Thursday, October 27, 2011

எட்டாம் அறிவு

7aam-1-625x448.jpgஏ.ஆர்.முருகதாஸ் ஆபிஸில் பாண்டியன் நுழைந்தபோது அவர் ஸ்டோரி டிஸ்கசனில் மும்முரமா இருந்தார்.ஆனால் பாண்டியனை பார்த்ததும் "வாய்யா..பாண்டியா..இத்தனை நாள் கட்சி ஆபிஸ்லேயே சுத்திகிட்டு இருந்தே.இப்ப தான் என் நினைவு வந்ததா?" என அன்புடன் வரவேற்றார்

"ஏழாம் அறிவு பிரமாதங்க" என்றார் பாண்டியன்."போதி தருமருக்கு அடுத்து யார் வாழ்க்கை வரலாற்றை எடுக்க போறீங்க?"

"அடுத்து மகாத்மா காந்தி வரலாறுதான்.அதுக்கு தான் கதை டிஸ்கசன் நடக்குது" என்றார் முருகதாஸ்

"காந்தியா நடிப்பது யாரு?" என்றார் ஆவலுடன் பாண்டியன்

"நம்ம சிம்புதான்"

"என்னது சிம்புவுக்கு காந்தி வேஷமா?அப்ப கஸ்தூரிபா?"

"கஸ்தூரிபா வேஷத்துக்கு ஸ்ரேயாவை கேட்டிருக்கோம். செகண்ட் ஹீரோயின் அசின்.அதுபோக ஒரு ஐட்டம் சாங்குக்கு முமைத்கான். விவேக் காலேஜ் லெக்சரரா வர்ராரு.டி.ஆரும் ஒரு கவுரவ ரோலில் வராரு"

"எனக்கு தலையே சுத்துது" என்றார் பாண்டியன்."காந்தி படத்துல காலேஜ் சீனெல்லாம் எங்கே வருது?"

"என்னப்பா வரலாறு தெரியாத ஆளா இருக்கியே" என்றார் முருகதாஸ்..."இப்படிதான் போதிதருமனை பத்தியும் யாருக்கும் தெரியலை.நான் சினிமா எடுத்து தான் தெரிஞ்சது.இப்ப காந்தி லண்டன்ல பார் அட்லா படிச்சதும் நான் சொல்லிதான் தமிழனுக்கு தெரியபோகுது.."

"அப்ப அந்த லண்டன் காலேஜ் சீனெல்லாம் படத்துல வருதா/"

"ஆமாம்.யங்க் காலேஜ் ஸ்டூடண்டா காந்தி லா காலேஜ் போறார்.அங்கே படிக்க வரும் அசின் காந்தியை ஒருதலையா காதலிக்கிறார். "எவண்டி உன்னை பெத்தான்?" என ஒரு டூயட்டுக்கு ரெண்டு பேரும் ஸ்விட்சர்லாந்து போறாங்க.."

"இதெல்லாம் எந்த புஸ்தகத்துல இருக்கு?"

"அட போப்பா....நான் தான் யாருக்கும் தெரியாத வரலாற்றை தான் எடுப்பது வழக்கமாசே? நேரா லண்டன் காலேஜ் போயி அங்கே காந்தி படிச்ச காலேஜ்ல இருந்த பொண்ணுங்க லிஸ்டை வாங்கிட்டு வந்தேன்.அதில் ஒருத்தர் பேர் எலிசபெத்.,அந்த ரோலில் தான் அசின் நடிக்கறார்.."

"முமைத் ஏதோ குத்தாட்டம் ஆடுவதா சொன்னீங்களே?அது என்ன கணக்கு?"

"காந்தி சத்தியசோதனையில் விபசார விடுதிக்கு போய் மனைவி நினைவு வந்து திரும்ப வந்ததா எழுதிருக்கார்.அந்த சீனில் விடுதியில் முமைத் குத்தாட்டம் போடுவதா பாட்டு வெச்சிருக்கோம்"

"கிழிஞ்சது கிருஷ்ணகிரி.. டி.ஆருக்கு என்ன ரோல்?"

"அவர் தான் சுபாஷ் சந்திர போசா வர்ராரு.வசனத்துல பிச்சி உதறுவாரு..ப்ரிட்டிஷ்காரனை பார்த்து "இந்தியாவில் பறக்குது உன் கொடி.அதுக்கு நான் வைப்பேன் வெடி.நீ தப்பிச்சுக்கோ ஓடி.இல்லன்னா வைப்பேன் தாடி.."ன்னு பேசும் சீனில் அரங்கமே அதிரும்பாரு"

"நேருவா யாரு வர்ரா" என்றார் பாண்டியன் அதிர்ச்சியுடன்

"கமலை கேட்டிருக்கோம்.எட்வினா மவுன்ட்பேட்டனா மன்மதன் அம்பில் நடிச்ச வெள்ளைகார அம்முணியை கேட்டிருக்கோம்."

"அவருக்கும் ஒரு டூயட்டா?ஏனுங்க நீங்க ஏன் மறுபடி ப்ழையபடி மசாலா படமாவே எடுக்க கூடாது?தலைவருங்களை விட்டிருங்க.அவங்க உங்களுக்கு என்ன பாவம் பண்ணினாங்க/" என கேட்டார் பாண்டியன்

"சுதந்திரம் வாங்கி குடுத்தாங்க இல்லை?அப்புறம் நாம படமா எடுக்கவேண்டியதுதானே/" என்றார் முருகதாஸ்

"அது சரிதான்" என ஒத்துகொண்டார் பாண்டியன்






No comments: