Tuesday, January 31, 2006

இந்தியனாக இரு இந்தி திணிப்பை மறு

என் ஜூனியர் மாணவன் ஒருவன் இந்தியன்.ஆவலோடு அவனை வரவேற்ற போது இந்தியில் பேசத் துவங்கி விட்டான்.எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன் "தேசிய மொழி தெரியாது என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?" என்று கேட்டான். "தேசிய மிருகம் புலியை உன் வீட்டில் வளர்க்கிறாயா?தேசிய விளையாட்டு ஆக்கியை தினமும் ஆடுகிறாயா?" என்று கேட்டு அவன் நாவை அடக்கினேன். என் நாட்டுப்பற்றை அளக்க இந்தி பேசுவதுதான் அளவுகோலா? பல இடங்களில் இதுபோல் நடந்திருக்கிறது.இஸ்கான் கோயிலுக்கு போனால் சிலர் திடீரென்று சரளமாக இந்தியில் பேசுவார்கள்.'இந்தி தெரியாது' என்று சொன்னால் முகம் சுளிப்பார்கள்.ஏனென்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.அமெரிக்காவில் இருந்துகொண்டு பட்லர் இங்கீஷை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துகிறவர்கள் பலர். பள்ளியில் சிறுவயதில் என் அப்பா என்னை இந்தி வகுப்பில் சேர்த்தார்.கடுங்கோபம் கொண்ட என் அம்மா என் பள்ளி ஆசிரியரிடம் சண்டை பிடித்து என்னை தமிழ் வகுப்பில் சேர்த்தார்கள்.தமிழ் படிக்க தெரிந்தால் தான் நான் திருப்பாவை,நாலாயிர பிரபந்தம் படிப்பேன் என்பது அவர்கள் வாதம்."இந்தி படிக்காத இவன் உருப்பட மாட்டான்" என்று என் அப்பா சாபம் கொடுத்தார்.(இப்போதும் என்னை உருப்பட்டவன் என்று அவர் ஒத்துக்கொள்வதில்லை என்பது வேறு விஷயம்) இந்தி படிக்க வேண்டுமென்போர் தாராளமாக பள்ளியில் விருப்பபாடமாக படித்துக் கொள்ளலாம்.நான் அதை ஆதரிக்கிறேன்.ஆனால் கட்டாயப்படுத்தி மாணவர்கள் மேல் இந்தியை திணிப்பதை நான் வெறுக்கிறேன்.எதிர்க்கிறேன். ஆமை புகுந்த வீடும், இந்தி புகுந்த மாநிலமும் உருப்பட்டதாய் சரித்திரமே இல்லை.இந்தி புகுந்ததால் மராத்தி,குஜராத்தி,பன்சாபி,ராஜஸ்தானி,போஜ்புரி போன்ற மொழிகளில் திரைப்படத் துறை நசிந்து அழிந்து விட்டது.கர்நாடகாவில் கூட இப்போது அது நடக்கத் துவங்கி விட்டது. இந்தி திணிப்பு பல பெயர்களில் மறைமுகமாக நடக்கிறது.வங்கி அலுவலர்கள் இந்தியில் கையெழுத்து போட வேண்டுமென்றெல்லாம் உத்தரவுகள் இருக்கிறதாம்.தமிழ்நாட்டில் இருக்கும் வங்கி ஊழியன் எதற்கையா இந்தியில் கையெழுத்திட வேண்டும்?பல தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே நடக்குமாம்.ஏன் தமிழ் என்ன இளிச்சவாய் மொழியா? இந்தி விஷயத்தில் திமுக, அதிமுகவின் பின் வரும் கருத்துக்களை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன். 1.தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடமாக கூடாது.விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கலாம். 2.இந்தியை கட்டயாமாக சொல்லிதருவதால் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க எம்.ஜி.ஆர் அரசு மறுத்துவிட்டது.அது மிக சரியான முடிவு.இந்தியை கட்டாயப் பாடமாக இருப்பதை ரத்து செய்துவிட்டு நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க வேண்டும். 3.அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும்.இந்தியை தூக்க வேண்டும். 4.மறைமுகமாக இந்தியை திணிக்கும் வேலைகள் கூடாது. தில்லியில் நினைத்து நினைத்து தேசிய மொழியை மாற்றுவார்கள்.எத்தனை தேசிய மொழிகளை தமிழன் கற்பது?இப்போது இந்தி,60 வருடம் முன்பு ஆங்கிலம்,அதற்கு முன் உருது,அதற்கு முன் பாரசீக மொழி,அதற்கு முன் சமஸ்கிருதம் என 500 ஆண்டுகளுக்கு ஒரு தேசிய மொழியை இவர்கள் வைத்திருப்பார்கள்.இதை எல்லாம் நாம் கற்றுக்கொண்டிருக்க வேண்டுமா? இதுபோக ஒரு விண்ணப்பம். வடநாட்டில் இருப்போருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுங்கள்.உலகம் பூராவும் இந்தியை வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.தயவு செய்து அமெரிக்கா வரும்போது ஆங்கிலம் கற்றுக்கொண்டு வாருங்கள்.பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள்.

63 comments:

நிலா said...

//வடநாட்டில் இருப்போருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுங்கள்.உலகம் பூராவும் இந்தியை வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.தயவு செய்து அமெரிக்கா வரும்போது ஆங்கிலம் கற்றுக்கொண்டு வாருங்கள்.பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள்.//

செல்வன்,
இது ஆங்கிலத் திணிப்பில்லையா? உங்களை 'இந்தி தேசிய மொழி. அதைத் தெரிந்து கொள்ளாதது வெட்கமாயில்லையா?' என்று கேட்டதற்கும் நீங்கள் 'ஆங்கிலம் உலக மொழி. அது தெரியாமல் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றாதீர்கள்' என்று சொல்வதற்கும் அதிக வித்தியாசமில்லை.

ஆங்கிலம் சரியாகப் பேசாவிட்டால் நாட்டின் மானம் போகிறதென்று யார் சொன்னது? எதில் அப்படி வரையறுத்திருக்கிறது? சீனரும் ஜப்பானியரும் அப்படிக் கருதுவதில்லையே?

அவரவர் தாய்மொழி பேசத் தெரியாதவர்களுக்கு மானம் போவதில்லை; ஆனால் அந்நிய ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாவிட்டால் மானம் போகிறது!!! என்ன மனப்பான்மையோ நம் மனப்பான்மை!

நிலா said...

//வடநாட்டில் இருப்போருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுங்கள்.உலகம் பூராவும் இந்தியை வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.தயவு செய்து அமெரிக்கா வரும்போது ஆங்கிலம் கற்றுக்கொண்டு வாருங்கள்.பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள்.//



செல்வன்,
இது ஆங்கிலத் திணிப்பில்லையா? உங்களை 'இந்தி தேசிய மொழி. அதைத் தெரிந்து கொள்ளாதது வெட்கமாயில்லையா?' என்று கேட்டதற்கும் நீங்கள் 'ஆங்கிலம் உலக மொழி. அது தெரியாமல் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றாதீர்கள்' என்று சொல்வதற்கும் அதிக வித்தியாசமில்லை.

ஆங்கிலம் சரியாகப் பேசாவிட்டால் நாட்டின் மானம் போகிறதென்று யார் சொன்னது? எதில் அப்படி வரையறுத்திருக்கிறது? சீனரும் ஜப்பானியரும் அப்படிக் கருதுவதில்லையே?

அவரவர் தாய்மொழி பேசத் தெரியாதவர்களுக்கு மானம் போவதில்லை; ஆனால் அந்நிய ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாவிட்டால் மானம் போகிறது!!! என்ன மனப்பான்மையோ நம் மனப்பான்மை!

Karthik Jayanth said...

செல்வன்,

//இஸ்கான் கோயிலுக்கு போனால் சிலர் திடீரென்று சரளமாக இந்தியில் பேசுவார்கள்.'இந்தி தெரியாது' என்று சொன்னால் முகம் சுளிப்பார்கள்//

எனக்கும் இதே அனுபவம் இருக்கு.ஆனால் நம்ம மக்கள் யாரும் இவ்வாறு செய்வது / பேசுவது இல்லை. AFAIK

// வடநாட்டில் இருப்போருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுங்கள் ..... //

ரொம்ப கஷ்ட பட்ட மாதிரி இருக்கு.

Anonymous said...

சரியாக சென்னீர்கள்!!!

சிறில் அலெக்ஸ் said...

//"தேசிய மிருகம் புலியை உன் வீட்டில் வளர்க்கிறாயா?தேசிய விளையாட்டு ஆக்கியை தினமும் ஆடுகிறாயா?" என்று கேட்டு அவன் நாவை அடக்கினேன்.//

இனி இது எனக்கு உதவும். வட இந்தியாவுக்குப் போகும்போதெல்லாம் ஏன் நமக்கு இந்தி தெரியவில்லை எனும் நெருடல் இருக்கிறது. இந்தி மீது நம்மவர்கள் எற்படுத்திய வெறுப்பபால் அதை கத்துக்கொள்வதே பாவம்பொலாகிவிட்டது.

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் தமிழர்களெல்லாம் ஆங்கிலத்தில் புலிகள்பொல சொல்கிறீர்கள் (சென்னை வாசியா?). அதுவும் உண்மையில்லை, நம்மவர்கள் எல்லோரும் ஆங்கிலப் புலிகளுமில்லை, வடைந்தியர்கள் எல்லோரும் ஆங்கிலம் கொல்பவர்களில்லை.

நாம் இந்தி தெரிந்திருக்காததற்கு என்ன காரணம் சொன்னாலும் அது ஒரு மறுதலித்தலாகவே (Denial) தெரிகிறது.

ranjit kalidasan said...

sariyaga sonneergal selvan. visit http://thenathans.blogspot.com/2006/01/india-hindi-contd-part-2.html for an interesting english post on same subject.

Unknown said...

வணக்கம் நிலா ,

//இது ஆங்கிலத் திணிப்பில்லையா? உங்களை 'இந்தி தேசிய மொழி. அதைத் தெரிந்து கொள்ளாதது வெட்கமாயில்லையா?' என்று கேட்டதற்கும் நீங்கள் 'ஆங்கிலம் உலக மொழி. அது தெரியாமல் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றாதீர்கள்' என்று சொல்வதற்கும் அதிக வித்தியாசமில்லை//

ஆங்கிலம் தெரியாவிட்டால் நாட்டின் மானம் கப்பலேறும் என்று நான் சொல்லவே இல்லை.அமெரிக்காவில் பலவருடம் வாழ்ந்து விட்டு ஆங்கிலத்தை தப்பு தப்பாக பேசுவதைத் தான் நான் குறை சொன்னேன்.அமெரிக்கர் போல் ஆங்கிலம் பேச சொல்லவில்லை.இலக்கண பிழை இல்லாமல் பேசலாம் அல்லவா?என் கல்லூரி மாணவர்கள் சில இந்திய,சீன புரபசர்களின் ஆங்கிலத்தை பயங்கரமாக கிண்டலடிப்பார்கள்.ஆக்ஸென்டை தவறு சொல்ல மாட்டார்கள்.இலக்கணப் பிழைகளை தான் கிண்டலடிப்பார்கள்.

//அவரவர் தாய்மொழி பேசத் தெரியாதவர்களுக்கு மானம் போவதில்லை; ஆனால் அந்நிய ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாவிட்டால் மானம் போகிறது!!! என்ன மனப்பான்மையோ நம் மனப்பான்மை! //

எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் மொழியை சரியாக பேச வேண்டும்.அமெரிக்காவில் இருந்தால் ஆங்கிலத்தை சரியாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

Unknown said...

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் தமிழர்களெல்லாம் ஆங்கிலத்தில் புலிகள்பொல சொல்கிறீர்கள் (சென்னை வாசியா?). அதுவும் உண்மையில்லை, நம்மவர்கள் எல்லோரும் ஆங்கிலப் புலிகளுமில்லை, வடைந்தியர்கள் எல்லோரும் ஆங்கிலம் கொல்பவர்களில்லை. ///

வட இந்தியர்களை விட நம்மவர்கள் நிச்சயம் ஆயிரம் மடங்கு பரவாயில்லை.நம்மவர்கள் பேச்சில் ஆக்சென்ட் இருக்கும்.ஆனால் இலக்கணப்பிழை இருக்காது.

//நாம் இந்தி தெரிந்திருக்காததற்கு என்ன காரணம் சொன்னாலும் அது ஒரு மறுதலித்தலாகவே (Denial) தெரிகிறது//

இந்தி படிக்க சொல்வது தான் எனக்கு தவறாக தோன்றுகிறது.

Unknown said...

தங்கள் கருத்துக்கு நன்றி ரஞ்சித்,மற்றும் அனானிமஸ்
அந்த சுட்டியை நிச்சயம் படித்துப்பார்க்கிறேன் ரஞ்சித்.நன்றி

Unknown said...

http://www.rediff.com/news/2000/nov/06gang.htm

Hindiwallahas vs Englishwallahas


Let me make it clear. I am not a member of the indi ozhiga, tamizh vaazhga brigade. At home we speak Hindi most of the time. I love Hindi film music particularly of the 1950s and 1960s. One of my most unforgettable moments in journalism was when I interviewed the famous ghazal singer, the late Talat Mahmood. What I don't like is the zeal of the Hindiwallahas in thrusting down their language on others and their claim that Hindi is the best language in the world. I strongly feel Hindi is just one more Indian language and did not deserve to be our national language.

Several months back, as one of the panelists in the Shotgun Show on Zee TV, I was in a minority of one against three formidable fellow panelists. The topic under discussion was 'Should Hindi be our national language'. The others were for it, I was against it. The audience, mostly drawn from Bihar and UP disapproved of my stand.

What I tried (rather unsuccessfully) to put across to the audience was the view that Hindi was not spoken all over India. It was not as rich or ancient as some other Indian languages like Tamil. The states where Hindi was the mother tongue (the cow-belt region) were the most backward, illiterate and lawless regions in the country.

The audience was hostile and that spurred me on to further action. I was rather carried away and associated Hindi with the likes of Lalloo Prasad Yadav. This did not go down well. There were dark murmurs that I was a traitor and a 'slave' of foreign powers because I had advocated a special position for English, which to me, deserved to be our national language. "Even after more than 50 years of Independence, you are still a ghulam of the British" hissed members in the audience.

All the super patriots in the audience pointed out to the remarkable progress made by European nations, Russia, Japan and China despite their lack of knowledge of English. Listening to them, one would believe that there was a link between our backwardness and our knowledge of English. They made no efforts to understand the historical fact that India took to English because of the 300 years of British rule. Nations which were denied this and deprived of English, were now trying their best to teach and learn the language.

What was irritating was the fact that while a propagandist for English was labeled as a 'traitor', most of the ardent champions of Hindi were very much under 'foreign' influence. They wore Western clothes. Their shoes, wristwatches, sunglasses were all imported. Most of them had children studying in convent schools where English was the medium of instruction. Yet, they would never admit that Hindi did not belong to the entire nation and was being unjustly imposed at all levels by the government.

Competent people working in public sector units had their increments stopped if they did not pass their Hindi examinations. Why should staffers at Reserve Bank of India or Air India, whose work was all in English, suffer because they were not proficient in Hindi? Yet, the Government of India rules on this issue favoured the Lalloos of Bihar or the Tewaris of UP.

Despite their stern opposition to 'imperialistic' English, the Hindiwallahas saw nothing wrong in stealing stuff from English in most of the creative professions. Our crime stories in Hindi, made into scripts for Hindi films or TV serials, were lifted without any acknowledgement from the books of James Hadley Chase or Ed McBain.

Why did the champions of Hindi sit down and enjoy the Hindi versions of Dennis the Menace, Jungle Book, Small Wonder? It was so incongruous and laughable listening to Dennis arguing with Margaret in Hindi. The environment, the story line and the settings were all foreign, yet the characters spoke badly dubbed Hindi. The Hindiwallahas were unable to create their own animation figures and had to have the beloved Disney characters Donald Duck, Mickey Mouse and Minnie speak Hindi!

Such was the keenness of the Hindiwallahas to thrust down their language on others, that even the typical English game of cricket was not spared. The Hindi cricket commentary was something utterly monstrous and unwanted. How can one listen to utter rubbish like jagha banake ghoomaya, mano vaigyanik dabav par or such idiotic expressions like gendbazi and ballebazi and so on. It was nothing but bundlebazi.

Now cricket lends itself to near-poetic expression, but only in English. Why can't our Hindiwallahas restrict Hindi commentary to their own desi games like kho-kho and kabbadi?

It is this lack of originality and substance which forced Hindiwallahas to tamper with English classics like Pride and Prejudice and Wuthering Heights. The TV serials based on these two classics were appalling to say the least. Now, Elizabeth Bennett and Mr Heathcliffe were two of the immortal creations of English fiction, but how they were mauled in our Hindi serials! The same fate befell the Bingleys, the Darcys and the Bennetts. Poor, poor, Jane Austen and Emily Bronte!

But the line had to be drawn somewhere and the Hindiwallahas should be told where they should get off. That was why I was shocked when I read about the proposed BBC serials, Hindi versions of the great English political satire, Yes, Minister and Yes, Prime Minister! How strange that BBC which had helped the spread of English now decided to stab the noble language in its back. English may well cry out, 'et tu BBC, then fall English!'

Both, Yes Minister and Yes, Prime Minister are so typically British that having them performed in any other language, would be akin to murder. The wordplay, the situations, the characterisation and the presentation are highly subtle. Now, subtlety is something unknown to Hindiwallahas. Their sense of humour is vulgar, loud and regional. Some years back, there was a TV serial featuring that fine actor, Om Puri. This was supposed to be a political satire and all the time Om Puri was forced to speak with his mouth full of paan and generally overact. That is our kind of humour and satire.

I am sure the Hindi versions of Yes Minister and Yes, Prime Minister will not be very different. The characters will be tucking up their dhotis, chew paan all the time, talk loudly and overact. How can the Hindiwallahas recreate immortal characters like James Hacker, Humphrey Appleby and the unobtrusive Bernard? The English satires derived their strength from their topicality, low-key approach, natural acting, subtle play of words and the kind of 'stiff upper-lip' attitude which was so British? How can the Hindi translations convey all these? Get ready for screaming and hamming.

My only request to the BBC and NDTV who are supposed to make this serial is , DON'T. Yes Minister and Yes Prime Minister must be ranked as high as John Dryden's Mac Flecknoe ... Let these not be corrupted. There are certain issues which are sacred. Among these are the two British satirical classics.

Indian politics and social life can be a gold mine for a satirist. The BBC can ask some of the Hindiwallahas to come up with an original political satire and make a TV serial out of it. I will boycott the BBC channel if they went ahead with this ill fated project.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

That is a pragmatic view point ashlyn. Thanks.

Yes, English should be announced as the official language of India. Till 1965 English and Hindi were the official languages of India. Then they removed English from that list and now Hindi is the official language of India.

English is business language. Hence it is more qualified than Hindi to be the official language of India.

Muthu said...

//இந்தி திணிப்பு பல பெயர்களில் மறைமுகமாக நடக்கிறது.வங்கி அலுவலர்கள் இந்தியில் கையெழுத்து போட வேண்டுமென்றெல்லாம் உத்தரவுகள் இருக்கிறதாம்.தமிழ்நாட்டில் இருக்கும் வங்கி ஊழியன் எதற்கையா இந்தியில் கையெழுத்திட வேண்டும்?பல தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே நடக்குமாம்.ஏன் தமிழ் என்ன இளிச்சவாய் மொழியா?//

this is true...this foolishness is happening...

Unknown said...

Thanks thamizini muthu,

Apart from this signature issue lots of foolish things go on.Banks in tamilnadu are forced to buy hindi papers,which no one reads.what a waste of money?

When DMK was ruling TN in 1996-01 uttarpradesh government decided that it would send all its communications only in hindi.DMK govt refused to reply to any communications in hindi and UP government took back that announcement.

தகடூர் கோபி(Gopi) said...

செல்வன்,

//"தேசிய மொழி தெரியாது என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?"//

தேசியப்பறவை, தேசியமலர் என்பது போல தேசியமொழி என்ற ஒன்று இல்லை

இந்திய அரசு வெளியீட்டின்படி தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 அதுல இந்தியும் ஒன்று.

http://indiaimage.nic.in/languages.htm
(இந்திய அரசு தேசிய தகவல் மையத்துக்கு சொந்தமான வலைத்தளம்)

//Till 1965 English and Hindi were the official languages of India. Then they removed English from that list and now Hindi is the official language of India.//

அரசு அலுவல்களுக்குப் பயன்படுத்தப்படும் மொழிகள் இன்றுவரை இரண்டு அதுல இந்தியும் ஒன்று. மற்றது ஆங்கிலம்

http://en.wikipedia.org/wiki/List_of_national_languages_of_India

மற்ற தேசத்தை சேர்ந்த நேபாளி, உருது கூட நம்ம நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழி! அதவிட ஒரு விஷயம் என்னன்னா, வழக்கொழிந்து போய் பேச ஆளே இல்லாத சில மொழிகள் கூட நம்ம நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.

ஹூம்.. என்னத்தை சொல்ல...

Unknown said...

Dear Gopi,

The website you provided says english is associate official language of India.Associate means something like an assistant.The states in India are classified into 3 and maybe for communicating with non hindi speaking states associate language english is used.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

If you ask me, a country should prepare its citizens good enough to survive in the whole world....not just within the country. Kids ought to be encouraged to learn Spanish, French, and English (if possible Mandarin also :)))) I don't think it is impossible.//

I agree that a country should prepare its citizens as global citizens.For that teaching english is as a must.Other languages can be taught as optional subjects.Students can be given the option of choosing a language that best fits their career interests eg: literature means french,dance means sanskrit etc.

But I am not for forceful teaching of any language to students

J S Gnanasekar said...

மிகவும் அருமையான பதிவு.

நன்றிகளும், வாழ்த்துகளும்.

-ஞானசேகர்

Unknown said...

மிக்க நன்றி ஞானசேகர்

அன்புடன்
செல்வன்

Anonymous said...

"எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் மொழியை சரியாக பேச வேண்டும்.அமெரிக்காவில் இருந்தால் ஆங்கிலத்தை சரியாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்"

Same like your above arguement, why not Hindi-speaking people think that you should speak when you are there among them, being an Indian?

There is nothing wrong in learning another language, esp. when it is our national language. When you are in US, you face difficulty in facing the people who speak Hindi. Think of then if you have to go and work in North India, where you are supposed to speak Hindi only? But you can learn English, when you go to US, but can't learn Hindi, when you have to speak to Hindi-speaking people. Good policy!

When you move to Gulf countries, you will see more people who speak Hindi (or the smilar Urdu speaking Pakistani's), who surely laugh at you. When you can answer 'tiger' reply to Indians, can you do that to the Pakistanis?

Politicians in Tamil Nadu make Anti-Hindi policy just for their own sake. And it is a pity that you are one of the victims - just like ME!

An Affected Gulf Tamilan

Unknown said...

Same like your above arguement, why not Hindi-speaking people think that you should speak when you are there among them, being an Indian?//

Welcome to the blog my friend,

If anybody goes to work in northindia they might need to learn hindi, or gujarathi or bengali.If i get a job over there i might learn hindi.By that logic I would expect a northie who works in chennai to learn tamil(which most of them dont do)



//There is nothing wrong in learning another language, esp. when it is our national language.//

I dont accept this argument.If learning national language is so important then change our national language to tamil or english.

/ When you are in US, you face difficulty in facing the people who speak Hindi. Think of then if you have to go and work in North India, where you are supposed to speak Hindi only? But you can learn English, when you go to US, but can't learn Hindi, when you have to speak to Hindi-speaking people. Good policy!/

If anybody gets a job in north india let him learn hindi in 30 days.Its possible.Or if anybody wants to elarn hindi as an optional subject let him do so by all means.I am against forceful opposition of hindi.Government should not discriminate among people on the basis of language.Is this too much to ask in a democracy?

/When you move to Gulf countries, you will see more people who speak Hindi (or the smilar Urdu speaking Pakistani's), who surely laugh at you. When you can answer 'tiger' reply to Indians, can you do that to the Pakistanis?/

If pakistanis in gulf dont know english it shows that they should learn english.It doesnt show that i should learn hindi.

Further if I go to work in gulf I will even learn arabic.

/Politicians in Tamil Nadu make Anti-Hindi policy just for their own sake. And it is a pity that you are one of the victims - just like ME!

An Affected Gulf Tamilan/

I'm sorry that you were affected because you dont know hindi.You always had the option of learning hindi as an optional subject

Anonymous said...

Selvan ..Good thoughts and appreciation for your lone battle in TV.

Some more points

1. I dont think that DMK said " Dont learn other languages or HINDI" they only said "Dont impose Hindi "
So can we stop blaming the dravidar parties.

2. This feeling of not knowing Hindi has grown in a large proportion that almost everyone in Tamilnadu have learnt Hindi (at least through Hindi Prachara saba)

3.Always Hindikaran has that dominating mind ..that he thinks he is India .and so is the word 'national language'

4. Its strange to see educated Northies being completely ignorant about South ..Do they study about South in their syllabus?

5.And by nature we are always submissive in our behaviour towards Northies and they take advantage .

6. "senthamizhum naa pazhakkam". Like wise any language can be spoken only when we try to speak .so dont blame others .
Kindly have a look at the Tamil passengers coming from Mumbai and just ask them where they 'studied' Hindi?

7. 'Tamizh' is not a respected word in TamilNadu .so why to blame others ...
Note the following :All 'hip' music stores have categories like English, Hindi and then Regional (Tamil cassettes fall under this category). There is no harm in my expectation of having a category "tamil" at least in TamilNadu.
There is a shop called Odyssey at Adayar in Chennai.
When TN govt made "shop name in Tamizh" madatory , these guys hung a board outside..but Never bothered to illuminate it .
It was like this for years until recently .
.....
hmmm
"Tamizhan yenroru inam undu thaniye avarukoru kunamundu"

Unknown said...

Thanks thirumalai,

Whoever wants to learn hindi as an optional subject,they are most welcome to learn it.People can always learn any language like hindi,chinese,viatnamese,french..anything.Nobody stops them.

But when central government starts discriminating among people on basis of knowing hindi,then it becomes unfair.That should be strongly protested in a democracy.Thats what DMk and ADMk are doing.They protest against injustice,not against hindi.

திமுகவும் அதிமுகவும் சொல்வது "இந்தி எதிர்ப்பல்ல". "இந்தி திணிப்பு எதிர்ப்பு" என்பதை மக்கள் உணர்ந்தால் சரி

Anonymous said...

செல்வன், சின்ன பொது அறிவு கேள்வி, ஆனா இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாதது :-)

நாகாலாந்தின் மாநில மொழி எது?

ramachandranusha(உஷா) said...

செல்வன், சின்ன பொது அறிவு கேள்வி, ஆனா இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாதது :-)

நாகாலாந்தின் மாநில மொழி எது?

மணியன் said...

திரு செல்வன் அவர்களே, இந்த இந்தி விவகாரம் அரசியலமைப்பு சபை கூட்டத்திலிருந்தே விவாதிக்கப் பட்டு வருகிறது. நான் 65ல் நடந்த போராட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறேன்; பிற்காலத்தில் மைய அரசுப் பணியில் இந்தி வார விழாக்களையும் நடத்தியிருக்கிறேன். என்னுடைய கருத்துக்கள்:
1. இந்தித் திணிப்பு முற்றிலும் எதிர்க்கப் படவேண்டியது.
2. தேசிய மொழிகள் 16 என்று நினைக்கிறேன்; நாளொரு வண்ணம் வளர்ந்து வருவதால் தீர்மானமாக தெரியவில்லை.
3. இந்தியும் ஆங்கிலமும் மையஅரசின் ஆட்சி மொழியாக 65 வரை இருந்தன. பிறகு ஆங்கிலம் (கொடுக்கப் பட்ட 15 வருட அவகாசம் முடிந்ததால்) விலக்கப் பட்டது. நமது இந்திஎதிர்ப்பு போராட்டத்தால் மீண்டும் துணை அரசு மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. நேரு அவர்களின் உறுதிமொழியான " இந்தி பேசாதவர் விரும்பும்வரை ஆங்கிலம் துணை மொழியாக நீடிக்கும்" சேர்த்துக்கொள்ளப் பட்டது.
4. நிலா அவர்கள் கூறுவது போல தாய்மொழியில் வல்லமை பெற்றிருப்பது அவசியம். எனது வெளிநாட்டு அனுபவத்தில் இந்தியர் இருவர் ஆங்கிலத்தில் பேசுவது கேட்டு ஆச்சரியப் பட்டவர்களும் உண்டு.
5. பெரும்பான்மையான இந்திய மக்கள் ஆங்கில அறிவு பெறாதவர்கள். அவர்களை ஆளும் அரசின் ஆணைகளை வேற்றுமொழியில் புரிந்து கொள்வதை விட தாய் மொழியில் புரிந்து கொள்வது எளிது என்பதாலேயே ஆட்சிமொழியாக மாநிலங்களில் வட்டாரமொழியும்(தமிழகத்தில் தமிழ்) மைய அரசில் இந்தியும் என அரசியலமைப்பு சட்டசபை தீர்மானித்தது.
6.வடஇந்தியர்களின் ஆதிக்க மனப்பான்மையாலும், "இந்திகுடிமகன்க"ளாலும் ஏதோ இந்திதான் நமது தேசியமொழி போலவும், வட இந்தியக் கலாசாரம்,உணவுவகைகள் தான் இந்தியாவிற்குறியது எனவும் வெளிநாடுகளில் தோற்றமேற்படுத்தப் படுகின்றன.
7.நாட்டுப்பற்றிற்கும் இந்திமொழி கற்றலுக்கும் ஒரு இணைப்பும் இல்லை. மைய அரசு பணியாளர்கள் பிற மாநிலங்களிலுக்கும் பணிமாற்றம் செய்யப்படுமாதலால் அவர்கள் அடிப்படை இந்தி கற்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

Unknown said...

செல்வன், சின்ன பொது அறிவு கேள்வி, ஆனா இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாதது :-)

நாகாலாந்தின் மாநில மொழி எது?//

English??I have heard that english is state language of one of the 7 NE states,but dont know whether its nagaland or manipur

Unknown said...

Thanks for the post manian.Will post a detailed reply for your post once I reach office

thanks
selvan

Anonymous said...

அமெரிக்காவில் குழந்தைகள் ஆங்க்கிலம் படிக்குது.
அடுத்ததா கணக்கும், அறிவியலும் படிக்குது. நம்ம ஊர்ல
ஆங்கிலம்,தமிழ், இந்தி, சம்ச்க்ருதம் எல்லாம் படிச்சுட்டு
அப்புறம் கணக்குக்கு வரதுக்குள்ள தாவு தீந்து போகுது.
அப்புறம் எங்கருந்து அறிவியல் வளக்கறது?
தாய்மொழியில் படித்தலே போதும். பொருளாதார தேவைக்காக
ஆங்கிலம் ரெண்டாவது மொழியா படிக்கலாம்.
உள்நாட்டில சென்னையிலிருந்து மதுரைக்கு பிசினஸ்
பண்றவன் கூட ஆங்கிலத்துல பண்ணிகிட்டிருக்கோம்
தேவையில்லாம.

மகேஸ் said...

தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி துணை மொழியாக இருக்க வேண்டும். இது 8ம் வகுப்பு வரை இருந்தால் போதுமானது. பின்னர் தமிழ் முக்கியப் பயிற்று மொழியாக இருக்க வேண்டும்,அதாவது கணிதம்,அறிவியல் பாடங்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் சொல்லித்தர வேண்டும், மற்றவை தமிழில் கற்க்க வேண்டும்.8ம் வகுப்பு வரை ஹிந்தி துணைப்பாடமாக இருந்தால் போதுமானது என்பது என் கருத்து. பின்னர் வேண்டுமானால் அவரவர்தம் சொந்த முயற்ச்சியில் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளலாம். இதனால் நம்மவர்களும் ஹிந்தி பேசுபவர்களைச் சமாளிக்கலாம். சில அறிவியியல்/கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்ப்பதால் பின்னர் கல்லூரியில் சிரமம் இருக்காது

Unknown said...

வணக்கம் மகேஸ்,

பயிற்று மொழி எது என்பதை பெற்றோரே தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.ஆங்கில வழி கல்வி,தாய் மொழி வழி கல்வி என இரு வாய்ப்புகள் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.எதில் கற்பது என்பதை பெற்றோரும் மாணவரும் முடிவு செய்ய வேண்டும் எனவே நான் விரும்புகிறேன்.இந்தி உட்பட பிறமொழிகள் விருப்பத்தேர்வாக அமையலாம்

Unknown said...

அன்புள்ள அனானிமஸ்,
நீங்கள் சொன்னபடி ஆங்கிலம்,தமிழ்,இந்தி என படித்துவிட்டு கணிதம்,விஞ்ஞானம் என வருவது எப்போது?சரியான கேள்வி.

மற்றபடி தாய்மொழி வழி கல்வியா ஆங்கில மொழி வழி கல்வியா என்பதை பெற்றோர் தேர்வுக்கு விடுவது தான் சரி என படுகிறது.

Unknown said...

அன்பு மணியன்,

.1 இந்தித் திணிப்பு முற்றிலும் எதிர்க்கப் படவேண்டியது.

ஆம்.மிக சரியான கருத்து

2. தேசிய மொழிகள் 16 என்று நினைக்கிறேன்

18 என படித்த ஞாபகம்

4. நிலா அவர்கள் கூறுவது போல தாய்மொழியில் வல்லமை பெற்றிருப்பது அவசியம். எனது வெளிநாட்டு அனுபவத்தில் இந்தியர் இருவர் ஆங்கிலத்தில் பேசுவது கேட்டு ஆச்சரியப் பட்டவர்களும் உண்டு.

ஆம்.தாய்மொழி,தாய்மண்,தாய் ஆகியோரை மறத்தல் கூடாது.

7.நாட்டுப்பற்றிற்கும் இந்திமொழி கற்றலுக்கும் ஒரு இணைப்பும் இல்லை

அற்புதமான கருத்து ஐயா

Muthu said...

http://muthuvintamil.blogspot.com/2005/10/blog-post_28.html

குழலி / Kuzhali said...

http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_13.html

Unknown said...

அருமையான பதிவு திரு குழலி.மிகவும் நேர்மையான கேள்விகள்.

தங்கள் பதிவிலிருந்து

//வணக்கம், நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்த காலக்கட்டத்தை சேர்ந்தவனில்லை, ஆனாலும் எமக்கு தெரிந்தவரை இந்தி மொழியை யாரும் படிக்க கூடாது என்று அறிவுறுத்தியமாதிரி தெரியவில்லை, அப்படி இந்தி மொழி படிக்க விருப்பமுள்ளவர்கள் எத்தனையோ மாணாக்கர்கள் ஹிந்தி பிரச்சார சபா வழியாகவும் இன்றும் படித்துக்கொண்டுள்ளனர், இதை யாரும் கையைப்பிடித்து தடுத்ததாக தெரியவில்லை எமக்கு.

இந்தியை ஒரு கட்டாய மொழிப்பாடமாக படிப்பது என்பது தான் இங்கு பிரச்சினையே, முதலில் கட்டாய மொழிப்பாடமாக ஆரம்பித்து பின் மொத்தமாக இந்தி என்னும் ஒட்டகம் கூடாரத்தினுள் புகுந்து விடும், இப்படித்தான் இன்று குசராத்தி, மற்றும் இன்ன பல கூடாரங்களில் இந்தி மொழி புகுந்து விட்டது.//

100% இதனோடு ஒத்துப்போகிறேன்.நன்றி

Unknown said...

அன்பின் முத்து

//1.இத்தனை செழுமை உள்ள தென்னிந்திய மொழிகள் இந்தி ஆதிக்கத்தால் அழிய வேண்டுமா?

2.எதற்காக ஒழிக்கவேண்டும் ஆங்கிலத்தை?

3.இன்று இந்தியா முன்னேறி விட்டது .2020 ஆம் ஆண்டு வல்லரசு ஆகி விடும் என்றெல்லாம் கூக்குரல்கள் எழுகின்றன. முன்னேற்றம் என்று நம்மால் கூறப்படும் இந்த விசயங்கள் எதனால் சாத்தியப்பட்டது? //

அற்புதமான கேள்விகள்

Anonymous said...

//I dont accept this argument.If learning national language is so important then change our national language to tamil or english.//

Just because it is your opinion, you want a nation with a majority of people speaking Hindi, to change its national language to English (or Tamil? ha ha).

//If anybody gets a job in north india let him learn hindi in 30 days.Its possible.Or if anybody wants to elarn hindi as an optional subject let him do so by all means.I am against forceful opposition of hindi.Government should not discriminate among people on the basis of language.Is this too much to ask in a democracy?//

So, when a language is forced on you to be learnt, you won't mind learning it when it is required. But when it is forced on you in your own land, you will have to oppose it? Great!

//If pakistanis in gulf dont know english it shows that they should learn english.It doesnt show that i should learn hindi.//

When there is a chance to correct ourself first, we should try to do it. Asking others to learn English or Tamil, before correcting yourself?

//Further if I go to work in gulf I will even learn arabic.//

Again, when there is a need (forcible need), you won't mind!

//I'm sorry that you were affected because you dont know hindi.You always had the option of learning hindi as an optional subject//

FYI, I know Hindi well before I came to Gulf. But I see a lot of labourers who come from villages suffer in the hands of their Pak superiors (few, not all of them are Pak superiors). Just gave a voice on their behalf.

Anyway, I am sure you will come up with your own arguement not accepting anything.

I see your blogs reflecting your own 'controversial' topics. This is just one of them I assume.

Take care!
A Gulf Tamilan

Unknown said...

Dear anaonymous

//Just because it is your opinion, you want a nation with a majority of people speaking Hindi, to change its national language to English (or Tamil? ha ha)//

If they want me to learn national language by compulsion,I wont accept it unless national language is either tamil or english.

//
So, when a language is forced on you to be learnt, you won't mind learning it when it is required. But when it is forced on you in your own land, you will have to oppose it? Great!//

When I get a job in spain i will learn spanish.Similiarly when I get a job in mumbai i will learn hindi.Nobody forces me here.Its my choice.But if hindi is forced compulsarily i will oppose it.

//When there is a chance to correct ourself first, we should try to do it. Asking others to learn English or Tamil, before correcting yourself?//

Northies will learn no language except hindi.Southies should learn english,hindi and their mother tongue..eh?Instead of this illogical argument, if northies and southies both learn just their mother tongue and english both of them can communicate.simple.

//
Again, when there is a need (forcible need), you won't mind!//

where is the forcible need here?It is my choice.If i want a job in arabia i have to learn arabic.If i dont go to arabia i dont need arabic.But why does a tamilian who lives in tamilnadu learn hindi or arabic?what right does the government have to force him to learn hindi?

//
FYI, I know Hindi well before I came to Gulf. But I see a lot of labourers who come from villages suffer in the hands of their Pak superiors (few, not all of them are Pak superiors). Just gave a voice on their behalf.//

so you give voice for people who work under few pak superiors.For these few people you want rest of tamilnadu to learn hindi by compulsion??

//I see your blogs reflecting your own 'controversial' topics. This is just one of them I assume//

controversy can be created out of anything.

கால்கரி சிவா said...

சிங்கப்பூர் அலுவலகங்களில் அன்றாடம் (1997 களில்) கேட்ட வசனம் இது. வட இந்தியரைப் பார்த்து சீனர் " நீங்கள் இந்தியராக இருந்து எப்படி தமிழ் தெரியாமல் இருக்கிறீர்கள். சிஙகப்பூர் இந்தியர் யாவரும் தமிழ் தான் பேசுகின்றனர்"

Unknown said...

அன்பின் கால்கரி சிவா,

அதிகம் வெளியில் தெரியாத தகவலை தந்ததற்கு நன்றி.

//தில்லியில் மத்திய அரசு நிறுவனங்களில் வாரத்தில் ஒரு நாள் எல்லா அலுவல்களும் இந்தியிலேயே நடைபெறவேண்டும் என்று ஒரு நடைமுறை உள்ளதாம்.அன்று இந்தி "படித்த" தமிழர்களே விடுப்பு எடுத்துவிடுவார்களாம். அல்லது அன்றைக்கு நடைபெறவேண்டிய கடிதப்போக்குவரத்தை தள்ளிப்போட்டுவிடுவார்களாம்//.

அன்பின் தொப்புளான்

இது மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறதே.இது உண்மையா?

இருந்தாலும் இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.ஏனேனில் வங்கி ஊழியர்கள் இந்தியில் தான் கையெழுத்து போடவேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தவர்கள் அல்லவா நமது மக்கள் பிரதிநிதிகள்?

ஜோ/Joe said...

//சிங்கப்பூர் அலுவலகங்களில் அன்றாடம் (1997 களில்) கேட்ட வசனம் இது. வட இந்தியரைப் பார்த்து சீனர் " நீங்கள் இந்தியராக இருந்து எப்படி தமிழ் தெரியாமல் இருக்கிறீர்கள். சிஙகப்பூர் இந்தியர் யாவரும் தமிழ் தான் பேசுகின்றனர்"//

இது உண்மைதான் ..ஆனால் இதற்காக affected Singapore Hindiwallah யாரும் வட இந்தியாவில் போய் எனக்கு ஏன் பள்ளியில் தமிழ் சொல்லித்தரவில்லை என்று புலம்பியதாக கேள்விப்படவில்லை . Gulf Tamilian-க்கு மட்டும் வெட்கமாகப் போய்விட்டதாம் ..அய்யோ..வெட்கக்கேடு.

Unknown said...

சரியான கருத்து ஜோ.நன்றி

சீனு said...

//இஸ்கான் கோயிலுக்கு போனால் சிலர் திடீரென்று சரளமாக இந்தியில் பேசுவார்கள்.'இந்தி தெரியாது' என்று சொன்னால் முகம் சுளிப்பார்கள்//

எனக்கும் பல இடத்தில் இது நடந்திருக்கிறது. என்னிடம் ஒருவர் எந்த மாநிலம் என்று கேட்டார். நான் தமிழ் நாடு என்று சொன்னேன். அதற்கு அவர் நக்கலாய், "Hey you people are the one who were asking

for seperate country na?" என்று கேட்டான். நான் அலட்சியமாக, "Yes! Of course. Is there any problem?"-ன்னு கேட்டேன். அமைதியாகிவிட்டான்.

பல முறை பலர் பார்க்கும் பொழுதெல்லாம், இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவர். இந்தி இல்லாமல் survey செய்ய முடியாது என்றும் கூறுவர். நான் அவர்களை கண்டுகொள்வதே இல்லை.

அவர்கள் இந்தி பேசும்பொழுதெல்லாம் நான் அமைதியாகவே இருப்பேன். அவர்கள் joke அடித்து சிரித்துக் கொள்வர். நான் தேமே என்று அமைதியாக இருப்பேன். பின் அவர்கள் மொழிமாற்றம் செய்து சொல்வர்.

அதற்காக, நான் சங்கடப்படுவது இல்லை. அவர்களுக்கு எப்படி இந்தி பெரியதோ, அதே போல் என் மொழி எனக்கு பெரியது.

நானும் என் சகோதரியிடம் இந்தி புத்தகம் வாங்கி கற்கலாம் என்று இருந்தேன் (நான் ஐந்தாம் வகுப்பில் இந்தி படித்ததால் எனக்கு இந்தி alphabets மற்றும் எண்கள் தெரியும். தடவித் தடவி கூட்டிப் படித்துவிடுவேன்).

பின் இவர்கள் பன்னின அட்டகாசத்தில் இந்தி படிக்கவே வெறுப்பானது. அப்படியே விட்டு விட்டேன்.

இந்தியை உள்ளே விட்டிருந்தால், இந்நேரம் மற்ற பிராந்திய மொழிகளுக்கு நேர்ந்த நிலை தான் தமிழுக்கும் நேர்ந்திருக்கும். இதற்கு சாட்சி, நம் தமிழ் திரையுலகம். என் பழைய அலுவலகத்தில் வேலைப்பார்த்த தோழி

ஒருத்தி நன்றாக தமிழ் பேசுவாள். அவளிடம் எப்படி தமிழ் கற்றுக்கொண்டாய் என்று கேட்டேன். அவள் தானாக கற்றுக் கொண்டதாக கூறினாள். நான் காரணம் கேட்ட பொழுது அவள் கூறியது, "தமிழ் படங்கள் பார்த்தால்

புரியவில்லை. அதனால் தமிழ் கற்றுக் கொண்டேன்".

//பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள்.//

ஹலோ! நமக்காவது நம் தாய்மொழி + ஆங்கிலம் (தட்டுத் தடுமாறி) தெரியும். ஆனால், வெள்ளைக்காரனுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் தான் அதிகம். பட்லர் இங்கிலீஷ் ஒன்னும் கேவலம் இல்லை. நமக்குத்

தெரிந்த உலக அறிவு கூட வெள்ளைக்காரனுக்கு இல்லை என்பதே உண்மை.

arunagiri said...

என்னிடமும் வட இந்தியாவில் இருக்கையில் இதே போல் "அதிகம் பேர் பேசும் மொழிதானே தேசிய மொழியாக இருக்க வேண்டும்? இந்தியாவில் இருந்து கொண்டு ராஷ்ட்ர பாஷா தெரியாமல் உள்ளாயே" என்றெல்லாம் கேட்கப்பட்டது.

நான் பல வித பதில்கள் வைத்திருந்தேன்

1. "ராஷ்ட்ர பாஷ ஹிந்தியா? எந்த ராஷ்ட்ரத்தில்?"

2. "கடைசியாய் நான் check செய்தபோது அரசியல் சட்டத்தில் தமிழும் தேசிய மொழி என்றே இருந்தது- நீங்கள் தமிழ் வகுப்புக்கு enrol செய்யும் தினம் நானும் இந்தி வகுப்புக்கு enrol செய்வேன்"

3. "அதிகம் இருக்கிறது என்பதற்காக காக்கையையா தேசியப் பறவை எனக் கொள்ளுகிறோம்?"

ஆனால் இவையெல்லாம் முன்முடிவுடன் வம்புக்கு வருபவரிடம் பதில் சொல்ல வைத்திருந்த சாமர்த்திய பதில்களே. உண்மையில் ஒரு மாநிலம் பிற்படுவது ஹிந்தி கற்றுக்கொள்வதாலோ, இல்லாததாலோ அல்ல. 8-ம் வகுப்பு வரை இந்தி படிக்கும் மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில்தான் பேசிக்கொள்கிறார்கள். தமிழர்களைப்போல் அவசர மதிப்பு வேண்டி ஆங்கிலத்துக்குத் தாவுவது இல்லை. மிகுந்த மொழிப்பற்றும், இலக்கியச் சிந்தனையும் உடையதாய் கேரளம் திகழ்கிறது- ஹிந்தியை அங்கீகரித்தும் கூட. ஹிந்தி அங்கீகரிக்கப்பட்ட மராட்டியத்திலோ, அவர்களது மேடை நாடகச் சூழலும், படைப்பிலக்கியச் சூழலும் இந்தியாவிலேயே சிறந்ததாய் உன்னத படைப்புகளையும், நடிக மணிகளையும் வெளிக்காட்டுவதாய், தமிழக நாடகச் சூழலை விடப்
பன்மடங்கு ஆரோக்கியமானதாய்த் திகழ்கிறது.

நம் மாநிலத்திலோ மொழி என்ற உன்னத தெய்வச்சிலை ஓட்டுப்பொறுக்கிகளால் கேவலம் காழ்ப்பு அரசியலுக்கான கருவியாகவும், ஆட்சியேற உதவும் படிக்கல்லாகவும் குறுக்கப்பட்டதன் விளைவு ஆங்கிலம் பேசுவது நாகரிகமாகவும் நல்ல தமிழ் என்பது நாதியற்றும் கிடக்கின்ற சூழலில் வந்து நிறுத்தியிருக்கின்றது.

அமெரிக்காவில் சிறப்பான விஷயம் மொழி என்பது குறித்து அவர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவதில்லை என்பது. மதிப்பு, மானம் என்பதெல்லாம் சரியாக ஆங்கிலம் பேசுவதோடு தொடர்புடையது என்பது போன்ற விக்டோரிய கால காலனீய மதிப்பீடுகளை உதறித்தள்ளி அது வெகுதூரம் வந்துவிட்டது. பரிசுத்த ஆங்கிலத்தை விட "பட்லர்" அமெரிக்கன் அதிகமாக விரும்பப்படுகிறது. சந்தேகமிருந்தால் அடுத்த முறை அமெரிக்கனிடத்தில் "how'dya doing?" என்பதற்குப்பதிலாக "how are you doing?" என சொல்லிப்பாருங்கள்.
இலக்கணப்பிழையோடு பேசுவது சரி எனச்சொல்லவில்லை. ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவர் இறுதி மதிப்பிடப்படுவதில்லை.

(ஆங்கிலத்தை விடுங்கள். தமிழை தமிழ்நாட்டில் எத்தனை பேர் இலக்கணப்பிழையின்றிப் பேசுகிறார்கள்/ எழுதுகிறார்கள்?)

மொழி ஒரு கலாசாரக் கடத்தியாக மட்டுமன்றி தொடர்புக் கருவியாகவும் உள்ளது. தமிழ் படிப்பதால் என்ன உபயோகம் என்று கேள்விகள் வரும் காலத்தில் இருக்கிறோம். இந்தக்கேள்விகளுக்கு "தமிழ்த்தாய், இனமானம்" போன்ற சலித்துபோன ஜல்லியடிப்புகள் தாண்டி பதிலை யோசிக்க வேண்டும். தமிழை வளர்க்க தமிழ்நாட்டை வளர்க்க வேண்டும். இங்கு வந்த குஜராத்தியரும் சவுராஷ்டிரரும் தமிழ் படித்ததும், டெல்லியில் தமிழன் ஹிந்தி கற்பதும் வாழ்நிலை சௌகரியம் கருதி. தமிழ்நாட்டில் (தமிழ் மற்றும் மற்ற) மக்கள் வந்து வாழும் வகையில் வசதி, வரவேற்பு, கட்டுமானம், தொழில் நிலை, உயர்கல்வி, தண்ணீர், மின்சாரம், கணிணி என மக்களைத்தொடும் விஷயங்கள் வளர வேண்டும். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் பரவியது ஆட்சியால் விளைந்த வணிகத் தொடர்பினாலும் அவை தந்த வாழ்வியல் ஆதாரங்களாலும்தான்.

பிற மொழிக்காழ்ப்பும், பிற மொழி அறியாமையுமே தமிழ்ப்பற்றாகி விடாது. அக்காலத்தமிழறிஞர்களும் இலக்கியவாதிகளும் பிற மொழிகளையும் நன்கு பயின்றிருந்தனர். மற்ற மொழி அறியாததால் தமிழை விரும்புகிறேன் என்பது தமிழ்ப்பற்று ஆகிவிடாது. பிறமொழி வெறுப்பு தமிழ்ப்பற்றாக வெளிப்படுவது தமிழுக்குப்பெருமை அன்று. அது தமிழுக்குத் தமிழன் செய்யும் அவமானம்.

மறுப்பதிலும் உடைப்பதிலும் அல்ல ஏற்பதிலும் உருவாக்குவதிலுமே இந்தியத்தனம் இருக்கிறது.

Sivabalan said...

// பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள். //

செல்வன்

மிக அருமையாக சொன்னீர்கள்.

நானும் இங்கே GAS Stationக்கு சென்ற போது, அங்கே இரு வட நாட்டு இந்தியர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அவர்கள் இந்தியில் என்னிடம் பேசிவிட்டு எனக்கு தெரியவில்லை என்றதும் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

Unknown said...

சீனு,அருணகிரி

பதிவே போடும் அளவுக்கு பின்னூட்டம் இட்டு இந்த விவாதத்தை சிறப்புற செய்ததற்கு நன்றி.திராவிட தமிழர் வலைதளத்தில் சொல்லியிருந்தபடி இந்த பதிவின் பின்னூட்டங்களில் சிறப்பான விவாதங்கள் காணப்படுகின்றன.அவற்றை மேலும் வலுசேர்த்தவை உங்கள் பின்னூட்டங்கள்.தமிழ்மணத்தில் இனி வரும் காலத்தில் இந்த விவாதம் எழும்போது இந்த பதிவும் அதில் உள்ள இந்த வாதங்களும் கட்டாயம் முன்வைக்கப்படும் என எண்ணுகிறேன்.

சிவபாலன்,
மிகவும் வருந்துகிறேன்.உங்கள் அனுபவத்தை எண்ணி அல்ல.அமெரிக்காவில் இருந்து கொண்டு ஆங்கிலம் கற்காமல் திண்டாடப்போகும் அந்த இந்திய சகோதரர்களை நினைத்து

arunagiri said...

ப்ளாக் அக்கவுண்ட் உள்ளதே தவிர நான் இன்னமும் தனிப்பதிவுகள் இடத்தொடங்கவில்லை. எனவேதான் லின்க் தருவதற்குப்பதிலாக நீள பதில்களை பின்னூட்டத்தில் வந்து போட வேண்டி உள்ளது.

Unknown said...

//ப்ளாக் அக்கவுண்ட் உள்ளதே தவிர நான் இன்னமும் தனிப்பதிவுகள் இடத்தொடங்கவில்லை. எனவேதான் லின்க் தருவதற்குப்பதிலாக நீள பதில்களை பின்னூட்டத்தில் வந்து போட வேண்டி உள்ளது.//

அதனால் ஒன்றும் பிரச்ச்னை இல்லை அருணகிரி.நல்ல கருத்து செறிவுள்ள பின்னூட்டங்கள் என் பதிவுக்கு கிடைப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே

ரவி said...

செல்வன்...உங்கள் பல கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்..

ஆனால் சிலவற்றிலிருந்து மாறுபடுகிறேன்...

ஆனால் நான் நினைப்பது அனைத்தும் பின்னூட்டமாக நிலா மற்றும் சிரில் எழுதிவிட்டனர்...

ஆங்கிலத்தினை நாம் கஷ்டப்பட்டு திணித்துக்கொள்ளத்தான் வேண்டும்..காரணம் நம் நாடு முன்னேற அது மிக அவசியம்.. ஜப்பானியர்கள் இந்தியர்களை பெருமளவு இப்போது வேலைக்கு அழைக்கிறார்கள்..காரணம் - மேலைநாட்டினருடன் பேச, கருத்து பரிமாற்றம் செய்ய அவர்களுக்கு தேவை ஒரு மீடியம்..

அதே போல் ஹிந்தியால் ( கற்பதால்) நமக்கு பத்து பைசா கிடைக்கும் எனில் அதனை கற்ப்போம்...ஷாரூக்கான் படம் புரியாததுக்கு எல்லாம் இந்தி கற்க்கவேண்டும் என்று அவசியம் இல்லை...

வளமான இந்தியாவை உருவாக்குவோம்..நம் தாய் தமிழையும் காப்போம்...

மற்றபடி இது தரமான பதிவு..

Unknown said...

நன்றி ரவி,

மொழியை கற்றால் நல்லது என்று அவரவரே முடிவு செய்துகொள்ள வேண்டும்.பள்ளி மாணவர் மீது திணித்தல் தகாது.மூன்று மொழியை கற்றுக்கொண்டு கணிதம்,அறிவியல்,வரலாறு என்று அவர்கள் வருவது எப்போது?

இந்தி படித்தால் நல்லது தான்.ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது

அன்புடன்
செல்வன்

Unknown said...

//ஏன் இந்தியனாக இருக்கவேண்டும்?//

இந்தி படித்தால் தான் இந்தியன் என சொல்லபடுவதை கண்டித்து எழுதிய பதிவு அது.இந்தி படிக்காவிட்டாலும் ஒருவன் இந்தியனே என்ற பொருளில் எழுதினேன்.

ரவி said...

//இந்தி படித்தால் நல்லது தான்.ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது//

கழகங்களின் ஆட்சியில் இது கண்டிப்பாக நடவாது செல்வன்..

Unknown said...

எந்த ஆட்சியிலும் இது நடக்க கூடாது என்பதே என் விருப்பம் ரவி.
நன்றி
செல்வன்

இரா.சுகுமாரன் said...

//அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும்.இந்தியை தூக்க வேண்டும்.//

தாய்மொழியே கல்வி மொழியாக இருக்கவேண்டும் என்று உங்கள் காந்தி சொல்லியிருக்கிறாரே!

தாய் மொழி அலுவல் மொழியாக இருக்கக் கூடாதா என்ன?

எனய்யா, ஆங்கிலத்தை திணிக்கிறீர்கள்.

Nakkiran said...

செல்வன்

தமிழ்ப்பற்றிற்கும் இந்தி படிப்பதற்கும் எந்த சம்பந்தமில்லை என்பதை ஒப்பு கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இந்தி திணிப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதே போல் இந்தி புறக்கணிப்பும் தவறுதான். இந்தியை விருப்பப் பாடமாக படிக்கலாம் தான். ஆனால் அதற்கு ஒரு சராசரி தமிழனுக்கு வசதியில்லையே...மாநகரங்களில் தவிர எனக்குத் தெரிந்த வகையில் இந்தி ஆசிரியர் எந்த அரசுப் பள்ளிகளிலும் கிடையாது. ஒரு ஏழை மாணவனால் அவன் விரும்பினாலும் இந்தி படிக்க வாய்ப்பில்லை.

தமிழ் நம் உயிர். இந்தி என்றொரு மொழியை கற்பதால் அதற்கு ஊறு வறும் என்று நினைத்தால் நம் தமிழ்ப்பற்றின் மீது தான் எனக்கு சந்தேகம். தமிழை வளர்க்க அல்லது பாதுகாக்க இந்தியை புறக்கணிக்க நினைத்தால், நாம் தமிழை நம்பவில்லை என்றுதான் தோன்றுகிறது.

தமிழ் நம் தாய், பிற மொழிகள் அனைத்தும் நம் உறவினர். தாயைப் பழிக்க நாம் அனுமதியோம். அதே சமயம் தாயைப் போற்ற நாம் உறவினரை தூற்றவோ பழிக்கவோ அல்லது தடுக்கவோ அவசியமில்லை

Unknown said...

//தாய்மொழியே கல்வி மொழியாக இருக்கவேண்டும் என்று உங்கள் காந்தி சொல்லியிருக்கிறாரே!//

அது யாருங்க அது "உங்கள்?":-)))

//தாய் மொழி அலுவல் மொழியாக இருக்கக் கூடாதா என்ன?//

இந்தியாவோட தாய்மொழி எதுங்க?

//எனய்யா, ஆங்கிலத்தை திணிக்கிறீர்கள்.//

இந்தி திணிப்பை எதிர்க்க கேடயம் ஆங்கிலம்னு அண்ணாதுரை சொல்லிருக்காருங்க

Unknown said...

//தமிழ்ப்பற்றிற்கும் இந்தி படிப்பதற்கும் எந்த சம்பந்தமில்லை என்பதை ஒப்பு கொள்வீர்கள் என நம்புகிறேன். //


ஆம் நக்கீரன்.தமிழ்பற்று தமிழ்வெறியாக மாறக்கூடாது.அதே சமயம் மொழியையும் விட்டுக்கொடுக்கக்கூடாது.

தாய் மொழியை உயிரை கொடுத்தேனும் வளர்க்க வேண்டும்.அதே சமயம் பல மொழிகளை,பல கலைகளை கற்க வேண்டும்.திணிப்பு என்பதை என்றும் தவிர்க்க வேண்டும்.

கருத்து செறிவான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.இந்த பதிவில் வரும் பல பின்னூட்டங்கள் பதிவை விட அழகிய கருத்தை தாங்கி வருகின்றன.அதில் உங்களுடயதும் ஒன்று

நன்றி நக்கீரன்

Unknown said...

//அதே போல இந்தி பேசும் மாநிலத்தில் இருந்தால் இந்தி சரியாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறலாமா? //

"செய்வன திருந்தச் செய்" என்பது தமிழ் மூதுரை

ஜெயக்குமார் said...

//மராத்தி,குஜராத்தி,பன்சாபி,ராஜஸ்தானி,போஜ்புரி போன்ற மொழிகளில் திரைப்படத் துறை நசிந்து அழிந்து விட்டது.கர்நாடகாவில் கூட இப்போது அது நடக்கத் துவங்கி விட்டது.//

ஆந்திரா எப்படி?. அங்கும் சினிமா அழிந்து விட்டதா?.

வேறு மொழி கற்பதால் தாய்மொழியை மறப்பவன் பெற்ற தாயை மறப்பவன் போன்றவன் தான். மற்றபடி இந்தியை ஒரு மொழியாக தெரிந்து வைத்திருப்பது ஒரு தகுதிதான். நம் நாட்டில் இந்தி எதிர்ப்பு இருந்தாலும் தாய்மொழி வளர்ப்பு என்பது பெரிய அளவில் இல்லை. அதனால் தான் நம்மில் பெரும்பாலானோர் தமிங்லீஸ் பேசுகிறோம்.

தமிழை கட்டாயமாக்கியது கூட கருணாநிதி தனது 5-ஆவது ஆட்சிகாலத்தில் தான் கொண்டுவந்துள்ளார். ஆதாவது தனி மெஜாரிட்டி கிடைக்காத போது.

Unknown said...

அன்பின் ஜெயகுமார்

ஆந்திராவில் உள்ள கிராமப்பகுதிகளில் இந்தி தெரியாததால் அங்கு அவ்வளவாக பாதிப்பு இல்லை.ஆனால் விரைவில் அங்கும் கர்நாடகா நிலைமை உருவாகிவிடலாம்.

இந்தியை ஒரு மொழியாக கற்பதை நான் எதிர்க்கவில்லை.ஆனால் அதை திணித்தலையே நான் எதிர்க்கிறேன்

//தமிழை கட்டாயமாக்கியது கூட கருணாநிதி தனது 5-ஆவது ஆட்சிகாலத்தில் தான் கொண்டுவந்துள்ளார். ஆதாவது தனி மெஜாரிட்டி கிடைக்காத போது.//

இதனால் பெரிதாக அவருக்கு ஓட்டு கிடைக்காது ஜெயகுமார்.அரசியல் மேடைகளில் சொல்லி வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்லலாம்.அவ்வலவுதான்.
நன்றி