Wednesday, January 25, 2006

தீதும் நன்றும் பிறர் தர வாரா

சீனாவில் ஒரு கிராமத்தில் ஒரு இளம்பெண் கல்யாணம் ஆகாமலேயே கர்ப்பமாகி விட்டாள்.அவள் காதலன் வெளியூர் போய் விட்டான்.பயம் அவளை ஆட்டிப் படைத்தது.அவள் வீட்டில் விஷயம் தெரிந்ததும் பூகம்பமே வெடித்தது. பயந்து போய் அவள் அந்த ஊர் மரத்தடியில் இருந்த பாகியான் எனும் துறவி மேல் பழி போட்டு விட்டாள்.அவள் அப்பாவும் அண்ணனும் பாகியானிடம் சண்டைக்கு போனார்கள்.உலகத்தில் இருந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி அவரை திட்டி தீர்த்தார்கள். பாகியான் ஒன்றும் பேசவில்லை.அவர்கள் திட்டி முடித்ததும் 'அப்படியா விஷயம்?" என்று மட்டும் சொன்னார்.அது அவர்களுக்கு மேலும் கோபமூட்டியது.மறுபடி திட்டி தீர்த்துவிட்டு வீட்டுக்கு போய் விட்டார்கள். சில மாதம் கழித்து அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.அவமானமடைந்த பெண்ணின் தகப்பனார் குழந்தையை கொண்டு போய் பாகியானிடமே கொடுத்தார்."உன் குழந்தை.நீயே வளர்த்து கொள்" என்று சாபம் இட்டுவிட்டு மண்ணை வாரி தூற்றினார். இப்போதும் பாகியான் எதுவும் சொல்லவில்லை."அப்படியா விஷயம்" என்று சொல்லி குழந்தையை வாங்கிக் கொண்டார்.அந்த குழந்தையை தான் பெற்ற குழந்தை போல வளர்த்தும் வந்தார். இந்த கதை ஊர் முழுக்க தெரிந்து எல்லாரும் பாகியானை திட்ட துவங்கி விட்டார்கள்.சிறுவர்கள் கூட அவரை கிண்டலடித்தனர்.அவர் அதை ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. 1 வருடம் கழித்து காதலன் ஊர் திரும்பினான்.அந்த பெண்ணின் தகப்பனை சந்தித்து நடந்ததை சொன்னான்.பெண்ணை எல்லாரும் சேர்ந்து திட்டினார்கள்.பாகியான் மீது பழி போட்டதை அவள் ஒத்துக்கொண்டாள். தயங்கி தயங்கி எல்லாரும் பாகியானிடம் போனார்கள்.மன்னிப்பு கேட்டார்கள்.குழந்தையை தர சொல்லி கேட்டார்கள்.'அப்படியா விஷயம்' என்றார் பாகியான்.குழந்தையை கொடுத்துவிட்டார். எல்லாரும் தலை குனிந்து கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள். This is a zen story

11 comments:

Ashlyn said...

Hi Selvan,
Nice story..Interesting to read. So what is the moral of the story? Just don't talk much? Or keep it down even when everyone blames you? Wouldn't it look like hushing up? Would it work for a family man?

Unknown said...

Thanks ashlyn,

The intended moral of the story was

1.Harm will befall even great men like saints

2.Good and bad both should be treated equally.

3.Free yourself from attachments like the saint did.If you did you so no one can harm you.

4.Your happiness doesnt depend upon how others behave.It depends upon your mental state.If your mind doesnt get affected by what happens around you, you will always be happy

நிலா said...

Interesting. My story Poojyan's theme is exactly this:

Your happiness doesnt depend upon how others behave.It depends upon your mental state.If your mind doesnt get affected by what happens around you, you will always be happy


story is here, in case u r interested:

http://nilaraj.blogspot.com/2006/01/blog-post_19.html

Ashlyn said...

I agree with all of those...but in this situation, how should a family man behave? He definitely can't let in on the baby. His whole life will be ruined..I don't think it is easy, if not possible, for a common person to attain a saint's state of mind. I think you are saying wherever possible follow this..am i right?

Unknown said...

Thanks ashlyn, nila

Ashlyn,
In geetha karma yoga is mentioned by krishna.If we follow that even a family man can be disattached to the life.Krishna says to do our duty.So even though we remain un attached,we can do our duty and lead a family mans life.King janak is a great example for this.

Thanks for the story nila.Will read it.

thanks
selvan

Unknown said...

Am away till evening.Will post all pending comments in evening.

regards
selvan

Ashlyn said...

Well said.

குமரன் (Kumaran) said...

Mr. Treasurer.

கலக்குறீங்க. நீங்க சொன்ன கதையை ஏற்கனவே கேட்டுருக்கேன். அந்தக் கதையை விட அதுக்கு நீங்க பட்டியல் போட்ட நீதிகள் வெகு அருமை. தொடருங்கள்.

தமிழ்மணத்தில் பதிய ஆரம்பித்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

உங்கள் உண்மை முகத்தைக் காட்டாமல் ஏன் வேறு படங்களைப் போடுகிறீர்கள்? உங்கள் பெயர் என்ன?

Unknown said...

மிக்க நன்றி குமரன்,

என் முகத்தை எனக்கே பார்க்க பிடிக்காது.பிறகு ஏன் அதை போட்டு மற்றவர்களை பயமுறுத்த வேண்டும்?பெருமாள் படத்தை பார்த்தால் புண்ணியமாவது சேரும்.

அன்புடன்
செல்வன்

Unknown said...

Dear nila,

That story was great.I remember reading steve covey's 7 habits for highly effective people.In that the first habit is '[being procative' which is the exact same moral of the story