Monday, March 13, 2017

சிங்கம் 3

சிங்கம் 1, சிங்கம் 2 இரண்டு படங்களின் டிவிடியையும் வாங்கி ஒரே டிவிடியில் காப்பி செய்யவும். 6 மணிநேர படம் தயார்

இப்போது படத்தை ஓடவிட்டு பாஸ்ட் பார்வர்ட் செய்யவும். 3 மணிநேர படமாகும்.

டப்பிங் மார்க்கட்டை முன்ன்நிறுத்தி படத்தின் கதைகளனை ஆந்திராவுக்கு நகர்த்தவும். மசாலா பொருட்டு ஸ்ருதிஹாசனை சேர்க்கவும். ரிடையர்மெண்ட் அளிக்கும் பொருட்டு அனுஷ்காவை சேர்க்கவும்

அதான் சிங்கம் 3




சர்,புர்ரென சூரியா காரில் போய்கொண்டே இருக்கிறார், பின்னாடி ஒரு 10 கார்கள். வில்லன்களும் காரில் போய்கொண்டே இருக்கிறார்கள். எல்லாரும் எப்போதும் அவசர, அவசரமாக எதற்கோ எங்கோ போய்கொண்டே இருக்கிறார்கள். சில சமயம் சூரியா வில்லனை துரத்துகிறார், சிலசமயம் வில்லன்கள் அவரை துரத்துகிரார்கள். சிலசமயம் வில்லன்கள் ஸ்ரிதிஹாசனை துரத்துகிறார்கள். சில சமயம் சூரியா அப்படி துரத்துபவர்களை துரத்துகிறார். ஆக படம் முழுக்க யாரோ, யாரையோ துரத்திகொண்டே இருக்கிறார்கள். நடுவே அடிக்கடி அமைச்சர் சரத்பாபு சூரியாவுக்கு போன்செய்து பாராட்டுகிறார்.

எது கிளைமாக்ஸ், எது ஓப்பனிங் சீன், எது இண்டர்வெல் என குழம்பிகொள்ள அவசியமின்றி எல்லா சீனும் கிளைமாக்ஸ் சீன் போல் இருக்கிறது. ஸ்ருதிஹாசனும், அனுஷ்காவும் ஆந்திர படங்களின் சடங்கான இரண்டு ஹீரோயின் எனும் மரபை நிரைவேற்றுகிறார்கள்.

டூயட் காட்சிகளுக்கு பாடல் ஷூட்டிங் செய்யபோன ஆஸ்திரேலியாவில் கூட ஒரு சேஸிங் சீனையும் எடுத்து சேர்த்துள்ளனர்.

பரோட்டா சூரியின் காமடி டிராக்கை காமடி என சொன்னால் குருமா கூட நம்பாது. துலாபாரத்தில் காமடி காட்சிகள் எப்படி அப்ஸ்வரமாக காட்சியளிக்குமோ அப்படித்தான் இதிலும். இந்த படத்துக்கு காமடி, டூயட் எதுவுமே அவசியமில்லை.

படம் முடிந்தது என எழுகையில் சிங்கத்தின் நடை தொடரும் என அறிவிக்கிறார்கள்.


No comments: