Sunday, June 27, 2010

440. முதலில் வந்தது முட்டையா,கோழியா

முதலில் வந்தது முட்டையா,கோழியா என்பது சுவாரசியமான கேள்வி.ஆனால் பதிலளிக்க முடியாததல்ல.

கோழி என்ற உயிரினம் தோன்றுவதற்கு முன்னரே டைனசார்கள் முட்டை போட்டுக்கொண்டிருந்தன.மனிதன் முதலிய பாலூட்டிகள் எல்லாம் கூட முட்டை மூலம் தான் குட்டி ஈனுகின்றன (பாலூட்டிகளுக்கு கருமுட்டை மூலம் குட்டி வயிற்றில் ஈனபடுகிறது). அதனால் கோழிக்கும் முந்தியே உலகில் முட்டை தோன்றிவிட்டது

கோழி என்பது red jungle fowl & Grey jungle fowl என்ற இரு பறவைகளின் கலப்பினம்.முதல் முதலில் இந்த இருபறவைகளும் அகஸ்மாத்தாக இனம் மாறி காதல் புரிந்த போது இடப்பட்ட முட்டை தான் உலகின் முதல் கோழி முட்டை.அதிலிருந்து தோன்றியதுதான் உலகின் முதல் கோழி.

அதனால் முட்டை தான் முதலில்.கோழி பிறகுதான்.

5 comments:

நையாண்டி நைனா said...

கரெட்டு... கரெட்டு... நேற்று முனியாண்டி விலாசிலே கோழியும், முட்டையும் ஆடரு பண்ணேன்... முட்டை தான் பஸ்ட்டு வந்திச்சி...

Sridhar Narayanan said...

// red jungle fowl & Grey jungle fowl என்ற இரு பறவைகளின் கலப்பினம்.முதல் முதலில் இந்த இருபறவைகளும் அகஸ்மாத்தாக இனம் மாறி காதல் புரிந்த போது இடப்பட்ட முட்டை தான் உலகின் முதல் கோழி முட்டை//

ம்ஹ்ம்ம்... ’கோழி முட்டை’ என்றால் கோழியிட்ட முட்டை. உங்க தர்க்கப்படி அது ஏதோ சிகப்பு காட்டுப் பறவையோ, பழுப்பு காட்டு பறவையோ இட்ட முட்டை. ஆகவே அது கோழி முட்டை ஆகாது.

அந்த முட்டையில் ம்யூட்டேஷனால் பிறந்த கோழியே முதலில் தோன்றியது. அது இட்ட முதல் முட்டைதான் முதல் கோழி முட்டை என்று சொல்ல வேண்டும்.

விட மாட்டோம்ல? :)

Unknown said...

கரெட்டு... கரெட்டு... நேற்று முனியாண்டி விலாசிலே கோழியும், முட்டையும் ஆடரு பண்ணேன்... முட்டை தான் பஸ்ட்டு வந்திச்சி...

RTFL:-)))))))))))))

Unknown said...

அந்த முட்டையில் ம்யூட்டேஷனால் பிறந்த கோழியே முதலில் தோன்றியது. அது இட்ட முதல் முட்டைதான் முதல் கோழி முட்டை என்று சொல்ல வேண்டும்.

விட மாட்டோம்ல? :)

Aiya saami...kaal engkee?:-)))

Aba said...

உண்மை.. அந்த மியூட்டேஷன் முட்டையினுள்ளே இருந்தது கோழிதான் என்பதால் அது கோழி முட்டை ஆகிறது. ஸோ.. பர்ஸ்ட்டு முட்டைதான்..

மேற்குறிப்பிட்டது பரிணாமக் கொள்கை. ஆனால் சில படைப்புவாத நண்பர்களின்படி, முதலில் தோன்றியது கோழிதான்.. ஏனெனில் கடவுள் பறவையைப் படைத்தார், மீனை, கால்நடைகளை, ஊர்வனவனவற்றை, தாவரங்களைப் படைத்தார்.. ஆனால் கடவுள் 'முட்டையை'ப் படைத்ததாக புனித நூலில் சொல்லப்படவில்லை.. கடவுள் படைத்த கோழிதான் முட்டை போட்டது.. எனவே முட்டை இஸ் செகண்டு டு கோழி தான்!