Sunday, May 21, 2017

கை கழுவுவோம்

இரண்டாம் உலகபோரை நேசநாடுகள் வெல்ல பல காரணிகள் இருந்தாலும் அதிகம் வெளியே தெரியாத காரணிகள் ராடார் கண்டுபிடிப்பு மற்றும் பெனிசிலின் கண்டுபிடிப்பு

ராடார் கண்டுபிடிக்குமுன் ஜெர்மானிய நீர்மூழ்கிகப்பல்கள் இங்கிலாந்துக்கு வரும் உணவு கப்பல்களை தாக்கி அழித்து கடும் நெருக்கடியை உருவாக்கின. உணவின்றி லண்டன் தவித்த நேரம் ராடார் கண்டுபிடிக்கபட்டு அதன்பின் ஜெர்மானிய நீர்மூழ்கிகப்பல்கள் ஒவ்வொன்றாக sitting duck போல் வேட்டையாடபட்டதால் லண்டன் தப்பியது

இன்னொரு கண்டுபிடிப்பு பென்சிலின்

அப்போது போர் சமயம் வைரஸ், பாக்டிரியா தொற்றால் ஏராளமான வீரர்கள் இறந்துகொண்டிருந்தார்கள். இப்போது கான்சர் எப்படி உயிர்கொல்லியோ அப்போது தொற்றுநோய்கள் அப்படி உயிர்கொல்லியாக இருந்தன.

பெனிசிலின் யதேச்சையாக கண்டுபிடிக்கபட்டு பெருமளவில் உற்பத்தி செய்யபட்டு ஏராளமான அமெரிக்க, நேசநாட்டு வீரர்கள் உயிர் தப்பினார்கள். முதலாம் உலகபோரில் 18% வீரர்கள் மரணம் தொற்றுநொயால் என்கையில் இரண்டாம் உலகபோரில் 1% மரணம் மட்டுமே தொற்றுநோயால் நிகழ்ந்தது

பெனிசிலினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரலாமென முயல்கையில் மருந்து கம்பனியான பைசர் எனும் பன்னாட்டு கம்பனி உரிமையாள்ர் "அதில் எந்த லாபமும் வராது, பயனும் இல்லை" என சொல்லி அதை தயாரிக்க மறுத்தார்.

விதிவசமாக அவரது 16 வயது மகளுக்கு தொற்றூநொய் ஏற்பட்டு பெனிசிலின் கொடுத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் எனும் சூழலில், மருந்தின்றி உயிரை விட்டார்

அதன்பின்னர் பைசர் கம்பனி பெனிசிலின் மருந்தை தயாரித்து பொதுமக்களுக்கு வெளியிட்டது.

இதை எல்லாம் மிஞ்சும் சோகம்:

1846ல் மருத்துவமனையில் அனுமதீக்கபடும் பெரும்பாலான கர்ப்பிணிகள் தொற்றுநோயால் உயிரை விட், அதை ஆராய்ந்த இக்னாஸ் செம்மல்வாலிஸ் என்பவர் பிரசவம் பார்க்கும் டாக்டர்கள் க்ளோரின் நீரால் கையை கழுவினால் மரணவிகிதம் குறையுமென கண்டுபிடித்தார்

கிருமிகள் பற்றிய அறிவு அன்று இல்லை. ஆனால் சவப்பரிசோதனை செய்துவிட்டு கையை கழுவாது அதே கையால் பிரசவம் பார்த்ததால் தான் இப்படி மரணங்கள் நிகழ்ந்தன. சவங்களில் இருந்து வரும்  வாச்ம் போக க்ளோரின் நீரால் கையை கழுவினால் போதும் என இக்னாஸ் நினைத்தார். ஆனால் அதில் கிருமிகள் கொல்லபட்டு வியப்பூட்டும் வகையில் மரண விகிதங்கள் குறைந்த்ன

அப்புறம் என்ன?இத்தனை பெரிய கண்டுபிடிப்புக்கு விருதுகளும், பாராட்டும், பரிசும் கிடைத்தது என எதிர்பார்க்கிறீர்களா?

அது தான் இல்லை. மருத்துவர்களால் தான் கர்ப்பிணிகள் உயிர் இழக்கிறார்கள் என்னும் கண்டுபிடிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி அவருக்கு மருத்துவர் லைசென்சே பறிபோனது

அதன்பின்பு விடாமல் தொடர்ந்து தன் கண்டுபிடிப்பை அவர் எல்லாரிடமும் சொல்லிவர, அதன்பின் கடுப்பாகி அவரை பிடித்து பைத்தியகார ஆஸ்பத்திரியில் அடைத்தார்கள்

அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவருடம் "க்ளோரின் போட்டு கையை கழுவி என்னை தொடுங்கள்" என பரிதாபமாக கெஞ்சியிம் கேட்காமல், சிகிச்சை அளித்து அதே தொற்றுநோயில் உயிரிழந்தார் இக்னாஸ்.

அதன்பிப் பல பத்தாண்டுகள் கழித்தே அவரது கண்டுபிடிப்பு உண்மை என ஒப்புகொள்ளபட்டது

இப்போதும் பாத்ரூம் போனபின் நாம் கையை நன்றாக சோப்பு போட்டு கழுவினால் பாதி தொற்றுநோய்கள் ஒழ்ந்துவிடும். குறிப்பாக உணவகங்களில் பணியாற்றுபவர்கள், குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய்மார்கள், ஆயாக்கள் முதலானோர் பாத்ரூம் போகும் ஒவ்வொரு முறையும் சோப்பு போட்டு கை கழுவினால் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படும்.


No comments: