Monday, January 30, 2006
"நான் ஏன் பிறந்தேன்?"--குரங்கு கேள்வி
டக்ள்ஸ் ஆதாம் ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதினார்.அதில் மனிதர்கள் இறுதி விடையை கன்டுபிடிக்க ஒரு அதி அற்புத க்ம்ப்யூட்டரை தயார் செய்கிறார்கள்.கோடிகணக்கான டாலர் செலவில் செய்யபட்ட அந்த அறிவியல் அற்புதத்திடம் "வாழ்வின்,ப்ரபஞ்ஜத்தின் மற்றும் அனைத்துக்குமான இறுதி விடையை கண்டுபிடிக்க சொல்கிறார்கள்.
இது என்ன சாதாரணமாக நடக்கக்கூடியதா?ஆனால் அந்த கணிப்பொறியும் சாதாரணமானது அல்ல.அது விடையை தேட தொடங்கியது.இது வரை எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ,என்ன என்ன பதிவு நடந்ததோ அத்தனயயும் ஆய்வு செய்தது.வருடஙகள் உருன்டோடின,நூற்றாண்டுகள் கடந்தன.மனித இனம் பொறுமையாக காத்திருந்தது.
கம்ப்யூட்டரை இயக்க கோடி கோடியாய் பணம் செலவானது.நூற்றான்டுகள் ஆயிரம் ஆண்டுகளாகின,லட்சம் ஆண்டுகளாகின.இறுதியில் 70 லட்ச்சம் ஆண்டுகளுக்கு பிறகு பதில் வரப்போகும் தேதி வந்தது.மனித இனம் ஆவலோடு கூடி நின்றது. இறுதி பதில் வந்தது "42".
அவ்வளவு தான்.வேறு ஒன்றும் கம்ப்யுட்டர் சொல்லவில்லை.
"42ஆ?அப்படி என்றால் என்ன?" என்று கூவினார் ஆராயிச்சியாளர்.
"இறுதி விடை" என்று பதில் அளித்தது கம்ப்யூட்டர்.
அனைவரும் தலையில் கை வைத்துகொண்டு உட்கார்ந்துவிட்டனர். 42 என்பதை வைத்துகொன்டு என்ன செய்வது என்றே யாருக்கும் தெரியவில்லை.ஆனால் அது தான் இறுதி விடை என்று கம்ப்யூட்டர் சத்தியம் செய்தது.
மெதுவாக ஒருவர் கேள்வி எழுப்பினார்."ஆமாம் ,வாழ்வின் இறுதி விடை,இறுதி விடை என்றீர்களே,அதற்கான கேள்வி என்ன" என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை.கம்ப்யுட்டருக்கும் தெரியவில்லை.பதில் கையில் உள்ளது.ஆனால் கேள்வி என்ன?
----------------------------------------
இம்மாதிரி நிறைய 42கள் உலகில் உள்ளன.காந்தி பக்தர்கள் சொல்லும் 42 அகிம்சை என்பதாகும்.சாமி பக்தர்கள் சொல்லும் 42 அவர்கள் புனித நூலாகும்.உலகில் உள்ள எல்லாக் கேள்விக்கும் பதில் அந்த புனித நூலில் உள்ளது என்று அவர்கள் சத்தியமே செய்வார்கள்."இதெல்லாம் பொய்.உண்மையான பதில் மார்க்ஸ் தந்த டாஸ் காப்பிடலில் இருக்கிறது" என்று கம்ம்யூனிஸ்டுகள் சத்தியம் செய்வார்கள்.உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பதில் டாஸ்காப்பிடலில் இருக்கிறதாம்.அது அவர்கள் தரும் 42.
இம்மாதிரி 42களை கண்டு நீட்ச்சே சிரித்தார்.உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்பும் ஐடியாவே அவருக்கு பிடிக்கவில்லை.அப்படி எந்த உண்மையும் நாம் கண்டுபிடிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கவில்லை என்று சொன்னார்.
காட்டில் இருக்கும் குரங்கு "நான் ஏன் பிறந்தேன்?" என்று கேள்வி எழுப்பிக்கொண்டு உண்மையை கண்டுபிடிக்கிறேன் என கிளம்பினால் அது கண்டுணரப்போகும் பதில் யாது?"நான் யார்?" என்று குரங்கு கேட்டால் "நீ குரங்கு" என்பது தான் பதில்."குரங்கு 2000 வருடம் சிந்தித்தாலும் பதில் இதுதான்."நான் ஏன் பிறந்தேன்?" என்று குரங்கு கேட்டால் "பழம் தின்ன பிறந்தாய்" என்பது தான் பதில்."குரங்குலகை உய்விக்க பிறந்தாய்" என்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். "42" என்றும் சொல்லலாம்.இம்மாதிரி கேள்விகளுக்கு கிடைக்கும் எந்த பதிலும் தவறானவைதான்.
குரங்கினமான மனிதனும் இம்மாதிரி கேள்விகளை கேட்டுக்கொண்டு திரிந்தால் இது தான் பதில்.
குரங்கு ஏன் பிறந்தது?அது எதை சாதிக்கவும் பிறக்கவில்லை.அது சும்மா பிறந்தது.குரங்கினத்தை சேர்ந்த மனிதன் எனும் குரங்கும் சும்மா தான் பிறந்தான்.இருக்கும் வரை ஆடிவிட்டு போய் சேர வேண்டியதுதான்.
குரங்கிற்கு எதற்கு வீண் கேள்விகள்?
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Forgot to add-Name of book written by douglas adams is "The Hitchhiker's Guide to the Galaxy,"
இன்னொரு டக்ளஸ் ஆடம்ஸ் விசிறியா??? நானுந்தான்.. 42-ஐ மறக்கமுடியுமா? வாழ்க வளர்க.
படமும் பரவாயில்ல.. புஸ்தகம் அளவுக்கு இல்லேனாலும் சுமாரா எடுத்திருந்தாங்க.
//குரங்கினத்தை சேர்ந்த மனிதன் எனும் குரங்கும் சும்மா தான் பிறந்தான்.இருக்கும் வரை ஆடிவிட்டு போய் சேர வேண்டியதுதான்.
//
மிச்ச தத்துபித்துவங்கள்லாம் மன்றக்கொள்கைக்கு எதிர்த்தாப்புல போற மாதிரி போற மாதிரி இருக்கே!
நன்றி ராமநாதன்,
42 படம் பார்க்கவில்லை.புத்தகத்தோடு சரி.42 பத்தி இன்னொரு புத்தகமும் வந்ததாக ஞாபகம்.அதில் கேள்வி ஒருவனுக்கு தெரியும்.அதற்கான பதில் 42 தான் என்று சத்தியமே செய்வான்.ஆனால் கேள்வியை கடைசி வரை சொல்ல மாட்டான்.42 விட ரவுசாக இருக்கும்.பெயர் மறந்துடுச்சு.
மன்ற கொள்கைக்கு எதிராக நடக்கவில்லை.என்னோட மன்றத்தோட கொள்கை தனி கொள்கை.ஆத்திகமும் நாத்திகமும் கலந்த கொள்கை தான் எமது மன்ற கொள்கை.ஐன்ஸ்டீன் நம்புன மாதிரி சாமி வேற,மதம் வேற அப்படின்னு பிரிச்சு வெச்சிருக்கேன்.
அருமையான கட்டுரை. உங்களுக்கு நான் சமீபத்தில் படித்த கடவுளின் துகள்கள் என்ற புத்தகம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். www.andrewsmcmeel.com/godsdebris/
நன்றி சுப்ரா,
அந்த புத்தகத்தை படித்து பார்க்கிறேன்.
Post a Comment