Tuesday, May 20, 2014

இளவரசிசிறுவயதில் ப்ரின்சஸ் ஆக விரும்பாத பெண்களே கிடையாது. ஆனால் இளவரசிகள் வாழ்வு உண்மையில் எப்படி இருந்தது?

ரஷ்யாவின் மாபெரும் மகாராணியாய் போற்றபடும் காதரின் தெ கிரேட். 1744ம் ஆண்டு மணபெண்னாய் தன் தாயகமான ஜெர்மனியை விட்டு ரஷ்யாவுக்கு வந்தார். ரஷ்ய குளிரின் கொடுமை உலகறிந்தது. அரண்மனையில் இருப்பதால் மட்டும் குளிருக்கு தப்ப முடியாது. காரணம் அன்று கண்னாடிகள் கண்டுபிடிக்கப்டவில்லை. ஜன்னலுக்கு வெறும் கம்பிகள் தான். ஊசிகாற்றாய் இறங்கும் குளிரில் அறையில் எரியும் கணப்பு அடுப்பு அதிக வெப்பத்தை தந்துவிடாது. குளிரில் நடுங்கிகொண்டுதான் காலம் கழிக்கவேண்டும். பிரான்சு மன்னனை மணந்து வெர்சாயி அரண்மனைக்கு வந்த மகராணி எலிசபெத் சார்லட் "கணப்பு அடுப்பின் முன் அமர்ந்து இதை எழுதுகிறேன். கைகள் பேனாவை பிடிக்க முடியாமல் குளிரில் உறைந்து போய்விட்டன" என டயரி குறிப்பில் எழுதுகிறார்(
காதரின் தெ கிரேட் )
கோடையில் அறைக்குள் குருவிகள், பறவைகள் சாதாரணமாய் வந்துபோகும். எலிகள் தொல்லையும் அதிகம். ரஷ்ய அரண்மனை ஒருமுறை தீப்பற்றி எரிகையில் அரண்மனையில் இருந்து ஆயிரகணக்கான எலிகள் முறையாக மனிதர்கள் செல்வதை போல் அணிவகுத்து சென்றதை பார்த்ததாக காதரின் எழுதுகிறார். மனிதர்கள் கூட அம்மாதிரி ஆர்கனைச்டாக வெளியேறாததால் பலர் நெருப்பில் மடிந்தார்கள்.

அன்றைய அரண்மனைகளீல் பாத்ரூம் என்ற கன்செப்ட் கிடையாது. வெர்சாயி அரண்மனையில் மூலை முடுக்குகளில் பிரபுக்களும், மன்னர்களும், படைவீரர்களும் சிறுநீர் கழிப்பதும், எச்சில் துப்ப்வதும் தான் வழக்கம்.

பட்ஜெட் பற்ராகுறை நம்மை வாட்டுவது போல் மன்னர்களையும் வாட்டியது. 1981ல் இளவரசர் சார்ல்சை மணந்து வின்டசர் மாளிகைக்கு குடியேறிய டயானா மாட்சிமை பொருந்திய அரசி எலிசப்த் ராணியார் பக்கிங்க்ஹாம் அரண்மனை எங்கும் அலைந்து திரிந்து தேவையற்ற விளக்குகளை தானே அணைத்ததை கண்டதாக எழுதுகிறார். குளிர் தாங்கமுடியாமல் அரண்மனையில் வெப்பத்தை உயர்த்த சொன்னதற்கு அரசியார் "அதுக்கு பதில் இன்னொரு ஸ்வெட்டர் போட்டுகொள். மின் கட்டணம் அதிகமாக வரும்" என கூறியதாக எழுதுகிறார். இங்கிலாந்து அரசவம்சத்தினரின் சாக்ஸுகள் கிழிந்தாலும் புதிது வாங்கபடுவது இல்லை. நம்மை மாதிரி கிழிந்த சாக்ஸை போட்டு ஷூவெஇ மேலே போட்டுகொண்டுதான் அரசவம்சத்தினர் நடமாடுகிறார்கள். டயான்வுடன் பட்லராக அரண்மனையில் குடியேறிய பால் பேரலுக்கு அளிக்கபட்ட யூனிபாரம் 1780 வாக்கில் இங்கிலானதை ஆண்ட அரசர் மூன்றாம் ஜார்ஜின் படலரிட்ன் யூனிபாரம்.

பல இளவரசிகள் 12, 13, 14 என இளவயதில் திருமணம் செய்துகொள்வார்கள். அவர்கள் கணவன் வயது 50, 60, 70 என எதாக வேண்டுமனாலும் இருக்கும். குழந்தை வேண்டும் என்பதற்காக மட்டுமே மன்னர்கள் அவர்களுடன் உறவு வைத்துகொள்வார்கள். குழந்தைபிறந்தபின் அடுத்த நிமிடம் குழந்தை மகாரானியிடம் இருந்து பிரிக்கபட்டு தாதிகளால் வளர்க்கபடும். வருடம் ஒரு முரை, விசேச நாட்களில் பிள்லைகளை சந்தித்து கொள்லமுடியும். தொலைதூர மணங்கள், எதிர்நாட்டு படையால் இளவரசிகள் கடத்தபடும் அபாயம் ஆகியவற்ரால் கல்யாணத்துக்கு பின் எந்த இளவரசியும் தாய்வீட்டுக்கு போவது கிடையாது. 12 வயதில் தாயை பிரிந்தால் அதன்பின் பார்க்கவே முடியாது

வியாதி வந்தால் குடிமக்களுக்கு மருத்துவரிடம் போக காசு இல்லை என்பதால் சூப், சிக்கன், குளிர்ந்த காற்று இவை தான் மருந்து. ஆனால் அரசவம்சத்தவர் நிலை இதை விட படுமோசம். அன்று இருந்த மருத்துவத்தின் அழகு அப்படி. ஆஸ்திரிய இளவரசி ஆனுக்கு 1665 ஆண்டு பிரெஸ்ட் கான்சர் என கன்டறியபட்டபோது அதற்கு மருந்து மார்பகத்தை வெட்டி எடுப்பதே. ஆனால் அன்று மயக்க மருந்து கிடையாது. ஒயினை கொடுத்து கொஞ்சம், கொஞ்சமாக அவரது மார்பு கத்தியால் தினம் ஒரு இஞ்சு அளவு வெட்டி எடுக்கபடும். ரத்தம் அதிகமாக வெளியேறினாலும் ஆபத்து. அன்று ரத்தம் ஏறும் முரையும் கிடையாது. இப்படி ஒரு வருடம் முழுக்க தொடர்ந்து கத்தியால் மார்பு வெட்டி எடுக்கபட்டது. வலியால் துடிதுடித்து சிகிச்சை உடியும் முன் அவர் மரணமடைந்தார்.

காதரின் தெ கிரேட்டுக்கு பல்வலி வந்தபோது "டென்டிஸ்ட்" அரண்மனைக்கு குறடுடன் வந்தார். மயக்கமருந்து இன்றி குறடை பல்லில் வைத்து ஒரே இழு. தாடை எலும்பில் பகுதி பல்லுடன் சேர்ந்து வந்தது. அதன்பின் பல மாதம் அரசியால் பேச முடியவில்லை.

இதான் அரண்மனை வாழ்வு. நாம் ஏங்கும் ப்ரின்சஸ் வாழ்வின் யதார்த்தம்!!!!!


No comments: