Saturday, January 14, 2006
மீண்டும் பறக்கும் கட்டாரி
இப்படத்தின் சிறப்புகள்நடன விடுதியில் அழகிகள் ஆடும் அந்த நடனம் மனதை கொள்ளை கொள்கிறது.அடுத்ததாக குருட்டுப்பெண் ஆடும் நடனம் மிக அற்புதம்.இது எல்லாவற்றையும் தூக்கி அடிக்கிறது முரசு நடனம்.நடனத்தின் முடிவில் காவலர் தலைவனை கொல்ல தனது உடையையே ஆயுதமாக்கி போரிடுகிறாள் குருட்டுப்பெண்.தனது துப்பட்டாவில் வாளேந்தி போரிடும் காட்சிக்கு ஒரு சபாஷ்.சாண்டில்யனின் கதைகளில் கோதண்டம் என்று ஒரு சித்ரவதை கருவி காட்டப்படும்.இந்த குருட்டுபெண்ணை அதுபோன்ற சித்ரவதை கருவி ஒன்றில் சித்ரவதை செய்யப் போவதாக காட்டுவார்கள்.
குருட்டுபெண்ணை பற்றி சொல்லாவிட்டால் படம் பார்த்ததே வீண்.முகத்தில் அப்படி ஒரு அழகு நிரம்பிய குழந்தைத்தனம்.சண்டைக் காட்சிகளில் சீற்றம்.இந்தப் பெண்ணா இப்படி சண்டை போடுகிறார் என்று அதிசயிக்க வைக்கிறார்.சண்டைக் காட்சிகள் மனதை கொள்ளை கொள்ள வைக்கின்றன.
படத்தின் லொகேஷனை எந்த மகானுபாவன் தீர்மனித்தாரோ?வாழ்க அவர்.கவிதை மயமான லொகேஷன்கள்.புல்வெளியில் நடக்கும் சண்டை பிரமாதம் என்றால் மூங்கில் காட்டில் மூங்கில்களை ஆயுதமாக்கி நடக்கும் போர் பிரமிப்பை ஊட்டுகிறது.இறுதியில் பனிப்பொழிவில் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை காவியம் என்றே சொல்லலாம்.
படத்தின் முடிவின் போது கண்ணிர் விட்டு அழாதவரே திரையரங்கில் இல்லை எனலாம்.கடமை உணர்வில் தவறாத மூவரிடையே காதல் குறுக்கிட்டு சித்து விளையாட்டு நடத்துவதை கிலைமேக்ஸ் காட்சி அற்புதமாக சித்தரிக்கிறது.காதலனை கொல்ல ஆணையிடப்பட்ட காதலி.தான் ஒருதலையாக காதலித்த பெண் தனது உயிர் நண்பனை காதலிப்பதை அறியும் காவல் படை தலைவன்,சீன அரசுக்கு விசுவசமாக இருக்கும் வீரன் --இந்த மூவருக்கிடயே நடக்கும் மனப்போர் தான் கிலைமேக்ஸ்.,காதல் Vs கடமை உணர்வு, காதல் vs நட்பு என மோதல் நடக்கிறது.இறுதியில் கடமை,தேசம் அத்தனையையும் தாண்டி காதலும்,நட்பும் வெல்கிறது..ஆனால்..
படத்தின் முடிவு சிலருக்கு புரியாமல் போகலாம்.ஆனால் நான் புரிந்து கொண்டது இதைத் தான்.தேசம்,அரசு,போர்,சூழ்ச்சி இவை வரும் போகும்.அடிப்படை மனித உணர்வுகளான காதலும்,நட்பும் இவை அத்தனையும் தாண்டி நிற்கும்.இந்த படம் இரு நண்பர்களின் கதை.ஒரு அழகிய காதல் ஜோடியின் கதை.சீனம்,கட்டாரி இவை வெறும் காட்சி அமைப்புகளே.அந்த சீன அரசு என்ன ஆனது?அந்த பறக்கும் கட்டாரி அமைப்பினர் என்ன ஆனார்கள் என்பதை பற்றி யாருக்கு என்ன அக்கரை?அரசுகள் வரும்,போகும்...காதல் நட்பு இவை என்றும் நிலைத்து நிற்கும்.காதலுக்கு ஒரு கோட்டையே கட்டி வைத்துள்ளார்கள்.சீனக் கலாச்சாரத்தை அற்புதமாக காட்டியுள்ளார்கள்.படத்தை பார்க்கும் யாரும் சீனாவுக்கு ஒருமுறை நிச்சயம் செல்ல ஆசைப்படுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment