உலக அளவில் ஆர்கானிக் விவசாயம் என்பது பிரபலமாகி வருகிறது.ஆர்கானிக் விவசாயம் என்பது செயற்கையான உரம்,பூச்சிக்கொல்லி என எதையும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட காய்கறிகள், பொருட்கள் ஆகியவற்றை குறிப்பதாகும்.இந்த வகை இயற்கை விவசாயம் வாடிக்கையாளருக்கு நன்மையையும், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் தரக்கூடியது.டிம்பக்டு இந்த இயற்கை விவசாயத்தை பயன்படுத்தி அனந்தபூர் வரட்சிக்கு உதவ முன்வந்தது.
2005ல் 27 விவசாயிகள், 80 ஏக்ரா நிலம், 1 கிராமம் என்ற அளவில் துவங்கிய இந்த முயற்சி இப்போது 8 கிராமங்கள், 480 ஏக்ரா, 160 விவசாயிகள் என்ற அளவில் விரிந்துள்ளது.விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது எனும் நோக்கில் செயல்படும் டிம்பக்டூ, விவசாயிகளின் பொருட்களை அவர்களே விற்று பயனடைய ஒரு கூட்டுறவு நிறுவனத்தையும் துவக்கி உள்ளது.119 கிராமங்களில் 8000 பேர் இந்த சங்கத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
அனந்தபூர் விவசாயிகள் நிலக்கடலையை மற்றும் பயிரிட்டு ஏமாந்து வந்தனர்.அவர்களுக்கு மில்லட்(தமிழில் ராகி(கம்பு) என நினைக்கிறேன்.சரியா என சொல்லவும்) எனும் தானியத்தை மாற்றாக டிம்பக்டூ அறிமுகப்படுத்தியது.மில்லட்டுக்கு அதிக நீர் தேவை இல்லை.சர்க்கரை நோயை குறைக்க கூடியது என பல நன்மைகள் உண்டு.ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கான விழிப்புணர்வு குறைவு என்பதால் மில்லட்டை நல்ல ஒரு மாற்று தானியமாக வாடிக்கையாளர் மத்தியில் பிரபலப்படுத்த டிம்பக்டூ முயற்சி செய்து வருகிறது. பல உணவு திருவிழாக்கள், விழிப்புணர்வு முகாம்கள் எனவும் நடத்தி வருகிறது டிம்பக்டூ. மும்பை, பெங்களூர், சென்னை என பல பெருநகரங்களில் இந்த இயற்கை பொருட்களுக்கு நல்ல சந்தையை டிம்பக்டூ ஏற்படுத்தி இருக்கிறது.
டிம்பக்டூவும் தண்ணீர் நிர்வாகமும்:
அனந்தபூரில் கடும் வரட்சி நிலவுவதால் நீர் மேலாண்மைக்கு டிம்பக்டூ அருமையான பங்காற்றியுள்ளது. டிம்பக்டூ முயற்சியால் அனந்தபூரில் ஆந்திர அரசின் வேலைக்கு உணவு எனும் திட்டத்தின் 37,728 மழைதண்ணீர் சேகரிப்பு குழிகளும், 13,000 மரங்களும் நடப்பட்டன. நூற்றுக்கணக்கான ஏரிகளும் சுத்தம் செய்யப்பட்டு தூர்வாரப்பட்டன.இதனால் அந்த ஏரியாவில் விளைபொருள் உற்பத்தி ஏக்ராவுக்கு 5 முதல் 10 சாக்குமூட்டைகள் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளதாம்.
அதுபோக டிம்பக்டூ செய்த மற்ற சேவைகள்
புல் வளர்க்கும் திட்டம் மூலம் 23 கிராமங்களில் உள்ள 40,000 ஆடுகளுக்கு புல் வழங்கியது.
ஆயிரக்கணக்கான் மரங்களை நட்டது
சின்ன கல்லணைகளை கட்டியது.
8000 ஏக்ரா நிலத்தில் மரம் நட்டு வனவளத்தை பெருக்கியது.
7800 புளியமரங்களை அமைத்து விவசாய வருமானத்தை அதிகரித்தது.
சொசைட்டி அமைத்து மக்களின் முதலீட்டுக்கு நல்ல வட்டியை (9%) அளிப்பது.
அனந்தபூரில் உள்ள சென்னகொத்தபள்ளி கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள் தமது கல்வியை வைத்து தாங்கள் மட்டும் பிழைக்காமல், தங்கள் மாவட்ட மக்கள் அனைவரும் பயனுற துவக்கிய இயக்கமே டிம்பக்டூ.நாடு என்ன செய்தது எனக்கு என இந்த இளைஞர்கள் கேட்கவில்லை.நான் என்ன செய்தேன் நாட்டுக்கு என்று கேட்டார்கள்.
விளைவு........
ஏழையின் சிரிப்பு.அதில் இறைவனின் தரிசனம்.
ஆம்..இந்த இயக்கத்தினர் கடவுளை கண்டவர்கள்.
நீங்களும் கடவுளை காணவேண்டுமா?
அதற்கு டிம்பக்டூவுக்கு நீங்கள் உதவ வேண்டும். பணமாக மட்டும் அல்லாமல் எளிய உதவிகளும் செய்யலாம்.இதோ இந்த சுட்டியை அழுத்துங்கள். அத்துடன் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பரப்புங்கள்.
16 comments:
விவசாயிகளின் குறைகளை களைய தொலைநோக்கு திட்டங்கை நாடாமல் மேம்போக்கான திட்டங்களை நடைமுறை படுத்தப்படுகின்றன்.
உதாரணத்திற்கு கடன் சுமையும், வறுமையும் சூழ்ந்த விதர்ப்பா விவசாயிகளிடம் செத்தால் குடும்பத்திற்கு ஒரு லட்சம் கொடுத்து வருகின்றனர்.
நீங்கள் சொன்னது போன்ற தன்னார்வ இயக்கங்கள்தான் நம்பிக்கையை கொடுக்கின்றன
உங்கள் பதிவு ஒரு பொய் பிரச்சார பதிவு. இந்த பதிவின் உள்நோக்கம் மிகவும் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. ஒருவேலை விளம்பர பதிவோ?
நீங்கள் கூறி இருப்பதுபோல் உலகத்தில் அனைத்து நாடாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயிர்கள் அல்ல இந்த ஆர்கானிக் பயிர்கள். இந்தியாவில் நிறைய பருத்தி விவசாயிகள் ஏமாந்து நல்ல மகசூல் இல்லாமல் ஓட்டாண்டி ஆனதற்கு இந்த ஆர்கானிக் முறை பயிரும் ஒரு காரணம். எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போனதே அதற்கு காரணம். இந்தவித பயிர்செய்வதால், ஒவ்வொரு முறையும் விதையை புதிதாக விதைகிடங்கில் பணத்துக்கு விலைகொடுத்து வாங்கவேண்டும். பயிர் செய்து அறுவடையில் கிடைத்த விதைகள், விதைப்பதற்கு தரமற்றது. மேலும் இந்த வகை தானியங்கள் உடல்நலத்திற்கு கெட்டது என நினைக்கப்படுகிறது.
மாசிலா,
Genetically engineered crops என்பதை organic farming என நினைத்து குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் என எதுவும் இல்லாமல் பாரம்பரிய இயற்கை முறையில் செய்யப்படும் விவசாயமே ஆர்கானிக் விவசாயம் ஆகும்.
நன்றி நிர்மல்,
விதர்பாவில் இன்னொரு கொடூர காமடியும் நடந்தது. பஞ்சத்தில் தவித்த விவசாயிகளுக்கு ஜெர்சி பசுக்களை கொடுத்து மாற்றுவழி காட்டியது அரசு.ஆனால் விதர்பாவின் பருவநிலை மாடுவளர்ப்புக்கு ஒத்துவரவில்லை.மேலும் அம்மாடுகளுக்கு உணவளிக்க ஒரு நாளுக்கு 80 ரூபாய் செலவாகிரதாம்.ஆனால் 3 லிட்டர் பால் மட்டுமே அவை கறக்கின்ரனவாம். எனவே விவசாயிகள் மேலும் அதிக துயரம் தான் அடைகின்றனர்.
மக்கள்படும் துயரத்தை போக்க ஏசி அறைகளில் இருந்துகொண்டு திட்டம் தீட்டினால் இப்படித்தான் இருக்கும்.
மாசிலா,
நீங்க குழம்பி இருக்கிங்க. இவர்களது திட்டம் இயற்கைவிவசாயம் போன்றது. இயற்கையான உரங்கள் முதலியனவற்றை உபயோகித்து விவசாயம் செய்வது. நீங்க சொல்வது Genetically Modified Seeds.
சரியான ஆரய்ச்சிகள் இல்லாமல் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பசுமை புரட்சி அப்படி இப்படின்னு நிலத்தை காலி செய்து விட்டனர். இந்த லட்சணத்தில் இரண்டாம் பசுமை புரட்சி அப்படின்னு வேறு கிளம்பி இருக்காங்க. அது சம்மந்தமான என்னோட பதிவு இது
மாசிலாவின் சந்தேகத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி சந்தோஷ். அந்த விகடன் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. படித்து பின்னூட்டம் இட்டிருக்கிறேன். நன்றி
அன்புடன்
செல்வன்
நல்ல செய்தி.
மாசிலாவின் குழப்பத்தை தெளிவு படுத்தியதும் நன்று.
ஆமாம், பெரும்பாலும் கணினித் துறையை சார்ந்தவர் மட்டுமே இந்த பதிவை படிப்பார்கள்.
இதை மாதிரி தேவையான பதிவுகளை படிக்க வேண்டியவர்களிடம் கொண்டு செல்வது எப்படி?
குமுதம்/விகடன் மாதிரி பத்திரிகைகளில் ஏற்றினால் நன்று. அனுப்பிப் பாருங்களேன் அந்த பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு.
போடுவாங்களா?
ஒரு பக்க 'பொது நல' விளம்பரம் கொடுக்க ரொம்ப செலவாகுமோ?
//Genetically engineered crops என்பதை organic farming என நினைத்து குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.//
நீங்கள் சொல்வதுதான் சரி. அறியாமையில் அவசரப்பட்டுவிட்டேன். மன்னிக்கவும்.
நன்றி.
அன்புடன் மாசிலா.
"மக்கள் சேவையே மகேசன் சேவை"
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்போம்"
என்ற பொன்மொழிகளூக்கு உயிர்
கொடுத்த " டிம்பக்டூ" போன்ற கோயில்கள் தான் நாட்டிற்கு தேவை.
இந்தியாவின் பாவப்பட்ட ஜீவன்களான
விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை
உயற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள
டிம்பக்ட்டூ போன்ற இறைஇல்லங்கள்
நாடெங்கும் பல்கிப்பெருகவேண்டும்.
கட்டுரையை வெளியிட்ட செல்வன்
அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றி.
"மக்கள் சேவையே மகேசன் சேவை"
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்போம்"
என்ற பொன்மொழிகளூக்கு உயிர்
கொடுத்த " டிம்பக்டூ" போன்ற கோயில்கள் தான் நாட்டிற்கு தேவை.
இந்தியாவின் பாவப்பட்ட ஜீவன்களான
விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை
உயற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள
டிம்பக்ட்டூ போன்ற இறைஇல்லங்கள்
நாடெங்கும் பல்கிப்பெருகவேண்டும்.
கட்டுரையை வெளியிட்ட செல்வன்
அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றி.
செல்வனாரே!
மொதல்ல சொல்லிக்கிறேன் தகவலுக்கு நன்றி!
வேலையிடத்திலே உன்னை டிபக்டூவிற்கு மாற்றி விடுவேன் என்று பயமுறுத்திய காரணத்தால் அப்பெயரே ஒரு அலர்ஜியாக இருந்தது. இப்போ இயற்கையா சரியாயிடுச்சி :-)
சந்தோஷ் கூறுவது போல் தொகுப்பாய் அச்சு/வெகுஜன ஊடகத்தில் வெளிவர முயற்சி செய்யலாமே?
மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை மாசிலா. உங்கள் சந்தேகம் தெளிய கேள்வி கேட்டதில் தவறொன்றுமில்லை.
தங்கள் வருகைக்கு நன்றி
அன்புடன்
செல்வன்
பி.என்.ஐ
அச்சு ஊடகங்களை தொடர்பு கொள்வது எப்படி என தெரியவில்லை.இந்தியாவில் இருந்தால் முயற்சி செய்திருக்கலாம்.இங்கே என்ன செய்வது என தெரியவில்லை.விளம்பரம் தர என்ன செலவாகும் என தெரியவில்லை.ஆனால் இதை யாராவது விவசாயிகளின் நன்மைக்கு பயன்படுத்த என்னால் முடிந்த அனைத்து உதவியும் செய்ய தயார்.
தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி
அன்புடன்
செல்வன்
14
அருட்செல்வம், குசும்பன்
உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி.அருட்செல்வம் சொன்னது போல் பல்லாயிரம் டிம்பக்டூக்கள் நாடெங்கும் பல்கிப்பெருக வேண்டும்.அதை நாம் தான் செய்ய வேண்டும்.
அன்புடன்
செல்வன்
Selvan Anna,
romba nalla Pathivu.
Selvi
Post a Comment