Friday, February 10, 2012

பசுமைவாதிகளின் புதிய லேகியம்: சி.எப்.எல் பல்புகள்




பசுமைவாதிகளின் புதிய லேகியம்: சி.எப்.எல் பல்புகள்

cfl-lamps.jpg

பசுமை இயக்க கோமாளிகளின் எதிரிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது குண்டு பல்பு. நூறாண்டுகளுக்கும் மேலாக பயன்பட்டுவரும் குண்டுபல்பு மேல் இவர்களுக்கு கோபம் வர காரணம் அது அதிகமான மின்சாரத்தை விழுங்குகிறது என்பதுதான். அதற்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கிய நகைச்சுவை உணர்வாளர்களின் நைட் இன் ஷைனிங் ஆர்மராக வந்து சேர்ந்தது சி.எப்.எல் பல்பு.

அறுபது வாட்ஸ் குண்டு பல்ப் பயன்படும் இடத்தில் 13 வாட்ஸ் சி.எப்.எல் பல்பு பயன்படுத்தினால் போதும் என்ற காரணத்தால் சி.எப்.எல் பல்பு மூலம் மின்சாரத்தை மிச்சமாக்கலாம் என கணக்குபோட்டு அதை ஹீரோவாக்கி, குண்டுபல்பை வில்லனாக்கி பிரச்சாரம் துவக்கினார்கள் பசுமைவாதிகள். குண்டு பல்பை பத்து சென்டு முதல் முப்பது சென்டு விலையில் வாங்கலாம்.சி.எப்.எல் பல்பு விலை மூன்றுடாலர் அல்லது இரண்டு டாலர்.இந்த அதிக விலையை நியாயபடுத்த ஒரு சி.எப்.எல் பல்பை பயன்படுத்தினால் அதன் ஆயுளில் இத்தனை ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் என புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டார்கள்.

ஏட்டு சுரைக்காய் கூட்டுகுதவாது எனும் கதையாய் இவர்கள் கணக்கு மக்களிடம் எடுபடவில்லை. அதனால் அடுத்து அரசாங்கத்தை நெருக்கி சி.எப்.எல் பல்புகளுக்கு மானியத்தை அள்ளிவிட்டார்கள்.அதுவும் போதாது என கடைசியில் குண்டு பல்பை தடையே செய்யும் சட்டத்தை ஐரோப்பிய நாடுகளில் கொண்டுவந்துவிட்டார்கள்.அமெரிககவில் ரிபப்ளிகன்கள் அந்த சட்டத்தை கடுமையாக போராடி சமீபத்தில் மாற்றினார்கள்.

சி.எப்.எல் பல்பில் என்ன பிரச்சனை?

நிறைய..சி.எப்.எல் பல்பில் மெர்க்குரி இருக்கு.மெர்க்குரி என்பது விஷம். மெர்க்குரி மனித உடலில் பட்டால், எக்ஸ்போஸ் ஆனால் கடும் வியாதிகள் வரும்.குண்டு பல்பை நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துகிறோம்.அதை எப்படி பயன்படுத்துவது என்பது அனைவருக்கும் தெரியும்.யூசர் மேன்யுவல் தேவை இல்லை.

ஆனால் சி.எப்.எல் பல்பை சாதாரணமாக நினைத்து வாங்கி வருகிறோம்.சி.எப்.எல் பல்பு சாதாரணமனாது அல்ல.யூசர் மேன்யுவல் படிக்காமல் அதை பயன்படுத்த கூடாது.உதாரணமா குண்டுபல்பு உடைந்தால் அதை துடைப்பத்தில் துடைத்து வீசிவிடலாம். ஆனால் சி.எப்.எல் பல்பு உடைந்தால் அதில் உள்ள மெர்குரி அறையெங்கும் சிந்திவிடும், அமெரிக்க இ.பி.ஏ (சுற்றுபுற சூழல் மையம்) சி.எப்.எல் விளக்கு உடைந்தால் என்ன செய்யவேண்டும் என ஒரு மிகபெரிய ப்ரிசீஜர் மேன்யுவலே வைத்து உள்ளது.அதிலிருந்து



1. வேக்வம் க்ளீஇனரில் எடுக்க கூடாது. மெர்க்குரி போய் அடைத்து கொள்ளும்.அப்புறம் வேக்வம் க்ளீனரை தூக்கி தான் வீசணும்.

2. துடைப்பத்திலும் பெருக்க கூடாது. மெர்க்குரி உருனடையாக மாறி அறையெங்கும் ஓடிவிடும். மெர்க்குரி மிக ஆபத்தான கெமிக்கல்.அறைக்குள் எக்ஸ்போஸ்ட் மெர்க்குரி இருப்பது வியாதிகளை வரவழைக்கும்.

2. துணி மேல் சி.எப்.எல் பல்பு உடைந்தால் அந்த துணியை வாசிங் மெஷினில் போட்டால் மெர்க்குரி

3. செப்டிக் டேங்கில் அடைத்துகொள்ளும்.சுத்தம் செய்ய நிரைய செலவு ஆகும்.

இன்னும் ஆயிரத்தெட்டு ப்ரொசீஜரை பின்பற்றி சுத்தம் செய்யணும். இந்த இனைப்பில் பார்க்கலாம்.


ஒரு சி.எப்.எல் பல்பு உடைந்தால் இத்தனையையும் செய்யணும். குண்டு பல்புக்கு இந்த சிக்கல் எதுவும் இல்லை.இந்த பிரச்சனைகளால் சி.எப்.எல் பல்புகளை கர்ப்பிணிகள், குழந்தைகள் இருக்கும் அறைகளில் பயன்படுத்த கூடாது என மெயின் மாநில அரசின் பாதுகாப்புதுறை எச்சரிக்கை செய்கிறது.


The law intent on eliminating incandescents flies in the face of the Maine DEP safety recommendation that "homeowners consider not utilizing fluorescent lamps in situations where they could easily be broken, in bedrooms used by infants, small children, or pregnant women, or over carpets in rooms frequented by infants, small children and pregnant women."


சி.எப்.எல் பல்பு மின்சாரத்தை மிச்சமாக்குகிறதா?

இது அடுத்த பொய். லேபில் விஞ்ஞானிகள் மேற்பார்வையில் ஆம் சி.எப்.எல் பல்பு மின்சாரத்தை மிச்சமாக்கும். ஆனால் சி.எப்.எல் பல்பை எப்படி பயன்படுத்தவேண்டும் என பொதுமக்களுக்கு அதிகம் தெரிவதில்லை.

சி.எப்.எல் பல்பு அட்டையில் போட்டிருப்பது போல ஏழரை வருடம் எல்லாம் நீடிப்பதில்லை.நாளாக நாளாக அவற்றில் இருந்து வரும் ஒளி மங்கிவிடும்.உதாரணமா அவற்றின் அட்டையில் போட்டிருக்கும் ஆயுளில் 40% கடந்தபிறகு அதன் ஒளி 58% குறைந்துவிடும். அறையில் போதுமான வெளிச்சம் இல்லை எனும்போது நாம் இன்னொரு பல்பை வாங்கி மாட்டணும்.

சி.எப்.எல் பல்பின் எனெர்ஜி பயன்பாடு குறைவாக இருக்கவேண்டுமெனில் ஆன் செய்து 15 நிமிடத்துக்கு அதை ஆஃப் செய்யவே கூடாது. ஒரு நாளுக்கு பலமணிநேரம் அவை எரியவேண்டும்.தொடர்ந்து நான்கு மணிநேரமாவது அது எரிந்தால் தான் அதில் சொல்லபடும் அளவு மின்சாரம் குறைவாக பயனாகும். இது எத்தனை பொதுமக்களுக்கு தெரியும் என யோசித்து பாருங்கள்.அடிக்கடி பவர் கட் ஆகும் நிலையில் இது எப்படி சாத்தியம் ஆகும்?

அடிக்கடி ஆன் செய்து ஆஃப் செய்யும் இடங்களில் அவற்றை மாட்டினால் (பாத்ரூம், ஷெட்) அவற்றின் ஆயுள் மிகவும் குறைந்துவிடும். குண்டுபல்புக்கு இந்த சிக்கல் இல்லை.

சி.எப்.எல்லின் முக்கிய ஆபத்து


சி.எப்.எல் பல்பின் முக்கிய பிரச்சனை அதை பாதுகாப்பாட டிஸ்போஸ் செய்வதுதான். மெர்குரி என்பது விஷம்.குண்டு பல்பை எடுத்து குப்பைதொட்டியில் வீசலாம். ஆனால் சி.எப்.எல் பல்பை அப்படி டிஸ்போஸ் செய்ய முடியாது. அமெரிக்காவில் பல நகரங்களில் சி.எப்.எல் பல்புகளை பாதுகாப்பாக டிஸ்போஸ் செய்ய ரிசைக்ளிங் மையங்களை துவக்கி உள்ளனர். அதை மற்ற குப்பைகளுடன் டிஸ்போஸ் செய்வது சட்டபடி குற்றம் என மாநகாராட்சிகள் கடுமையான விதிகளை அமுல்படுத்தி உள்ளன.காரணம் சி.எப்.எல் பல்பில் உள்ள மெர்குரி நிலத்தடிநீருடன் கலந்து மாசுபடுத்திவிடும், வியாதிகளை வராவ்ழைக்கும் என்பதுதான்.

நம் ஊரில்  இதெல்லாம் சாத்தியமா என யோசியுங்கள்.?தமிழ்நாடு முழுக்க எத்தனை ஊர்களில் சி.எப்.எல் பல்பு ரிசைக்ளிங் சென்டர்கள் உள்ளன சொல்லுங்கள்.இருந்தாலும் பொதுமக்கள் அதை அங்கே கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்பது நடக்கும் விஷயமா?இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாத பாமர மக்கள் அதை தெருவில் அல்லது குப்பைதொட்டியில் தூக்கி வீசுவார்கள். நம் ஊரில் உடைந்த பல்பை குப்பை தொட்டியில் வீசுவார்கள்.சி.எப்./எல் பல்பை இப்படி தமிழ்நாடு முழுக்க வாங்கி கண்டமேனிக்கு தூக்கி வீசினால் நிலத்தடி நீர் மாசுபட்டு கடுமையாக வியாதிகள் பரவும்.

சீலிங் ஃபேனில் சுழலுவது போல சி.எப்.எல் பல்புகளை மாட்ட கூடாது என எத்தனை பேருக்கு தெரியும்?மாட்டினால் பல்பு காலி.

சொல்வது சி.எப்.எல் பல்புகளை உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யும் ஜெனெரல் எலெக்ர்டிக் கம்பனி.

http://www.gelighting.com/na/business_lighting/faqs/cfl.htm#2 

5. Can I use a CFL in applications involving vibration such as a ceiling fan or garage door opener?

Currently it is not recommended to use CFLs in vibrating environments. Vibration can cause the electronics in the CFL to fail.


டிம்மர் ஸ்விட்ச் இருக்கும் இடங்களில் சி.எப்.எல் பல்பை மாட்டகூடாது..அதுக்குன்னு தனியா சி.எப்.எல் பல்பு இருக்கு.அதைதான் வாங்கி மாட்டணும்.

மொத்தத்தில் ஏகப்பட்ட விதிமுறைகளை கையாண்டால் தான் சி.எப்.எல் பல்பு பயன்படுத்த முடியும். குண்டு பல்பு வாங்கும்போது யாராவது யூசர் மேனுயுவல் வாங்கி படிச்ச நினைவிருக்கா?சி.எப்.எல் பல்பு வாங்கினால் அட்டையில் இருக்கும் யூசர் மேன்யுவலை படிப்பது மிக அவசியம்..

ஆக மொத்தத்தில் மின்சாரத்தை மிச்சபடுத்துகிறேன், உலகை காப்பாற்றுகிறேன் என சொல்லி பசுமை இயக்க ஜோக்கர்கள் அடிக்கும் கோமாளிகூத்தில் உலகத்தை கெடுக்க வந்த இன்னொரு புரட்டு லேகியம் தான் சி.எப்.எல் பல்பு. துரதிர்ஷ்டவசமாக இவர்கள் சமூகத்தில் அறிவுஜீவிகளாக மதிக்கபடுவதால் இவர்கள் தூக்கி சுமக்கும் இம்மாதிரி லேகியங்கள் சமூகத்தில் எளிதில் விற்பனையாகிவிடுகின்றன.தமிழ்நாட்டு கிராமங்களில் இதை மாட்டி என்னென்ன அனர்த்தம் ஆகபோகிறது என நினைத்தால் இப்பவே பயமாக இருக்கு.


8 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

திரு செல்வன்!

சி எப் எல் பல்புகளில் உள்ள பாதரச அபாயம் உண்மையிலேயே கவலைப்படவேண்டிய விஷயம் தான் தான்!சாதாரண ட்யூப் லைட்டுகளையே நாம் அலட்சியமாகக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுப் போக, குப்பை பொறுக்கும் நபர்கள் அதில் இருபுறமும் உள்ள அலுமினியத்துக்காக அங்கேயே உடைத்துப் போட்டுவிட்டு, இந்த விஷத்தைத் தள்ளிவிட்டுப் போவது இங்கே மிக சர்வசாதாரணமாகப் பார்க்கக் கூடிய ஒன்று தான்.ஜனங்களுடைய இந்த அலட்சிய மனோபாவம் தான் கொடைக்கானலில் ஹிந்துஸ்தான் லீவர் பாதரசக் கழிவுகளைக் கொட்டிவிட்டுப் போக, அதை சுத்தம் செய்யும் செலவைக் கூட கம்பனி தரவேண்டாம் என்று இங்கே இருந்த அரசியல் ஆபத்பாந்தவர்கள் காப்பாற்றினார்கள்.

பொதுமக்களிடத்தில் சுற்றுச்சூழலைக் குறித்தான விழிப்புணர்வு அறவே இல்லை.எங்கேயோ மழை பெய்கிறது என்று மரத்துபோய்விட்ட சமூகச்சூழல் நம்முடையது. அரசியல்வாதிகளின் இலவசத் தகிடுதத்தங்கள் இன்னமும் ஜனங்களிடம் இருக்கிற அறிவை மழுங்க அடித்துக் கொண்டிருக்கின்றன.இருக்கிற கொஞ்சநஞ்ச சுற்றுச்சூழல்வாதிகளும் ஏதோ ஒன்றை பிடித்துக் கொண்டு அதோ வருது பூச்சாண்டி என்று அலறிக் கொண்டிருக்கிறார்களே தவிர, என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து ஒரு சரியான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை.

நிகழ்காலத்தில்... said...

சி.எப்.எல் பல்பில் உள்ள மெர்குரி நிலத்தடிநீருடன் கலந்து மாசுபடுத்திவிடும், வியாதிகளை வரவ்ழைக்கும் என்பதுதான்.

சி.எப்./எல் பல்பை இப்படி தமிழ்நாடு முழுக்க வாங்கி கண்டமேனிக்கு தூக்கி வீசினால் நிலத்தடி நீர் மாசுபட்டு கடுமையாக வியாதிகள் பரவும்.

இதைப்படிக்கவே உள்ளம் கொதிக்குது

dheva said...

மிக அருமையான் பகிர்வு செல்வன்...!

தங்களின் கட்டுரைகளை எமது கழுகு விழிப்புணர்வு தளத்தில் பகிரலாமா? தங்களின் அனுமதிக்குப் பிறகு தங்களின் பெயரோடு பகிர்கிறோம்...!

எமது தளத்தின் முகவரி..: www.kazhuku.com

நன்றிகள்..!

Unknown said...

நன்றி திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா, சிவா மற்றும் தேவா

இது போன்ற டெக்னாலஜிகளை பயன்படுத்த நிறைய தற்பாதுகாப்பு எற்பாடுகள் அவசியம். இதை எல்லாம் மக்களுக்கு தெரிவிக்காமல், அதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் இதற்கு அனுமதி அளித்ததும், இதை அரசே மின்வெட்டை போக்கும் அருமருந்தாக பிரச்சாரம் செய்து வருவதும் தான் கவலைக்க்குரிய விஷயம்.

தேவா ..இதை நிச்சயமாக கழுகு தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். கட்டுரையை பகிர முன்வந்ததற்கு நன்றி.

dheva said...

மிக்க நன்றிகள் செல்வன்...!

பயனுள்ள கட்டுரைகள் தங்களின் தளத்தில் நிறைய இருக்கின்றன...! கழுகு அவற்றை தங்களின் பெயரோடு வெளிடும்...!

அனுமதிக்கு மீண்டும் நன்றிகள்!

Anonymous said...

LEDs are getting popular and soon will replace fluorescent bulbs.

Unknown said...

LED's are prohibitively expensive.

Check my latest article "பசுமைவாதம் இந்தியாவுக்கு கட்டுபடியாகாத லக்சுரி"

Vetirmagal said...

சி எப் எல் பல்புகளில் உள்ள பாதரச அபாயம் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்.

நன்றி.