Friday, December 24, 2010

பாதாள பைரவி (1951)

patalabhairavi_02.jpg
கிறிஸ்துமஸ் விடுமுறையை இந்த பட டிவிடியை பார்ப்பதில் இருந்து துவக்கினேன்

.தெலுங்கு, தமிழ் இரண்டிலும் தயாரித்த படம் போல் தெரிகிறது. என்.டி.ஆர் நாயகன். எஸ்.வி.ரங்காராவ் வில்லன். கே மாலதி என்பவர் கதாநாயகி.

கதை: மன்னர் அரண்மனையில் வசிக்கும் தோட்டகாரன் மகன் ராமன் இளவரசியை ஒருதலையாய் காதலிக்கிறான்.இளவரசிக்கு அவன் மேல் இன்பாச்சுவேஷன்.ஆனால் காதல் பலிக்காது எனும் அச்சத்தால் தன் காதலை வெளியே சொல்லுவதில்லை.தோட்டராமன் பொறுமைஇழந்து அந்தபுறத்தில் அத்துமீறி நுழைந்து பிடிபடுகிறான்.மன்னர் அவனுக்கு மரணதண்டனை விதிக்கிறார்.இளவரசி மன்றாடிகேட்டு கொண்டதன் பேரில் "நீ எனக்கு சமமான அந்தஸ்து கொண்டவனாக மாறி இளவரசியை பெண் கேட்டு வந்தால் உனக்கு அவரை கட்டி வைக்கிறேன்" என சொல்லி விடுவித்து அனுப்புகிறான்.

தோட்டராமனை ஒரு மந்திரவாதி (ரங்காராவ்) காளிக்கு பலியிட முயல்கிறான்.தப்பிய தோட்டராமன் மந்திரவாதியை பலியிட்டு பாதாளபைரவி எனும் கேட்டதை தரும் சிலையை பரிசாக பெறுகிறான்.அதன் பலனாக பெரும் செலவத்தையும், ராஜ்ஜியத்தையும் அடைந்து மன்னர் மகளை மணம் புரிய போகும் தருணத்தில் மன்னரின் அத்தை மகன் பாதாளபிரவி சிலையை திருடி விடுகிறான்.மந்திரவாதியை அவர் சீடன் உயிர்பிக்கிறான்.பாதாளபிரவி சிலையை கைபற்றிய மந்திரவாதி தோட்டராமனை ஏழையாக்கி மன்னர் மகளை கடத்தி கொண்டு போகிறான்.தோட்டராமன் மீண்டும் மந்திரவாதியை ஜெயித்து பாதாளபைரவி சிலையையும், காதலியையும் அடைகிறான்.சுபம்.

மன்னராக நடிக்கும் நடிகர் மிக அற்புதமாக நடித்துள்ளார்.இரக்கமுள்ள மன்னராக வருகிறார்.தன் மனைவியின் தம்பியை அடித்த தோட்டராமனை தண்டிக்காமல் மன்னித்து அனுப்புகிறார்.அதை செய்யும்போது மன்னர் மனைவியின் முகத்தில் தீபொறி பறக்கிறது.ஆனால் நைச்சியமாக மனைவியை சமாதானபடுத்தி தோட்டராமனை மன்னித்து விடுகிறார்.அந்தபுரத்தில் நுழைந்த தோட்டராமனை மகள் கள்ளதனமாக சிரையில் சந்தித்து தப்ப சொல்லும்போது மன்னர் அதை பார்த்துவிடுகிறார்.ஆனால் அப்போதும் தோட்டராமனை அவர் கொல்வதில்லை.இரக்க சுபாவத்துடனே நடந்து கொள்கிறார்.

இளவயது என்.டி.ஆர் நடிப்பு அற்புதம்.எந்த காட்சியிலும் மிகை நடிப்பு இல்லை.சண்டை காட்சிகள் இயல்பாக உள்ளன.கண்டசாலா குரலில் "அமைதி இல்லாத என் மனமே" போன்ற தேனினும் இனிய பாடல்கள் மனதை மயக்குகின்றன. எஸ்வி ரங்காராவ் இயல்பாக, கம்பீரமாக நடிக்கிறார்.அவர் வில்லன் என்பதே தெரியாத வண்ணம், மிகை நடிப்பின்றி அச்சுறுத்தும் வசனம்,உருவ தோற்றம், மிரட்டல் இன்றி அழகாக நடிக்கிரார்.

பாதாளபைரவி மனதுக்கு மிகவும் நிறைவை அளித்த படம்

Sunday, December 19, 2010

குடிகாரர்கள், வேசிகள், கடல் கொள்ளையர்

ஜனநாயக நாடுகளின் மக்கள் இன்று அனுபவிக்கும் பல அடிப்படை உரிமைகளின் ஆரம்பம் எது என்று பார்த்தால் அவை குடிகாரர்கள்,பாலியல் தொழிலாளிகள், கடல் கொள்ளையர் என சமூகத்தால் புறக்கணிக்கப்ட்டு ஒதுக்கப்பட்ட மக்கள் மூலமே கிடைத்துள்ளதாக வரலாற்று அறிஞர் தேடியஸ் ரஸ்ஸல் தெரிவிக்கிறார்.

அந்த உரிமைகள் பின்வருமாறு

1) திருமணத்துக்கு அப்பாற்பட்ட செக்ஸ்

18ம் நூற்றாண்டு அமெரிக்காவில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட செக்ஸ் என்பது பாலியல் தொழிலாளிகளால் மட்டுமே சலூன்கள் போன்ற இடங்களில் நடத்தபட்டதாகவும், அதை அமெரிக்க தேசதந்தைகள் கடுமையாக வெறுத்து, நிந்தித்தகாகவும் ரஸ்ஸல் கூறுகிறார். பாலியல் தொழிலாளிகளே முதல் முதலாக திருமண பந்தத்தை தாண்டி உறவு கொண்ட பெண்கள் எனவும் அதன்பின்னரே இந்த உரிமை பிறபெண்களுக்கு கிடைத்தது என்கிறார்

2) ஓரினசேர்க்கை

ஓரினசேர்க்கை காலனி ஆதிக்க காலகட்டத்தில் கடல்கொள்லையர்கள் கப்பலில் சரமாரியாக நடந்ததாக ரஸ்ஸல் கூறுகிறார்.கடலில் சர்வசுதந்திரமாக நடந்த இந்த விஷயம் துறைமுகங்களுக்கும் பரவியதாகவும் அந்த காலகட்டத்தில் பத்திரிக்கைகளில் விளம்பரம் தந்து பார்ட்னர் தேடும் அளவுக்கு ஓரினசேர்க்கையாளர்கள் சுதந்திரமாக இருந்ததாக ரஸ்ஸல் கூறுகிறார்.ஹோமோசெக்சுவாலிட்டி எனும் வார்த்தை 19ம்க் நூற்றாண்டில் உருவாக்கபடுவதுக்கு முன்பே இது போன்ற நிலை நிலவியதாகவும் ரஸ்ஸல் கூறுகிறார்.ரோமானிய பேரரசுக்கு பிறகு மேற்குலகின் இருண்ட நிழல்களுக்கு சென்ற ஓரினசேர்க்கை பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தது கடல்கொள்ளையர் மூலம் தானாம்

3)விவாகரத்து

கிறிஸ்தவம் விவாகரத்துக்கு அனுமதி அளிக்கவில்லை.ஆனால் காலனி ஆதிக்க காலகட்டத்தில் பல ஆண்கள் உலகம் முழுக்க சென்றதாலும், போன இடங்களில் கிடைத்த பெண்களை மணந்ததாலும் குடும்ப உறவுகளில் மிகபெரும் மாற்ரம் ஏற்பட்டது.பெண்கள் தம்மை விட்டு பிரிந்த கணவனை சர்வசாதாரணமாக விவாகரத்து செய்யதுவங்கினர் என ரஸ்ஸல் கூறுகிறார்.அதுவரை கொடியபாவமாக கருதப்பட்ட விவாகரத்து இதன்மூலம் சாதாரண சம்பவமாகியது என்கிறார் ரஸ்ஸல்

4)மேற்கத்திய நடனம்

இன்று மேற்கத்திய நடனம் மிக பிரபலம்.ஆனால் அன்று நடனம் அடிமைகள், அடித்தட்டு தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு ஆடும் விடுதிகள் போன்ற இடங்களேயே பிறந்தது என்கிறார் ரஸ்ஸல்.அமெரிக்க தேசதந்தைகள் நடனம் ஆடுபவர்ஜளை மனிதர்களாகவே கருதியதில்லையாம்..."ஆம்பளைகள் நடனம் ஆடுவதா?நடனம் ஆடும் ஆண் எதுக்காவது பிரயோஜனபடுவானா?" என ஜான் ஆடம்ஸ் குறிப்பு எழுதினாராம்.

5) சனி-ஞாயிறு விடுமுறை

முந்தி எல்லாம் ஞாயிறு மட்டுமே விடுமுறை இருந்தது.ஆனால் வெள்ளியன்று சாயந்திரம் அமெரிக்க தொழிலாளிகள் கன்னாபின்னாவென குடிப்பது வழக்கமாக இருந்ததாம்.இப்படி குடித்துவிட்டு அவர்கள் சனி,ஞாயிறு,திங்கள் என மூன்றுந் ஆளும் வேலைக்கு வராமல் மட்டம் போட்டதால் தான் காம்ப்ரமைசாக சனி,ஞாயிறு இரு நாட்கள் வாரவிடுமுறை நமக்கு கிடைத்தது.ஆக வாரவிடுமுறை கிடைக்க காரணம் குடிகாரர்கள்.

6) ஸ்போர்ட்ஸ்

கிரேக்கம் அழிய காரணமே ஒலிம்பிக் ஆட்டம் தான் என அன்றைய மக்கள் கருதினர்.ஆர்கனைஸ்ட் ஸ்போர்ட்ஸ் மேல் அப்படிஒரு வெறுப்பு மக்களுக்கு.இதுவும் அடித்தட்டு தொழிலாளர்கள்,அடிமைகள் மூலமே மக்களுக்கு கிடைத்தது.

Saturday, December 11, 2010

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

சிலநாட்களாக பழைய படமாக தேடி பிடித்து பார்த்து கொண்டிருக்கிறேன்.ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற 1948 வருட படத்தை சிலதினங்கள் முன்பு பார்த்தேன்.இளவயது வி.என்.ஜானகி தான் அபூர்வ சிந்தாமணி.எஸ்.வரலட்சுமி (பூவா தலையா மாமியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜி ஜோடி) இன்னொரு நாயகி.

கதை ரொம்ப சிம்பிள்.ராஜகுரு ஒருவர் மூன்று கேள்விகளுக்கு விடை சொல்பவரை தான் சிந்தாமணி மணக்கவேண்டும் என ஆலோசனை சொல்லுகிறார்.தவறான பதில் சொன்னால் தலை துண்டாடபடும்.இப்படி 999 பேரின் தலையை சிந்தாமணி வெட்டுகிறார்.ஐந்து அண்ணன்களை சிந்தாமணியிடம் இழந்த நாயகன் (கோவிந்தன் என்பவர் என நினைவு) அந்த கேள்விக்கு விடைதேட மூன்று ஊர்களுக்கு செல்கிறான்.பதிலை அறிகிறான்.சிந்தாமணியை திருத்தி அவர் அத்தைமகனுக்கு மணமுடித்து வைத்து, அண்ணன்களை காளியின் அருளால் உயிருடன் எழுப்பி ஊர் போய் சேர்கிறான்.

மிக நீளமான படம்.இது அந்தகாலத்தில் சூப்பர் ஹிட் படமாம்.நாடகபாணியில் பாத்திரங்கள் அசையாமல் நின்றுகொண்டு எந்த உணர்ச்சியுமின்றி காமிராவை பார்த்து வசனம் பேசுகின்றனர்.நகைச்சுவை காட்சிகள் ரொம்ப எலிமெண்டரி. (நரிகொம்பு கொண்டா உன்னை கட்டிக்கறேன் என சொல்லி சற்று லூசு மாதிரி இருக்கும் அத்தைமகனை காட்டுக்கு அனுப்புவது ஒரு ஜோக்).ஆனால் இதை எல்லாம் தாண்டி படத்தை ரசிக்க முடிகிறது.கதைக்குள் கதை, கிளைகதை, நிறைய கதாபாத்திரங்கள் போன்ற உத்திகள் படத்தில் உள்ளன.சண்டை காட்சி எல்லாம் கிடையாது.நாயகனை சரமாரியாக கீழே போட்டு அடிக்கிறார் ஒரு வயதான ராஜா.நாயகன் ஈகோ பார்க்காமல் அடிவாங்குகிறார்.சும்மா நோஞ்சான் மாதிரி இருக்கும் இரு காவலாளிகள் நாயகனை கைதுசெய்கின்றனர்.க்ளைமேக்ஸ் என்பது அரசவை காட்சியில் சிந்தாமணியின் கேள்விக்கு பதில் சொல்லி சாமியார் தலையை வெட்டுவதுதான்.

அடுத்து குலேபகாவலி என்ற எம்ஜிஆர் படம் பார்த்தேன்.பகாவலி பட்டினத்தில் உள்ள குலே எனும் மலரை எடுத்துவந்து தந்தைக்கு எம்ஜிஆர் கண்பார்வை தருவதுதான் கதை. டணால் தங்கவேலு,சந்திரபாபு காமடியில் கலக்குகிறார்கள். எம்.ஜி.ஆர் மூன்று தாரம் கட்டும் படம் எனக்கு தெரிந்து இதுவாக தான் இருக்கும்.பாகவலி நாட்டில் ஆண்கள் இல்லதரசர்கள்,பெண்கள் எஜமானர்கள்.எம்ஜிஆரிடம் திருவிளையாடல் பாணியில் ராணி கேள்வி எல்லாம் கேட்கிறார்.அதில் ஒரு கேள்வி "பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதில் உள்ள நன்மை என்ன?".பதில் "ஊர் உலகில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் அறிய முடியும்.."

ரொம்ப எளிமையான கதை.குழந்தைதனமான உத்திகள்...தாயம் ஆடி ஆண்களை அடிமைபடுத்த நினைக்கும் லதீஷா தாயம் உருட்டுவார்.அப்போது தங்கவேலு விளக்கை அணைப்பார்.விளக்கு மீண்டும் எரியும்.அப்போது தாயகட்டை மாற்ரஒபட்டு இருக்கும்.உடனே அந்த ஆண் அடிமை ஆக்கபடுவார்.எம்ஜிஆர் விளக்கை அணைக்கவிடாமல் தங்கவேலு கையை பிடித்து கொண்டு ஜெயித்துவிடுவார்

90களில் பார்த்த சரத்குமார் படமான கூலியில் தந்தை ராதாரவி தங்கம் கடத்துவதை தடுக்க மகள் மீனாவும், மாப்பிள்ளை சரத்குமாரும், மாமியார் மனோரமாவும் மாறுவெஷம் போட்டுகொண்டு போய் ஆடுவார்கள்.அடையாளத்தை மறைக்க மனோரமா கூலிங்க்ளாஸ் போட்டுக்குவார்,சரத்குமார் கருப்பு மச்சம் ஒன்றை முகத்தில் வைத்துகொள்வார், மீனா வடநாட்டு பாணியில் டிரஸ் போட்டுக்குவார்.உடனே ராதாரவிக்கு அவர்களை அடையாளம் தெரியாமல் போயிடுமாம்.

தமிழ்சினிமா உத்திகள் மாறவே இல்லை போல:-)

Wednesday, December 08, 2010

காமமும் கற்பும்: சமண பெண்ணியல்

சும்மாவே கிழக்கை மேற்கு புரிந்து கொள்ளவில்லை என எத்தனை நாள் தான் புகார் சொல்லிகொண்டும், மறுத்துகொண்டும் இருப்பது?அதனால் கிழக்கை பற்றி மேற்கு என்னதான் சொல்லுகிறது என சில ஜர்னல்களை படிக்க ஆரம்பித்தேன்.அதில் சுவாரசியமான சில படைப்புகளை இங்கே சுருக்கமாக அளிக்க இருக்கிறேன். காப்பிரைட் பிரச்சனையால் முழு படைப்பையும் எழுத இயலாது, ரத்தின சுருக்கமாக தான் எழுத இயலும்.இங்கே இருப்பது என் கருத்து அல்ல, அதனால் என்னுடன் யாரும் சண்டை கட்ட கூடாது சொல்லிபுட்டேன்:-)

முதல் கட்டுரை

காமமும் கற்பும்: சமண பெண்ணியல் 

- எழுதியவர் மனிஷா சேத்தி

(மனிஷா சேத்தி இந்திய பெயராக இருக்கு என பார்க்கிறீர்களா?எழுதியவர் இந்தியர்தான்.அதைதான் முன்னமே சொன்னேன்..பெயர்தான் மேற்கே தவிர ஆராய்ச்சியாளர்கள் பலரும் கிழக்கு தான் என்று:-)

இந்த கட்டுரையில் ஸ்த்ரிநிர்வாணம் என்று அழைக்கபடும் பெண்களுக்கு முக்தி எனும் ஜைன கோட்பாட்டை மனிஷா சேத்தி அலசுகிறார்.இதில் திகம்பர சமணர்களுக்கும் (விண்ணாடை சமணர்கள்), ஸ்வேதாம்பர சமணர்களுக்கும் (வெள்ளாடை சமணர்கள்) இடையே கருத்து வேறுபாடு நிலவுவது அலசபடுகிறது.திகம்பர சமணர்கள் நிர்வாணம் மூலம் துறவு என்பதில் நம்பிக்கை கொண்டதால் ஸ்த்ரி நிர்வாணம் பொது இடங்களில் சாத்தியமில்லை என்பதால் பெண் முக்தியை நிராகரிக்கின்றனர்.ஸ்வேதாம்பர சமணர்களுக்கு நிர்வாணம் ஒரு பொருட்டே இல்லை என்பதால் இதை மறுத்து ஸ்த்ரிகள் முக்தி அடைய முடியும் என்கின்றனர்.19வது தீர்த்தங்காரர் மல்லிதேவி எனப்படும் பெண் எனவும் ஸ்வேதாம்பரர்கள் கூறுகின்றனர்.திகம்பரர்கள் இதை கடுமையாக மறுத்து 19வது தீர்த்தங்காரர் ஆண் என்றும் அவர் பெயர் மல்லிநாதர் எனவும் கூறுகின்றனர்

இப்படி சமணத்தில் பெண்மை சித்தரிக்கபடுவதை பற்றி ஆராய துவங்கும் மனிஷா சேத்தி பொதுவாக சமணத்தில் பெண்மை கீழ்கண்டவாறு கட்டமைக்கபட்டிருப்பதாக கூறுகிறார்

இப்படி சமணத்தில் பெண்மை சித்தரிக்கபடுவதை பற்றி ஆராய துவங்கும் மனிஷா சேத்தி பொதுவாக சமணத்தில் பெண்மை கீழ்கண்டவாறு கட்டமைக்கபட்டிருப்பதாக கூறுகிறார்

சமணத்தில் இந்து மதத்தை போலவே பெண் கடவுளர்கள் உண்டு (லக்ஷ்மி,சரஸ்வதி, யக்ஷி) இவர்கள் மனிதர்களுக்கும், ரிஷிகளுக்கும் வரங்களை அருள்கின்றனர்

சமணத்தில் கற்புடை மாதர் (சதிகள்) பற்றிய கருத்தாக்கங்கள் உண்டு.இவ்விஷயத்தில் இந்துமதத்தை போலவே சமணத்திலும் பெண்மையின் சிறப்பாக கற்பு போற்றபடுகிறது

இந்துமதத்தில் பெண் தன் கணவனுக்கும், பிள்லைகளுக்கும் கடமைகளை செய்வதன் மூலம் சிறப்பை அடைகின்றனர்.சமணத்தில் குடும்ப கடமைகளை துறந்து துறவி ஆகும் பெண்களே சிறப்பிக்க்படுகின்றனர்.இது சராசரியான சமண பெண்ணை சிறப்புகளை அடைய விடாமல் தடுப்பதாக கூறும் மனிஷா இதுகுறித்த விவாதங்கள் சமணத்தில் எழுந்ததாகவும் விரதம், துறவு, புனித யாத்திரை போன்றவை மூலம் துறவி நிலையிலிருந்தே குடும்ப கடமைகளை பெண் நிறைவேற்றி சிறப்பை அடையமுடியும் என்ற ஒரு காம்ப்ரமைஸ் மூலம் இது அணுகபடுவதாக குறிப்பிடுகிறார்

மற்றபடி இந்துமதம் போலவே ஆணை துறவியாகவும் பெண்ணை போகபொருளாகவும் சமணம் கருதுகிறது என கூறுகிறார் மனிஷா.பெண் இயல்பில் சிறுமதி படைத்தவள், ஆணை வழுக்கி விட செய்ய கூடியவள், துறவிகள் பிக்ஷை எடுக்கும்போது அவர்களை மயக்கி துறவிலிருந்து தள்ளகூடியவள் என பலநிலைகளில் பெண் டெம்ப்ட்ரஸ் (temptress) ஆகவே சமணத்தால் சித்தரிக்கபடுகிறாள் என கூறும் மனிஷா  சமணத்தின் நீதிபோதனைகதைகள் மிசோஜைனிஸ்ட் (பெண்வெறுப்பு கொண்டது) என கூறுகிறார்.மனிஷா சமண பெண்ணியல் டெம்ப்ட்ரஸ், துறவிகள், சிறந்த தாய்மார்கள், கற்புடைய மாதர் மற்றும் தீர்த்தங்காரர் என பல நிலைகளை உள்ளடக்கி இருப்பதாக கூறுகிறார்

Chastity and desire: representing women in Jainism
Manisha Sethi
South Asian History and Culture Journal

Wednesday, December 01, 2010

வினாயக புராணம்:

அரு.ராமநாதன் தொகுத்த வினாயக புராணம் படித்து கொண்டிருக்கிறேன்.அதில் கலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின் பட்டியல் வியப்பை ஏற்படுத்தியது

அவை யாதெனில்

சுத்தமாக குளிக்காமல், அல்லது கலவி நடந்தபின்னர் ஆலயங்களில் பிரவேசித்தல்

தாய்,தந்தை,முத்தோர் ஆகியோரை போற்றாமல் உணவு உண்ணுதல்

பெரியவர்களிடம் பொருளை ஒரே கையால் வாங்குதல், அளித்தல்

இரண்டு பெரியவர்கள் நடுவே புகுந்து செல்லுதல்

புல்வெளியில் எச்சில் துப்புதல் அல்லது சிறுநீர்,மலம் கழித்தல்

நெருப்பை தாண்டுதல்

தன் தொடையில் வைத்து அன்னம் சாப்பிடுதல்

தன் மனைவியை பற்றி பிறரிடம் புகழ்ந்து கூறுதல்

ஆடை இல்லாமல் புண்ணிய குளத்தில் இறங்குதல்

பெரிஒய்ய்ர் அமருமாசனங்களை உதைத்து அவமதித்தல்

காரணமின்றி சிரித்தல்

விரல் நகங்களையும், ரோமத்தையும் பல்லினால் கடித்தல்

காலோடு கால் தேய்த்து கழுவுதல்

சாப்பிடும் பாத்திரத்தில் எச்சில் துப்புதல்

நெருப்பில் எச்சில் உமிழ்தல்

நேரை ஊற்றி நெருப்பை அணைத்தல்

படுத்தபடியும், சிரித்தபடியும் சாப்பிடுதல்

கரி,சாம்பல்,செங்கல் போன்றவற்றால் பல் துலக்குதல்

முதல்நாள் சமைத்த சாதம்,பழங்கறி,முட்டை,சுரைக்காய் ஆகியவற்றை உண்ணுதல்

பொழுதுவிடிந்தும் கண்விழிக்காது உறங்கல்

மாதவிலக்கு நாட்களில் மனைவியோடு சேரல்

எரியும் தீபத்தை வாயால் ஊதி அணைத்தல்...

பிற உயிர்களுக்கு தீங்கிழைத்தல்

தானம்,தருமம்,தியானம் ஆகியவற்றை கைவிடல்

அந்திபொழுதில் ஒளிதரும் விளக்கை கும்பிடாதிருத்தல்

பொய்சாட்சி கூறல்

பிறர்பொருளை கவர நினைத்தல்

பொய்,களவு,சூது,கொலை செய்தல்

தன் தலையில் தேய்த்து வழிந்த எண்னையை பிடித்து உடம்பில் தேய்த்து கொள்ளுதல்

துன்புறுத்தி இன்புறுத்தல்

விரல் நகத்தால் மலத்தை கீறுதல்

உயிர் கொல்லும் கொடியவர்களுடன் கூடி உறவாடுதல்

நல்லவர்களை கெட்டவர்கள் என கூறி இகழ்தல்

பாழடைந்த வீட்டில் படுத்துறங்கல்

மதுபானம் விற்றல், மதுபானம் அருந்த இணங்குதல்,மதுபானம் அருந்துபவருடன் பழகுதல்

சிவனையும், சிவனடியாரையும்,வேதம்,சிவாகமம்,ஸ்மிருதி,புராணம் முதலிய மேன்மை மிகுந்த வித்தைகளையும்,விபூதி,ருத்திராக்ஷங்களையும் இகழ்ந்துரைத்தல்

பூஜை,சிரார்த்தம்,போன்ற புண்ணீயநாட்களைல் நிகழ வேண்டிய சடங்குகளை நிகழ்த்தாதிருத்தல்

அத்தகைய நாட்களில் விருந்தாளிகளுக்கு சாப்பாடு போடாதிருத்தல்

பலர் நடுவே பிறரை பழித்துரைத்தல்

நையாண்டி செய்தல்

தாய்,மகள்,உடன்பிறந்தாள்,பிறர் மனைவி ஆகியோருடன் ஆண்மகன் தனியாக வசித்தல்

பெண்கள் தம் கணவனின் உருவத்தை தவிர பிற ஆடவனின் உருவத்தையும் நாடிபார்த்தல்,கை நொடித்தல்,கண்ஜாடை முதலான சாகசங்கள் செய்தல்

பிறர் வீட்டுக்குள் புழக்கடை வழியாக நுழைதல்

கீழோருக்கு எச்சிலை கொடுத்தல்

பிறர் நிழலை மிதித்தல்

இப்படி போகுது பட்டியல்.அப்பல்லாம் ரொம்ப நல்லவங்களா இருந்திருப்பாங்க போல..