Sunday, January 29, 2006
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்று என்ன புத்தாண்டு துவங்குகிறது என்று சண்டைக்கு வராதீர்கள்.இன்று சீனப்புத்தாண்டு.சீனர்கள் ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒவ்வொரு மிருகத்தின் பெயரை வைத்திருப்பார்கள்.இந்த வருஷம் நாய் வருஷம்.
சீனர்களின் பஞ்சபூதங்கள் நீர்,நிலம்,நெருப்பு,காற்று,மரமாகும்.2006 நெருப்பு ஆண்டாம்.இந்த வருஷம் முழுக்க உலகெங்கும் சண்டையாகவே இருக்குமாம்.எந்த வருஷம் தான் சண்டையில்லாம இருந்துச்சுங்கறீங்களா?அதுவும் சரிதான்.
இந்த வருஷம் உங்களுக்கு லக் அடிக்கணும்ணா "குங் எய் பாட் சோய்" (Kung Hei Fat Choy) அப்படின்னு எல்லார் கிட்டயும் சொல்லணுமாம்.டிராகனுக்கும் நாய்க்கும் ஆகாதுங்கறதால டிராகன் வருஷத்துல பொறந்தவங்களுக்கு இது சோதனை வருஷமாம்.டிராகன் வருஷம் என்பது 1988, 1976, 1964, 1952 ஆகும்.
டிராகன்கள் தப்பிக்கணும்னா புத்திசாலித்தனமா இருக்கணுமாம்.கோயிலுக்கு போய் சாமி கும்புடணுமாம்.எங்கே உடனே கிளம்பிட்டிங்க?கோயிலுக்கா?நல்ல கதை.அவங்க சொல்ற கோயில் புத்தர் கோயில்.
சீன காலண்டர் 3000 வருஷம் பழசு.இப்படி மிருகங்களோட பேரை வருஷத்துக்கு வெக்கற பழக்கம் எப்படி வந்துச்சுன்னு ஒரு சீனப்புராணம் சொல்லுது.
சீன காலண்டர் 12 வருஷ சைக்கிளாகும்.முதல் வருஷத்துக்கு எந்த மிருகத்தோட பேர வெக்கறதுன்னு இந்த 12 மிருகங்களும் சண்டை போட்டுகிச்சாம்.எல்லா சாமியும் ஒண்ணு கூடி ஒரு ரன்னிங் ரேஸ் வெச்சாங்களாம்.ஜெயிக்கற மிருகத்தோட பேர் தான் முதல் வருஷத்துக்குன்னு எல்லா சாமிகளும் சொன்னாங்களாம்.
ரேஸ்ல காளை முதல்ல ஓடிச்சாம்.எலி நைசா காளை முதுகுல ஏறிடுச்சாம்.காளை வெற்றிக்கோடு கிட்ட வர்ரப்ப எலி ஜங்குன்னு முன்னாடி குதிச்சு பர்ஸ்ட் பிரைஸ் வாங்கிடுச்சாம்.பன்றியார் கடைசியா வந்தாராம்.அதனால முதல் வருஷம் எலி வருஷம்,ரெண்டாவது வருஷம் காளை வருஷம்,கடைசி வருஷம் பன்றி வருஷம்.
நாய் வருஷத்துல பொறந்தவங்களோட குணாதிசியம் என்னன்னா நேர்மை,விசுவாசம்,அநீதியை எதிர்த்தால்,சுதந்திரத்துக்காக போராடுதல்,சம உரிமைக்கு போராடுதல் ஆகியனவாகும்.
நாய் வருஷத்துல பொறந்தவங்க குதிரை,டிராகன் வருஷத்துல பொறந்தவங்களோட சண்டை புடிச்சுட்டே இருப்பாங்களாம்.அண்ணன் புஷ் நாய் வருஷத்துல பொறந்தவராம்.சீன பிரதமர் ஊஜின்டோ,ஜனாதிபதி வென் ஜியாபோ இவங்க ரெண்டு பேரும் குதிரை வருஷமாம்.என்ன நடக்கப்போகுதோன்னு சீன மக்கள் கவலைல இருக்காங்க.
சரி என்ன நடக்குதோ நடக்கட்டும்.உங்க எல்லாருக்கும் என் இனிய Kung Hei Fat Choy.
நன்றி: CNN
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment