வைட்டமின் சி
வைட்டமின் என்பது அதன் கோஃபேக்டர்கள், டிரான்ஸ்போர்ட்டர்கள், என்சைம்கள், கோஎன்சைம்கள் உள்ளிட்ட ஒரு முழுமையான பேக்கேஜாக இருக்கையிலேயே வேலை செய்யும். ஒரு உதாரணத்துக்கு வைட்டமின் சியை எடுத்துகொள்வோம்.
இயற்கையில் நெல்லிக்கனி, ஆரஞ்சு, எலுமிச்சையில் கிடைக்கும் வைட்டமின் சிக்கும் மாத்திரை வடிவில் கிடைக்கும் சிந்தடிக் வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) என்ன வித்தியாசம்?
இயற்கையில் கிடைக்கும் வைட்டமின் சியில் கீழ்காணும் மூலசத்துக்கள் உள்ளன
ascorbinogen
bioflavonoids
rutin
tyrosinase
Factor J
Factor K
Factor P
இதில் பாக்டர் பி ரத்த குழாய்களை வலுவாக்குகிறது
பாக்டர் ஜே ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் ரத்த சிகப்பு செல்களின் சக்தியை அதிகரிக்கிறது
டைரொசினாசே வெள்ளை பிளட் அணுக்களின் சக்தியை அதிகரிக்கிறது
ஆக இது எல்லாம் சேர்ந்தால் தான் வைட்டமின் சி.
இதில் ஒன்று குறைந்தாலும் அது வைட்டமின் சி அல்ல
அஸ்கார்பிக் அமிலம் எனும் பெயரில் கடைகளில் விற்க்கபடும் பொருள் என்ன?
அது எந்த மரத்திலும், செடியிலும், கொடியிலும் விளைவது கிடையாது. இயற்கையில் உள்ள வைட்டமின் சியின் மேலே உள்ள கெமிக்கலின் பெயரே அஸ்கார்பிக் அமிலம். அதை செயற்கையாக பாக்டரியில் உற்பத்தி செய்கிறார்கள். இயற்கை வைட்டமின் சியில் உள்ல என்சைம், கொஎன்சைம், பாக்டர்கள் எதுவும் அதில் கிடையாது. அது வெறும் கெமிக்கல் குப்பை மட்டுமே
அமெரிக்காவில் உற்பத்தி ஆகும் செயற்கை வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்)யில் 90% அளவை உற்பத்தி செய்வது ஹாப்மன் லரோசே எனும் கம்பனி!
இயற்கையான வைட்டமின் சி உடலுக்கு விளைவிக்கும் நன்மைகள் என்ன?
இதயத்தில் உருவாகும் பிளேக்கை (அடைப்பை) தடுக்கும் சக்தி வைட்டமின் சிக்கு உண்டு. அதாவது மோனோசைட் எனும் வெள்ளை ரத்த செல்கள் இதயநாள சுவர்களில் ஒட்டிகொள்ள துவங்கும். இது நடக்கையில் இதயநாள சுவர்கள் விரிந்து கொடுக்கும் இயல்பை இழக்கும். இது மாரடைப்பை வரவழைக்கும்
வெள்ளை ரத்த செல்கள் ஏன் இதயநாளங்களில் ஒட்டிகொள்கிறது? அதற்கு காரணம் அவற்றின் மாலிக்யூல்களில் உண்டாகும் ஒரு சிறு குறையே. அதை வைட்டமின் சி சரி செய்து வெள்ளை ரத்த செல்களுக்கு ஒட்டிகொள்ளூம் சக்தி இல்லாமல் செய்கிறது
கான்சர் வருவதன் முதல்படி செல்களின் டிஎன்.ஏ பாதிக்கபடுவது. இப்படி பாதிக்கபட்ட செல்கள் இன்ஃப்ளமேஷனில் பாதிக்காப்டுகையில் கான்சர் செல்கள் வளர துவங்குகின்றன.இந்த டி என் ஏ டேமேஜை குறைக்கும் சக்தி கொண்டது வைட்டமின் சி
உடல்பயிற்சியால் வரும் ஆக்ஸிடேடிவ் டேமேஜை குறைக்கும் சக்தி கொண்டது வைட்டமின் சி
அல்சரை உருவாக்கும் பாக்டீயாக்களை வயிற்றில் அழிக்கும் சக்தி கொண்டது வைட்டமின் சி
வைட்டமின் சி மிக, மிக முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட். ஆன்டிஆக்சிடன்டுகள் கொழுப்பு ஆக்ஸிஜனால் பாதிக்கபட்டு மாரடைப்பை உருவாக்குவதை தடுக்கும் சக்தி கொண்டவை
வைட்டமின் சியின் இன்னொரு விந்தை என்னவெனில் உடல் க்ளுகோஸையும், வைட்டமின் சியையும் கிட்டத்தட்ட ஒரே வழியில் தான் ப்ராசச் செய்கிறது என்பதே. ஆக உணவில் சுகர் அதிகமாக இருந்தால் உடல் வைட்டமின் சியை விட்டுவிட்டு க்ளுகோஸை புராசஸ் செய்யும். உணவில் சுகர் குறைவாக இருந்தால் உடல் முழு வைட்டமின் சியையும் புராசஸ் செய்யும்
வைட்டமின் சி நிரம்பிய உணவுகள்
ஆரஞ்சு, எலுமிச்சை முதலிய சிட்ரஸ் பழங்கள்:
நெல்லிக்கனி
பெர்ரிகள்
அன்னாசி
உருளைகிழங்கு
கீரைகள்
பிராக்களி
காளிபிளவர்
பப்பாளி
No comments:
Post a Comment