத் தேடியே" என்பது என் துணிபு. //

ஐன்ஸ்டீனே உங்கள் கருத்தை மறுக்கிறார்.உண்மையை தேடுவதாக எந்த விஷயம் தெரிந்த விஞ்ஞானியும் சொல்ல மாட்டார்.இவரின் இன்றைய கண்டுபிடிப்பு நாளை மறுக்கப்படக்கூடும்.பிறகு அதை உண்மை என எப்படி சொல்வார் அவர்?

Whoever undertakes to set himself up as a judge of Truth and Knowledge is shipwrecked by the laughter of the gods."

Albert Enistein

http://rescomp.stanford.edu/~cheshire/EinsteinQuotes.html

இலவசக்கொத்தனார் said...

//ஆகா...பதிவில் வேறு கருத்து இருந்தும் நட்புக்காக தலையை காட்டிய நண்பா கொத்தனார்..வாழ்க நீ எம்மான்.//

யோவ். என்ன நக்கலா? புரிஞ்சாத்தானே கருத்தெல்லாம். அதான் புரியலைன்னு ஒரு மார்க்கமா சொன்னேன். எல்லாத்தையும் போட்டு உடைக்கணுமா? உடைச்சாச்சு. இப்போ திருப்தியா?

Unknown said...

வேறு கருத்துன்னா topic which i am not interestedந்னு அர்த்தம்.நீங்க ஏனுங்க எல்லாத்தையும் தப்பாவே நினைக்கறீங்க?:-))

Unknown said...

//தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்''- அது உண்மையைத் தேடியோ அல்லது மாயையைத் தேடியோ!//


உண்மைதாங்க தாணு.இந்த தெளிவு இருந்தாலே போதும்,வெற்றி அடையலாம்.ஆனா உண்மையை அடைவோம் என நான் நம்பவில்லை.என்னை பொறுத்தவரை நீங்க ரெண்டாவதா சொன்ன மாயை அதை நம்புகிறேன்

Muthu said...

இந்த பதிவு என் கண்ணில் இருந்து எப்படி நழுவியது !!!

இதை இன்னொரு முறை படிக்கணும் போலயெ..

Muthu said...

செல்வன்,

எனக்கு மேட்டர் புரிஞ்சிடுச்சி. ரொம்ப சிம்பிள்.

இந்த இரண்டு தத்துவத்தையும் எல்லா விஷயத்திற்கும் ஒரே மாதிரி அப்ளை செய்யமுடியாது.ஓரளவு இது சரியாக வரும் என்று தோன்றுகிறது.

உண்மை தெரிந்தால் போதுமா இல்லை அந்த உண்மையினால் உங்களுக்கு ஏதாவது பலனும் வேண்டுமா? என்று போட்டு பாருங்கள்.


இதை எப்படி விளக்குவது என்று புரியவில்லை.நேர்பேச்சில் ஒரளவு
செய்யலாம்.ஹிஹி.

Unknown said...

Muthu,
Thanks for the feedbacks.Will post my replies today evening(its morning here:-))

Having class now

Unknown said...

//இந்த இரண்டு தத்துவத்தையும் எல்லா விஷயத்திற்கும் ஒரே மாதிரி அப்ளை செய்யமுடியாது.ஓரளவு இது சரியாக வரும் என்று தோன்றுகிறது.

உண்மை தெரிந்தால் போதுமா இல்லை அந்த உண்மையினால் உங்களுக்கு ஏதாவது பலனும் வேண்டுமா? என்று போட்டு பாருங்கள்.//

இரு தத்துவங்களுக்கும் இடை நிலையிலான கருத்து இது.ஆனால் இருதரப்பாரும் அவர்கள் தரப்பே சரி என வாதிடுவர்.:-))

//இதை எப்படி விளக்குவது என்று புரியவில்லை.நேர்பேச்சில் ஒரளவு
செய்யலாம்.ஹிஹி. //

நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாகவே சொல்லிவிட்டீர்கள்.உண்மை இருந்தால் மட்டும் போதாது அது பலன் தர வேண்டும் என்பது உங்கள் கோட்பாடு என நினைக்கிறேன்.

நன்றி முத்து

Muthu said...

//உண்மை இருந்தால் மட்டும் போதாது அது பலன் தர வேண்டும் என்பது உங்கள் கோட்பாடு என நினைக்கிறேன்.//

இல்லை.

சில விஷயங்களில் உண்மையை மட்டும் என்றும்..

சில விஷயங்களில் பலன் தரும் உண்மை என்றும் பிரித்து பார்க்க வேண்டும்

என்பதுதான் சரியாக இருக்கும்.