Monday, December 03, 2012

அரிசியும், சர்க்கரை வியாதியும்


அரிசியும், சர்க்கரை வியாதியும்

சஸ்பென்சை முன்பே உடைத்துவிடுகிறேன். வெள்ளை அரிசி தான் குற்றவாளி. கைகுத்தல் அரிசி என அழைக்கபடும் மில்லில் தீட்டபடாத அரிசிதான் கதைநாயகன்.

அரிசி என்பது இயற்கையான, ஆரோக்கியமான உணவு. அதன் இயற்கை நிறம் பழுப்பு. அந்த அரிசி மேலே உள்ள நார்ச்சத்துக்களையும், பி வைடமின்களையும் மில்லில் தீட்டி பாலிஷ் செய்து அகற்றினால் அரிசியில் உள்ள வைடமின்கள், நார்சத்து, செலனியம், மாங்கனீஸ் முதலிய சத்துக்கள் அனைத்தும் அகன்று விடுகிறது. நார்சத்து மலசிக்கலை ஒழிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், செலனியம்,மாங்கனீஸ் முதலியவை கான்சர் வராமல் தடுக்கும்.

இப்படி சத்துக்களை தீட்டி எடுத்து அரிசியை வெள்ளை ஆக்கினால் அது நல்ல சுவையாக இருக்கும், சமைக்க எளிது. அதனால் மில் அரிசி எனப்படும் வெள்ளை அரிசி புகழ் அடைந்தது. ஆனால் அதன் அபாயங்களை இந்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரை பட்டியலிடுகிறது.

வெள்ளை அரிசியை ஒரு வாரத்துக்கு ஐந்து தடவைக்கு மேல் உட்கொள்பவர்களுக்கு டைப் 2 எனப்படும் சர்க்கரை வியாதி வரும் அபாயம் 20% அதிகம். டை 2 டயபடிஸ் உலகில் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு உள்ளது. இதுவந்தால் அப்புறம் தினசரி இன்சுலின் ஊசி போட்டுகொள்ளும் நிலை உருவாகும்.

தினம் உண்ணூம் வெள்ளை அரிசிக்கு பதில் மூன்றில் ஒரு பங்கு கைகுத்தல் அரிசியை உட்கொண்டால் சர்க்கரை வியாதி வரும் அபாயம் 16% குறையும்.

கைகுத்தல் அரிசி தான் உண்ணவேண்டும் என இல்லை. முழுதானியத்தில் செய்த கோதுமை மாவு ( whole wheat atta flour  என கடைகளில் கிடைக்கும்) பயன்படுத்தினாலும் சரியே. தீடபடாத முழு தானியங்களில் கிலைசெமிக் இண்டெக்ஸ் எண் குறைவு. அதாவது இந்த தானியங்களை எரிக்க உடல் அதிகநேரம் எடுத்துகொள்ளும். வெள்ளை அரிசியை உடல் உடனே எரித்து சர்க்கரையாக மாற்றிவிடும். அப்படி மாற்ற அதிக அளவில் இன்சுலினை உடல் சுரக்க நேரிடும்.அதுவே தொடர்கதைஒ ஆனால் நாளடைவில் இன்சுலின் சுரப்பதை யுடல் குறைத்துகொண்டு டைப் 2 டயபடிஸ் வந்துவிடும்.

ஆக சர்க்கரை வியாதி வரும் அபாயம் உள்ளவர்கள், அல்லது சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முடிந்தவரை வெள்லை அரிசியை தவிர்த்து முழு கோதுமை, பழுப்பு அரிசி ஆகியவற்றை பயன்படுத்துவது நல்லது

(புகைப்படத்தில்

முழுகோதுமையில் செய்த ஆட்டா மாவு. ஆட்டாமாவு என்பது முழுகோதுமையை கல்லில் அரைத்து தயாரிக்கும் மாவு. சப்பாத்தி, நான் முதலியவற்றை சமைக்க பயன்படுத்தலாம்)

Inline image 1

Inline image 2



2 comments:

திவாண்ணா said...

article சுட்டி எங்கேப்பா? :-)

Unknown said...

Uh oh..will search and post it:-)