Thursday, February 01, 2007

234.காஷ்மிரில் பாகிஸ்தானின் களவாணித்தனம்

ஐரோப்பிய யூனியனின் தலைநகரான பிரஸ்ஸல்சில் பாகிஸ்தான் காஷ்மிருக்காக ஒரு கடும்போரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.பாகிஸ்தானின் பிரதம மந்திரி ஷவுகத் அஜீஸ் விழுந்தடித்துக்கொண்டு பிரஸ்ஸல்ஸ் ஓடி வர இருக்கிறார்.ஐரோப்பிய யூனியனின் ஒரு கமிட்டிக்கு முன்பு அவர் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.இதற்கு காரணம் என்ன?

காஷ்மிரை பற்றி பாகிஸ்தானால் மிக சாமர்த்தியமாக புனையப்பட்ட கட்டுக்கதைகள் அம்பலமானது தான் காரணம். காஷ்மிர் ஒரு ஆக்கிரமிப்பு பிரதேசம், அதில் போரிடும் பாகிஸ்தானிய கூலிகள் சுதந்திரபோர் வீரர்கள் என்றும் அங்கே இப்போது நிலவும் வன்முறைக்கு இந்தியாவே காரணம் என்றும் ஒரு கட்டுகதையை பாகிஸ்தானும், காஷ்மிர தீவிரவாதிகளின் கோவணமாக விளங்கும் இந்திய எழுத்தாளர்கள் சிலரும், வெளிநாட்டு ஊடகங்களும் மிக சாமர்த்தியமாக கட்டமைத்திருந்தனர். அந்த பொய்கள் இன்று கிழிந்து முஷாரப்பின் முகமூடி கிழிந்து அம்பலமாகி சர்வதேச அரங்கில் கேவலப்பட்டு நிற்கிறது பாகிஸ்தான்.

அப்படி என்ன தான் நடந்தது?

ஐரோப்பிய பார்லிமெண்டின் பிரிட்டிஷ் உறுப்பினரான எம்மா நிக்கல்சன் காஷ்மிரின் இரு பகுதிகளிலும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு அறிக்கை சமர்பித்திருக்கிறார். அந்த அறிக்கையில் பாகிஸ்தானை கிழி, கிழி என கிழித்து தோரணம் கட்டியிருக்கிறார்.

1.காஷ்மிரில் தீவிரவாதம் நிற்கும் வரை இந்தியா படைகளை வாபஸ் வாங்க முடியாது.

2. காஷ்மிரில் கருத்துகணிப்பு நடத்த சொல்வதை அங்கிருக்கும் மக்களே ஆதரிக்கவில்லை.

3.பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மிரில் மனித உரிமைகளே இல்லை.அவர்கள் சமமான குடிமக்களாக நடத்தப்படுவதில்லை. ஜனநாயகமும் இல்லை. பாகிஸ்தானிய பாராளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதிநிதித்துவமும் இல்லை.

4.பாகிஸ்தான் தான் பயங்கரவாதத்தை காஷ்மிரில் தூண்டி விடுகிறது. தீவிரவாதிகளின் முகாமை பாகிஸ்தான் மூடியது என்பது அண்டப்புளுகு.

5. பாகிஸ்தானில் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மிக மோசமான சட்டங்கள் மூலம் அவர்கள் நசுக்கப்படுகின்றனர்.

6.பாகிஸ்தானிய ஆகிரமிப்பு காஷ்மிரில் உள்ளதை விட அனைத்து விதங்களிலும் இந்திய காஷ்மிரில் மனித உரிமைகளும், மக்கள் வாழ்க்கை தரமும் அவர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை உரிமைகளும் நன்றாக உள்ளது.

இந்திய நிலைக்கு மிக ஆதரவான இந்த ரிப்போர்ட் பாகிஸ்தானில் அதிர்ச்சி அலைகளை பரப்பியது. ஐரோப்பிய யூனியன் பாகிஸ்தானுக்கு மிக அதிக அளவில் நிதி உதவி தரும் நாடு என்பதும் இது ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அறிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை வெளிவந்ததும் ஐரோப்பிய யூனியனின் பாகிஸ்தானிய தூதரான சையது காலிது எம்மா நிக்கல்சனுக்கு 10 பக்க மறுப்புரை எழுதினார். அந்த மறுப்புரைக்கு ஆதாரபூர்வமாக பதில் எழுதி பாகிஸ்தானின் புரட்டு வாதங்களை விரிவாக ஊடகங்களில் அம்பலப்படுத்தினார் எம்மா நிக்கல்சன்.

இப்போது இந்த ரிப்போர்ட்டை அமுக்கி நீர்த்து போக செய்யும் வேலையில் பாகிஸ்தானும், அதன் ஜால்ரா பிரிட்டிஷ் எம்பிக்கள் சிலரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அது போக போர்க்களத்திலும் பாகிஸ்தானிய கூலிப்படையினருக்கு செருப்படி கிடைத்துள்ளது. சென்ற வருடமும் இந்த வருடமும் இந்திய ராணுவம் மிக அருமையான வெற்றிகளை காஷ்மிரில் அடைந்துள்ளது. 2005ம் வருடம் சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் காஷ்மிரில் கொல்லப்ப்ட்டுள்ளனர். அதன்பின் தீவிரவாதிகள் நடமாட்டம் குறைந்து 2006ல் 518 தீவிரவாதிகள் பரலோகம் போய் சேர்ந்துவிட்டனர். மக்கள் மற்றும் ராணுவவீரர் மரணம் 30 முதல் 50% வரை சென்ற ஆண்டுகளில் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட சகஜ வாழ்வு நிலைக்கு காஷ்மிர் சென்ற ஆண்டில் திரும்பியுள்ளது.

பாகிஸ்தானுக்கு இதுபோன்ற ஆப்புகள் தொடர வாழ்த்துவோம்.

12 comments:

Anonymous said...

மிக அருமையான செய்தி செல்வன்....நன்றி......

பெண்ணியம் பேசும் பலர் பாக்.காஷ்மீர பெண்களூக்கும், பாக்கிஸ்தானிய பெண்களூக்கும் ஆதரவாக ஏதேனும் செய்வார்களா?

Unknown said...

//பெண்ணியம் பேசும் பலர் பாக்.காஷ்மீர பெண்களூக்கும், பாக்கிஸ்தானிய பெண்களூக்கும் ஆதரவாக ஏதேனும் செய்வார்களா? //


நல்லா கேட்டீங்க போங்க:-)

பாகிஸ்தான் காஷ்மிரில் காலடி வைத்தால் சுட்டுவிட மாட்டார்களா, சுட்டு? அப்புறம் எங்கேன்னு போயி கட்டுரை எழுதறது?

சீனு said...

நல்ல செய்தி. நன்றி.

Santhosh said...

நல்ல சேதி சொல்லி இருக்கிங்க செல்வன்.

//பெண்ணியம் பேசும் பலர் பாக்.காஷ்மீர பெண்களூக்கும், பாக்கிஸ்தானிய பெண்களூக்கும் ஆதரவாக ஏதேனும் செய்வார்களா? //

நல்லா கேட்டிங்க போங்க பெண்ணியம் பேசுபவர்கள் அதை நிறுத்தினால் போது பெண்கள் முன்னேறுவார்கள். என்னோட பிராத்தனை எல்லாம் பெண்களை பெண்ணியம் பேசுபவர்களிடமிருந்து தமிழை தமிழ் பாதுகாப்பு கூட்டம் என்று அலையும் கூட்டத்திடமிருந்தும் காப்பாற்றுங்கள் என்பது தான்.

வெட்டிப்பயல் said...

நல்ல செய்தி செல்வன்...

காஷ்மீரில் சீக்கிரம் அமைதி திரும்ப ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!!!

கால்கரி சிவா said...

நன்றி செல்வன் நல்ல செய்திக்கு. இந்த செய்தி இந்திய ஊடகங்கள் அவுட்லுக் மற்றவை வெளியிட்டனவா?

Unknown said...

சிவா

இது அவுட்லுக்கில் வெளீவந்தது.இந்திய ஆங்கில பத்திரிக்கைகளை பெரும்பாலும் நான் படிப்பதில்லை.அதனால் அவற்றில் வந்ததா இல்லையா என தெரியவில்லை.தமிழ் செய்தித்தாள்களில் இவை வெளீவந்தது போல் தெரியவில்லை.

Unknown said...

சீனு, சந்தோஷ் பாலாஜி

நன்றி.

//என்னோட பிராத்தனை எல்லாம் பெண்களை பெண்ணியம் பேசுபவர்களிடமிருந்து தமிழை தமிழ் பாதுகாப்பு கூட்டம் என்று அலையும் கூட்டத்திடமிருந்தும் காப்பாற்றுங்கள் என்பது தான். //

ஹா..ஹா:-)நல்லா சொன்னிங்க சந்தோஷ்.

பாலாஜி.நாம் எல்லோரும் கண்டிப்பாக பிரார்த்தனை செய்து நம் வீரர்களின் வெற்றிக்கு வாழ்த்து சொல்வோம்.

அன்புடன்
செல்வன்

Anonymous said...

A coordianted attempt is being made by some writers who are in the payroll of terrorists to spread their propoganda on kashmir.It is important that such a campaign is countered at all levels.Unfortunately our media is not highlighting such reports to people.We have to take such news and issues to people.This article is a good attempt in spreading truth.Thanks

Anonymous said...

பாகிஸ்தானில் வியாபாரம் செய்யும் தாய்வான் நாட்டினர், விசுவாசம் காட்ட காஸ்மீரை பாகிஸ்தானுடன் சேர்த்து அந்த நாட்டின் வரைபடத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்திருக்கிறது. என்னுடன் பணிபுரியும் ஒரு பாகிஸ்தான் நன்பரின் நாட்குறிப்பு அட்டையை பார்த்து அதிர்ந்து கேட்ட போது அவர் கூறியது தான் இது.

தாய்வானை பெருமையாக பீற்றும் தரன் போன்றவர்களுக்கு இது புரிந்தால் சரி.

Unknown said...

அனானிமஸ்,

தாய்வானில் ஏதோ ஒரு கம்பனி செய்த வேலையாக இருக்கலாம்.பொதுவாக தாய்வானுக்கும் இந்தியாவுக்கும் வணிக தொடர்புகள் நிறைய உண்டு.ஏசர், தாய்வான் செமிகண்டக்டர்ஸ் ஆகிய கம்பனிகள் இந்தியாவில் நல்ல வணிக தொடர்புகள் கொண்டுள்ளன.அதனால் அவர்கள் பாகிஸ்தானிய ஆதரவு நிலை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது.மேலும் சீனா,பாகிஸ்தான் நட்பு இறுக்கமாக இருப்பதால் சீனாவின் பரம எதிரியான தாய்வான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க முடியும் என தோன்றவில்லை

Unknown said...

உண்மை இந்தியன்,

நன்றி.அனைத்து இடதுசாரிகளும் பாகிஸ்தானிடம் பணம் பெறுகின்றனர் என்று சொல்ல முடியாது. சிலர் பெறலாம். சிலர் அவர்களது முடக்குவாத கொள்கையின் அடிப்படையிலும், இந்திய தேச விரோதத்திலும் தாமாகவே பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கவும் செய்யலாம்.