Tuesday, March 21, 2017

நீச்சல்




நீச்சல் பற்றி ஒரு வித்தியாசமான பிபிசி டாக்குமெண்டரி பார்த்தேன்.

பாலூட்டி இனத்தை சார்ந்த அனைத்து உயிரினங்களுக்கும் நீச்சல் தெரியும் என்பது ஒரு நீண்டகால நம்பிக்கை.

இது உண்மையா என எப்படி சோதிப்பது? உலகில் லட்சகணக்கான வகை பாலூட்டிகள் உள்ளன.

அதிலும் பன்றிகள் நீந்தினால் அவை தம் கழுத்தை தாமே துன்டித்துகொள்ளும் எனும் மூடநம்பிக்கையும் இங்கிலாந்தில் இருந்தது. இது குறித்த ஒரு ஆங்கிலபாடலும் உண்டு

Down the river did glide, with wind and with tide,
A pig with vast celerity;
And the Devil looked wise as he saw how the while
It cut its own throat. "There!" quoth he, with a smile,
"Goes England's commercial prosperity.""

---Samuel Taylor Coleridge (1772-1834)

ஆனால் இந்த நம்பிக்கையை தகர்க்கும் ஒரு சம்பவம் நடைபெற்றது

முதல் உலகபோரில் ஜெர்மானிய கப்பலான டிரெஸ்டன் எனும் கப்பலை ப்ரிட்டிஷ் கப்பல் ஒன்று குண்டுவீசி தகர்த்தது. அப்போது கப்பல்களில் உணவுக்கு பன்றிகளை வளர்ப்பார்கள். கப்பலில் இருந்த டிர்பிட்ஸ் எனும் பன்றி ஒன்று கடலில் குதித்து ஒரு மணிநேரம் நீந்தி கிளாஸ்கோ நகரை வந்தடைந்தது. பன்றி கடலில் நிந்துவதை கண்டு அதிர்ச்சியடைந்த இரு ப்ரிட்டிஷ் மாலுமிகள் அதை தம் படகில் ஏற்றி கரைக்கு கொண்டுவந்தார்கள். அதன்பின் அந்த பன்றியை போர்ட்ஸ்மவுத நகரம் கொண்டுபோய் கண்காட்சியில் எல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தி, அதை காப்பாற்றிய மாலுமிக்கே தத்தும் கொடுத்தார்கள். அதன்பின் அந்த பன்றியின் மரபணுவை இங்கிலாந்து பன்றிகளுக்கும் செலுத்தவேண்டும் என முடிவெடுத்து, அதை வைத்து இனப்பெருக்கம் எல்லாம் செய்தார்கள்.

இப்படிப்பட்ட காமடிகூத்துகக்ள் நடக்கவும், அதன்பின் பன்றியே நீந்துகிறது என்றால் வேறு எல்லா பாலூட்டிகளும் நீந்தும் என சொல்லாஅரம்பித்தார்கள்.




(படத்தில்: டிர்பிட்ஸ் பன்றியுடன் ப்ரிட்டிஷ் மாலுமிகள்)

1950 முதல் 1960 வரை பல பாலூட்டிகளை தண்ணீரில் தள்ளிவிட்டு சோதனை நடத்தினார்கள்.

ஆனால் அந்த ஆய்வுகள் எல்லாம் மிருகவதை காரணமாக ஆய்வுநெறிக்கு புறம்பானவை என சொல்லி அவற்றின் ரிசல்டுகள் வெளிவரவில்லை.

அதன்பின் அத்தகைய ஆராய்ச்சிகளுக்கு அனுமதியும் கிடைக்கவில்லை.

ஆனால் அந்த ஆய்வுகளில் பலவற்றில் வித்தியாசமான தகவல்கள் கிட்டின

பாலைவனக்கப்பல் என அழைக்கபடும் ஒட்டகம் நீந்தும் என யாரேனும் கற்பனை கூட செய்வோமா?

ஆனால் ஒட்டகம் ஹாயாக நீரில் நீந்தும் ஆற்றல் கொன்டது. நதி, குளம் என எதாவது இடையே வந்தால் ஒட்டகத்தால் அதை நீந்தி கடக்க முடியும்.

யானைகளாலும் நீந்த முடியும். அலெக்காக ஐம்பது கிமி வரை நீந்தும் ஆற்றல் கொண்டது யானை.

இலங்கைக்கு யானைகள் இந்தியாவிலிருந்து நீந்தித்தான் போயின எனவும் ஒரு தியரி உண்டு. கப்பல்கள் மூலம் கொண்டுபோகபட்டன எனவும் சொல்கிறார்கள்.

பூனைக்கு நீர் என்றாலே பிடிக்காது. ஆனால் அதனாலும் நீந்த முடியும்.

ஆர்மடில்லோ எனப்படும் எறும்புதின்னியை கூட தண்ணீரில் தூக்கி போட்ட்டார்கள். அதுவும் அலேக்காக நீந்தியது.

வவ்வால் கூட பறவை எனினும் பாலூட்டிதான். அதனாலும் இறகுகளை பயன்படுத்தி நீந்த முடிந்தது.

ஆனால் இப்படி பாலூட்டிகளுக்கு நீந்த தெரியும் என வெற்றிகரமாக வந்துகொண்டிருந்த ஆய்வுகள் குரங்கினங்களை ஆராய துவஙியதும் குப்புற கழ்விந்தது

சிம்பன்சி, கொரில்லா போன்ரவற்றை நீரில் போட்டபோது மூழ்கிவிட்டன.

அவை இறந்தவுடன் ஆய்வை இழுத்து மூட சொல்லி உத்தரவு வந்துவிட்டது

ஆக ஏப் வகை பாலூட்டிகளுக்கு தான் நீச்சல் வராது என ஒரு புது தியரி இந்த ஆய்வில் வெளியாக்யுள்ளது

ஆனால் இவற்றுக்கு நீச்சல் இயற்கையாக வராதே ஒழிய இவற்றால் நீச்சலை கற்றுகொள்ள இயலும்.

நீச்சல் கற்றுகொண்டு நீந்தும் சிம்பன்சிகள், கொரில்லாக்கள் உள்ளன

மனிதர்களையும் சும்மா நீரில் தூக்கிபோட்டால் மூழ்கிவிடுவோம். ஆனால் நீச்சல் தெரிந்தால் தப்பிவிடுவோம்.

ஒட்டகசிவிங்கி நீந்துமா?

அதை எப்படி தொட்டியில் போடுவது என்ற பிராக்டிக்கல் பிரச்சனை காரணமாக 1960களில் அதை பரிசோதனை செய்யவில்லை. ஆனால் சமீபத்தில் கம்ப்யூட்டர் மாடல் மூலம் ஒட்டகசிவிங்கியால் நீந்த முடியுமா என பரிசோதனை செய்தார்கள்.

அதில் வியப்பளிக்கும் வகையில் ஒட்டகசிவிங்கியால் நீந்த முடியும். ஆனால் அதுக்கு அது சுத்தமாக பிடிக்காது என கண்டுபிடித்தார்கள். ஏனெனில் அதன்மூக்கில் நீர் உள்ளே போய்விடுமாம்.

ஏன் பாலூட்டிகளுக்கு இப்படி இயற்கையாக நீச்சல் வருகிறது?

இவற்றின் நுரையீரலே காரணம் என்கிறாரள் விஞ்ஞானிகள். அதில் ஏராளமாக மூச்சை தேக்கி வைக்கமுடியும். அத்துடன் இவற்றின் உடலில் கொழுப்பு நிறைய இருப்பதும் இவை நீரில் மிதக்க உதவுகின்றனவாம்.


No comments: