Saturday, January 14, 2006
மனோகரா
பெண்ணுரிமையை வலியுறுத்தும் புரட்சி படம்.புருஷோத்தம ராஜன் எனும் உத்தம புருஷனை அவன் மனைவி பத்மாவதி எனும் புரட்சி வீராங்கனை எப்படி திருத்துகிறார் என்பதை சொல்லும் படம்.வைப்பாட்டி பேச்சை கேட்டுகொண்டு கணவன் தனது அன்பு மகன் மனோகரனை கொல்ல உத்தரவு இடுகிறான்.மனோகரன் பொங்கி எழுகிறான்.ஆனால் பத்மாவதி அம்மையார் அவனை தடுத்து நிறுத்தி அவன் சாக வேண்டும் என்று உத்தரவு போடுகிறார்.ஏன்?வைப்பாட்டி மனம் குளிர்ந்தால் தானே கணவன் மனம் குளிரும்?அது தானே பதிவிரதா தர்மம்?
மருமகள் தாலி அறுந்து போகுமே என்ற கவலை மாமியாருக்கு இல்லை.தனது புருஷன் மனம் குளிர வேண்டும் என்ற பதிவிரதா தர்மம் அவரை ஆட்டிப் படைக்கிறது.வசந்தசேனை தனது பேரனை கொல்ல முயலும் போதும் பத்மாவதி அம்மையார் பொறுமை தான் காக்கிறார்.தனது மகனை கட்டி வைத்து கொள்ளப் போகும்போதும் அவர் பொறுமை தான் காக்கிறார்.மருமகளை சிறையில் அடைத்தபோதும் பொறுமை காக்கிறார்.ஆனால் தனது கணவனை கொல்லப் போகிறார்கள் என்பது தெரிந்ததும் அவர் எரிமலையாகிறார்."பொறுத்தது போதும்.பொங்கி எழு" என்று மகனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.மனோகரன் பொங்கி எழுகிறான்.
புருஷோத்தம ராஜன் மனம் மாறுவது எப்படி?அவர் மட்டும் வைப்பாட்டி வைத்திருப்பாராம்.ஆனால் தன் வைப்பாட்டி இன்னொரு வைப்பாட்டன் வைத்திருப்பதை கண்டவுடன் அவர் மனம் மாறிவிடுவாராம்."சி.சீ" என்று வெறுத்து விடுவாராம்.உண்மையிலேயே புருஷர்களில் உத்தமர் தான் இந்த புருஷோத்தம ராஜன்.புரட்சிபெண்கள் அனைவரும் பார்க்கவேண்டிய காவியம் தான் மனோகரா
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
:-) இந்தப் படத்துக்கு வசனம் எழுதுனது யாருங்கோ?
என்னை அடிவாங்க வைக்காமல் ஓய்வதில்லை என்று முடிவு கட்டிவிட்டீர்கள் போல
Post a Comment