Tuesday, February 28, 2006

55.வலைபதிவு பெருமக்களே..காப்பாத்துங்க..ஒடிவாங்க

பெரியோர்களே தாய்மார்களே,வாக்காளப் பெருங்குடி மக்களே,அன்பர்களே,நண்பர்களே நிலா அவர்கள் நடத்தும் போட்டியில் எந்த அணிக்கு ஓட்டு போடுகிறோமோ அந்த அணிக்கு தான் வெற்றி என சொல்லிவிட்டார்.ரோஜா அணித்தலைவர் குமரன் தற்போது முண்ணனியில் இருக்கிறார்.எங்கள் அணிக்கு ஒரு ஓட்டு கூட இதுவரை விழவில்லை.இது நியாயமா,தர்மமா,நீதியா,அடுக்குமா? "மலர்களிலே அவள் மல்லிகை" என பாட்டே இருக்கிறது.ஆக ரோஜாவையும் சாமந்தியையும் விட சிறந்தது மல்லிகை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆகவே நீங்கள் அனைவரும் பெருந்திரளாக நிலா அவர்களின் இந்த பதிவுக்கு சென்று "எனது ஓட்டு மல்லிகை அணீக்கே(செல்வன் ,தருமி)" என்பதை கட் அன்ட் பேஸ்ட் செய்து அங்கு பின்னூட்டம் இட்டுவிடுங்கள். ஒருவரே நிறைய வலைபதிவுகள் வைத்திருக்கும் கதை தமிழ்மணத்தில் நிறைய உண்டு.அந்த கள்ள ஓட்டு பார்ட்டிகள் தமது அனைத்து ஓட்டுகளையும் எங்கள் அணீகே செலுத்துமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். காப்பாத்துங்க கண்ணுகளா....

23 comments:

குமரன் (Kumaran) said...

செல்வன். இதைத் தான் காலத்தின் கோலம்ன்னு சொல்லுவாங்களோ? எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய நீங்கள் இப்போது எதிரணியில். நடக்கட்டும். நடக்கட்டும்.

ஓட்டு போடுபவர்கள் ஒரு முறை நிலாவின் பதிவில் விதிமுறைகளையும் படிக்கட்டும். ஓட்டு போடும் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு தமிழ் வலைப்பதிவாவது வைத்திருக்க வேண்டும். ஒருவர் எத்தனை வலைப்பதிவு வைத்திருந்தாலும் ஒரு வாக்கு தான் அளிக்க முடியும். அதனால் கள்ள ஓட்டு எல்லாம் நடக்காது.

Unknown said...

அன்பு குமரன்,

கட்சியை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை.ஆசிரியரான துரோணருக்கு எதிராக களத்தில் நின்ற அர்ஜுனின் நிலையில் நான் இருக்கிறேன்.என கண்ணுக்கு கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு மட்டுமே தெரிகிறது.

தர்மத்தை நிலைநாட்ட,நீதியை நிலைநாட்ட பாரதப்போர் புரி என கண்ணன் ஆணையிட்டு விட்டான்.காண்டீபம் ஏந்தி நான் கிளம்பிவிட்டேன்.

தேவெகவுடாவை மீறி தனிக்கட்சி கண்ட குமாரசாமி போல்,பெரியாரை மீறி தனிகட்சி கண்ட அண்ணா போல்,கலைஞரை மீறி தனிகட்சி கண்ட வைகோ போல் இந்த செல்வனும் கிளம்பிவிட்டான்.

எங்கள் கட்சி ஆட்சியை பிடித்தாலும் நான் முதலமைச்சர் ஆனாலும் என் இதயத்தில் இடம் உங்கள் அணிக்கே...

இது காலத்தின் கோலமல்ல,காலத்தின் கட்டளை...

"உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி.."

தருமி said...

பார்ட்னர்,
கவலையற்க.
மக்களுக்குத் தெரியாதா...
- யாருக்கு இப்போது வோட்டு தேவை என்று.
- வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அக்களிப்பில் இருப்பவர்களுக்கா நமது பதிவர்கள் வோட்டுப் போடுவார்கள்.
- உங்க பதிவுக்ளில் நீங்கள் எழுதிய நகைச்சுவைப் பதிவுகளை வாசித்தவர்கள் உங்களையன்றி வேறு யாருக்கும் வோட்டுப் போடுமளவிற்கு விவரமில்லாதவர்களா என்ன...?

Unknown said...

பார்ட்னர்,

உங்கள் ரசிகர்கள் ஓட்டு போட்டாலே நாம் ஆட்சியை பிடித்துவிடுவோம்.

நமது ரசிகர்கள் அலைகடலென கிள்ம்பிவிட்டனர்.இந்த படை போதுமா,இன்னும் கொஞ்சம் வேணுமா என கோஷங்கள் விண்ணை மூட்ட துவங்கிவிட்டன.

நம் ரசிகர்கள் படை அன்பினால் சேர்ந்த படை.இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

வெற்றி நிச்சயம்
இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே
நாம் கொண்ட லட்சியம்

மதுமிதா said...

கொஞ்சம் முன்னாடி சொல்லியிருக்கக் கூடாதா செல்வன்

இனிமே போட்டா கள்ள ஓட்டாயிடுமே

Ranganayaki said...

Though I wanted to vote for Kumaran (just to make you happy), I voted for you.

Good luck

Sam said...

செல்வன்
உங்களுகாக இன்னும் எத்தனை பிளாக் ஆரம்பிக்கணும்னு, சொல்லுங்க! செய்துடுவோம்.
சாம்

Unknown said...

பரவாயில்லை மதுமிதா அவர்களே,

அடுத்த தேர்தலில் மல்லிகை சின்னத்துக்கு ஓட்டு போட்டுவிடுங்கள்.:-))

அன்புடன் செல்வன்

Unknown said...

பழைய பகையை மறந்து ஓட்டு போட்ட ரங்கநாயகி வாழ்க

Unknown said...

Sam has left a new comment on your post "55.வலைபதிவு பெருமக்களே..காப்பாத்துங்க..ஒடிவாங்க":

செல்வன்
உங்களுகாக இன்னும் எத்தனை பிளாக் ஆரம்பிக்கணும்னு, சொல்லுங்க! செய்துடுவோம்.
சாம்

Unknown said...

நன்றி சாம்

அன்பால் திக்கு முக்காட செய்துவிட்டீர்கள்.நன்றி,நன்றி

ஏனோ பிளாக்கர் அந்த பின்னூட்டத்தை புதுப்பிக்கவில்லை.அதனால் நான் அதை காப்பி பேஸ்ட் செய்து இட்டுவிட்டேன்.

Sam said...

செல்வன்
இந்திய நேரப்படி இன்னும் நாற்ப்பது நிமிடங்கள் இருக்கு. ஜிம், ஜான், டிம், டாம் என்றெல்லாம்
பிளாகர், அகவுன்ட் ஆரம்பித்து கணினியிலிருந்து எதயாவது வெட்டி ஒட்டி கருத்துக் கேட்கிறேன்.
அந்த ஒட்டும் உங்களுக்கே! கவலையே படாதீங்க. இந்த ஊர்ல கென்னடி கூட இப்படித்தான்
ஜெயித்தார்ன்னு சொல்றாங்க!
சாம்

உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

Unknown said...

உங்கள் அன்புக்கு எல்லையே இல்லை சாம்

நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

குமரன் (Kumaran) said...

சே. இதுவும் ஒரு வாழ்க்கையா? கள்ள வோட்டு போடும் சாம், ஜிம், ஜான், டிம், டாம் எல்லாருடைய வாக்குகளும் செல்லாது என்று அறிவிக்கச் சொல்லி தேர்தல் ஆணையத்திடம் கேட்கப் போகிறேன்.

நிலா said...

//தர்மத்தை நிலைநாட்ட,நீதியை நிலைநாட்ட பாரதப்போர் புரி என கண்ணன் ஆணையிட்டு விட்டான்.காண்டீபம் ஏந்தி நான் கிளம்பிவிட்டேன்.
//
God.. I am laughing :-)))

தயா said...

இது என்ன விதமான போட்டின்னு இன்னும் சரியாக தெரியவில்லை. செல்வன் கேட்டுகொண்டதற்காகவும் எனக்கு மிகவும் பிடித்த மலர் மல்லிகை என்பதாலும் மல்லிகை சின்னத்துக்காக நிலாவின் பதிவில் வாக்களித்துவிட்டேன்.

சந்தோஷமா செல்வன்?

Unknown said...

நெஞ்சம் நிறைந்த நன்றி தயா.

என் பதிவில் அடிக்கடி வருவோர் பலர் ஓட்டு போட்டிருக்கிறார்கள்.அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் இடுகிறேன்

அன்புடன்
செல்வன்

supersubra said...

போட்டாச்சு- நம்மூர்க்காரர்க்கு இல்லாம வேற யாருக்கு

Unknown said...

மிக்க நன்றி சுப்ரா,

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா?
என்னாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா?

Sen Sithamparanathan said...

வணக்கம்.

என்ன ஒன்றும் விளங்கல்ல. என்ன வோட்டு. இணையத்திலும் அரசியலா?. விடுங்கய்யா ஆள.

சரி சரி... உங்களுக்கே என் ஓட்டு. எனக்கு என்ன கிடைக்கும்? இலவச தையல் இயந்திரம்.

Sam said...

அன்புள்ள செல்வன்
கட்சியின் சின்னமாக மல்லிகையை ரிஜிஸ்டர் செய்து விடுவோமா?
'அடுத்த தேர்தலில்' மாற்றான் தோட்ட்த்து மல்லிகையும் மணக்கும்' என்று தானே அறிஞர் அண்ணா சொன்னார். மற்றப் பூக்களைப் பற்றி எல்லாம் எதுவும் சொல்லவில்லை என்று எடுத்துச் சொல்வோம்.
'தமிழ் மண(ன)ம் உள்ளவரை மல்லிகை மணம் குறையாது.
வாழ்க மல்லிகை அணி!!!!
சாம்

தருமி said...

உங்கள் முகப்புப் பக்கத்தில் இந்தப் பதிவி
ற்கு ஒரேஒரு பின்னூட்டம் மட்டும் இருப்பதாகக் காண்பிக்கிறது.
ஏதோ தேர்தல் எண்ணிக்கை ஊழல் மாதிரி இருக்கு !!!

Unknown said...

அன்பு குமரன்,

நீங்கள் வெற்றி பெற்றது, ரோஜா அணியினருக்கு இருக்கும் மகத்தான ஆதரவு எதையும் நான் மறுக்கவில்லை.நான் நன்றி தெரிவித்தது எங்களுக்கு வாக்களித்த எங்கள் ரசிகர்களுக்குத் தான்.

நானறிந்து என்பதிவில் அடிக்கடி பின்னூட்டம் இடும் பலர் ஓட்டு போட்டார்கள்.அஷ்லின் என் ஒரு பதிவு விடாமல் பின்னூட்டம் இடுவார்.சாம் கள்ள ஓட்டு போடுகிறேன் என்று சொல்லும் அளவுக்கு போனார்.ராம் சுப்ரா என் ஊர்க்காரர்,சுதனின் விஜி என் உடன்பிறவா சகோதரி, மஞ்சூர் ராசா என் மூத்த அண்ணன் போல் நெருக்கமானவர்.ஷிவ்வும் நானும் பிளாக் ஆரம்பிப்பதற்கு 1 வருடம் முன்னரே அன்புடன்+ முத்தமிழ் குழும நண்பர்கள்,சகோதரி மதுமிதாவும் நானும் 1 வருடமாக அன்புடன்+நம்பிக்கை குழும உறுப்பினர்கள்.தமிழினி முத்து எனது பதிவு அவருக்கு பிடிக்கும் என பதிவே போட்டிருக்கிறார்.

அன்பால் வந்த சொந்தங்கள் இவர்கள் அனைவரும்.இதுபோல் உங்களுக்கும் பல 100 ரசிகர்கள் இருப்பார்கள் என எனக்கு தெரியும்.வலைபதிவு செய்யும் நம் அனைவருக்கும் இதுபோல் கிடைக்கும் சொந்தங்கள் தான் நம்மை தொடர்ந்து எழுத வைக்கின்றன.முகம் தெரியாமல்,பெயர் தெரியாமல் கணினி மூலம் கிடைத்த சொந்தங்கள் நம் வாசகர்கள்.

வலைபதிவு உலகில் உங்கள் வெற்றியை,கொத்தனாரின் வெற்றியை,தருமியின் வெற்றியை நான் மிகவும் மதிக்கிறேன்.உங்கள் அனைவரின் வாசகர் வட்டமும் மிகப்பெரிது.நானே உங்கள் ரசிகன் தான்,அன்றும்,இன்றும் என்றும்.

அன்புடன்
செல்வன்
நிரந்தர பொருளாளர்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் ரசிகர் மன்றம்