Sunday, October 11, 2009

423.அக்கம் பக்கம் 2

நிர்வாணம் ஸோ வாட்?

நடிகை ஹிலரி ஸ்வாங் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் நிர்வாணமாக தான் படுத்து தூங்குவதாக தெரிவித்தார்.சமூகத்தின் கற்பிக்கப்பட்ட இயல்புகளுக்கு அடிக்கப்பட்ட இயற்கையான சாவுமணியாக அந்த பேட்டி என் கண்களுக்கு தெரிந்தது.

ஹிலரி: என் காதலனின் மகனுக்கு ஆறு வயதாகிறது.அவனுக்கு எந்த வயதாகும்போது நான் நிர்வாணமாக இருப்பதை தவிர்க்கவேண்டும் என்று எனக்கு புரியவில்லை.தினமும் காலை அவன் எங்கள் அறைக்கு வருவான்.நான் நிர்வாணமாக அறையில் இருப்பேன்.அவன் அதை இதுவரை வித்தியாசமாக நினைத்ததில்லை.இரண்டாம் முறை பார்த்ததில்லை.நான் தூங்கும்போது அடிக்கடி புரண்டுபடுப்பேன்.அதனால் தூங்கும்போது உடை அணிவது அசுவகரியமாக இருக்கிறது.....

செக்சுவாலிட்டியிடமிருந்து குழந்தைகளை "பாதுகாப்பதை" விட அதை அவர்களுக்கு இயல்பாக அறிமுகப்படுத்தும் ஹிலரி பாராட்டுக்குரியவர்.

ஒபாமா&நோபல்

ஒபாமாவுக்கு நோபல் பரிசு தந்தது காக்கா பிடிக்க அல்ல.உலகில் அணுஆயுதத்தை ஒழிப்பேன் என அவர் (சிறுபிள்ளைதனமா) முயற்சி எடுத்து வருவதுதான் காரணம்.

அணுஆயுதம் இல்லாத உலகம் ஆபத்தான உலகம்.மூன்றாம் உலகபோர் மூளாமல் (ரஷ்யா-அமெரிக்கா) இருக்க காரணம் அணுஆயுதம் தான்.ஐரோப்பியர்களை அதனால் தான் மூளை கெட்டவர்கள் என்று திட்டினேன்.ஐந்து நிமிடத்தில் ஒரு உலகபோரையே தோற்கும் சக்தி படைத்தவர்கள் ஐரோப்பியர்கள்.1939ல் ஹிட்லரின் படைகள் சும்மா நாலைந்து வாரத்தில் மொத்த ஐரோப்பாவையும் பிடித்தன. அப்புறம் அமெரிக்கா வந்துதான் இவர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது.முதல் உலகபோரிலும் இதேமாதிரிதான் நடந்தது.

அணுஆயுதம் இருந்திருந்தால் எந்த உலகபோரும் மூண்டிருக்காது. அதில் செத்த சும்மர் பத்துகோடி மனிதர்கள் உயிர்பிழைத்திருப்பார்கள்.இன்றும் காங்கோவில் ஒரு மிகபெரிய யுத்தம் நடந்துவருவதும் அதில் 39 லட்சம் பேர் இறந்திருப்பதும் எத்தனை பேருக்கு தெரியும்?மூன்றாம் நாடு எதாவது தலையிடாமல் இம்மாதிரி யுத்தங்கள் நிற்காது.தலையிட்டால் அப்புறம் ஆகிரமிப்பு என்று கூச்சல்.உலகம் பைத்தியகார உலகமடா சாமி.

மனித இனம் வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் இனம்.இவர்கள் சண்டைபிடிககமல் ஒருவருகொருவர் அன்புடன் வாழ்வார்கள் என்பது பைத்தியகாரதனமான உடோபியா.ஒபாமாவால் செய்ய முடிந்தது தன்னிடம் இருக்கும் அணு ஆயுதத்தை கீழே போடுவதாகதான் இருக்கமுடியுமே தவிர சீனாவையோ, இந்தியாவையோ, பாகிஸ்தானையோ அணு ஆயுதத்தை கீழே போடும்படி அவரால் வலியுறுத்த முடியுமா என்பது சந்தேகமே.ஒரு ஒலிம்பிக்சை சிகாகோவுக்கு கொண்டுவரமுடியாதவர் சீனாவையும், இந்தியாவையும் அணு ஆயுதத்தை ஒழிக்க சொல்லி வலியுறுத்த போகிறாராம்:)

அமைதிக்கான நோபல் பரிசை தருவதாக இருந்தால் அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓப்பன் ஹேமருக்குதான் தரவேண்டும்.மூன்றாம் உலகபோரும், இந்தியா -பாகிஸ்தான் நாலாவது போரும் வராமல் இருக்கவும் கோடிகணனகான பேர் உயிர்பிழைக்கவும் அவர்தான் காரணம்.

No comments: