Tuesday, June 10, 2014

மகளிர் நலம் # 2



பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்)

பெண்கள் சிலருக்கு போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லையெனில் அது பி.சி.ஓ.எஸ் என அழைக்கபடும். அது ஏன் வருகிறது என பல காரணங்கள் கூறபட்டு வந்தாலும் (ஜெனடிக், டயட்) தற்போது அதற்கு காரணம் இன்சுலின் தான் என கண்டறியபட்டு வருகிறது.

ஹார்மோன் இம்பேலன்ஸ், இன்ஃப்ளமேஷன் எனும் உள்காயம் மற்றும் இன்சுலின் அதிக அளவில் சுரப்பதால் கருமுட்டைகள் கூட பாதிப்படையும். அதனால் சில மருத்துவர்கள் இன்சுலினின் ஆட்டத்தை குறைக்க வேண்டி சர்க்கரை மருந்தான மெட்பார்மினை கூட இதற்கு பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை இல்லாமல் மெட்பார்மினை உண்பது அவசியம் அற்றது. ஆனால் நம் மக்கள் வழக்கமான தானிய டயட்டை விட முடியாததால் இன்சுலின் கட்டுபாடும் சாத்தியமாவதில்லை என்பதால் மருத்துவர்களுக்கும் வேறு வழி இருப்பது இல்லை.

ஹார்மோன் இம்பேலன்ஸுக்கு முக்கிய காரணம் உணவில் போதுமான அளவு கொலஸ்டிரால் இல்லாமை, மற்றும் போதுமான அளவில் உணவில் ஊட்டசத்துக்கள் இல்லாமை. இதற்கு கூறபடும் இன்னொரு முக்கிய காரணம் வைட்டமின் டி3 பற்றாகுறையும் கூட. கொலஸ்டிரால் தான் ஹார்மோன்கள் அனைத்திற்கும் அரசன். அதை மூலபொருளாக வைத்துதான் உடல் போதுமான ஹார்மோன்களை தயாரிக்கிறது. ஹார்மோன் இம்பேலன்ஸால் உடல் பி.சி.ஓ.எஸ் இருக்கும் பெண்களுக்கு ஆண் ஹார்மோனான டெஸ்டெஸ்ட்ரோனை சற்று அதிக அளவில் உற்பத்தி செய்யும். வட கரோலினா பல்கலைகழகம் ஒன்றில் நடந்த ஆய்வில் பி.சி.ஓ.எஸ் இருக்கும் 11 பெண்களை கெடொஜெனிக் டயட்டில் ஈடுபடுத்தி பின்வரும் உணவுகளை கொடுத்தனர்:

தானியம், குப்பை உணவு. சுகர் அனைத்தும் நிறுத்தபட்டது. காய்கறிகள் மூலம் வெறும் 20 கிராம் கார்ப் மட்டுமே ஒரு நாளுக்கு கொடுக்கபட்டது

மாமிசம், மீன், முட்டை, சீஸ், சாலட் வரம்பின்றி உண்ண பரிந்துரைக்கபட்டது

காபியும், ஆல்கஹாலும் நிறுத்தபட்டது

வாரம் 3 நாள் உடல்பயிற்சி செய்ய பரிந்துரைக்கபட்டது. ஆனால் கட்டாயமாக்கபடவில்லை.

6 மாதங்களில் ஐந்து பேர் டயட்டை தாக்குபிடிக்க முடியாமல் நிறுத்திவிட்டார்கள்.

மீதம் இருந்தவர்களுக்கு உடலில் ஆண் தன்மையை அளிக்கும் டெஸ்டெஸ்ட்ரோன் கணிசமாக குறைந்தது

இன்சுபின் சுரப்பு 66% குறைந்தது

கருத்தரிக்க முடியாது என கூறப்பட்ட இப்பெண்களில் இருவர் இந்த ஆறுமாத காலத்தில் கருதரித்தார்கள்.

ஆக இன்ஃப்லமேஷனையும், இன்சுலினையும் கட்டுபடுத்தும் புல்லுணவு மாமிசம், மீன், மூலிகைகள், நட்ஸ் அடங்கிய டயட் பி.சி.ஓ.எஸை பெருமளவு மட்டுபடுத்தும். தானியம், குப்பை உனவை தவிர்க்கவேண்டும்.குறிப்பாக ப்ரீ ரேஞ் மீன் இதற்கு மிக, மிக நல்லது. அசைவ உனவு மூலம் கெடொசிஸ் அல்லது லோ கார்ப் செல்வது எளிது.

சைவ உணவு மூலம் கெடொசிஸை அடைய முடியாது. ஆனாலும் சைவ டயட் பின்வருமாறு:

தினம் 100 கிராம் பாதாம் (கட்டாயம். இது இன்ஃப்லமேஷனை குறைக்கும் முக்கிய உணவு). தோலுடன் உண்னவேண்டும்.

கீரை, காய்கறி அடங்கிய குழம்பு. காளிபிளவர் அரிசியுடன்

சீஸ் 50 கிராம் அல்லது 2 கோப்பை முழுகொழுப்பு உள்ள பால்


ஆர்கானிக்/நாட்டுகோழி முட்டை 3 அல்லது 4
 
பசுமஞ்சள் பச்சையாக தினமும் அரை டிஸ்பூன் மற்றும் பச்சை பூண்டு. துளசி இயற்கையான குடும்பகட்டுபாட்டு மூலிகை என்பதால் கருதரிக்க விரும்பும் பெண்களும், ஆண்களும் அதை தவிர்க்கவேண்டும். ஆனால் துளசி இன்ஃப்ளமேஷனுக்கு அருமருந்து என்பதால் பி.சி.ஓ.எஸ்ஸுக்கு அது நல்ல குணமளிக்கும்.

பனீர் டிக்கா, காய்கறி சூப் உண்டுவரலாம்.

அரிசி, கோதுமை, தானியம் இன்னபிற குப்பை உனவுகளை அறவே தவிர்க்கவேண்டும். ஹார்மோன்களை சீர்குலைய வைக்கும் சோயாபீன்ஸ் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
பிளாக்சீட் பவுடர் உணவில் சேர்த்துவரவேண்டும்.

உச்சிவெயிலில் தோலில் நேரடி வெயில் படும்படி தினம் 20 நிமிடம் நிற்பது வைட்டமின் டி அளவை அதிகரிக்கும். தலையில் தொப்பி அணிந்து நிற்கலாம்


No comments: