Sunday, May 25, 2014

Traditional Wisdom

உயிரணுவும், முட்டையும் ஒன்றூகூடி ஸைகோட் எனும் வடிவை அடைகின்ரன. தாய், தந்தையின் ஜீன்கள் ஒன்றூ கலக்கும் தருணம் இதுவே. கலந்து புதிய ஒரு மனிதரின் ஜினோமாக ஸைகாட்டாக உருவெடுக்கிறது. அதன்பின் ஏழுநாட்களில் ஸைகாட் தாயின் கருப்பையை தேடி சென்று கர்ப்பபை சுவற்றில் ஒட்டிகொள்ளும். இந்த தருணத்தில் இது எம்ப்ரையோ என அழைக்கபடும். 23வது நாளில் அதற்கு இதயம் உருவாகும். மூளை 40வது நாளில் உருவெடுக்க துவங்கும். ஏழாவது வாரத்தில் அதற்கு விக்கல் எடுக்கும், முகத்தை தொடும், உதட்டை சுளிக்கும். எடாவது வாரத்தில் அனைத்து உடல் உறுப்புக்களும் அதற்கு உருவாகிவிடும். இது இப்போது கரு என அழைக்கபடும். மேலே சொன்ன மாற்றங்களும், அதன்பின் அதன் உடலில் நிகழும் வளர்ச்சிகளும் போதுமான ஊட்ட சத்து இன்றி நடைபெறாது, குறீப்பாக கொலஸ்டிராலும், கொழுப்பும் இன்றி. கொலஸ்டிரால் தான் கருவின் செல்களை உருவாக்கும் மூலபொருள். புரதமே அதன் உடலை கட்டுமானம் செய்யும் அமினோ அமிலங்களை அளிக்கிறது. வைட்டமின், மினரல்கள் குழந்தையின் உள்ளுறுப்புகளுக்கு உயிரளிக்கும் மூலபொருட்களாக செயல்படுகின்றன‌

கற்கால மனிதர்கள் கர்ப்பம், திருமணம் ஆகியவற்றை மிக சீரியசாக எடுத்துகொன்டார்கள். இப்போது இருப்பது போல வயதுக்கு வந்தபின் செக்ஸ், 18 வயது ஆனபின் நினைத்த போது திருமணம் என எல்லாம் இஷ்டபடி அனுமதிக்கும் மரபுகள் பழங்குடிகளில் இல்லை. பழந்தமிழ் நாட்டில் இளந்தாரி கல்லை தூக்கினால் தான் திருமணம், காளையை அடக்கினால் தான் கல்யாணம் என்பதுபோல் விதிகள் இருந்ததை ஒப்புநோக்கலாம். இன்று அது வேலை கிடைத்தால் தான் கல்யானம் என்பது போல் பொருளாதாரம் சார்ந்த கணகீடுகளாக மாறிவிட்டது தனிகதை. அதுபோல் ஆபிரிக்க மசாயி இனத்தில் திருமணம் செய்ய விரும்பும் ஆண்/பெண்ணை புற்கள் மிக செழிப்பாக வளர்ந்திருக்கும் காலகட்டத்தில், மாதகணக்கில் ஏராளமான பாலை குடிக்க சொல்லி பணிப்பார்கள். புற்கள் பச்சையாக செழித்து வளர்ந்திருக்கும் காலகட்டத்தில் கிடைக்கும் பபாலானது ஏராளமான ஊடசத்துக்களை கொன்டிருக்கும். மேலும் மசாயிகள் வளர்க்கும் மாடுகளின் பாலையும், அமெரிக்காவில் கமர்ஷியலாக விற்கும் பாலையும் ஒப்பிடவே முடியாது. மசாயிகளின் மாட்டுகளின் பாலில் அமெரிக்க மாட்டுபாலை விட மும்மடங்கு அதிக கொழுப்பும், இருமடங்கு அதிக கொலஸ்டிராலும், ஏழுமடங்கு அதிக பாஸ்போலிடும், தானியம் தின்ற மாடுகளின் பாலில் இல்லாத ஒமேகா 3 டிஎசேவும், கோலினும், வைடமின் கே2வும், வைட்டமின் ஈவும் கிடைக்கும். வைட்டமின் ஈ கர்ப்பமடையவே மிக அவசியமானது. வைட்டமின் ஈ குறைவான உணவை உண்ணும் பெண்களின் கரு விரைவில் கலைந்துவிடும். பிளெசன்டாவில் இருந்து கருவுக்கு உணவு போகும் பாதையை வடிவமைப்பதே வைட்டமின் ஈ தான். வைட்டமின் ஈ பாதாம், புல்மேயும் மாட்டுப்பால், கீரை முதலானவற்றில் ஏராளமாக கிடைக்கிறது.

கடலோரம் வசித்த ஆதிகுடியியினர் கர்ப்ப்பிணிகளுக்கு மீன்முட்டைகளை ஏராளமாக உண்னகொடுத்தார்கள். மீன்முட்டையில் ஏராளமான கொலஸ்டிரால், கோலின், பயோடின், ஒமேகா 3, கால்ஷியம்,. மக்னிச்யம் நிரம்பிய உணவு. மானின் தய்ராய்டு சுரப்பி, சிலந்தி நண்டு, ஆகியவையும் கர்ப்பிணிகளுக்கு உணவாக கொடுக்கபட்டன. ஆபிரிக்க குடிகள் சிலவற்றில் ஐயோடின் குறைபாட்டை போக்க செடிகளை எரித்து அவற்றின் சாம்பலும் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கபட்டது. இவை அனைத்துமே ஈரல், உள்ளுறுப்புகள், எலும்பு மஜ்ஜை, டோல் கொழுப்பு, உள்ளூர் காய்கறிகள், புல்லுணவு மாமிசம் ஆகியவ அடங்கிய டயட்டை சப்ளிமெண்ட் செய்ய பல தொல்குடிகளால் இன்றூம் பயன்படுத்தபடுகிறது.

வைட்டமின் டியும் அதுபோல் மிக முக்கியமான மூலபொருள். அமெரிக்க குழந்தைகள் நல அகாடமி (அமெரிக்க பேடய்யாட்ரிக் அகாடமி) பதிப்பித்த ஆய்வில் 36% குழந்தைகள் பிறக்கையில் வைட்டமின் டி குறைபாட்டுடன் பிறப்பதாக குறிப்பிட்ட்டு வைட்டமின் டி மூன்ராவது டிரைமெஸ்டரில் மிக அவசியம் என குறிப்பிட்டது. அதே அறிக்கையின் இரண்டாவது பகுதியில் குழந்தைகள் மேல் வெயில் படாமல் கவனமாக பார்த்துகொள்ளுமாறும், சன்ஸ்க்ரீன் போடுமாறும் அறிவுறுத்தியது. ஸ்கின் கான்சர் பீதி பரவியும், குழந்தைகள் கருத்துபோய்விடுவார்கள் என்பது மாதிரியான பயத்தாலும் தாய்மார்கள் பிறந்த குழந்தையை வெயிலில் காட்டூவதே கிடையாது. ஆனால் 10,000 குழந்தைகளை வைத்து பின்லாந்தில் நடந்த ஆய்வு ஒன்று வைட்டமின் டி 2000 யூனிட் அளவுக்கு கிடைக்கும் 1 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு டைப் 1 டயபடிஸ் 30 வயது வரை வருவது இல்லை என கண்டறிந்தது!!!!!!!!!

வைட்டமின் கேவில் இரு வகைகள் உண்டு. தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் கே, மற்றும் தாவர உணவுகளில் இல்லாத வைட்டமின் கே 2. கே 2புல்லுணவு மாட்டுப்பால், முட்டை, புல்லுணவு மாமிசம், ஆகியவற்றில் கிடைக்கும். சைவர்களுக்கு கே2 புல்மேயும் மாட்டுபாலில் மட்டுமே கிடைக்கும். இந்த இரு கே வைட்டமீன்களும் தாய் உண்ணும் உணவில் இருக்கும் கால்ஷியத்தையும், புரதத்தையும் சிசுவின் நரம்பிலும், எலும்பிலும் கொன்டுபோய் சேர்க்கின்றன. வைட்டமின் கே நுகர்வை குறைக்கும் ப்ரிஸ்க்ரிப்ஷன் மருந்துகளை உண்ணும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உறுப்பு குறைபாடுகளுடன் பிரக்கின்றன. உதாரணமாக வார்பரின் எனும் மருந்தை உட்கொண்ட தாய்களின் குழந்தைகள் மூக்கின் அளவு சரிபாதியாக குறைந்து இருந்ததும், முதுகுதண்டு சரியாக வளராமல் பிறந்ததும் பதிவாகியுள்ளன.

புல்மேயும் மாட்டுப்பால், கடல் மீன், புல்லுணவு மாமிசம் ஆகியவற்றில் மட்டுமே காணப்படும் டி.செ.ஏ எனும் ஒமேகா அமிலம் சிசுவின் மூளையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. தனக்கு தேவையான டிஎசேவை விட பத்து மடங்கு அதிக டி.எச்.ஏவை சிசு தாயின் உணவில் இருந்து பெற்று தன் மூளையில் ஸ்டோர் செய்யும்.

பேறுகாலத்தில் போலிக் அமிலத்தின் முக்கியத்துவம் இன்று பலருக்கும் தெரிந்துள்ளது. ஆனால் பலரும் வைட்டமின் மாத்திரை மூலம் போலிக் அமிலத்தை அடைகிறார்கள். ஆனால் துரதிர்ஷடவசமாக வைட்டமின் மாத்திரைகளில் கிடைக்கும் போலிக் அமிலம் பிளெசன்டாவை தான்டுவதே கிடையாது. இயற்கையான உணவுகளில் (புல்லுணவு ஈரல், கீரை) கிடைக்கும் போலிக் அமிலம் எளிதாக பிலெசன்டாவை தான்டி சென்று கருவை அடைகிறது. ஆனால் சில பிறப்புகுறைப்பாடுகளை செயற்கை போலிக் அமிலம் தடுப்பதால் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை எனும் கதையாக உணவில் போலிக் அமிலம் கிடைக்கபெறாத தாய்மார்கள் அதையும் பயன்படுத்தலாம்.

சிசேரியன் செய்துகொள்வதும், பிள்லைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காததும் மேலும் குழந்தைகளுக்கு பல வியாதிகளுக்கு காரணம் ஆகிறது. அவற்றை விரிவாக எழுத வேண்டும். ஆறுமாத குழந்தைக்கு ட்யபடிஸ் வர காரணம் ஜீன்கள் என நாம் நினைத்துகொள்கிறோம். அது உண்மை அல்ல. அதற்கு காரணம் புட்டிபாலில் உள்ல சர்க்கரையே. சர்க்கரையும், கெமிக்கல் குப்பைகளும் சேர்த்த புட்டிபாலும் குப்பை உணவுதான். தாய்பாலை எத்தனை குடித்தாலும் பிள்லைக்கு டயபடிஸ் வராது. ஆனால் நம் முன்னோர் பிள்ளைபிறப்ப்புக்கும், பேறுகாலத்திற்கும் உருவாக்கிய விதிகள் அனைத்தையும் மறந்து பேறுகாலத்தில் வைடமின் மாத்திரை சபபிட்டால் போதும் என நினைத்து "கர்ப்பிணி ஆசைபட்டு கேட்டுவிட்டாள். ஐஸ்க்ரீம் வேண்டும், பீட்சா வேன்டும், சிசேரியன் செய்துகொள்லவேண்டும், புட்டிபால் கொடுக்கவேண்டும்" எனவும் இன்றைய நாகரிக சமூகம் போகும் போக்குக்கும் தான் எத்தனை வித்தியாசம்?
No comments: