Friday, August 10, 2007

321. அஞ்சேல் எனாத ஆண்மை

தென்கொரிய விமானபடையை தொடர்பு கொண்டு உதவிகேள்" என சுதர்சன் பைலட்டிடம் சொன்னார்.

வடகொரிய பைலட்டின் துப்பாக்கியிலிருந்து தப்ப தென்கொரிய பைலட் ஹெலியை உயரத்துக்கு கொண்டுபோனார்.விடாமல் தொடர்ந்தது வடகொரிய விமானம்.இயந்திர துப்பாக்கியிலிருந்து பறந்த புல்லட்கள் ஹெலிகாப்டர் எங்கும் பட்டு தெறித்தன.குண்டுக்கு பயந்து அனைவரும் இருக்கைகளுக்கு அடியே புகுந்தனர்.

"தென்கொரிய விமானப்படை உதவிக்கு வருகிறது..ஆனால் உதவி வந்துசேர அரைமணிநேரமாவது ஆகும்.நம்மால் இன்னும் ஐந்து நிமிடத்துக்கு மேல் சமாளிக்க முடியாது" என்றார் தென்கொரிய பைலட்.

"பாராசூட்டை பயன்படுத்தி குதித்துவிடலாம்" என்றார் சுதர்சன்.

"வாத்தை சுடுவது போல் அழகாக அனைவரையும் வானத்தில் சுடுவான்.அந்த ஹெலியை அழித்தால் தான் நாம் தப்ப முடியும்" என்றார் தென்கொரிய பைலட்.

வடகொரிய ஹெலிகாப்டரில் இருந்த ஒருவன் ராக்கட் லாஞ்சரை எடுத்தான். மேலே பறந்து கொண்டிருந்த தென்கொரிய ஹெலியை குறிவைத்தான்.

"முடிந்தது நம் கதை" என்றார் சுதர்சன்.கண்ணை மூடி இருக்கையில் உட்கார்ந்தார்.

"முடியவில்லை" என்றாள் பாலாமணி.லாரியிலிருந்து கீழே குதித்ததில் அவள் கால் ஒன்று உடைந்திருந்தது. நொண்டிக்கொண்டே எழுந்தாள்..விந்தி, விந்தி ஹெலிகாப்டர் கதவு அருகே போனாள்.

நேர் கீழே வடகொரிய ஹெலி பறந்துகொண்டிருந்தது.ஏவுகனையை ஏந்தியவன் உடலை சாய்த்து குறிவைத்தான்.

"விடமாட்டேன்" என்றாள் பாலாமணி.மேலிருந்து அந்த ஹெலிகாப்டர் மீது குதித்தாள்.

"சந்துரு" என அலறினாள் தேன்மொழி.

பாலாமணி அந்த ஹெலிகாப்டர் இறக்கை மீது விழுந்தாள். இறக்கையின் சுற்றில் அவள் உடல் அடுத்த நிமிடம் துண்டானது.ஆனால் அதே சமயம் ஒரு இறக்கையும் முறிந்து வீழ்ந்தது.

வடகொரிய ஏவுகணை இலக்கின்றி வேறு பக்கம் பாய்ந்தது.ஹெலிகாப்டர் சில வினாடிகள் தடுமாறி நின்றது.பிறகு நேர்கீழே செங்குத்தாக விழ துவங்கியது.அதனுள் இருந்த விமானிகள் பாராசூட்டை பயன்படுத்தி கீழே குதித்தனர்.

"சந்துருவா அது?" என அமைதியாக கேட்டாள் உமா."எனக்கு பாலாமணியை பார்க்கும்போது லேசாக அந்த சந்தேகம் இருந்தது..ஆனால் அப்படி இருக்க முடியாது என நினைத்துக் கொண்டேன்"

இருக்கையிலிருந்து எழுந்தாள் உமா.

அவள் கையை பிடித்தான் அரவிந்த்.அவனால் எதுவும் பேச முடியவில்லை.

"என்னை தொட இன்னமும் உனக்கு துணிவு இருக்கிறதா?" என்று கேட்டாள் உமா.

"அது பழைய கதை.நான் இப்போது உன் கண்ணில் வில்லனாக தான் தெரிவேன்.ஆனால் சந்துரு செய்ததை அவன் செய்யாவிட்டால் நான் கண்டிப்பாக செய்திருப்பேன்..நான் நல்லவனில்லை.ஆனால் என் காதல் பொய்யில்லை" என்றான் அரவிந்த்.

"அரவிந்த்..இந்த சுமையை மனதில் தாங்கிக்கொண்டு என்னால் உன்னுடன் இனி வாழ முடியாது..உயிர் வாழும் ஒவ்வொரு நிமிடமும் இனி மனதில் இது நெருஞ்சி முள் மாதிரி குத்தும்..சந்துருவுடன் நான் பிரியமாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை..ஆனால் அவன் என்னை வெறுத்ததே இல்லை..தெரியுமா?" என்றாள் உமா...

கண்ணை மூடினாள் உமா...சந்துருவுடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுக்கு கொண்டுவர முயன்றாள்.முதலிரவில் அவளை அவன் தொட முயன்று திட்டு வாங்கியது...சினிமாவுக்கு கூப்பிட்டு அவள் வரமறுத்தது.."வேறு யாரையாவது காதலிக்கிறாயா?" என்று கேட்டு அவள் கோபித்துகொண்டது எல்லாம் மனதில் ஓடின.

"எங்கள் இருவருக்கிடையே பிரியமான தருணம் என ஒன்று இருந்ததே கிடையாது" என்றாள் உமா.."அவன் என்னிடம் நெருங்கி வந்தபோதெல்லாம் எனக்கு உன் நினைவுதான் வந்தது...மனதை கொல்லும் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு ஓடி துறவியானேன்..அவன் என்னை வெறுத்து ஒதுக்கியிருந்தால் புரிந்துகொண்டிருப்பேன்...ஆனால் ஏன் வடகொரியா வரவேண்டும்?ஏன் பெண்னாக மாறவேண்டும்?ஏன் சாகவேண்டும்?"

"இதற்கெல்லாம் பதில் யாருக்கும் தெரியாது" என்றார் இளங்கோ..."தென்கொரியா போயிருந்தால் அவன் என்ன செய்திருப்பான், எப்படி நடந்துகொண்டிருப்பான் என்று கூட எனக்கு தெரியாது..ஆணாக மீண்டும் மாற்ற முடியும் என்று சொன்னேன்.ஆனால் நீ அரவிந்துடன் சேர விரும்பினால் அதை தடுக்க விரும்பவில்லை என்று சந்துரு என்னிடம் ஒரு தடவை சொன்னான்.உன்னிடம் பல முறை முரட்டுத்தனமாக நடந்துகொண்டதற்கு அவன் வருத்தப்பட்டான்.அதனால் தான் நீ வீட்டை விட்டு ஓடினாய் என்று அவனுக்கு அடிமனதில் ஒரு உறுத்தல்"

"அரவிந்துடன் வாழ விரும்பவில்லை என்றால் தென்கொரியாவிலேயே தங்கிவிடலாம்..இல்லாவிட்டால் சமூக சேவை செய்யலாம்..நம் அனைவரின் வாழ்க்கைக்கும் ஒரு பிரயோஜனம் வேண்டும்.கடவுள் கொடுத்த உயிர்..அதை வீணே இழக்க கூடாது" என்றாள் தேனு.

"சந்துரு என்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டானா?நானல்லவா அவனிடம் மோசமாக நடந்துகொண்டேன்?" என்றாள் உமா."பாலாமணி என்று அவன் ஏன் பெயர் வைத்துக்கொண்டான் தெரியுமா?அது என் அம்மா பெயர்..என் அம்மா மீது எனக்கு மிகவும் பாசம்...செத்துப்போன என் அம்மாவுக்கு மட்டும் இந்த விஷயம் எல்லாம் தெரிந்தால் என்னை சபிப்பாள்...அவள் படிதாண்டா பத்தினி..ஆனால் நான்?"

ஹெலிகாப்டர் கதவு அருகே உமாவின் அன்னையின் உருவம் மிதந்து வருவது போலிருந்தது..உமாவுக்கு தலை சுற்றியது..

"நீயாக பார்த்து தாரை வார்த்து கட்டிக்கொடுத்த மாப்பிள்ளை..என்னால் செத்துவிட்டான்" என்றாள் உமா.

"யாரிடம் பேசுகிறாய்?" என கேட்டார் இளங்கோ.

உமா பதிலே சொல்லவில்லை..எந்த கேள்வியும் அவள் மனதில் ஏறவில்லை.அரவிந்தின் கையை விலுக்கென உதறினாள்.

உமாவின் அன்னை ஹெலிகாப்டரை விட்டு வெளியேறுவது போல் தெரிந்தது.

"என்னிடம் பேச பிடிக்கவில்லையா?" என்றாள் உமா."அம்மா.." என அலறிக்கொண்டு ஓடினாள்.

'நில்.." என அனைவரும் தடுக்க தடுக்க வெளியே குதித்துவிட்டாள்.

******

யாருமற்ற வெளியில் 20,000 அடி உயரத்தில் இருந்து குதித்தால் முதலில் பயமாக இருக்கும்..அப்புறம் பழகிவிடும்.

உமாவின் காலுக்கு கீழே மேகங்கள் தெரிந்தன..மேகத்தை முதல் முதலாக தொட்டாள்..வெண் புகை மண்டலத்தில் நுழைவது போல் இருந்தது....சில வினாடிகளுல் மேகத்தை கடந்து விட்டாள்..கீழே தரை தூரத்தில் தெரிந்தது.

"மேகத்தில் மிதப்பது பிடிக்கிறது" என்றாள் உமா.."இன்னும் சில நிமிடங்களில் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்துவிடும்.அப்புறம் மனதில் எந்த உறுத்தலுமிருக்காது.."

தரை வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது.

"சொர்க்கம் இருக்கிறதா?மீண்டும் உன்னை பார்ப்பேனா?மன்னிப்பு கேட்பேனா சந்துரு?" என்றாள் உமா...

பயத்தில் கண்ணை மூடினாள்.."சந்துரு பயமாக இருக்கிறது" என சத்தமிட்டாள்.

'அஞ்சேல்" என விண்ணதிர குரல் கேட்டது.உமாவை யாரோ தாங்கி பிடிப்பது போலிருந்தது.

கண்ணை திறந்தாள்..சந்துரு....

"வந்துவிட்டாயா?" என கேட்டாள்..

"வந்துவிட்டேன்..உனக்காக ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் ஓடி வந்தேன்.காதலிக்கு துயரம் நேரும்போது 'அஞ்சேல்' என்று சொல்லாத ஆண்மையும் ஒரு ஆண்மையா?" என்றான் சந்துரு.

'நான் இன்னும் சாகவில்லையா?நீ நிஜமா,ஆவியா அல்லது நான் காண்பது உருவெளிதோற்றமா,அல்லது எனக்கு சித்தம் தவறிவிட்டதா?" என்று கேட்டாள் உமா..

"இதோ பார் கிள்ளுகிறேன்.வலிக்குதா, இல்லையா?" என்றான் சந்துரு..உமாவை ரதத்தில் ஏற்றினான்.

"எங்கே போகிறோம்?" என கேட்டாள் உமா.

"சொர்க்கலோகத்துக்கு" என்றான் சந்துரு..தேர் விரைவில் சொர்க்கத்தை அடைந்தது.அங்கே அழகாக அலங்கரித்த மணமேடை இருந்தது.

'சீக்கிரம் உட்காருங்கள்.நல்ல நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது" என்றார்கள் தேவர்கள்.

"எங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது" என்றாள் உமா."இதெல்லாம் வேண்டாம்.முதலிரவு அறை எங்கே?"

"இத்தனை அவசரமா?" என்றார்கள் தேவர்கள்..."சரி..சரி..நாங்கள் போகிறோம்" என விலகினர்.

"சொர்க்கலோகத்தில் இரவு ஆறுமாத நீளம் தெரியுமா?" என்றான் சந்துரு.

வெட்கத்துடன் கண்னை மூடினாள் உமா.

4 comments:

வெட்டிப்பயல் said...

என்ன சொல்றதுனே தெரியல :-(

ஓகை said...

இந்தப் பதிவுக்கு தொடர்பானது இல்லை.

அருமையாக அலசிக் கொண்டிருக்கும் தெக்கா, வவ்வால், செல்வன் மூவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததை ஒரு கதையாக வடித்திருக்கிறேன்.
கிருஷ்னமூர்த்திக்கு ஜே!

படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

வவ்வால் said...

செல்வன்,

உங்கள் அஞ்சேல் எனாத ஆண்மை கொஞ்சம்?! "out of date " ஆகிவிட்டது, எனவே சீக்கிறம் ஒரு முற்றும் போடுங்கள்!(நினைப்பதை எல்லாம் பேசிவிடும் எனது போக்கு சொ.செ.சூ ஆகவே முடிகிறது)ஏகப்பட்ட இடைவெளிக்கு பின்னர் வருவதால் அப்படி எனக்கு தோனியிருக்கலாம்! இதை ஏன் சொன்னேன் எனில் உங்கள் ஆற்றல் வீணாவதை கண்டு எனக்கு மனம் பொறுக்கவில்லை!

உங்கள் எழுத்தும் , திறமையும் மிகசிறப்பானதே அதில் எள்ளளவும் குறை சொல்லவில்லை!

பி.கு: விருப்பம் இருப்பின் வெளியிடவும்

Unknown said...

பாலாஜி

தொடர்ந்து படித்து கருத்தெழியதற்கு மிக்க நன்றி.

வவ்வால்

எப்பவோ ஆரம்பித்த கதை.பாதியில் முடிக்காமல் விட மனசு கேட்கவில்லை.மற்றபடி உங்கள் வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி.