Sunday, June 27, 2010

440. முதலில் வந்தது முட்டையா,கோழியா

முதலில் வந்தது முட்டையா,கோழியா என்பது சுவாரசியமான கேள்வி.ஆனால் பதிலளிக்க முடியாததல்ல.

கோழி என்ற உயிரினம் தோன்றுவதற்கு முன்னரே டைனசார்கள் முட்டை போட்டுக்கொண்டிருந்தன.மனிதன் முதலிய பாலூட்டிகள் எல்லாம் கூட முட்டை மூலம் தான் குட்டி ஈனுகின்றன (பாலூட்டிகளுக்கு கருமுட்டை மூலம் குட்டி வயிற்றில் ஈனபடுகிறது). அதனால் கோழிக்கும் முந்தியே உலகில் முட்டை தோன்றிவிட்டது

கோழி என்பது red jungle fowl & Grey jungle fowl என்ற இரு பறவைகளின் கலப்பினம்.முதல் முதலில் இந்த இருபறவைகளும் அகஸ்மாத்தாக இனம் மாறி காதல் புரிந்த போது இடப்பட்ட முட்டை தான் உலகின் முதல் கோழி முட்டை.அதிலிருந்து தோன்றியதுதான் உலகின் முதல் கோழி.

அதனால் முட்டை தான் முதலில்.கோழி பிறகுதான்.

Friday, June 18, 2010

438.ஐடியா மணி

ராமநாதபுரத்தில் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு ஓடுவது அதிகமாகிவிட்டது என வருத்தப்படும் தினமலர் இதை தவிர்க்க ஒரு சூப்பரான ஐடியாவை பெற்றோருக்கு கொடுத்துள்ளது.

அது என்ன தெரியுமா?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22151

பெண்ணே, தன்னை விரும்பியவரை திருமணம் செய்து கொண்டு கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்து விடுகிறார். அதன் பின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுதுபுலம்புகின்றனர்.

இது ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்ட பிறகே, அதை தடுக்க பெற்றோர் முன்வருகின்றனர். அதே அக்கறையை தங்கள் குழந்தைகளின் கண்காணிப்பிலும், வளர்ப்பிலும் காட்டினால் இது போன்ற கசப்பான சம்பவங்களை தடுக்கலாமே. கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி' போன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் இது போன்ற கசப்பான அனுபவங்களையும் தவிர்க்கலாம்.

ஐயோ என் ஐடியா மணியே.....எப்படி ராசா இப்படி எல்லாம்?கலக்குற போ..

Friday, June 04, 2010

435. ஆடாதிக்கம்

இன்று பிளானட் எர்த் என்ற பிரமிக்க வைக்கும் டிஸ்கவரி சானல் - பிபிசி டிவிடி பார்த்தேன்.பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகள், மிருகங்களை பற்றிய புதிய செய்திகளை அறிய முடிந்தது.

இஸ்ரேல் மலை ஆடுகள் மோதுவதை காட்டினார்கள்.அது சாதா மோதல் இல்லை.ஜெயிக்கும் ஆட்டுக்கு நிறைய பெண் ஆடுகள் கொண்ட மந்தை பரிசாக கிடைக்கும்.தோற்ற ஆடு காலம் முழுக்க கட்டை பிரமாசாரியாக காலம் தள்ளவேண்டியதுதான். சண்டையை சுவாரசியமாக பார்த்தேன்.இரண்டு ஆடும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததால் நான் சப்போர்ட் செய்த ஆடு ஜெயித்ததா இல்லையா என கண்டுபிடிக்க முடியவில்லை.இருந்தாலும் இந்த பலதார மண விவகாரம் ஆடுகளுக்கிடையே கூட குழப்பத்தை ஏற்படுத்துவதை நினைத்து ஆடாதிக்கத்துக்கு எதிராக பதிவு போடவேண்டும் என நினைத்துகொண்டேன். போட்டும் விட்டேன்.

*****

எறும்புகளை பற்றி ஒரு பயாலஜி மாணவனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.பெண் எறும்புகள் தான் சுறுசுறுப்பனவையாம்.நாம பார்ப்பதெல்லாம் பெண் எறும்புகள் தானாம்.ஆண் எறும்புகள் புற்றை விட்டு வெளியே வராதாம்.புற்றுக்குள் இருந்துகொண்டு கலவி செய்தி பெண் எறும்பை கர்ப்பமாக்குவது மட்டும் தான் ஆண் எறும்பின் வேலையாம்.தின்பது, தூங்குவது, கலவி செய்வது...கொடுத்து வைத்த சுகவாசி வாழ்க்கைதான் இந்த ஆண் எறும்புகளுக்கு...மிருக இனந்திலும் கூட ஆணாதிக்கம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது பார்த்தீர்களா?(அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் ஆண் எறும்பா பிறக்கணும்)

*****

நேடலி ஹாலோவே என்ற 14 வயது அமெரிக்க பெண் டட்சு தீவு ஒன்றில் க்னாமல் போனார்.அவரை கொலை செய்ததாக வான்டெர்வட் என்ற டச்சு இளைஞன் விடியோவில் வாக்குமூலம் கொடுத்தான்.அதன்பின் அது குடித்துவிட்டு உளறியது என சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டான்.அமெரிக்க ஊடகங்கள் அவனை வறுத்தெடுத்து வந்தன.அவனை கைது செய்ய ஒத்துழைக்காத டச்சு அரசை திட்டி தீர்த்தன."இது அமெரிக்காவின் அத்துமீறிய செயல்.எங்கள் நாட்டு குடிமகன் நல்லவன்,வல்லவன்..அவனை கைது செய்ய சொல்ல நீங்கள் யார்/" என அலட்சியமாக இருந்தது டச்சு அரசு.இன்று அதே வன்டர்வாட் ஒரு பெரு நாட்டு பெண்ணை கொலை செய்தது கைது செய்யபட்டிருக்கிறான்.டச்சு அரசு இனியாவது திருந்துமா என்பது தான் கேள்வி?

*********

மார்க் பெரென்சன்..ரோடா பெரென்சன், இருவரும் புரபசர்கள்.கம்யூனிச சித்தாந்தம் பேசிய மார்க்கின் ஒரே மகள் லோரி திடீரென விடுமுறையில் பெருவுக்கு போய் அங்கே ஒரு கம்யூனிச தீவிரவாதியை கல்யாணம் செய்துகொண்டாளாம்.புரட்சிகர கல்யாணம் முடிந்த சில நாட்களில் போலிஸ் கணவனையும், மனைவியையும் கைது செய்ய அந்த பெண்ணுக்கு தீவிரவாதத்துக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது.15 ஆண்டுகள் கழித்து ஜாமினில் விடுதலை ஆகி இருக்கிறார்.2015 வரை பெருவில் தங்கி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன்.