Wednesday, December 18, 2013

உண்டுகொழுத்தவள் தரமாட்டாள்



தலைப்பு: உண்டுகொழுத்தவள் தரமாட்டாள். வயிறு பசித்தவள் விடமாட்டாள்.

கதாபாத்திரங்கள்:

கதாநாயகி: மாதம் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கும் "ஏழை பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்"

வில்லன்/ வில்லி: அதிகாரவர்க்க, முதலாளி வர்க்க கான்சுலேட் அதிகாரி தேவயானி

கதாநாயகர்: நியூயார்க் போலிஸ் 

காமடியன்: இந்திய அரசு

கதை சுருக்கம்: அதாவது மாதம் $4180 டாலர் சம்பளம் வாங்கும் பணிபுரியும் தாயான நம் வில்லியானவர், நம் கதாநாயகிக்கு மாதம் $537 சம்பளம் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து, விசாவில் மாதம் $4500 சம்பளம் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். அதற்கு கீழ் சம்பளம் போட்டால் விசா கிடைக்காது. உணவு, உறைவிடம் இலவசம்.

அமெரிக்கா வந்த நாயகி தன் உரிமைகளை உணர்ந்து (இந்தியாவில் உரிமைகளை அறிந்தார். இங்கே உனர்ந்தார்) வில்லி மேல் வழக்கு தொடர்ந்தார். நாயகிக்கு கொடுக்கபடவேண்டிய மினிமம் வேஜ் இங்கே வில்லிக்கே கிடையாது என்பது குறிப்பிடதக்கது. ஆக காமடியனான பிரதமர் மன்மோகன் மேல் வில்லியார் வழக்கு தொடர்ந்து இருந்தால் மினிமெம் வேஜ் சட்டத்தில் மன்மோகனே கைதாகும் நிலை. ஆனால் வழக்கு வில்லியார் மேல் பதிவானது. வில்லி கைதாகி சிறையில் அடைக்கபட்டார். காமடியன்கள் டில்லியில் காமடி செய்கிறார்கள்.

நாயகியின் குற்றம்:

1) வில்லிக்கு பேசின சம்பளம் கொடுத்தது

2) தன் சம்பளபணம் முழுவதையும் நாயகிக்கு கொடுக்காமல் இருந்தது. சம்பளம் போக இன்னும் ஒரு $400 நாயகிக்கு கொடுத்திருக்கணும். ஆனால் அதை கூட நாயகியார் பெருந்தன்ம்மையா மன்னிச்சு விட தயாரா இருந்திருப்பார். ஆனால் வில்லியார் அதை கூட செய்யலை. அவர் தன் முழு சம்பளத்தையும் நாயகியாருக்கு கொடுத்து அவர் கொடுக்கும் அஞ்சு,10 சில்லறையில் தன் காலத்தை ஓட்டியிருக்கணும். செய்தாரா அவர்? இல்லை. அதனால் சிறைக்கு போவதுதான் முறை

க்ளைமாக்ஸ்:

காமடியன் வில்லியை ஐநா சபை டிப்ளமாட்டாக நியமித்து அவர் மேல் உள்ள வழக்கு விசாரணைக்கு வராமல் செய்துவிட்டார். அதனால் நியூயார்க் நகரவீதிகளில் நாயகி நீதி கேட்டு நெடும்பயணம் சென்று கொன்டுள்ளார். வழக்கு முகநூல் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்து லஞ்சுபிரேக் புரட்சியாள நீதிபதிகள் தீர்ப்பை சிகப்பு மையால் எழுத தயாராகி வருகிறார்கள். எத்தனை அடித்தாலும் வாங்கும் கைப்புள்ளைகளான இந்திய அதிகாரவர்க்க ஏகாதிபத்தியம் மேல் இன்னும் பல எலெக்ட்ரானிக் கணைகள் விழுந்துகொண்டுள்ளன.

நாயகி வென்றாரா?

நீதி ஜெயித்ததா?

வில்லி கைதாவாரா?

முடிவை கணிணிதிரையில் காண்க



No comments: