Sunday, June 08, 2014

Fwd: சூரியன்



80% இந்தியர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கபட்டுள்லார்கள் என்ற செய்தியை படித்தேன்.

வெயில் கொளுத்தும் இந்தியாவில் எப்படி இது சாத்தியம் என யோசித்து தேடினேன். விடை கிடைத்தது.

சூரிய வெப்பம் நேரடியாக தோலின் மேல் பட வேண்டும். நிழலில் நிற்க கூடாது. அதிக பரப்பளவில் பட்டால் அதிக வைட்டமின் டி உற்பத்தி ஆகும். வெள்ளைதோல்காரர்கள் சர்ட்டு இல்லாமல் ஆஃப் டிரவுசருடன் 10 நிமிடம் நின்றால் 10,000 யூனிட் வைட்டமின் டி உற்பத்தி செய்வார்கள்.தோல் கருப்பு அதிகமாக, அதிகமாக அதை விட நேரம் அதிகமாகும். மெக்சிகோகாரர்கள் 20 நிமிடம் நிற்கவேண்டும் எனவும் ஆபிரிக்கர்கள் 40 - 45 நிமிடம் நிற்கவேண்டும் எனவும் தகவல் கிடைத்தது.

அதிலும் சூரியன் வானில் 50 டிகிரி+ மேல் இருக்கையில் தான் தோல் வைட்டமின் டியை உற்பத்தி செய்யும். சூரியன் 50 டிகிரிக்கு மேல் இல்லாத சமயம் வெயிலில் நின்றால் வைட்டமின் டி கிடைக்காது. கான்சர் தான் வரும்.

சூரியன் வானில் எத்தனை டிகிரியில் உள்ளது என்பதை கணக்கிடும் கால்குலேட்டர் அமெரிக்க ராணுவதளத்தில் உள்ளது. அதில் சென்று தேடியதில்:

சென்னையில் இன்று காலை 9:10 முதல் மதியம் 2:30 வரை சூரியன் 50+ டிகிரியில் உள்ளது

அதே டிசம்பர் 25 அன்று காலை 11 முதல் 1 வரை மட்டுமே சூரியன் சென்னையில் 50+ டிகிரியில் உள்ளது

சைவ உணவு மற்றும் வெளியே போகும்போதும் புடவை, வேட்டி, சட்டை/பேண்டு அணிந்து கொண்டிருப்பதாலும் உச்சிவெயிலை பெருமளவில் தவிர்ப்பதாலும் குளிர்மாதங்களில் சென்னைக்கும் வைடமின் டி தட்டுபாடு வரும். உச்சிவெயிலில் கிரிக்கட் ஆடுபவர்கள், உடல் உழைப்பு செய்பவர்கள் மட்டுமே தப்ப்ய்வார்கள் என நினைக்கிறேன்.மீன் அதிகம் சாப்பிடும் மலையாளிகளும் சற்று தப்பலாம்.


வைட்டமின் டிக்கும் டய்படிசுக்கும் உள்ள தொடர்பு இன்னமும் முழுக்க புரிந்துகொள்லபடுவது கிடையாது. வைட்டமின் டி உடலில் உள்ள கால்ஷியத்தை ரெகுலேட் செய்வதன் மூலம் பல், எலும்புகள் ஆகியவற்றை வலுபடுத்துவதாக தான் கருதபட்டு வந்தது. ஆனால் கால்ஷியம் ரெகுலேஷன் டயபடிஸ் மேலாண்மைக்கும் உதவும் என்பது தெரிந்தவுடன் டயபடிஸுக்கும் வைட்டமின் டிக்கும் உள்ள தொடர்பு ஆராயபட்டு வரபடுகிறது.

ஆனால் நெருப்பு என்றால் புகையும் என்பதுதானே ஊரின் தன்மை? ஆய்வு முடிவுகள் வருவதற்குள் மேற்கத்தியநாடுகளில் அரசினர் அவசரப்பட்டு "பாலில் வைட்டமின் டி சேர்க்கவேண்டும்" என அறிவித்துவிட்டார்கள். சூரிய வெளிச்சம் மூலம் வைட்டமின் டி கிடைக்கும் என்ற பிரமையில் இருக்கும் கிழக்கத்திய நாடுகள் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் சூரிய வெளிச்சத்தை நம்பி இருப்பது எத்தனை சிக்கல் என நேற்று பார்த்தோம். பால் கம்பனிகாரர்களும் "வைட்டமின் டி தானே வேண்டும். இந்தா பிடி" என விலைகுறைவான வைட்டமின் டி2வை பாலில் கலந்துவிட்டார்கள். டி2 தாவர வைட்டமின். டி3 யில் கிடைக்கும் எந்த நன்மையும் டி2வில் கிடையாது. புல்மேயும் மாட்டுப்பாலில் இயற்கையான முறையில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான டி3யும், ரெடினால் (வைட்டமின் ஏவும்) உள்ளன. மாடுகளுக்கு மக்காசோளத்தை கொடுத்து அதையும் கெடுத்தாகிவிட்டது. சில பால்கம்பனிகள் வைட்டமின் டி3வை கலந்து வந்தாலும் அதுவும் செம்மறிஆட்டின் உடலில் இருந்து எடுக்கபடும் வைட்டமின் டி3 கலவைதான். அப்படிப்பட்ட பால் சைவமா, அசைவமா எனும் பஞ்சாயத்து தனிகதை.

வைட்டமின் டி3யின் முக்கியத்துவம் கருதி அது வைட்டமினே கிடையாது, உடலுக்கு அவசியமான ஒரு ஹார்மோன் என கூட விவாதம் நடைபெற்று வருகிறது. டைப் 1 டயபடிஸ் குணபடுத்தவே முடியாது, அது ஜெனடிக்கலாக வருவது என முன்பு கருதி வந்தார்கள். தாய்ப்பால் கொடுக்கபடும் குழந்தைகள், வெயிலில் காட்டபடும் சிசுக்கள்ள் ஆகியோருக்கு டைப் 1 டயபடிஸ் ஏனோ வருவது இல்லை. அதனால் டைப் 1 டயபடிஸ் வர காரணம் தாயின் உணவா, ஊட்டசத்து குறைபாடா, ஜீனா, வைட்டமின் டி குறைபாடா என பலத்த சர்ச்சை நிலவி வருகிறது. அடுத்த சில பத்தாண்டுகளில் அது தீரும் வாய்ப்பு இல்லை.

டைப் 2 டயபடிஸ் இருப்பவர்கள் பலருக்கும் வைட்டமின் டி குறைபாடும் இருப்பது கன்டுபிடிக்கபடுகிறது. இது தற்செயலா அல்லது வைட்டமின் டி3 குறைபாடால் டைப் 2 டயபடிஸ் வருகிறதா என்பது ஆராயபட்டு வருகிறது. இதில் கிடைத்த சில தகவல்கள் கூறுவது என்னவெனில் நம் உடலில் இன்சுலினை உற்பத்தி செய்யும் பான்க்ரியாஸின் பீடா செல்கள் சில வைட்டமின் டி3 தட்டுபாட்டால் செயலிழந்து விடும் என்பதையே. இன்சுலின் உற்பத்தி இதனால் தடைபட்டு நின்றுவிடும். பான்க்ரியாஸை இயக்கும் எஞ்சின் ஆயில் வைட்டமின் டி3யே. சில ஆய்வுகளில் சோதனை எலிகளுக்கு வைட்டமின் டி3 தட்டுபாட்டை செயற்கையாக உருவாக்கியபோது அவற்றின் பான்க்ரியாஸ் செயலிழந்தது கண்டுபிடிக்கபட்டது.

ரத்தத்தில் உள்ள கால்ஷியமும் டயபடிஸ் மேலாண்மைக்கு உதவும் என்பது இப்போது தெரியவருகிறது. ரத்தத்தில் கால்ஷியம் அளவு அதிகமாக இருக்க, இருக்க பான்க்ரியாஸ் செயலிழப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. வைட்டமின் டி ரத்தத்தில் உள்ள கால்ஷியத்தை நெறிப்படுத்தி அதை எலும்புகளுக்கும், பல்லுக்கும் கொண்டு சேர்ப்பதால் பான்க்ரியாஸ் முரையாக செயல்பட்டு டயபடிஸ் வருவது தடுக்கபடுகிறது. மேலும் கால்ஷியம் செல்லவேண்டிய இடத்துக்கு சென்று சேராமல் கிட்னி, இதயம் ஆகியவற்றில் டெபாசிட் ஆகி கிட்னி பழுதடைவதும், மாரடைப்பும் தடுக்கபடுகிறது. கால்ஷியம் என்பது காட்டாற்ரு வெள்ளம் எனில் அதற்கு கட்டபடும் அணை வைட்டமின் டி மற்றும் மக்னிசியம். அனை ஆற்று நீரை முறைஇப்படுத்த் பாசனத்துக்கு விட்டு வீடுகளை காப்பது போல் வைடமின் டி3யும், மக்னிசியமும் நம்மை காக்கின்றன.

அதனால் இப்போது டயபடிஸ் உணவால் வரும் வியாதி என்பதை தாண்டி ஊட்ட்சத்து குறைபாடால் வரும் வியாதி என்ற நோக்கில் ஆய்வுகள் செல்கின்றன. நம் வைட்டமின் டி அளவுகள் போதுமான அளவு இருந்தால் டயபடிஸ் இந்த அளவுக்கு பரவலாகி மக்களை பாதித்து இருக்காதாம்.

டயபடிஸ் மேலாண்மை வைட்டமின் டி3யின் ஒரு நன்மை மட்டுமே. இன்னும் ஏராளமான நன்மைகள், பலன்களை அளிக்கும் கற்கபவிருக்ஷம் அது. அதிலும் நாம் ஆய்வு செய்து அறிந்ததை விட அறியாதது ஏராளம்


No comments: