Wednesday, March 01, 2006

56.வெற்றி,வெற்றி

நிலா அவர்கள் நடத்திய தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.வெற்றிகரமாக என்றால் எங்களுக்கு வெற்றிகரமாக அல்ல குமரன்,கொத்தனார் அணிக்கு வெற்றிகரமாக.முதலில் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்தை சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். இந்த தேர்தலால் நான் நிஜமாகவே மகிழ்ச்சி அடைந்தேன்.நான் தோற்றதாகவே கருதவில்லை.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அதற்கு காரணம் எங்கள் அணிக்கு கிடைத்த ஓட்டுக்கள் தான். நான் நேற்று காலை ஆபிஸுக்கு வந்தபோது மணி 10.பிரச்சாரம் துவங்கும்போது மணி 10.30.தேர்தல் முடிந்த போது மதியம் மணி 2.கிட்டத்தட்ட 3.5 மணிநேரம் தான் இருந்தது. "காப்பாத்துங்க.." என ஒரு பதிவு போட்டேன்.பறந்தடித்துக்கொண்டு வந்தனர் ரசிகப்பெருமக்கள்.எங்களுக்கு விழுந்த முதல் ஓட்டே அனானிமஸ் ஒருவர் அன்புடன் இட்ட ஓட்டாகும்.அதன் பின் அன்பர்கள் 8 பேர் ஓட்டு போட்டனர். எங்களுக்கு விழுந்த ஓட்டுக்கள் விவரம் Anonymous Ashlyn Manjoor Raja http://manjoorraja.blogspot.com/ Sam http://kozhundu.blogspot.com/ Ranganayaki Rams http://ramrulz.blogspot.com/ SuthainViji DJ Thamizhan http://djthamilan.blogspot.com/ வாக்களித்த இந்த 8 பேர் போக தயா,சூப்பர் சுப்ரா,சிவசங்கர்,செந்தூரன் ,தேன் துளி,தயா,பொட்டிகடை,நந்தன்,தமிழினி முத்து,சந்ரவதனா,சாரா,குழலி,சின்னக்காளை,அன்பு,இளவஞ்சி,யாத்ரீகன்,சோம்பேறிபையன்ஆகியோர் நேரம் கடந்து ஓட்டளித்தனர்.மதுமிதா அவர்கள் முன்கூட்டியே கேட்டிருந்தால் ஓட்டளித்திருக்க முடியும் என சொல்லியிருந்தார் மதுமிதா said "கொஞ்சம் முன்னாடி சொல்லியிருக்கக் கூடாதா செல்வன் இனிமே போட்டா கள்ள ஓட்டாயிடுமே ஆக 3.5 மணி நேர முயற்சியில் எங்களுக்கு 26 பேர் ஆதரவு கிடைத்தது" இது போக தருமி அவர்களின் ரசிகர் படை அவர் பதிவில் நேரப்பிரச்சனையால் வாக்களிக்க முடியவில்லை என பின்னூட்டம் இட்டு வருத்தம் தெரிவித்தனர். இவர்கள் ஓட்டு விழுந்தது என்பதை விட எப்படி இந்த ஓட்டுக்கள் விழுந்தன என்பது தான் என்னை நெகிழ வைக்கிறது.குறிப்பாக சாமின் இந்த பின்னூட்டம் என்னை கண்கலங்க செய்துவிட்டது. ----------------------------------- செல்வன்உங்களுகாக இன்னும் எத்தனை பிளாக் ஆரம்பிக்கணும்னு, சொல்லுங்க! செய்துடுவோம்.சாம் செல்வன்,இந்திய நேரப்படி இன்னும் நாற்ப்பது நிமிடங்கள் இருக்கு. ஜிம், ஜான், டிம், டாம் என்றெல்லாம்பிளாகர், அகவுன்ட் ஆரம்பித்து கணினியிலிருந்து எதயாவது வெட்டி ஒட்டி கருத்துக் கேட்கிறேன்.அந்த ஒட்டும் உங்களுக்கே! கவலையே படாதீங்க. இந்த ஊர்ல கென்னடி கூட இப்படித்தான்ஜெயித்தார்ன்னு சொல்றாங்க!சாம் ---------------------------------- ரோஜா அணிக்கு விழுந்த ஓட்டுகள் 24. (இதுபோக அவர்கள் தரப்பில் நேரம் கடந்த ஓட்டுகள் உண்டு.எத்தனை என எண்ணவில்லை.சுமார் 10 இருக்கலாம்.)மூன்றரை மணி நேர முயற்சியில் எங்களால் திரட்ட முடிந்த ஓட்டுகள் 26. ஆனால் இதை எல்லாம் சொல்லி ரோஜா அணியின் விடா முயற்சியை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. இந்த மகத்தான் ஆதரவை தந்த தருமியின் ரசிகர்களுக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

25 comments:

மணியன் said...

மற்ற போட்டிகளில் வெற்றி தோல்வி பற்றி கவலைப் படுவதில்லை. இந்த தேர்தல் மட்டும் எல்லோரையும் பாதித்திருப்பதாக தெரிகிறது. இதுவும் விளையாட்டுதானே.

நான் தருமி பதிவில் கூறியது போல் பிரசாரத்திற்கும் வாக்களிப்பிற்கும் இடைவெளி இருந்திருந்தால் level playing groundஆக இருந்திருக்கும்.

நன்றாக செய்தீர்கள், வாழ்த்துக்கள்.

Unknown said...

மணியன் has left a new comment on your post "56.வெற்றி,வெற்றி":

மற்ற போட்டிகளில் வெற்றி தோல்வி பற்றி கவலைப் படுவதில்லை. இந்த தேர்தல் மட்டும் எல்லோரையும் பாதித்திருப்பதாக தெரிகிறது. இதுவும் விளையாட்டுதானே.

நான் தருமி பதிவில் கூறியது போல் பிரசாரத்திற்கும் வாக்களிப்பிற்கும் இடைவெளி இருந்திருந்தால் level playing groundஆக இருந்திருக்கும்.

நன்றாக செய்தீர்கள், வாழ்த்துக்கள்.

Vaa.Manikandan said...

sorry appu! ennaala vote panna mudiyalai. late nalum annan latest....vangikkungga oru kuththu...
angga pooy kaLLa vote poda poReen.

குமரன் (Kumaran) said...

வாக்குசாவடி மூடிய பிறகும் வந்த வாக்குகளைச் சேர்த்தால் ரோஜா அணியினருக்கு 39 வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் எதுவும் செல்லாத வாக்குகள் கிடையாது. செல்லாத வாக்குகளையும் நிலா அனுமதிப்பார் என்று தெரிந்திருந்தால் இன்னும் குறைந்தது ஒரு 10 வாக்குகளாவது எங்கள் அணிக்குக் கிடைத்திருக்கும். ஆனாலும் அந்த மாதிரி அழுகுணி ஆட்டம் ஆடுவதும், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அனுதாப வாக்கு பெறுவதும் இறையருளாலும் வலையுலக தாய்மார்கள், பெரியோர்களின் ஆசியினாலும் எங்களுக்குத் தேவையில்லாமல் போய்விட்டது. :-)

குமரன் (Kumaran) said...

மல்லிகை என்ற அணியின் பெயருக்கேற்ப மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதை உணர்ந்து எங்களின் இடைவிடாத தேர்தல் பணியை ஒத்துக் கொண்ட செல்வன் அவர்களுக்கு நன்றி.

Muthu said...

செல்வன்,

காலைல முதல்ல உங்க கடிதத்தை பார்த்தேன். மதுரை குமரனும் மெயில் பண்ணியிருந்தார். ஆனாலும் கிருஷ்ண பரமாத்மா கால் மாட்டுல உட்காந்திருந்த அர்ஜுனனை பார்த்த மாதிரி உங்க மெயிலை முதல்ல பார்த்ததுனால உங்களுக்கு குத்தினேன்.

அதுவும் கடைசில ஒர்க் அவுட் ஆகலை போல..வுடுங்க பாத்துக்கலாம்.

வெற்றி பெற்ற குமரன் அண்ட் கம்பெனிக்கு பாராட்டுக்கள்..


WHAT HAPPENED TO CHAIN POST?

குமரன் (Kumaran) said...

//இந்த மகத்தான் ஆதரவை தந்த தருமியின் ரசிகர்களுக்கும் என் ரசிகர்களுக்கும்
//

பாதிக்கும் மேல அனுதாப ஓட்டு வாங்கிட்டு உங்களுக்கே இது அதிகமாத் தெரியல? :-) தருமி ஐயாவுக்கு ரசிகர்கள் இருக்கலாம். அவர்கள் உங்கள் அணிக்கு வாக்களித்திருக்கலாம். நாங்கள் முந்திக் கொண்டதால் எங்களுக்கு வாக்களித்து விட்டு பின்னர் மாற்றி தருமி ஐயா அணிக்கு வாக்களிக்க முடியும என்று கேட்டவரும் ஒருவர் உண்டு. ஆனால் வாக்களித்தவர்கள் எல்லாரும் தருமி ஐயா ரசிகர்களாகவோ இல்லை உங்கள் ரசிகர்களாகவோ இருக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். வெற்றி பெற்ற நாங்களே இந்த ஆட்டம் ஆடவில்லை. அனுதாப ஓட்டுகள் வாங்கியும் தோற்ற நீங்கள் இந்த ஆட்டம் ஆடுவது தேவையா? :-)

அன்புடன்,
குமரன்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் மணியன் சார். மற்ற எல்லா சுற்றுகளும் கொஞ்சமாவது அறிவை பயன்படுத்தவேண்டும். ஆனால் இந்த சுற்றில் தான் அறிவே தேவையில்லை. அரசியல்வாதித் தனம் தெரிந்தால் போதும். அறிவுக்கும் அரசியலுக்கும் எவ்வளவு தூரம் என்று தான் உங்களுக்குத் தெரியுமே. ஆனால் என்ன செல்வன் அதனை ஒத்துக்கொள்ளவா போகிறார்? உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதிய எங்களை 'அரசியல் சாணக்கியர்கள்' என்று சொல்லத்தான் போகிறார். நாங்களும் வேறு வழியில்லாமல் பெருந்தன்மையுடன் ஒத்துக் கொள்ளத் தான் போகிறோம். :-)

Unknown said...

அன்பு குமரன்,

நீங்கள் வெற்றி பெற்றது, ரோஜா அணியினருக்கு இருக்கும் மகத்தான ஆதரவு எதையும் நான் மறுக்கவில்லை.நான் நன்றி தெரிவித்தது எங்களுக்கு வாக்களித்த எங்கள் ரசிகர்களுக்குத் தான்.

நானறிந்து என்பதிவில் அடிக்கடி பின்னூட்டம் இடும் பலர் ஓட்டு போட்டார்கள்.அஷ்லின் என் ஒரு பதிவு விடாமல் பின்னூட்டம் இடுவார்.சாம் கள்ள ஓட்டு போடுகிறேன் என்று சொல்லும் அளவுக்கு போனார்.ராம் சுப்ரா என் ஊர்க்காரர்,சுதனின் விஜி என் உடன்பிறவா சகோதரி, மஞ்சூர் ராசா என் மூத்த அண்ணன் போல் நெருக்கமானவர்.ஷிவ்வும் நானும் பிளாக் ஆரம்பிப்பதற்கு 1 வருடம் முன்னரே அன்புடன்+ முத்தமிழ் குழும நண்பர்கள்,சகோதரி மதுமிதாவும் நானும் 1 வருடமாக அன்புடன்+நம்பிக்கை குழும உறுப்பினர்கள்.தமிழினி முத்து எனது பதிவு அவருக்கு பிடிக்கும் என பதிவே போட்டிருக்கிறார்.

அன்பால் வந்த சொந்தங்கள் இவர்கள் அனைவரும்.இதுபோல் உங்களுக்கும் பல 100 ரசிகர்கள் இருப்பார்கள் என எனக்கு தெரியும்.வலைபதிவு செய்யும் நம் அனைவருக்கும் இதுபோல் கிடைக்கும் சொந்தங்கள் தான் நம்மை தொடர்ந்து எழுத வைக்கின்றன.முகம் தெரியாமல்,பெயர் தெரியாமல் கணினி மூலம் கிடைத்த சொந்தங்கள் நம் வாசகர்கள்.

வலைபதிவு உலகில் உங்கள் வெற்றியை,கொத்தனாரின் வெற்றியை,தருமியின் வெற்றியை நான் மிகவும் மதிக்கிறேன்.உங்கள் அனைவரின் வாசகர் வட்டமும் மிகப்பெரிது.நானே உங்கள் ரசிகன் தான்,அன்றும்,இன்றும் என்றும்.

அன்புடன்
செல்வன்
நிரந்தர பொருளாளர்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் ரசிகர் மன்றம்

குமரன் (Kumaran) said...

//ஆனாலும் கிருஷ்ண பரமாத்மா கால் மாட்டுல உட்காந்திருந்த அர்ஜுனனை பார்த்த மாதிரி உங்க மெயிலை முதல்ல பார்த்ததுனால உங்களுக்கு குத்தினேன்.//

முத்து (தமிழினி). கண்ணன் சொன்னவுடன் கான்டீபம் ஏந்தி புறப்பட்டேன் என்று செல்வன் சொன்னாரே. அந்த கண்ணன் நீங்கள் தானா? :-) செல்வன் அர்ஜுனன் என்றால் நான் யார்? தலைமாட்டில் உட்கார்ந்திருந்த துரியோதனனா? :-) அப்படியென்றால் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். துரியோதனனுக்கு எத்தனை நல்ல குணம் தெரியுமா? :-) அர்ச்சுனன் மாதிரி கர்வம் கிடையாது. :-)

குமரன் (Kumaran) said...

//Seems like you do have some padai.
//

Which Padai Ashlyn? I think Selvan need to see a good skin specialist soon, if he has some padai...

hahaahaaa....

Unknown said...

அன்பு தமிழினி முத்து

இந்த தேர்தல் கலாட்டாவில் செயின்போஸ்ட் போன வாரம் போட முடியவில்லை.திங்களன்று நிச்சயம் சங்கிலிப்பதிவு போட்டுவிடுகிறேன்

Unknown said...

what happened Selvan, you busy? //

thursdays and wednesdays i am usually busy.

Sam said...

அன்புள்ள செல்வன்
இதற்கு மேலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. உங்களுடைய 'ஓடி வாங்க' பதிவில்
அன்பர் குமரன் இப்படி எழுதியிருந்தார்.
//சே. இதுவும் ஒரு வாழ்க்கையா? கள்ள வோட்டு போடும் சாம், ஜிம், ஜான், டிம், டாம் எல்லாருடைய வாக்குகளும் செல்லாது என்று அறிவிக்கச் சொல்லி தேர்தல் ஆணையத்திடம் கேட்கப் போகிறேன்//
என் ஓட்டை கள்ள ஓட்டு என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று விட்டு விட்டேன். பின்பு
போட்டி நடத்துனரின் பின்னுட்டங்களிலிருந்து கோபமாக இருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.
அவருடைய பதிவிற்குச் சென்று இவ்வாறு எழுதினேன்….

//நான் சத்தியமாக கள்ள ஓட்டுப் போடவில்லை. (this is to indirectly indicate that I have my own blog , and I am qualified to vote)நீங்கள் தேர்தலை மிகவும் உஷாராக கண் காணித்து வருவதைப்
பார்த்து விளையாட்டாக,எழுதினேன்.(about jim, john, tim & tom)
சாம்//

இன்னும் ஏன் கோபமாக இருக்கிறார் என்று புரியவில்லை. தமிழ் மன்றத்தில் விளையாட்டிற்க்கே இடம் இல்லையா? பரிசு என்ன மின்னூல் தானே? ஞானப் பழம் இல்லயே. கிடைத்தபின் இன்னும்
என்ன கோபம்?
அம்மையும் அப்பனும், கணேசனுக்குப் பழம் கொடுத்தது வாக்கு சாதுரியதிற்காகத்தனே? நீங்க 'கைப்புள்ள' யை காப்பாற்றப் போன இடத்துலே உங்க வாக்கு சாதுரியத்தைக் கவனிச்சேன். நீங்க கூப்பிட்டப்ப உங்களுக்கு உதவ ஓடி வந்தேன். நான் ஜிம், ஜான், டிம், டாம் என்றெல்லாம் எதுக்காகச் சொன்னென்னு இவர் புரிந்து கொள்ளவில்லை. இதையெல்லாம் எழுதும் போது, அவர் தன் வலைத்தளங்களுக்கு, என்னை வரக் கூடதென்று
என்று தடை செய்யலாம் என்று தெரிந்துதான் எழுதுகிறேன். அடுத்த போட்டிக்குத் தயாராகத் தொண்டு செய்ய இருக்கிறேன்.
அன்புடன்
சாம்

Sam said...

அன்புள்ள குமரன்

ஆசிரியர் திரு முருகாற்றுப்படைன்னு சொல்லும் போது 'படை' ஜோக்கெல்லாம் சொல்ல
முடியுமா?

அன்புடன்
சாம்

Unknown said...

அன்பு சாம்,

நீங்கள் கள்ள ஓட்டு போடவில்லை,என் மீது உள்ள அன்பால் தான் அப்படி சொன்னீர்கள் என எனக்கு தெரியும்.உங்களை போன்ற அன்பான ரசிகர்கள் எனக்கு கிடைத்ததைத் தான் நான் வெற்றி வெற்றி என குறிப்பீடு பதிவு போட்டேன்.மற்றபடி அந்த போட்டி ஒரு விளையாட்டு போட்டியாகத்தான் நான் கருதுகிறேன்.

உங்கள் அன்பை அறியவும் தருமியின் நட்பை பெறவும் உதவிய இனியதொரு நிகழ்ச்சியாகத் தான் நான் இப்போட்டியை கருதுகிறேன்.

குமரன் உங்களை பதிவுக்குள் அனுமதிக்காமல் எல்லாம் இருக்க மாட்டார்.சிவராத்திரி பதிவில் திட்டி வந்த பின்னூட்டம் ஒன்றை கூட அவர் அனுமதித்தார்.

அடுத்த போட்டி என ஒன்று வந்தால் சாம் போட்டியிடுவார்.செல்வன் அவருக்கு ஆதரவு தெரிவித்து தீர்க்க முடியாத நன்றிக்கடனை கொஞ்சமாவது திருப்பி செலுத்த முற்படுவான்.

அன்புடன்
செல்வன்

குமரன் (Kumaran) said...

சாம்...நிச்சயமாக நான் கோபமாக எல்லாம் இல்லை. எதற்காக கோபப்படவேண்டும்? இது வெறும் போட்டி தானே. நான் போடும் பின்னூட்டங்கள் எல்லாம் விளையாட்டிற்காக என்று செல்வன் புரிந்துக் கொண்டிருக்கிறார் என்று தான் எண்ணுகிறேன். அதனால் தான் அவற்றை எல்லாம் அனுமதித்திருக்கிறார். நீங்கள் கிண்டலுக்குத் தான் ஜிம், ஜான், டிம், டாம் எல்லாரும் இன்றே வலைப்பதிவு தொடங்கி வாக்களிக்கிறோம் என்று சொல்கிறீர்கள் என்று நன்றாகப் புரிந்தது. நானும் கிண்டலுக்குத் தான் இவையெல்லாம் செல்லாத வாக்குகள் என்று சொன்னேன். மற்றபடி நிலாவிடம் ஒன்றுமே அதைப் பற்றிப் பேசவில்லை. நீங்கள் எப்போதோ வலைப்பதிவைத் தொடங்கிவிட்டீர்கள் என்றும் உங்கள் வாக்கு நன்றாய் செல்லும் என்றும் எனக்குத் தெரியும். கிண்டல் பின்னூட்டங்களில் இருந்து நீங்கள் தவறாகப் புரிந்துக் கொண்டுவிட்டீர்கள். நான் தான் நிறைய இடத்தில் ஸ்மைலி போட்டிருக்கிறேனே. இருந்தும் எப்படி நீங்கள் தவறாக நான் கோபத்துடன் இருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டீர்கள் என்று தெரியவில்லை. உங்களின் இந்தப் பின்னூட்டம் பார்த்தால் தான் எனக்கு தமிழ்மணத்தில் விளையாட்டிற்கே இடமில்லையோ என்று தோன்றுகிறது. :-)

குமரன் (Kumaran) said...

Sam,

//அவருடைய பதிவிற்குச் சென்று இவ்வாறு எழுதினேன்….
//

நீங்கள் நிலாவின் பதிவில் இந்தப் பின்னூட்டத்தை இட்டீர்கள் என்று எண்ணுகிறேன்; ஏனென்றால் எனக்கு எந்தப் பின்னூட்டமும் உங்களிடமிருந்து அண்மையில் வரவில்லை.

நீங்கள் கோபத்தில் ஞானப்பழம் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். ஞானப்பழமே கிடைப்பதாய் இருந்தாலும் அதற்காக கோபமோ வேகமோ படுபவன் நானல்லன் என்பது என் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும். நீங்களும் இனிமேல் தொடர்ந்து என் பதிவுகளையும் படிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். செல்வன் சொன்னது போல் நீங்கள் என்னைத் திட்டியே பின்னூட்டம் இட்டிருந்தாலும் அவற்றை நிச்சயம் நான் அனுமதிப்பேன். இதுவரை எந்தப் பின்னூட்டத்தையும் தடை செய்யவேண்டிய அவசியம் எனக்கு வரவில்லை. தமிழ்மண விதிகளின் படி ஆபாச பின்னூட்டங்கள் வந்தால் அவற்றை மட்டும் தடை செய்வேன். இதுவரை ஆபாசமாய் யாரும் என் பதிவுகளில் பின்னூட்டம் இடவில்லை. இனிமேலும் வராது என்று எண்ணுகிறேன்.

இந்தப் போட்டியே கடைசி நிமிடத்தில் கைப்புள்ளைக்கு மாற்றாகத் தான் என்னை அழைத்ததால் விளையாடத் தொடங்கினேன். தயவு செய்து இதில் நான் படாத கோபத்தையும் வேகத்தையும் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டு எனக்கும் செல்வனுக்கும் தருமி ஐயாவுக்கும் இருக்கும் நல்லுறவைக் கெடுக்காதீர்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களையும் தெரியாமல் புண்படுத்தியிருந்தால் இந்தச் சிறியவனை மன்னித்து அந்தத் தவறை மறந்து என் பதிவுகளுக்கும் வந்து படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

அன்பு சாம்,

//'படை' ஜோக்கெல்லாம் //

நல்ல வேளை இதையாவது படை ஜோக்கென்று சொன்னீர்களே. அது வரை மகிழ்ச்சி. அடியேன் நட்சத்திரம் ஆன அன்று தான் செல்வன் என்னை ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று சொல்லி ரசிகர் மன்றத்தின் நிரந்தர பொருளாளராகத் தன்னை நியமனம் செய்து கொண்டார். இன்னும் அதனை அவர் சொல்லிக் கொள்வதிலிருந்து அவர் என் மேல் வைத்த அன்பும் நான் அவர் மேல் வைத்த அன்பும் மாறவில்லை என்று தெரிகிறது.

ஆனால் தமிழ்மணத்திற்கு வந்து இரண்டே மாதங்களில் உங்களைப் போன்ற அன்பான வாசகர்களைப் பெற்றிருக்கிறார் செல்வன் என்பதை நினைக்கும் போது மிக்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வாழ்க உங்கள் பாசம்.

குமரன் (Kumaran) said...

//thursdays and wednesdays i am usually busy.
//

அந்த ரெண்டு நாட்கள் மட்டும் என்ன ஸ்பெஷல் செல்வன்?

அது சரி எல்லாரும் Wednesday சொல்லிட்டுத் தான் Thursday சொல்லுவாங்க. நீங்க என்ன மாத்திச் சொல்றீங்களே? :-)

Unknown said...

அந்த 2 நாளும் புள்ளியியல் வகுப்பு என்னை படாத பாடு படுத்தும் குமரன்.
பள்ளியில் கணக்கு வகுப்பில் கட் அடித்த பாவம் சும்மா விடுமா?

குமரன் (Kumaran) said...

புள்ளியியல் வகுப்பா? Interestingஆக இருக்குமே Selvan.

குமரன் (Kumaran) said...

சாம் அண்ணா. உங்களின் பின்னூட்டத்தை என் புதிய வலைப்பூவில் இப்போது தான் பார்த்தேன். 'கோளறு பதிகம்' என்றொரு வலைப்பூவைத் தொடங்கி 'முதல் வணக்கம்' மட்டும் போட்டிருந்தேன். அது இன்னமும் தமிழ்மணத்தில் இணைக்கவில்லையாதலால் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாமல் விட்டிருந்தேன். அதனால் உங்கள் பின்னூட்டம் எனக்கு மின்னஞ்சலாய் வரவில்லை. இப்போது தற்செயலாய் அந்த வலைப்பூவுக்குச் சென்ற போது உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். அதனால் இங்கு வந்து சொல்லலாம் என்று வந்தேன். உங்கள் பின்னூட்டத்திற்கு பதிலும் என் வலைப்பூவில் இடுகிறேன். வந்து பாருங்கள். பின்னூட்ட மட்டுறுத்தலை இப்போது போட்டுவிட்டேன். அதனால் இனிமேல் அந்த வலைப்பூவில் வரும் பின்னூட்டங்களும் எனக்கு மின்னஞ்சலாய் வரும். நன்றி.

Sam said...

அன்புள்ள குமரன்
மனதில் உள்ளதை சொல்லிவிட்டேன். உங்கள் 'கோளறு பதிகம் பதிவில் என் மடல் பதிவாகியிருக்கிறது. பிளாகர், நீங்கள் பார்த்த பின் பதிப்பிக்கப் போவதகச் சொன்னதால், என் மடலை, நீங்கள் பார்த்திருக்கக் கூடும் என்று நினைத்தேன்.

“இது செல்வனிடம் நான் சொன்னது”
//உங்களுடைய 'ஓடி வாங்க' பதிவில்
அன்பர் குமரன் இப்படி எழுதியிருந்தார்.//

//சே. இதுவும் ஒரு வாழ்க்கையா? கள்ள வோட்டு போடும் சாம், ஜிம், ஜான், டிம், டாம் எல்லாருடைய வாக்குகளும் செல்லாது என்று அறிவிக்கச் சொல்லி தேர்தல் ஆணையத்திடம் கேட்கப் போகிறேன்//

இங்கு நீங்கள் /ஸ்மைலி/ போட மறந்து விட்டீர்கள். கடைசி நிமிட டென்ஷனாக இருக்கலாம். இதைத் தான் நான் முதலில் படித்தேன்.

“இது செல்வனிடம் நான் சொன்னது”
//பின்பு
போட்டி நடத்துனரின் பின்னுட்டங்களிலிருந்து கோபமாக இருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.//
“அங்கே நடந்த உரையாடல்.”
//என்னிடம் வாக்குக் கேட்டது மட்டுமின்றி கொத்ஸின் பதிவில் பொய் வாக்குக் கேட்ட புத்திசாலித்தனத்திற்கு ஒரு ஷொட்டு//
என்னங்க செல்வனுக்கு மட்டும் தானா? நானும் உங்ககிட்டயும் செல்வன் பதிவுலயும் போய் கேட்டேனே. என்னைப் பாத்துட்டுத் தான் அவர் செங்சார்ன்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா அவரை மட்டும் பாராட்டறீங்க. ஏற்கனவே செல்லாத ஓட்டை எல்லாம் கணக்குல எடுத்துக்கிட்டீங்கன்னு தேர்தல் கமிஷன் மேல கேஸ் போடலாம்ன்னு இருக்கேன். ஜாக்கிரதை. ஒரு பக்கமாய் சாயாதீர்கள். :-)//
//Selvan's approach//
எது? அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி குய்யோ முறையோன்னு புலம்பி அனுதாப ஓட்டு வாங்க முயற்சி செய்ததா? அது சரி. :-)
அவர் பதிவுக்கு போய் பாருங்கள். செய்றத எல்லாம் செஞ்சுட்டு 'வெற்றி வெற்றி'ன்னு பதிவு போட்டு கிடைச்ச 27 வாக்குகளும் அவரோட 'ரசிகர்கள்' போட்டதா சொல்லியிருக்காரு. அனுதாப ஓட்டு போட்டவங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். :-)
நான் ஸ்மைலி எப்படி இருக்கும் என்று சற்று நாளைக்குப் முன் தான் தெரிந்து கொண்டேன். யாரோ 'மழலைக்கு’ தலையை சாய்த்துப் பார்க்கச் சொல்லியிருந்தார்கள். உங்கள் ஸ்மைலியை போட்டி நடத்துனரின் பின்னூட்டங்களில் நீங்கள் சொன்ன பின்தான் பார்த்த்தேன். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

“அடுத்தவன் உன் எண்ணங்களை,உனக்கான சிந்தனைகளை, உன் வாழ்க்கையை உருவாக்குவது நீ ஒரு மனிதனாக தோற்று விட்டாய் என்பதன் பொருள்”
இது செல்வனின் பிளாகின் முகப்பில் உள்ள வாசகம்.
நான் யாருடைய கருத்தயும் மாற்ற முயற்ச்சிப்பதில்லை.

கடைசியாக, அன்பு குமரன், என்னுடைய பிளாகின் அடுத்த பதிவு,
'எனனக்குப் பிடித்த என் மனத்தை நெகிழ வைத்த குமரனின் கட்டுரை'.
நான் மெதுவாக தட்டச்சு செய்கிறேன், நாளை இரவுக்குள்
அதை பதிவு செய்ய முயற்ச்சிக்கிறேன்.

அன்புடன்
சாம்

Unknown said...

அன்பு சாம், அன்பு குமரன்,

மிகவும் மகிழ்கிறேன் உங்கள் இருவரின் அன்பு உள்ளத்தையும்,பெருந்தன்மையான மனப்பாங்கயும் கண்டு.

இத்தகைய அன்பைத்தான் ஆன்மிகம் வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறது.மிகவும் மகிழ்ச்சி.

சாம் தட்டச்சு செய்ய ஆரம்பத்தில் கடினமாக தான் இருக்கும்.பிறகு பழகிவிடும்.மெதுவாக அடித்து பழகுங்கள்.

அன்புடன்
செல்வன்