Saturday, January 14, 2006
பறக்கும் கட்டாரி
The house of flying daggers
கதை பிண்ணனி:
சீனாவில் 9ம் நூற்றாண்டில் கொடுங்கோல் அரசனை வீழ்த்த பறக்கும் கட்டாரி என்ற புரட்சி அமைப்பு துவங்கப்படுகிறது.அந்த அமைப்பின் தலைவன் அரசுப்படைகளால் கொல்லபட்டதும் புது தலைவன் தேர்ந்தெடுக்கபடுகிறான்.அந்த தலைவன் யார் என்று யாருக்கும் தெரியாது.அந்த தலைவனை கொல்ல தளபதி திட்டம் தீட்டுகிறான்.கதை:கதை ஒரு நடன விடுதியில் துவங்குகிறது.பேரழகான ஒரு குருட்டு நடன பெண்ணை கற்பழிக்க ஒரு அரசு அதிகாரி முயல்கிறான்.அந்த அதிகாரியையும் குருட்டு பெண்ணையும் காவலர்கள் கைது செய்கின்றனர்.நடன விடுதி தலைவி குருட்டு பெண்ணை விட்டு விட சொல்லி மன்றாடுகிறார்.அந்த பெண்ணின் நடனத்தை பற்றி கேள்விப்பட்டிருந்த காவலர் தலைவன் அவள் தான் வைக்கும் நடனப்போட்டியில் வென்றால் விட்டுவிடுவதாக சொல்கிறான்.நடனப்போட்டி துவங்குகிறது.குருட்டுபெண்ணை சுற்றி 100 முரசுகள்.அதிகாரி கடலை கொட்டைகளை எந்த முரசு மீது வீசுகிறான் என்பதை அந்த பெண் கண்டுபிடிக்கவேண்டும்.நடனமாடியபடியே அவள் அற்புதமாக அதை கண்டுபிடிக்கிறாள்.இந்த முரசு நடனக்காட்சி மிக அற்புதமாக உள்ளது.பாடல் மிக இனிமை.பாடல் முடிந்ததும் குருட்டுப்பெண் அந்த காவலர் தலைவனை கொல்ல முயல்கிறாள்.கைது செய்யப்படுகிறாள்.பிறகு தான் தெரிகிறது அவள் அந்த பறக்கும் கட்டாரியின் முன்னாள் தலைவனின் மகள் என்று.அவளை என்ன செய்வது என்று அரசு ஆலோசிக்கிறது.அவளை தப்பவிட்டால் இப்பொதைய தலைவனுடன் போய் சேர்ந்துகொள்வாள்,அப்போது அனைவரையும் பிடித்துவிடலாம் என்று திட்டம் தீட்டப்படுகிறது.அவளை தப்பிக்க வைக்க ஒரு நாணயமாண வீரன் தேர்ந்தெடுக்கபடுகிறான்.காவலர் தலைவன் ஒரு சிறு படையுடன் அவர்களை பின் தொடர்கிறான்.காட்டில் அந்த வீரனும் குருட்டு பெண்ணும் தப்பிக்கிறார்கள்.அந்த வீரன் மீது அவளுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக அடிக்கடி அரசு படையினர் அவர்களுடன் மோதுகிறார்கள்.வீரன் அவளை காப்பாற்றுகிறான்.காதல் மலர்கிறது.இறுதியில் முட்டாள்தனமான ஒரு அரசு அதிகாரி நிஜமாகவே அவர்களை கொல்ல உத்தரவிடுகிறான்.மூங்கில் காட்டில் அற்புதமான சண்டை நடக்கிறது.இந்த சண்டைக்காட்ச்சி படம் பிடிக்கபட்ட விதம் மிக அற்புதம்.அவர்கள் இருவரும் கொல்லபடவிருந்த தருணத்தில் பறக்கும் கட்டாரி படையினர் அவர்களை காப்பாற்றுகிறார்கள்.பிறகு அதிரவைக்கும் உண்மைகள் தெரிகின்றன.அந்த பெண் குருடு இல்லை.அவள் அந்த முன்னாள் தலைவனின் மகளும் இல்லை.பின் தொடர்ந்து வந்த காவலர் தலைவன் பறக்கும் கட்டாரி அமைப்பை சேர்ந்தவன்.இந்த பெண்ணின் காதலனான வீரன் கைது செய்யபடுகிறான்.அவனை கொல்ல அந்த குருட்டுபெண்ணுக்கு உத்தரவு தரப்படுகிறது.காட்டுக்குள் அவனை கட்டி இழுத்துகொண்டு அவள் செல்கிறாள்.தனது காதலனை அவள் கொல்வாளா மாட்டாளா என்பதை வேவு பார்க்க அவளை ஒருதலையாக காதலிக்கும் அந்த காவலர் தலைவனும் செல்கிறான்.அரசுபடைகள் வேறு பறக்கும் கட்டாரி அமைப்பினரை நெருங்குகின்றன.அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் கிளைமேக்ஸ்இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி கல்நெஞர்களையும் கண்ணீர் விட வைக்கும் என்பது உறுதி.சீனாவின் காடுகளை படமாக்கிய விதமும்,நடனக்காட்ச்சிகளும்,கதைஅமைப்பும்,சண்டைக்காட்ச்சிகளும்,கிளைமேக்ஸும் இப்படத்தின் சிறப்பம்சங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment