Monday, May 05, 2014

விந்தை உலகம்:


விந்தை உலகம்:

ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 1.2 லிட்டர் எச்சிலை உற்பத்தி செய்கிறான்

சூரியன் மேல் அதன் எடைக்கு எடை சம அளவு நீரை ஊற்றினால் அது அணைந்துபோகுமா? போகாது. காரனம் சூரியன் என்பது நெருப்பு அல்ல. அது ஒரு அணு உலை. பில்லியன், பில்லியன், பில்லியன் டன் எடை உள்ள ஹைட்ரஜன் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து நெருக்குகையில் வெப்பம் உண்டாகிறது. ஹைட்ரஜனுக்கு பதில் அங்கே அதே எடையில் வாழைபழம் இருந்தாலும் அதே விளைவுதான் உன்டாகும்.

ஆக சூரியன் மேல் அதே அளவு எடையுள்ல நீரை ஊற்றினால் சூரியனின் சைஸ் டபிள் ஆகும்

நாம் அணுவால் ஆனவர்கள். அணுக்களுக்கு உள்ளே ஏகபட்ட வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை எல்லாம் அகற்றி வெறும் பொருளை (மேட்டரை) மட்டும் எடுக்கிறோம் என வைத்துகொள்ளுங்கள்..உலகில் உள்ள ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒரே ஒரு துளி சர்க்கரையினுள் அடக்கிவிடலாம். யெஸ்..ஒரே ஒரு சின்ன சர்க்கரை அளவு தான் மானுட இனத்தின் மாஸ்

சூரியனின் ஒளி நம்மிடம் வந்து சேர எட்டு நிமிடம் ஆகிறது என தெரியும். ஆனால் சூரியனுக்குள் இருந்து அந்த ஒளி வெளியே வர பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகும். சூரியனுக்குள் ஒளீ காமா ரேடியேஷனாக உற்பத்தி ஆகி சூரியனுக்குள்ளேயே அங்கும் இங்கும் அலைகழிக்கபட்டு சூரியனில் இருந்து வெளியேறி வெறும் எட்டு நிமிடத்தில் நம்மை வந்து அடைகிறது. ஆக இன்று நீங்கள் பார்க்கும் சூரிய வெளிச்சம் உற்பத்தி ஆன காலகட்டத்தில் பூமியில் பிரமிடுகள் கூட கட்டபடவில்லை

டைம் டிராவல் (கால பிரயாணம் சாத்தியமா) என்பதை அறிய விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் கால பிரயாணிகளுக்கு ஒரு விருந்து வைத்தார். எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்திருக்கும் மனிதர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் வந்து பார்ட்டியில் கலந்து கொள்ளலாம் என பத்திரிக்கைகளில் அழைப்பிதழ் வெளியிட்டார். ஆனால் பார்ட்டி முடிந்தபின் தான் அந்த அழைப்பிதழ் பத்திரிக்கைகளில் வெளியானது. அப்பதானே நிஜ டைம் டிராவலர்கள் பார்ட்டியில் கலந்து கொள்ள முடியும்? ஆனால் துரதிர்ச்டவசமா எந்த காலபிரயானியும் அந்த பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை



No comments: