Sunday, January 08, 2012

தேர்தல் 2012

நேற்றும், இன்றும் ரிபப்ளிக்கன் கட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட டிபேட்டுகளை முழுக்க பார்த்தேன். இரண்டு நாட்களில் தொடர்ந்து மொத்தம் நான்கு மணிநேர விவாதம். நான் ஆதரித்த ராசியோ என்னவோ ரிக் பெர்ரி கவிழ்ந்துவிட்டார்:-). மிட் ராம்னியும், ரிக் சண்டோரமும் தான் இப்போது லீடிங்.

ரிக் சண்டோரம் அடிப்படையில் சோஷியல் கன்சர்வெடிவ்.இவர் கர்ப்பதடைக்கு எதிரானவர் என சொல்லி டெமக்ராடிக் கட்சியினரும் அவர்கள் சார்பு ஊடகங்களும் பிரச்சாரம் நடத்தி வருகின்றன.ரிக் சண்டோரம் தான் அப்படி சொல்லவே இல்லை என்றும் அடிப்படையில் தனக்கு கர்ப்பதடை முறைகளில் நம்பிக்கை இல்லை என்றும் அதை மற்றவர்கள் பயன்படுத்தினால் தனக்கு ஆட்சேபம் இல்லை என்றும் சொல்லி வருகிறார்.சண்டோரம் கலந்துகொண்ட ஒரு டவுன் ஹால் நிகழ்ச்சியை பார்த்தேன். நியூ ஹாம்ப்ஷயர் மாநிலம் கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யபட்டிருந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் சண்டோரத்தை கேள்வி கேட்க திரண்டனர்.

Rick-Santorum3-460x307.jpg

ரிக் சண்டோரம்


"ஓரினசேர்க்கையாளர்கள் திருமணம் செய்வதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?" என சண்டோரத்தை ஒருவர் கேட்டார்.

"திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இடையே தான் நடக்கவேண்டும்" என்றார் சண்டோரம்.

"ஆணும் ஆணும் கல்யாணம் செய்துகொண்டால் என்ன?"

சற்று யோசித்த சண்டோரம் "அப்ப யார் வேண்டுமானால் யாரை வேண்டுமனாலும் கல்யாணம் செய்துகொள்ளலாமா?"

"ஆமாம்" என மாணவர்கள் கோரசாக குரல் எழுப்பினர்

"மூன்று ஆண்கள் ஒருவரை ஒருவர் கல்யாணம் செய்துகொண்டால்..?ஒரு பெண் இரு ஆண்களை திருமணம் செய்துகொண்டால்?"

"ஒத்துகொள்ள முடியாது" என்றார் மாணவர்

"அதே மாதிரிதான். யாரும் யாரையும் கல்யாணம் செய்துகொள்ளலாம் என சொல்ல கூடாது.திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே மட்டும்தான் நடைபெறவேண்டும்" என்றார் சண்டோரம்.

மிட்ராம்னியின் டவுன் ஹால் சந்திப்பில் இன்னும் சுவாரசியம். வால்ஸ்ட்ரீட்டை கைபற்றுவோம் இயக்கத்தை சேர்ந்தவர் ஒருவர் அவரது சந்திப்பில் நுழைந்துவிட்டார். "பன்னாட்டு கம்பனிகளும் மனிதர்களே என நீங்கள் சொன்னதை வாபஸ் வாங்குங்கள்" என்றார்.

"கம்பனிகள் என்பது கட்டிடங்களோ, மெசின்களோ அல்ல.அவை மனிதர்களால் ஆனவை.அவற்றை ஏதோ பணம்காய்ச்சி மரம் என நினைத்து அவற்றின் மேல் வரிபோடுவதும், வரிபோட்டு அந்த பணத்தை எடுத்து ஏழைகளுக்கு மறுவினியோகம் செய்யலாம் என நினைப்பதும் அடிப்படையில் முட்டாள்தனம்.கம்பனிகள் தான் வேலைகளை உருவாக்குகின்றன.அவர்களிடம் அதிக பணம் சேர,சேர அதிக வேலைகள் உருவாகும்.அரசிடம் பணம் இருந்தால் அரசு தண்ட செலவுதான் செய்யும்" என்றார் மிட் ராம்னி.

நாளை நடைபெறவ்ருக்கும் பிரைமரியில் ராம்னி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் என கருத்துகணிப்புகள் கூறுகின்றன.

Mitt.800x600.jpg



No comments: