Thursday, January 04, 2007

222. அமெரிக்காவுக்கு படிக்க வர ஆசையா?

அமெரிக்காவுக்கு படிக்க வர விரும்புவோர் F1 என்ற கேட்டகரியில் வரவேண்டும்.அதை பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்கள்.

அமெரிக்காவில் இந்தியா போன்ற ஏகப்பட்ட டுபாக்கூர் பல்கலைகழகங்கள்,தனியார் கல்லூரிகள் உண்டு.அங்கெல்லாம் சீட் கிடைப்பது கஷ்டமே இல்லை.இந்தியாவிலுள்ள பல கன்சல்டன்ட்கள் அந்த மாதிரி டுபாக்கூர் பல்கலைகழகங்களில் சீட் வாங்கி கொடுத்துவிட்டு காசையும் கறந்துவிடுவார்கள்.(அப்ளிகேஷன் பீஸ் 100$,போஸ்டல் சார்ஜ் 1500 ரூபாய் என்று காசுபிடுங்குவார்கள்)

ஆனால் இம்மாதிரி பல்கலைகழகங்களில் சீட் வாங்கிக்கொண்டு அமெரிக்க தூதரகத்துக்கு விசா வாங்க போனால் சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பிவர வேண்டியதுதான். ஒரு பல்கலைகழகம் நல்ல பல்கலைகழகமா இல்லையா என்பதை எப்படி கண்டுகொள்வது? பிசினஸ் மேற்படிப்புகளுக்கு பிசினஸ்வீக் பத்திரிக்கை ஒரு எம்.பி.ஏ ரேங்கிங் வெளியிடுகிறது. AACSB எனும் அமைப்பு எம்.பி,.ஏ சொல்லித்தரும் பல்கலைகழகங்களுக்கு தரவரிசை நிர்ணயிக்கிறது. அதை பார்த்து பல்கலைகழகங்களை தேர்ந்தெடுப்பது நலம்.(மற்ற துறைகளுக்கு இதேபோல் ரேங்கின்க் இருக்கிறதா என தெரியவில்லை)

அமெரிக்காவிலுள்ள நல்ல பல்கலைகழகங்களில் சேர ஒன்று பெரும் பணக்காரனாயிருக்க வேண்டும் அல்லது மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும்.கூடுமானவரை காசு இல்லை என்றால் இளங்கலை பட்டங்களை அமெரிக்காவில் படிப்பதை தவிர்த்தல் நலம்.முதுகலைபட்டங்கள், ஆய்வு பட்டங்கள் ஆகியவற்றுக்கு உதவித்தொகை தரும் வாய்ப்பு நல்ல பல்கலைகழகங்களில் சேர்ந்தால் உண்டு.

அமெரிக்காவிலுள்ள நல்ல பல்கலைகழகங்களை தேர்ந்தெடுத்தல் எப்படி?

1.கூடுமானவரை கன்சல்டுன்டுகளை தவிருங்கள்.அல்லது நல்ல கன்சல்டன்டுகளை தேர்ந்தெடுங்கள்.

2.ஜிமேட்,ஜிஆர்.ஈ ஆகியவற்றில் மிக நல்ல மதிப்பெண்கள் பெறுவது அவசியம்.குறைந்த மதிப்பெண்கள் இருந்தால் சீட் கிடைத்தாலும், விசா கண்டிப்பாக கிடைக்காது.

3.நீங்கள் தேர்வு செய்த பல்கலைகழக இந்திய மாணவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவர்களிடம் மேல்விவரம் கேளுங்கள். அந்த பல்கலைகழக வலைதலங்களில் இந்தியமாணவர் சங்கம் பற்றிய விவரம் இருக்கும். அல்லது அந்த பல்கலைகழக வலைதலங்களில் தேடினால் ஏதாவது இந்தியமாணவர் பற்றிய தகவல் இருக்கும்.புரொபசர்கலை தொடர்பு கொள்ளதீர்கள்.பதில் அனுப்ப மாட்டார்கள்.

4.நீங்கள் தேர்ந்தெடுக்கும் பல்கலையில் உதவித்தொக்லை அல்லது கிராஜுவேட் அஸிஸ்டண்ட் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா என பாருங்கள்.பல பல்கலைகழகங்களில் அட்மிஷனின்போது தராவிட்டாலும் பல்கலைகழகங்களில் சேர்ந்தபின் உதவித்தொகை அல்லது கிராஜுவேட் அஸ்ஸிஸ்டண்ட் வேலை கிடைக்கும்.இப்படி கிடைத்தால் உங்கள் கல்விக்கட்டணம் முழுக்க தள்ளுபடி செய்யப்பட்டு மாதாமாதம் உதவித்தொகையும் வழங்கப்படும்.இப்படி கிடைக்க வாய்ப்பு இல்லாவிட்டால் கைகாசு செலவழித்து படிக்க தயாராக இருந்தால் மட்டும் அமெரிக்கா செல்ல ஆசைப்படவும்.

5.ஜிமேட்,டோபெல்,ஜிஆ.ஈ ஆகியவற்றில் தேர்ச்சி பெற குறைந்தது 1 வருடம் கடும் உழைப்பு மேற்கொள்ள வேண்டும்.பல மாணவர்கள் தங்கள் இளங்கலைபட்ட கடைசி வருடத்தின்போதே இதற்கும் படிப்பார்கள். ஜிஆரீ, டோபெல் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் உண்டு.காசு கரையும் என்றாலும் காசு பிரச்சனை இல்லை என்றால் இவற்றில் சேர்வது நலம்.அல்லது நீங்களாக தயார் செய்யவிரும்பினால் (இது உத்தமமான வழியும் கூட) அதற்கான சாப்ட்வேர்கள்,புத்தகங்கள் ஆகியவற்ரை வாங்கி தயார் செய்வது நலம். காசை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று பழைய மார்க்கட்டில் இந்த புத்தகங்கலை வாங்காதீர்கள். லேண்ட்மார்க், ஹிக்கின்பாதம்ஸ்,அமேசான் ஆகியவற்றில் லேட்டஸ்டாக வந்த புத்தகங்களை வாங்குங்கள்.அல்லது இந்த பரிட்சைகளை நடத்தும் இனையதளத்தில் கிடைக்கும் மேன்யுவல்களை வாங்குங்கள்.

6.இதற்குமுன் நீங்கள் செய்யவேண்டிய விஷயம் பாஸ்போர்ட் எடுப்பது. உங்கள் பாஸ்போர்ட்டில் எக்ஸ்பைர் டேட் இன்னும் ஓரிரு வருடங்களில் முடிவதாக இருந்தால் அதை எக்ஸ்டண்ட் செய்வது நல்லது.பாஸ்போர்ட் இல்லாவிட்டால் டோபெல், ஜிமேட் ஆகியவற்ரை எழுதவே முடியாது.ஆக முதல் வேலை பாஸ்போர்ட் எடுப்பது.

7.ஒரு சர்வதேச கடன் அட்டை உங்களிடம் இருப்பது அவசியம்(டெபிட்கார்ட் பயன்படாது). டோபெல்,ஜிஆரி ஆகியவற்ரை நடத்துபவர்கள் சர்வதேச கடனட்டை வழியாகத்தான் விண்ணப்ப கட்டனத்தை பெறுவார்கள்.

(தொடரும்..)

19 comments:

கால்கரி சிவா said...

//கூடுமானவரை காசு இல்லை என்றால் இளங்கலை பட்டங்களை அமெரிக்காவில் படிப்பதை தவிர்த்தல் நலம்.//

சரியான வார்த்தை செல்வன் கால்டெக்கில் படிக்க வருடாந்திர செலவு $40K.

என் மகனின் மேல் பாசத்தை பிழிந்து கால்கரியில் படிடா என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்

Anonymous said...

மிகவும் பயனுள்ள பதிவு செல்வன்.

Boston Bala said...

Nanri Selvan

Anonymous said...

செல்வன்,

தமிழில் இந்த தகவல்களை யாராவது எழுதியிருக்கிறார்களா என
கடந்த வாரம்தான் தேடிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நல்ல தகவல் பதிவு.
நன்றி.

நம்பி.பா.

Unknown said...

சிவா,சந்தோஷ்,பாபா,நம்பி

அனைவருக்கும் நன்றி.

சிவா,

உள்ளூர் பல்கலைகழகத்தில் சேர்ந்தால் இன்ஸ்டேட் மாணவன் என்பதால் பீஸ் குறைவாக வாங்குவார்கள்.முதுகலை பட்டம் எங்கே வேண்டுமானாலும் படிக்கலாம்.

குமரன் (Kumaran) said...

செல்வன். நல்ல தொடர். பயனுள்ள தொடர்.பாலாஜி 'சாப்ட்வேர் எஞ்சினியர்' ஆவது பற்றி எழுதினார். நீங்கள் அமெரிக்காவில் படிப்பதைப் பற்றி எழுதுகிறீர்கள். யாராவது H1B பற்றியும் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். நானாகக் கூட இருக்கலாம். :-)

Anonymous said...

நல்ல பதிவு

செல்வநாயகி said...

பயனுள்ள பதிவு

Unknown said...

நிர்மல், செல்வநாயகி

மிக்க நன்றி

Unknown said...

நன்றி குமரன்

H1B பற்றிய தொடர் மிக பயனுள்ளதாக இருக்கும்.கண்டிப்பாக எழுதுங்கள்.

Anonymous said...

Though undergraduate courses in elite colleges (USA) are expensive, these colleges also offer lots of grants to cover your expenses. (well-for right candidates--- good GPA's, national achieveres, low income groups -some cases the fees are only marginally higher than state colleges.) You can also take loans. IMO, it is worth it at least for Indian NRI's residing outside USA like middle east, canada, far east etc., Ofcourse it is very difficult to get admission incolleges like Caltech, Stanford,Harvard etc. But once you are "in" there are ways and means! I heard there were about 80 DPS (Delhi Public chool ) kids got admiited to elite US universities last year....

Anonymous said...

Its a good one to start with. But at the same time, I would like the information to be more precise.

I would like to share some of my thoughts. Regarding the GRE,TOEFL coaching classes in tn, its only availble in chennai(some 3 yrs back). datamatics in alwarpet is good one.ofcouse no. are there. first of all, awareness is not there in rest of tn. inspite of somany engg.colleges in tn, only few hundreds(of tamilians) are coming. also, there is a wrong conception in tn that only engg graduates can only come to US for higher studies. even msc's can write gre and toefl.

a lot of things can be told. let me see your next post.

continue this.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல பதிவு செல்வன்!
அதுவும் தமிழில் சொல்வதால் பல புறநகர் மாணவர்களை இன்னும் எளிதாகச் சென்று அடையும்!

அப்படியே இந்தியாவில் ஏற்கனவே வேலையில் இருப்போர், மேற்படிப்பு படிக்க வருவதற்கான குறிப்பும் இடையே தாருங்கள்!

//வலைதலங்களில் தேடினால் ஏதாவது இந்தியமாணவர் பற்றிய தகவல் இருக்கும்.புரொபசர்கலை தொடர்பு கொள்ளதீர்கள்.பதில் அனுப்ப மாட்டார்கள்//

:-))))

Unknown said...

Thanks for the updates anonymous,

I still think its risky to go to USA for UG courses(Unless you are rich or get seats in ivy league schools).as far as I know getting stipends or scholarships for Ug courses in many universities are very difficult.

GMAt and GRe training depends upon the people who coach you.There are some reputed consultancies,but they franchise their operations and as a result coaching standards might fluctuate due to this.

But still such coaching might be useful for people who really dont know much about these exams.

Anonymous said...

while in their 4th year of study, lot of students will take GATE exam, but only very few will be aware of GRE. This is because awareness is not there.plus SHARING THE INFORMATION among tamilians(?) is not there. I hope you understand this:)

nowadays due to internet, things are changing slowly. but thats not enough. then one more comment rega this statement.


"அமெரிக்காவிலுள்ள நல்ல பல்கலைகழகங்களில் சேர ஒன்று பெரும் பணக்காரனாயிருக்க வேண்டும் அல்லது மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும்"

you are wrong. i know how people are getting their financial statements.i repeat, lot of things are there.

selvan, dont take me wrong. if you've not gone thru this f1 process personally, its very hard for u to write a genuine article on this topic.

Anonymous said...

1/06/2007 05:33:27 PM
செல்வன் said...
//Thanks for the updates anonymous,

I still think its risky to go to USA for UG courses(Unless you are rich or get seats in ivy league schools).as far as I know getting stipends or scholarships for Ug courses in many universities are very difficult..//

Selvan: My comments were only IF the sons or daughters are admitted in the Ivy league and other elite universities.

US News week every year publishes the University rank list. They also have a list of schools (ranked)which "meets" the tuition fees based on family's annual salary. You have to see the "premium edition" of the US News week to see the list. I had this list for the year 2005. I will try to find it post it here if some one needed.Mot of these schools are IVY league, Stanford, JHU, Chicago univeristy etc.,

One of the many forms you will be filling it up is the parents annual income/ tax paid etc., They calculate the family contribution (how much one can afford) and they cover the balance amount in terms of grants and loans.They have a commitment to cover the tuition fees and boarding fees for the "right" students. with this it is quite possible for Indians specially working in Canada, Far east etc., If you get an admission (this is the difficult part) financial officers will definitely work with the parents. Some of the kids get part time employment.

Please go over the brochures!

I saw few Indian UG students and happened to meet one of them ( who came from Chennai) at Johns Hopkins university. He schooled in DAV high school- He tried in IIT and did not get admission and hence he came here. He said this is more or less the apttern for most of high school students in schools Like DAV, Padma shesadri etc.,He seemed to be from middle/ upper middle class back ground only. After granst etc., they have to pay less than half- probably like 15 to 20K. That's why I felt such admissions can be definitely possible/ feasible for the NRI's children in ME/Canada etc.,
Honestly, I felt so happy to see "tamil speaking young kids" there, Selvan!!! -thiyagarajan

Unknown said...

கண்ணபிரான்

//அப்படியே இந்தியாவில் ஏற்கனவே வேலையில் இருப்போர், மேற்படிப்பு படிக்க வருவதற்கான குறிப்பும் இடையே தாருங்கள்//

கண்டிப்பாக இடையிடையே அந்த குறிப்புகளையும் தருகிறேன்.அம்மாதிரி மாணவர்களுக்கும், ரெகுலர் மாணவர்களுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை(வயது, திருமணம் F2 போன்றவற்றை தவிர்த்து.அந்த நடைமுறைகளையும் எழுதுகிறேன்)

அன்புடன்
செல்வன்

Unknown said...

Thanks for the updates thiyagarajan.I have written about some of the issues you raised in my second part of this article.I will address the financial statement issue which you mentioned in my future articles.

Pls update and share any information you know in the feedback,so that students will get to know more information.

Regards
selvan

வடுவூர் குமார் said...

செல்வன்
இரண்டாம் பதிவை படித்து முடித்துவிட்டு முதலுக்கு வந்துள்ளேன்.
அப்பாக்கள் நாங்கள் படித்து புரிந்துகொண்டு அவர்களுக்கு சொல்லவேண்டும்.
நல்ல பணி.