Sunday, April 24, 2011

அட்லாண்டிஸ் முதல் லெமூரியா வரை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 46 ரூபாயாக அதிகரித்ததால் ஒபாமாவுக்கு மக்கள் ஆதரவு சரிந்து விட்டது.இதை எப்படி சமாளிப்பது என ஒபாமா தலையில் கை வைத்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார் என்பதை அறிந்து மன்மோகன் நமுட்டு சிரிப்பு சிரிப்பதாக கேள்வி.

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க ஐடியா தருகிறேன் பேர்வழி என ஒபாமா ஊர் ஊராக போய் செவி வோல்ட் வாங்குங்க என சொல்லிகிட்டிருக்கார்.செவி வோல்ட் பாட்டரியில் ஓடும் கார்.அதை வாங்கினால் மாசம் ஐம்பது டாலர் பக்கம் பெட்ரோல் பில் மிச்சமாகுமாம்.ஆனால் கார் விலை $32,500.ஐம்பது டாலரை மிச்சம் பிடிக்க 32,500 டாலர் செலவு செய்வது என்ன கணக்கு என மக்கள் மலைச்சு போய் உட்கார்ந்துள்ளனர்.

பெட்ரோல் விலை குறைஞ்சால் மட்டும் நாம என்ன சுற்றுபயணம் போகமாயா இருக்கோம்?இன்று பெட்ரோல் பாங்குக்கு சென்று பெட்ரோல் போட்டேன்.அப்ப அங்கே ஸ்பானிய மொழியில் என்னவோ எழுதியிருந்தது.உடனே செல்போனால் அதை படம் பிடித்தேன்.புகைப்பம் கீழே

Petrol_-_copy

பாழாபோனா ஆங்கிலம் தமிழை கெடுத்தது பத்தாதுன்னு எசுப்பானிய மொழியையும் கெடுத்து வெச்சிருக்கு.எசுப்பானிய மொழியே தெரியாத என்னால் அங்கே இருக்கும் எசுப்பாங்கில வார்த்தைகளை வெச்சு அது ஏதோ நைட்ரஜன் என்ரிச்சுடு ஷெல் ப்ரீமியம் ஆயில் பத்தின விஷயம்னு புரிஞ்சுக்க முடியுது.

எசுப்பானிய நாட்டில் தனிஎசுப்பானிய இயக்கம் தோன்றி இந்த மாதிரி ஸ்பாங்கில வார்த்தைகளை ஒழித்து தனிஎசுப்பானிய மொழியை உருவாக்க என் வாழ்த்துக்கள்.எசுப்பானிய நாட்டுக்கு பக்கத்துல தான் அட்லாண்டிஸ் கண்டமும் கடலில் மூழ்கியதா சொல்றாங்க.அதையும் ஆராயந்தால் பல திடுக்கிடும் உண்மைகள் கிடைக்கும்.அட்லாண்டிஸ், லெமூரியா கடல்வழி வணிக உறவுகளை கூட ஆராயலாம்.

காரில் பெட்ரோலை போட்டுகொண்டு மில்வாக்கி கோயிலுக்கு சென்றடைந்தேன்.கோயிலுக்கு கூட்டம் அதிகமா வரும் நாட்களில் பார்க்கிங் பண்ன இடம் இருக்காது.அப்ப பக்கத்தில் இருக்கும் குட்ஷெப்பர்ட் சர்ச்சில் காரை நிறுத்த கோயிலும், சர்ச்சும் ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டு இருக்காங்க.மில்வாக்கி கோயிலில் சிவன்,விஷ்ணு,ஐயப்பன்,கணபதி எல்லாம் ஒத்துமையா இருக்காங்க.ஆனால் ஏனோ சைவ கடவுள்கள் எல்லாம் கோயிலின் இடபக்க மூலையிலும், வைணவ கடவுள்கள் எல்லாம் வலபக்க மூலையிலும் பிரதிஷ்டை பண்ணிருக்காங்க.நடுவே மூலவர் சன்னிதி.மூலவர் திருப்பதி வெங்கடாசலபதி.அவர் ஆதிகால சிவன்னு ஒரு கோஷ்டி சொல்லிகிட்டு இருக்கே?ஆனால் இங்கே திருப்பதி வெங்கடாசலபதியை விஷ்ணுன்னு தான் சொல்றாங்க.சாமிக்கு நாமமும் போட்டு வெச்சு, பக்தர்களுக்கு சடாரியும் தலையில் வைக்கிறார்கள்.

சொல்ல மறந்த விஷயம்...அதே கோயிலில் ஜைன ஆலயம் தனியா இருக்கு.

சர்ச்சில் காரை நிறுத்திவிட்டு சைவர்களும்,வைணவர்களும்,ஜைனர்களும் ஒரே காம்பவுண்டில் ஒரே ஆலயத்தில் உள்லே போய் தமக்கு எந்த சாமி வேண்டுமோ அதை கும்பிட்டுவிட்டு சத்தமில்லாமல் வெளியே போகிறார்கள்.இப்படி யுனிட்டி இன் டைவர்சிட்டின்னு இருப்பது தானே இந்துமதம்? ஏசுவும், வெங்கடாசலபதியும்,மகாவீரரும் நல்ல அண்டைவீட்டுகாரர்களாக இருக்கிறார்கள்..அண்டை வீடு என்றாலும் வீடு வேறுதான்.ஆனால் ஒத்துமையாக தான் இருக்கிறார்கள்.

சர்ச்சில் காரை நிறுத்தும்போது ஏசுவை  கும்பிடலாமா என யோசித்தேன்.அப்புறம் சர்ச்சை பார்த்தால் சர்ச் கண்ணில் இருந்து மறைந்துவிட்டது.அங்கே ஏசுவுக்கு பதில் கண்ணனே தெரிந்தான்.அவனே குட் ஷெப்பர்ட்தானே?

இலிங்கத்திட்ட புராணத்தீரும்

சமணரும் சாக்கியரும்

வலிந்து வாது செய்வீர்களும் மற்று நுந்

தெய்வமுமாகி நின்றானே!....'

என்ர திருவாய்மொழியை சொன்னதும் அங்கே மூன்று மதங்களும், மூன்று கோயில்களும், முன்னூறு தெய்வங்களும் நிற்பதாக தெரியவில்லை.

அன்பே சிவமெனும் ஒரே தெய்வமே கண்ணில் தெரிந்தது.

ஓம் நமசிவாய

No comments: