Thursday, March 02, 2006

57.66% இந்தியர்கள் புஷ்ஷை விரும்புகிறார்கள்

ஜார்ஜ் புஷ் வருகை பற்றி சூடான விவாதங்கள் நடக்கும் இந்த வேளையில் அவுட்லுக் பத்திரிக்கை அமெரிக்காவை பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிப்பது என்னவென்றால் 66% இந்தியர்கள் புஷ் இந்தியாவின் நண்பர் என்கிறார்கள் 46% பேர் அமெரிக்காவை நேசிக்கிறார்கள்.எதிர்ப்போர் 14% மட்டும்தான். இந்தியாவுக்கு அமெரிக்கா தேவை என்போர் 54% ஆபத்து சமயத்தில் இந்தியா அமெரிக்காவை நம்பலாம் என்போர் 55% இந்தியா அமெரிக்காவோடு வணிக விஷயத்தில் ஒத்துப்போக வேண்டும் என்போர் 74% அமெரிகாவில் குடியேற வாய்ப்பு கிடைத்தால் போவிர்களா என்ற கேள்விக்கு அமோக ஆதரவு காணப்படுகிறது.அமெரிகாவில் குடியேற விரும்புவோர் அதிகம் இருப்பது நம் சிங்கார சென்னையில் தான். அதே சமயம் கீழ்கண்ட விஷயங்களில் அமெரிக்காவுக்கு எதிரான நிலையும் நிலவுகிறது அமெரிக்கா பெரியண்ணன் என்போர் 72% தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா இந்தியாவுக்கு சரியாக உதவவில்லை என்போர் 42% இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவுகிறது என்போர் 50% இந்தியா தனது வெளியுறவு கொள்கையை அமெரிக்காவுக்கு தகுந்தபடி மாற்றிக்கொண்டது என்போர் 50%

4 comments:

சந்திப்பு said...

ஐயா! அமெரிக்காவுக்கு போக வேண்டும் என்று ஆசைப்படும் மக்கள் (ஒரு தனி ரகம்) என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சாதாரண மக்களுக்கு பக்கத்து ஊருக்கு போவதே சிரமமான காரியம் இதுதான் நிஜமான இந்தியா? எனவே இவர்கள் யாரிடம் எடுத்தார்கள் சர்வே!

சரி எப்படி இருந்தாலும் அமெரிக்கா ஒரு பெரியண்ணன் பாணியில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த மக்களும் ஏற்றுக் கொண்டிருப்பதே, அமெரிக்காவின் அடாவடிச் செயலுக்கு இதுவே போதுமான சாட்சி!

ஜயராமன் said...

இந்த சர்வேயில் மத வாரியாக விவரம் இருக்கிறதா என்று நீங்கள் சொல்லவேண்டும்.

ஏனென்றால் இப்படி அமெரிக்காவை கண்மூடித்தனமாக எதிர்க்கும் (இல்லை... கண்மூடித்தனமாக ஆதரிக்கும்...) பேர்களில் மதவாரியாகவும் இன வாரியாகவும் பல வித்தியாசங்கள் நடைமுறையில் இருக்கின்றன.

தன் தேசப்பற்றை விட பிற பற்றுகள் இன்னும் உசத்தி என்று நினைக்கும் சில மூட கும்பல்கள் இவ்வாறு பிரிந்து நிற்கும். ஆனால், தங்கள் சர்வே முடிவு சரியானதுதான் என்று நான் நினைக்கிறேன்.

தாங்கள் வழங்கியதற்கு மிக்க நன்றி

Unknown said...

நன்றி ஜெயராமன்.
மதரீதியாக சர்வே எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.அந்த விவரங்கள் சுட்டியில் இருக்கும்.நன்றி

Anonymous said...

//போலி பின்னூட்டம்.TBR ஜோசப் பெயரில் வந்தது.கருத்து நன்றாக இருப்பதால் அதை மட்டும் இடுகிறேன்//


tbr.joseph has left a new comment on your post "57.66% இந்தியர்கள் புஷ்ஷை விரும்புகிறார்கள்":

தேசப்பற்று மிக்க எந்த இந்தியனும் புஷ் அல்லது அமெரிக்காவை நாடமாட்டான். பிழைக்க வ்னத ஒண்டுகுடிகள் மட்டுமே அமெரிக்காவை மற்றும் புஷ்சை ஆதரிப்பார்கள்.