Wednesday, December 08, 2010

காமமும் கற்பும்: சமண பெண்ணியல்

சும்மாவே கிழக்கை மேற்கு புரிந்து கொள்ளவில்லை என எத்தனை நாள் தான் புகார் சொல்லிகொண்டும், மறுத்துகொண்டும் இருப்பது?அதனால் கிழக்கை பற்றி மேற்கு என்னதான் சொல்லுகிறது என சில ஜர்னல்களை படிக்க ஆரம்பித்தேன்.அதில் சுவாரசியமான சில படைப்புகளை இங்கே சுருக்கமாக அளிக்க இருக்கிறேன். காப்பிரைட் பிரச்சனையால் முழு படைப்பையும் எழுத இயலாது, ரத்தின சுருக்கமாக தான் எழுத இயலும்.இங்கே இருப்பது என் கருத்து அல்ல, அதனால் என்னுடன் யாரும் சண்டை கட்ட கூடாது சொல்லிபுட்டேன்:-)

முதல் கட்டுரை

காமமும் கற்பும்: சமண பெண்ணியல் 

- எழுதியவர் மனிஷா சேத்தி

(மனிஷா சேத்தி இந்திய பெயராக இருக்கு என பார்க்கிறீர்களா?எழுதியவர் இந்தியர்தான்.அதைதான் முன்னமே சொன்னேன்..பெயர்தான் மேற்கே தவிர ஆராய்ச்சியாளர்கள் பலரும் கிழக்கு தான் என்று:-)

இந்த கட்டுரையில் ஸ்த்ரிநிர்வாணம் என்று அழைக்கபடும் பெண்களுக்கு முக்தி எனும் ஜைன கோட்பாட்டை மனிஷா சேத்தி அலசுகிறார்.இதில் திகம்பர சமணர்களுக்கும் (விண்ணாடை சமணர்கள்), ஸ்வேதாம்பர சமணர்களுக்கும் (வெள்ளாடை சமணர்கள்) இடையே கருத்து வேறுபாடு நிலவுவது அலசபடுகிறது.திகம்பர சமணர்கள் நிர்வாணம் மூலம் துறவு என்பதில் நம்பிக்கை கொண்டதால் ஸ்த்ரி நிர்வாணம் பொது இடங்களில் சாத்தியமில்லை என்பதால் பெண் முக்தியை நிராகரிக்கின்றனர்.ஸ்வேதாம்பர சமணர்களுக்கு நிர்வாணம் ஒரு பொருட்டே இல்லை என்பதால் இதை மறுத்து ஸ்த்ரிகள் முக்தி அடைய முடியும் என்கின்றனர்.19வது தீர்த்தங்காரர் மல்லிதேவி எனப்படும் பெண் எனவும் ஸ்வேதாம்பரர்கள் கூறுகின்றனர்.திகம்பரர்கள் இதை கடுமையாக மறுத்து 19வது தீர்த்தங்காரர் ஆண் என்றும் அவர் பெயர் மல்லிநாதர் எனவும் கூறுகின்றனர்

இப்படி சமணத்தில் பெண்மை சித்தரிக்கபடுவதை பற்றி ஆராய துவங்கும் மனிஷா சேத்தி பொதுவாக சமணத்தில் பெண்மை கீழ்கண்டவாறு கட்டமைக்கபட்டிருப்பதாக கூறுகிறார்

இப்படி சமணத்தில் பெண்மை சித்தரிக்கபடுவதை பற்றி ஆராய துவங்கும் மனிஷா சேத்தி பொதுவாக சமணத்தில் பெண்மை கீழ்கண்டவாறு கட்டமைக்கபட்டிருப்பதாக கூறுகிறார்

சமணத்தில் இந்து மதத்தை போலவே பெண் கடவுளர்கள் உண்டு (லக்ஷ்மி,சரஸ்வதி, யக்ஷி) இவர்கள் மனிதர்களுக்கும், ரிஷிகளுக்கும் வரங்களை அருள்கின்றனர்

சமணத்தில் கற்புடை மாதர் (சதிகள்) பற்றிய கருத்தாக்கங்கள் உண்டு.இவ்விஷயத்தில் இந்துமதத்தை போலவே சமணத்திலும் பெண்மையின் சிறப்பாக கற்பு போற்றபடுகிறது

இந்துமதத்தில் பெண் தன் கணவனுக்கும், பிள்லைகளுக்கும் கடமைகளை செய்வதன் மூலம் சிறப்பை அடைகின்றனர்.சமணத்தில் குடும்ப கடமைகளை துறந்து துறவி ஆகும் பெண்களே சிறப்பிக்க்படுகின்றனர்.இது சராசரியான சமண பெண்ணை சிறப்புகளை அடைய விடாமல் தடுப்பதாக கூறும் மனிஷா இதுகுறித்த விவாதங்கள் சமணத்தில் எழுந்ததாகவும் விரதம், துறவு, புனித யாத்திரை போன்றவை மூலம் துறவி நிலையிலிருந்தே குடும்ப கடமைகளை பெண் நிறைவேற்றி சிறப்பை அடையமுடியும் என்ற ஒரு காம்ப்ரமைஸ் மூலம் இது அணுகபடுவதாக குறிப்பிடுகிறார்

மற்றபடி இந்துமதம் போலவே ஆணை துறவியாகவும் பெண்ணை போகபொருளாகவும் சமணம் கருதுகிறது என கூறுகிறார் மனிஷா.பெண் இயல்பில் சிறுமதி படைத்தவள், ஆணை வழுக்கி விட செய்ய கூடியவள், துறவிகள் பிக்ஷை எடுக்கும்போது அவர்களை மயக்கி துறவிலிருந்து தள்ளகூடியவள் என பலநிலைகளில் பெண் டெம்ப்ட்ரஸ் (temptress) ஆகவே சமணத்தால் சித்தரிக்கபடுகிறாள் என கூறும் மனிஷா  சமணத்தின் நீதிபோதனைகதைகள் மிசோஜைனிஸ்ட் (பெண்வெறுப்பு கொண்டது) என கூறுகிறார்.மனிஷா சமண பெண்ணியல் டெம்ப்ட்ரஸ், துறவிகள், சிறந்த தாய்மார்கள், கற்புடைய மாதர் மற்றும் தீர்த்தங்காரர் என பல நிலைகளை உள்ளடக்கி இருப்பதாக கூறுகிறார்

Chastity and desire: representing women in Jainism
Manisha Sethi
South Asian History and Culture Journal

No comments: