சோகுஷின்பிட்சு எனப்படும் ஜப்பானிய பெளத்த் மம்மிகளை பற்றி படித்தேன்.இது பெளத்த பிட்சுகள் தம்மையே சமாதியாக்கிகொள்ளும் முறை.
இந்த முறைப்படி புத்தராக துணியும் பிக்ஷுகள் மூன்று வருடங்களுக்கு விதைகள் மற்றும் பருப்புகளை மட்டும் உட்கொள்வர்.அத்துடன் கடும் உடற்பயிற்சியை மேற்கொள்வர்.இது அவர்கள் உடலில் இருந்த கொழுப்பு முழுவதையும் கரைத்துவிடும்.அதன்பின் மூன்று வருடங்களுக்கு மரபட்டை மற்றும் விதைகளை மட்டும் உட்கொள்வர்.அத்துடன் உருஷி மரத்திலிருந்து தயாரித்த விஷ டீயை தினமும் அருந்துவர்.இந்த மரசாறு பாத்திரம் கழுவ பயன்படும் அளவு வீரியமிகுந்த விஷம்.இந்த உணவு வாந்தியை வரவழைத்து உடலில் உள்ள நீர்சத்துக்களை முழுக்க அகற்றிவிடும்.அதுபோக இந்த டீ உடலை விஷமாக்கி இறப்புக்கு பின் உடலை எந்த பூச்சியும் உண்னாமல் செய்துவிடும்
இப்படி மூன்று வருடங்கள் கழிந்தபின்னர் அந்த பிக்ஷு சமாதி ஒன்றில் பத்மாசன நிலையில் அமர்வார்.அவர் உடலை விட கொஞ்சமே பெரிதான அந்த சமாதியில் நகர கூட இடம் இருக்காது.காற்று போக டியூப் ஒன்றும் மணி ஒன்றும் இருக்கும்.தினமும் காலையில் அந்த மணியோசை கேட்டால் பிக்ஷு உயிருடன் இருக்கிறார் என பொருள்.மணியோசை நின்றால் அடுத்த நாளே குழாய் பிடுங்கபட்டு டியூப் பிடுங்கபட்டு சமாதிக்கு சீல் வைக்கபடும்.
அதன்பின் பலவருடங்கள் கழித்து சமாதியை திறப்பார்கள்.பிணம் அழுகி இருந்தால் மீண்டும் சமாதியின் உள்ளே வைத்து அடைத்துவிடுவார்கள்.ஆனால் வழிபட மாட்டார்கள்.பிணம் அழுகாமல் இருந்தால் அந்த பிக்ஷு புத்தரானதாக கருதி வழிபடுவார்கள்.
இந்த சோகுஷின்பிட்சு முறையை ஜப்பானிய அரசு 20ம் நூற்றாண்டில் தடை செய்துவிட்டது.
No comments:
Post a Comment