Monday, January 15, 2007

228. பால், தேன், பாகு, பருப்பு, சான்டியாகோ.

பாலையும் தெளிதேனையும் பாகையும் பருப்பையும் கலந்து கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணிக்கு கொடுத்துத்தான் அவ்வையால் சங்கத்தமிழ் மூன்றையும் பெற முடிந்தது. இந்த கலியுகத்தில் மக்களால் அத்தனை கஷ்டப்பட்டு சங்கத்தமிழ் மூன்றையும் பெற முடியுமா என்ன?அதனால் தான் அதை அவர்களுக்கு எளிதாக தர முத்தமிழ் குழுமம் ஏற்படுத்தப்பட்டது.

கொஞ்சம் இருங்க....இப்ப என்ன சொல்லிட்டேன்னு என்னை இப்படி அடிக்க வர்ரீங்க? ஓவர் பில்டப் கொடுத்தது உண்மைதான். ஆனால் கவிதைக்கு பொய்யழகுன்னு வைரமுத்து சொல்லியிருக்காரில்லையா?:)

அதாவது மக்களே இதில் பாட்டம்லைன் என்னன்னா போன வருஷம் இதே நேரம் தமிழ்பேசும் மக்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அவர்களுக்கு இரண்டு பரிசுகள் கிடைத்தன. (மறுபடியும் ஓவர் பில்டப் நற,நற..) அதாவது நான் ஜனவரி 14ம் தேதி வலைப்பூ துவங்கினேன்(ரொம்ப முக்கியம்), ஒரு ஆறுநாள் கழிச்சு ஜனவரி 20ம் தேதி முத்தமிழ் குழுமம் துவக்கப்பட்டது.

தோன்றிற் புகழோடு தோன்றுகன்னு சொல்லுவாங்க. அதுக்காக எல்லாரும் என்ன பில்கேட்ஸ் குடும்பத்திலேயே பிறக்க முடியும்? சாதாரணமாவும் பிறக்கலாமில்லையா?அதே மாதிரி முத்தமிழும் சாதாரணமா தான் துவங்கியது. ஆனால் துவங்கிய ஒரு வருடத்தில் இணைய தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களை தன்னுள் சேர்த்துக்கொண்டது. தமிழாசான் முனைவர் இரவா, முனைவர் நா.பழனியப்பன், டாக்டர் சிவா (சிவாஜிபடம்னு நினைச்சுடாதீங்க..இவர் ஐ.ஐடி குவஹாத்தியில் முனைவர் பட்ட மாணவர்:), இணைய பத்திரிக்கை மற்றும் வானொலி நடத்தும் விபாகை அண்ணன், கவிதாயிணி திலகபாமா, கவிஞர் வா.மணிகண்டன், காதலை கவிதையாய் பொழியும் நிலா ரசிகன், அந்த ரசிகனை தினமும் ரசிக்கும் நிலவு நண்பன், பாஸிடிவை துறந்த தமிழ் ராமர்:), கவிதை கட்டுரை என்று வெளுத்து வாங்கும் லாவண்யா, ஆன்மிகத்தை அழகாக எழுதும் கீதா சாம்பசிவம் அக்கா, காழியூரார், நடேசன் ஐயா, சகலகலா வல்லவர் அரங்கர்ன்னு பலர் இந்த குழுவில் சேர்ந்தனர்.

சண்டை சச்சரவு இல்லாத குழுமம் ஒரு குழுமமா என்ன? கம்யூனிசம்ன்னு சொன்னாலே கச்சை கட்டிக்கொண்டுச் சண்டை பிடிக்க நான், வேந்தர்ன்னு இருவரணியும் எங்களை எதிர்த்து கவுண்டர் கொடுக்க தியாகு, அசுரன், ராஜ்வனஜ், ஈஸ்வர்ன்னு ஒரு பெரிய பட்டாளமே தயாரா இருக்கு. இந்த சண்டையில் கலந்துகொள்லாமல் நக்கல், நையாண்டி என எழுதும் நாமக்கல் சிபியார், குறும்புத்தம்பி விழியன், கேள்விழி, ஜெயந்தி அர்ஜூன், விசாலம் அக்கா,் பரமேஸ்வரிி, கோபு, மாகோ, சார்லஸ், புரவி, ரவீந்திரன், ராஜுபாண்டியன் ராஜு, லியோமோகன் என்று இன்னொரு குறும்பு கூட்டமும் இருக்கு. ஈழத்துக்கு அடுத்த ப்ளைட்டில் ஏறிப்போய் சண்டைபிடிக்க தயாராக இருக்கும் கேபிடல், விஜி என்று ஒரு வீரமறவர் கூட்டமும் இருக்கிறது.

இந்த குழுவில் கம்யுனிசம், முதலாளித்துவம் ,பின்நவீனத்துவம், ஆரியம், திராவிடம்,கதை, கட்டுரை,காதல், ஆன்மிகம்,நாத்திகம்,பாரதம்,ஈழம்ன்னு விதவிதமான கோட்பாடுகளை கொண்ட மக்கள் இருக்கிறார்கள். இத்தனை பேரையும் ஒருங்கிணைக்கும் ஒரே புள்ளியாக இருப்பது நட்பும் அதை தாண்டிய கருத்து சுதந்திரமும் தானுங்க. முத்தமிழில் கருத்து சுதந்திரம் தான் கடவுளாக போற்றப்படுகிறது. குழுவை வழிநடத்துவோர் எந்த கருத்தையும், விவாதத்தையும் தடை செய்வதில்லை. அதனால் தான் ராஜீவ் காந்தி கொலை சரியா தப்பா, பாரதி நல்லவரா கெட்டவரா போன்ற அனல் பறக்கும் காண்ட்ரவர்சியான தலைப்புகளை எல்லாம் ஒரு தளத்தில் வைத்து விவாதிக்க முடிந்தது.

முத்தமிழின் முதலாம் ஆண்டுவிழாவை ஒட்டி முத்தமிழில் சென்ற வருடம் எழுதப்பட்ட இடுகைகளில் எனக்கு பிடித்த படைப்புக்களை அடுத்த வாரம் வரை வெளியிட இருக்கிறேன். பிளாக் இலாத அருமையான படைப்பாளிகள் முத்தமிழில் இருக்கின்றனர். அவர்களின் படைப்புகளை நீங்களும் ரசிக்க வேண்டாமா? அதனால் அவற்றை என் வலைதளத்தில் எழுத்தாளர் அறிமுகத்துடன் தினமும் இட இருக்கின்றேன்.

இதுபோக முத்தமிழ் சார்பில் கட்டுரை , கவிதை மற்றும் சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த போட்டிகள் புதுமையானவை. போட்டிக்காக அனுப்பப்படும் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைக்கு தலைப்பு எதுவும் கிடையாது, தமிழ் மொழி மற்றும் தமிழ் நாட்டைப்பற்றி இருந்தாலே போதுமானது. உங்கள் சொந்த அனுபவங்களையும் கூட எழுதலாம். கட்டுரை மற்றும் சிறுகதை 400 வார்த்தைகளுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். படைப்புகள் முத்தமிழ் குழுமத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜனவரி 25, 2007. படைப்புகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

அடுத்து மிக முக்கியமாக இந்த பிறந்த நாளில் முத்தமிழ் குழுமம் ஒரு காரியத்தை உங்கள் முன் வைக்கிறது. அதாவது தமிழ்நாட்டிலுள்ள சில கிராம பள்ளிக்கூடங்களுக்கு நூலகங்கள் அமைத்து தரலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நண்பர் உமாநாத் (விழியன்) இந்தப் பொறுப்பை ஏற்று செயல்படுத்த முன்வந்துள்ளார் ்.

இந்த நல்ல காரியத்திற்கு புத்தகங்களாகவோ அல்லது பணமாகவோ அனுப்பி உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

Citibank Account
Bangalore - Koramangala

A/c No. 5637000804 - Umanath

Ph numbers : 09886217301/ 09894110534 (Tn number)

Mailing Address

S.Umanath,
Bluestar Infotech Limited,
#7, 18th Main Road,
7th Block,
Koramangala -
Bangalore - 560095.

உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி muththamiz@gmail.com

அப்புறம் இன்னொரு சின்ன அறிவிப்பு.

பிப்ரவரி 15 முதல் 19 வரை கலிபோர்னியா மாநிலம் சான்டியாகோவில் ஊர் சுற்றிக்கொண்டிருப்பேன். அந்த பக்கம் யாராவது வலைபதிவர்கள் இருந்தால் சான்டியாகோ வந்தீர்கள் என்றால் ஒரு மீட்டிங் போட்டுடலாம்.( என்னது போண்டாவா?அதெல்லாம் கிடையாது.ஆனியன் ரிங்க்ஸ் மட்டும்தான்:))

8 comments:

நெல்லை சிவா said...

மிக நல்ல முயற்சி செல்வன். நல்ல புத்தகம், நல்ல நண்பன். இந்த நல்ல நண்பனை, வருங்காலத் தூண்களுக்கு கொடுத்திட நல்ல முயற்சி. கூடிய விரைவில் எனது பங்களிப்பினை அனுப்பி வைக்கிறேன்.

சேதுக்கரசி said...

மார்க்கெட்டிங் பலமா இருக்கே ;-)

Unknown said...

நன்றி நெல்லை சிவா.நீங்கள் செய்யும் இந்த உதவி பள்ளி குழந்தைகளுக்கு நிச்சயம் நல்லதொரு பயனைத் தரும். மிக்க நன்றி

Unknown said...

/மார்க்கெட்டிங் பலமா இருக்கே ;-) /

மார்க்கடிங் தானே என் தொழில். அப்புறம் அதை ஒழுங்கா செய்யலைன்னா எப்படி? தொழில் சுத்தம் வேண்டாமா என்ன?:-))

சேதுக்கரசி said...

//மார்க்கடிங் தானே என் தொழில்//

of course.. அதோட அந்தப் பற்று இருக்கே.. அடடா......... ;-)

கால்கரி சிவா said...

ஆண்டுவிழாவிற்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

//of course.. அதோட அந்தப் பற்று இருக்கே.. அடடா......... ;-) //

பற்று இல்லாமல் மனிதன் வாழ முடியுமா என்ன? பற்றற்றான் தாளை பற்றவும் பற்று தேவைப்படுகிறது அல்லவா?:)

Unknown said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா.