Saturday, September 10, 2011

மனிதர்களால் செவ்வாய் கிரகம் போக முடியுமா?

நெட்ப்ளிக்ஸில் இந்த தலைப்பில் ஒரு டாக்குமெண்டரியை பார்த்தேன்.

நிலவுக்கு செல்ல முடிந்த மனிதனால் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல முடியுமா என்பதுதான் விவாதபொருள்.தற்போது இருக்கும் டெக்னாலஜியை வைத்து செல்லமுடியாது என அந்த டாக்குமெண்டரி கூறுகிறது.இதற்கான காரணங்கள் பின்வருமாறு:

1) புவியீர்ப்பு விசையின்மை

ஸ்பேசில் புவியீர்ப்பு விசை இல்லை.செவ்வாய் கிரகம் செல்வது 2 - 3 வருட திட்டம்.இத்தனை வருட காலம் விண்வெளியில் புவியீர்ப்பு விசையின்றி இருப்பது மனித உடலில் பல மாற்றங்களை தோற்றுவிக்கும்.குறிப்பாக எலும்பு இழப்பு (போன் லாஸ்) அதிகரிக்கும். இதற்கு முன்னர் 7 - 8 மாதம் ரஷ்ய ஸ்பேஷ்ஷிப்பில் வசித்த ரஷ்ய ஆஸ்ட்ரானெட் ஒருவருக்கு அந்த 7 - 8 மாத காலத்தில் சுமார் 14% எலும்பு இழப்பு ஏற்பட்டது.2 - 3 வருட காலம் விண்வெளியில் இருந்தால் இதனால் உயிரிழப்பே ஏற்பட்டுவிடும்

இதற்கான தீர்வாக உடல்பயிற்சியை முயன்றார்கள்.ஆனால் அது பலன் அளிக்கவில்லை.ஆர்தர் கிளார்க் எழுதிய 2001 எ ஸ்பேஸ் ஓடிஸி எனும் நாவலில் இதற்கு ஒரு தீர்வு முன்மொழியபட்டது.அதாவது விண்கலத்தை சுழல வைத்து செயற்கையாக புவியீர்ப்பு விசையை உருவாக்கல்.ஆனால் இத்தகைய சுழலும் விண்கலத்தை உருவாக்குவது மிக செலவு பிடிக்கும் விஷாய்ம் என்பதால் விண்கலனுக்குள் சுழலும் சேம்பரை வைத்து சென்ட்ரிபியூகல் போர்ஸ் மூலம் புவியீர்ப்பு விசைக்கு நிகரான சக்தியை உருவாக்கி எலும்பு இழப்பை தடுக்கலாம் எனும் ரீதியில் ஆய்வுகள் நடந்துவருகின்றன.இது வெற்றி அடைந்தால் செவ்வாய் பயணத்துக்கான தடைக்கல்களில் ஒன்று அகலும்.

astronaut.gif

2) காற்றழுத்தம்

வாயுமண்டலம் நம் உடலை நாலாபக்கமும் அழுத்துகிறது.பூமிக்கு பல மைல் தொலைவில் இருந்து நம்மை காற்று அழுத்துவது நம் ஒவ்வொருவர் உடலின் ஒவ்வொரு இஞ்சிலும் 15 பவுண்டு எடையை வைத்து அழுத்துவதுக்கு சமம்.இந்த அழுத்தத்துக்கு நம் உடலின் உள்ளே இருக்கும் காற்றானது எதிர் அழுத்தம் தருவதால் நமக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை.

விண்வெளியில் இந்த அழுத்தம் இல்லை.அதனால் விண்வெளியில் நாம் ஸ்பேஸ் சூட் இன்றி நடந்தால் நம் உடலில் ரத்த நாளங்களில் ஓடும் காற்று சோடாவை திரந்தால் எப்படி பொங்குமோ அப்படி குமிழியாக பெருகி ரத்தத்தை விட்டு வெளியேறும்..அதாவது நம் உடல் நாலாபக்கமும் இழுபட்டு ஜூஸாக மாறி உடனடி மரணம்.இதை தடுக்க ஸ்பேஸ்சூட்டில் செயற்கையாக காற்ரழுத்தம் உண்டாக்கபடுகிறது.

இந்த ஸ்பேஸ் ஸூட் ஒரு பிரமாண்டமான பலூன் மாதிரியானது.இதற்குள் ஆள் இருப்பது பெரிய பலூனுக்குள் ஆள் இருப்பதுபோல.இந்த உடையை வைத்துகொண்டு ஸ்பேஸில் நம்மால் நடக்க இயலும்.ஆனால் புவியீர்ப்புவிசை உள்ள பகுதியில் இதை அணிந்தால் நம்மால் சாதாரணமாக நடக்கவே முடியாது.

நிலவுக்கு சென்ற ஆஸ்ட்ரநாட்டுகளால் துள்ளி குதித்து தான் பயணிக்க முடிந்ததே ஒழிய சாதாரணமாக பூமியில் நடப்பது போல் நடக்க இயலவில்லை.நடக்கமுயன்றபோது அவர்கள் கீழே விழுந்தனர்.நிலவில் புவியீர்ப்பு விசை பூமியை விட ஆறுமடங்கு குறைவு என்பதால் அவர்களால் துள்ளிகுதித்து தாவ முடிந்தது.ஆனால் நடக்க இயலவில்லை

செவ்வாயில் நிலவை விட புவியீர்ப்பு விசை அதிகம் என்பதால் துKKஇ குதிக்கவும் முடியாது.பூமியை போல நடக்கவும் முடியாது.விண்வெளியை போல மிதக்கவும் முடியாது.

ஆக நமக்கு புதுடெக்னாலஜியில் அமைந்த ஸ்பேஸ் சூட் தேவை.

அதற்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன.மனித உடலை இறுக்கமாக பிளாஸ்திரி போன்ர துணியால் இறுக்க கட்டி,ஒவ்வொரு இஞ்சிலும் அழுத்தத்தை செய்ற்கையாக உருவாக்ககூடிய ஸ்பேஸ்சூட்டை ஆராய்ந்து வருகிரார்கள்..அதாவது சுருக்கமாக சொன்னால் உலகின் மிக,மிக இறுக்கமான ஆடை.அதை பூமியில் அணிந்தால் உடலெங்கும் வலி பின்னி பெடலெடுத்துவிடும்.ஆனால் செவ்வாயில் பிரச்சனை இல்லாமல் அதை அணிந்துகொண்டு நடக்க இயலும்.

P8080014-HumanOnMars.jpg

3) உணவு:

spacefood.jpg

2 - 3 வருடம் கெட்டுபோகாமல் இருக்கும் உனவுகலை கண்டறிவதிலும் சிக்கல்கள் உள்ளன.செவ்வாய்க்கு செல்பவர்களுக்கு பேலன்ஸ்டு உணவு வேண்டும்.ஆனால் செவ்வாய்க்கு செல்பவர் ஒருவருக்கு 7000 மீல்ஸ்கலை தயார் செய்யவேண்டும்.எல்லா உனவும் 2 - 3 வருடம் தாக்குபிடிப்பதில்லை.பல உணவுகளில் வேதியல் மாற்ரஙக்ள் நிகழ்ன்கின்ரன.விண்வெளியில் பாக்டிரியாக்கள் இல்லையெனினும் உணவில் உள்ல சர்க்கரை,பிற அமிலங்கள் இயல்பாக கலந்து வேதியல் மாற்ரத்தை உண்டுபண்ணி உணவை பாழடித்துவிடுகின்றன.ஆக உனவு பிரச்சனையையும் ஆராய்ந்து வருகிரார்கள்

செவ்வாய்க்கு மனிதன் போகிறானோ,இல்லையோ....இந்த ஆய்வுகள் வெற்றி அடைந்தால் நமக்கு 2 - 3 வருடம் கெடாத உணவுகள்,செயற்கை புவியீர்ப்பு விசை,புதிய ஸ்பேஸ்சூட் போன்ரவை கிடைக்கும்.யார் கண்டார்கள்...பூமியில் காற்ரழுத்தம் குரைவாக உள்ல பகுதிகளில் இருப்பவர்கள்,நீண்டதூர பயணம் செல்கிரவர்கள் கூட இவற்றை பயன்படுத்தும் நிலை வரலாம்.இப்படிதான் முன்பு அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்குமான விண்வெளி போட்டி இன்டெர்னெட்டை கண்டுபிடிப்பதில் வந்து முடிவடைந்தது.அதேபோல இனிய விபத்து இப்போதும் நிகழ்ந்தால் மனித இனத்துக்கு நன்மைதானே?


No comments: