கூலிதொழிலாளி --> சாப்ட்வேர் முதலாளி
--
ஜோதி ரெட்டி ஆந்திராவில் வாரங்கல் மாவட்டத்தில் ஒரு கூலி தொழிலாளியின் நான்கு குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர். வறுமை காரணமாக அவர் தந்தையே அவரை அனாதை விடுதியில் சேர்த்துவிட்டார். பத்தாம் வகுப்பு வரை அங்கெ படித்த ஜோதிக்கு 16 வயது ஆனதும் அவர் பெற்றோர்கள் அவரை சங்கி ரெட்டி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். 18 வயதில் இரு பெண்களுக்கு தாயானார் ஜோதி.
அதன்பின் தினம் ஐந்து ரூபாய் கூலிக்கு விவசாய தொழிலாளியாக பணிபுரிந்தார் ஜோதி. வேலை செய்துகொண்டே அம்பேத்கர் திறந்த வெளி பல்கலைகழகத்தில் படித்தும் வந்தார். அதில் பி எட் முடித்து ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அதன்பின் சி .எஸ். அமெரிக்கா எனும் கம்பனியில் சேர்ந்து படிப்படியாக மேலே வந்து இன்று கீ சாப்ட்வேர் எனும் அமெரிக்க கம்பனியின் சி.ஈ.ஒவாக உயர்ந்துள்ளார்.
மனித முயற்சியின் விளைவால் வரும் வெற்றிகளுக்கு மிக பெரிய முன்னுதாரணமாக திகழும் ஜோதி ரெட்டியை மனதார வாழ்த்துவோம்
2 comments:
Fruitful post!
சிறப்பான தன்னம்பிக்கை பகிர்வு.... பாராட்டுக்கள்....
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
Post a Comment