Wednesday, February 27, 2013

99% உணவு கட்டுபாடு முறைகள் தோல்வியை தான் தழுவும்


சில பத்தாண்டுகளாக மருத்துவர்கள் கூறிய டயட் வழிமுறைகள் அனைத்தும் சாதாரண மனிதர்களை நோயாளியாக்குவதில் தான் முடிந்துள்ளன என்பது வருத்தம் தரும் உண்மை. அதற்கு காரணம் முட்டாள்தனமான சில ஆய்வுக்ள் (ஆன்சல் கீஸ்), அரசியல் கமிட்டிகளின் அறிக்கை (மெக் கவர்ன் கமிட்டி) மற்றும் சீரியல், மருந்து கம்பனிகளின் விளம்பரங்கள், ஆய்வு நிதி ஆகியவை.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 99% உணவு கட்டுபாடு முறைகள் தோல்வியை தான் தழுவும். காரணம் ஒபிசிட்டி, டயபடீஸ், கொல்ஸ்டிரால் குறைப்பு என எதுவாக இருப்பினும் அவர்கள் கூறுவது 1) குறைவாக சாப்பிடுங்கள் 2) அதிகமாக உடல்பயிற்சி செய்யுங்கள்.

குறைவாக உண்டால் உடல் இளைக்கும் என்பது மிக தவறான அணுகுமுறை. நீங்கள் உட்கொள்ளும் காலரிகளை குறைத்துகொன்டால் உடல் தன் மெடபாலிசத்தை குறைத்துகொள்ளும். தினம் 1800 கலோரிகளை உண்டு பழகியவர் 1500 காலரியாக உனவை குறைத்தால் உடல் தினம் 1800 காலரிகளை எரிப்பதை விடுத்து தினம் 1500 காலரிகளை எரிக்கும். ஆக மாதகணக்கில் டயட் இருந்தும் எந்த பயனும் இல்லை என தோன்றி வெறுத்துபோய் பலர் பட்டினி கிடக்க ஆரம்பிப்பார்கள். அந்த சூழலில் உடல் கொழுப்பை எரிக்காமல் சேமித்து வைத்துகொன்டு உடலில் உள்ள மஸிலை எரிக்கும். நாலைந்து கிலோ உடல் இளைக்கும். ஆனால் இழந்தது முழுக்க மஸில். கொழுப்பு அல்ல.

மஸிலுக்கு தான் எனெர்ஜி தேவை. நிரைய மஸில் இருந்தால் நீங்கள் படுத்து தூங்குகையில் கூட மஸில் காலரிகளை எரிக்கும். ஆனால் உழலில் உள்ல கொழுப்புக்கு காலரிகள் தேவையில்லை. ஆக குறைவாக உண்டால் நீங்கள் கொழுப்பை இழக்க மாட்டீர்கள். உங்கள் உடல்நலன் மோசம் தான் ஆகும்.

உங்கள் உடல் இப்படி ரெஸ்பான்ட் செய்ய காரணம் என்ன?

சிம்பிள். குண்டாக இருப்பது பரிணாமரீதியில் தனக்கு நல்லது என உஙகள் உடல் நம்புகிறது. உங்கள் உடலில் அதிகமாக கொழுப்பு சத்தை சேர்ப்பது பரிணாமரீதியில் உங்கள் சர்வைவலுக்கு நல்லது என உங்கள் உடல் நம்புகிறது. அதனால் அதை கரைக்க நீங்கள் பட்டினி கிடப்பதும், உடல் பயிற்சி செய்வதையும் உங்கள் உடல் தவறாக புரிந்து கொள்கிறது.

2 மில்லியன் ஆண்டுகளாக மனிதன் வேட்டையாடி தான் உன்டான். தினமும் வேட்டை கிடைக்காது. தினமும் உணவு கிடைக்காது. குளிர்காலத்தில் உணவு கிடைப்பது மிக கடினம். பல நாட்கள் பட்டினி இருக்கவேண்டும். ஆக ஆதிமனிதன் பல நாட்கள் பட்டினி இருப்பான், திடீரென ஏதொ ஒரு நாள் மிக பெரிய வேட்டை கிடைக்கும். அன்று விருந்து உபசாரம். மீன்டும் பட்டினி.

பரிணாரீதியில் உங்கள் உடல் இன்னும் அந்த காலகட்டத்தில் தான் இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறது. இம்மாதிரி பட்டினிகாலங்களில் உடல் முழுக்க கொழுப்பை சேர்ப்பவன் ஒல்லியாக இருப்பவனை விட உயிர்பிழைப்பதற்கான சாத்தியகூறு மிக அதிகம். 2 மில்லியன் ஆண்டுகளாக குன்டர்கள் தான் பட்டினிகாலங்களில் உடல்பிழைபபர்கள். ஒல்லியானவர்கள் பட்டினிகாலங்களில் இறந்துவிடுவார்கள்.

விவசாய காலகட்டம் வந்தபின்னும் 20ம் நூற்ராண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்தது போல் உணவு கிடைப்பது சிக்கலே இல்லை எனும் நிலைக்கு மனித இனம் என்றும் வந்தது இல்லை. பசி, பட்டினி, பஞ்சம் இவை உலகவரலாற்றில் சாதாரணம். சென்ர நூற்ராண்டில் கூட அயர்லாந்து பஞ்சத்தில் பல்லாயிரம் பேர் மடிந்தார்கள். 60களில் உணவு இன்றி லால்பகதூர் சாஸ்திரி நம்மை திங்கள்கிழமை உபவாசம் எல்லாம் இருக்க சொல்லியிருக்கிறார்.

70களில் நார்மன் பர்லாங் எனும் விஞ்ஞானி குறைந்த காலகட்டத்தில் அதிக மகசூல் தரும் கோதுமையை கண்டுபிடித்தார். "உலகுக்கே ரொட்டி அளித்தவர்" என பாராட்டபாட்டு நோபல் பரிசையும் பெற்றார். அவர் கண்டுபிடித்த கோதுமை ரகம் தான் இன்று உலகெங்கும் பயிரிடபடுகிறது. அதுபோக குறைந்த காலகட்டத்தில் மகசூல் செய்யும் அரிசி வகைகள் பலவும் கன்டுபிடிக்கபட்டு உணவுபன்சஜ்ம், பட்டினிசாவு ஆகியவை உலகில் பலநாடுகளில் ஒழிக்கபட்டுவிட்டது.

ஆனால் கடந்த 40, 50 ஆன்டுகளாக நிகழ்ந்த இந்த மாற்றஙக்ள் இன்னும் நம் ஜீன்களில் பதிவு ஆகவில்லை. பரிணாமரீதியாக 2 மில்லியன் ஆன்டுகளாக எப்படி வாழ்ந்தோமோ அப்படி தான் இன்னும் நீங்கள் வாழ்வதாக உங்கள் உடல் கருதுகிறது. நீங்கள் டயட் இருந்தால் அது உணவின்றி பட்டினி கிடப்பதாக உஙக்ள் உடல் கருதி தன் கலோரி தேவைகளை மிகவும் சுருக்குகிறது. நீங்கள் உண்ணும் உணவு முழுவதையும் கொழுப்பாக மாற்றி அடுத்து வரவிருக்கும் பட்டினிகாலத்துக்கான எரிபொருளாக சேமிக்கிறது. உங்கள் வீட்டில் நூறுகிலோ அரிசிமூட்டை இருப்பது உங்கள் உடலுக்கு தெரியாது. உங்களை காப்பாற்ற உங்களை குன்டோதரனாக ஆக்கும் வேலையில் உங்கள் உடல் ஈடுபடுகிறது!!!!

அறிவியல் ரீதியாக இதை thrifty gene hypothesis என அழைபபர்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செமையாக சாப்பிட்ட வேண்டும்... அது போல் செமையாக உழைக்க வேண்டும்... (வேர்வை கண்டிப்பாக சிந்த...)

Unknown said...

yes. thanks dhanabalan ji