Friday, November 23, 2012

யோகாசனம்

யோகாசனம் அமெரிக்காவில் பரவலாகி வரும் சூழலில் ஒரு கிழக்கத்திய கலை வணிகமயமாகும் போது என்னென்ன சிக்கல்கள் நேருமோ அதெல்லாம் யோகாவுக்கும் நேர்ந்தது.

யோகாவின் மேல் ஆர்வம் அதிகரிக்க மூலைக்கு மூலை யோகா பயிர்சியாளர்கள் உருவானார்கள். பொதுமக்களுக்கு அனைத்து ஆசனங்களையும் கற்றுதர விளைவு பலருக்கும் எலும்பு முறிவு, முதுகெலும்பு தண்டுவட பாதிப்பு, ஹார்ட் அடடாக் என பல பிரச்சனைகள்.

யோகாவின் ஆபத்துக்கள் பற்றி இந்த ஆண்டு துவக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் ஒரு கட்டுரை வெளியிட்டது. அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிகேஎஸ் ஐயங்காரிடம் நேரடி பயிற்சி பெற்ற கிளென் பிளாக் எனும் யோகா ஆசிரியர் யோகாவின் ஆபத்துக்களையும், அது குறித்து ஆய்வேடுகளில் நடத்தபாட்ட பல ஆய்வுகளையும் குறிப்பிட்டு "நகர்புற வாழ்க்கையில் கீழே கூட உட்கார்ந்து பழகாத மக்களுக்கு இம்மாதிரி கடினமான ஆசனங்களை பயிற்றுவிக்கையில் சட், சட் என எலும்பு முறிவதும், தண்டுவட பாதிப்பு ஏற்படுவதையும்" குறிப்பிட்டு யோகா அமெரிக்காவுக்கு ஏற்றதா என கேள்வி எழுப்புகிறார்.

எனக்கு யோகாவில் அனுபவம் இல்லை. ஆனால் இந்த கலை முறையாக அறிவியல் மயமாக்கபட வேண்டும் என கருதுகிறேன். "ஐந்து மைலை பத்து நிமிடத்தில் ஓடி கடப்பதன் விளைவுகள்" முறையாக ஆராயபடதுபோல் யோகாவும் ஆராயபடவேண்டும்.

How Yoga Can Wreck Your Body

http://www.nytimes.com/2012/01/08/magazine/how-yoga-can-wreck-your-body.html?pagewanted=all


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// யோகாவும் ஆராயப்படவேண்டும். ///

உண்மை... எனது நண்பர் இதில் தீவிரமாகி இறந்தே விட்டார்... அவருக்கு இரண்டு மகள்கள்...