Monday, January 30, 2006

ராமாயணம் படிக்கும் அபு சலேம்

சிறையில் இருக்கும் தீவிரவாதி அபுசலேம் ராமாயணம் படிக்க துவங்கிவிட்டான்.அவனது வக்கீல் அசோக் சரோகியிடம் ராமாயணம் மற்றும் திருக்குரான் புத்தகங்களை வாங்கித்தர சொல்லியிருக்கிறான்.அவரும் வாங்கிக்கொண்டு ஜனவரி 29ம் தேதி அவனை பார்க்க சிறைக்கு போயிருக்கிறார். போனபோது அபுசலேம் தியானத்தில் ஈடுபட்டு "ஓம்" என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தானாம். ராமாயணத்தின் மீது திடீர் பற்று ஏன் என்று கேட்டதற்கு "வால்மிகி முனிவர் திருடனாய் இருந்து மனம் மாறியதுபோல் தானும் மனம் மாற விரும்புவதாக" சொல்லியிருக்கிறான். அவன் வக்கீல் சரோகி, அபுசலேம் தன் பாவங்களை போக்கிக் கொள்ள வால்மீகியின் அனுபவத்தை முன்னுதாரணமாக கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார். மாதாஜி மோனிகா பேடியுடன் சேர்ந்து ஆசிரமம் எதாவது அமைக்க ஐடியாவோ என்னவோ?சொல்ல முடியாது.கலிகாலம்.என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். http://www.hindu.com/thehindu/holnus/002200601291258.htm

6 comments:

Unknown said...

உண்மைதான் ராகவன்,

Introspection ஒரு மனிதனை சிந்திக்க வைக்கும்.மாற்றும்

G.Ragavan said...

ஏசு சுரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்

தருமி said...

நம்புறவுங்க நம்புங்கப்பா........

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. நீங்க நம்பலையா? நானும் தான் :)

Unknown said...

நானும் தான் நம்பலை.ஆனா சொல்ல முடியாது.5 வருஷமா ஜெயில்ல இருந்திருக்கான் அபுசலேம்.மனசு நிஜமாவே மறியிருந்தாலும் இருக்கலாம்

Unknown said...

Thanks ashlyn,
Yes I will write more on buffet.I will post next article on him on thursday or friday

thanks
selvan