Saturday, November 11, 2006

210. கருணாநிதி, ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

திடீரென எனக்கு ஒரு விபரீத ஆசை வந்துவிட்டது. அதாவது நமது தமிழகத்தில் உள்ள மிகப்பெரும் கோடிஸ்வரர்களான அம்மாவும், ஐயாவும் எத்தனை சொத்து சேர்த்திருப்பார்கள் என்பதை கணக்கிடும் ஆசைதான். இது சாதாரண மனிதனால் இயலும் காரியமல்ல என்பதால் குத்து மதிப்பாக தான் கணக்கிடுகிறேன். சன்டிவியின் 10% பங்கு பங்குசந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. மொத்தம் 68,89,000 பங்குகள்(10%) பங்கு ஒன்றுக்கு 1500 ரூபாய் என்ற விகிதத்தில் பங்குசந்தையில் விற்கப்பட்டுள்ளது. கலாநிதிமாறன் வசமுள்ள மீதம் 90% பங்குகளையும்(6200100) பங்கு ஒன்றுக்கு 1500 ரூபாய் என்ற மதிப்பீட்டில் கணக்கிட்டால் கலாநிதிமாறன் வசமுள்ள சன்டிவி பங்குகளின் மதிப்பு :9300 கோடி ரூபாய்கள் அரசியலில் சுத்தமாக ஈடுபடாத கலாநிதிமாறன் மட்டும் 9300 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்க்க முடிகிறது என்றால் ஐயாவின் சொத்து எத்தனை இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியுமா என்ன? குத்துமதிப்பாக கலாநிதியின் சொத்தை விட மொத்தம் 10 மடங்கு அதிகம் இருக்கும் என வைத்துகொண்டால் கூட கலைஞர் ஐயாவின் குடும்ப சொத்து மதிப்பு 93,000 கோடி ரூபாய்கள். கலைஞருக்கு சற்றும் சளைக்காதரவான அம்மா மட்டும் சும்மா இருப்பாரா என்ன? அவரும் இதே அளவிலான சொத்துக்களை சேர்த்திருப்பார் என்பது உறுதி. ஆக அம்மாவின் சொத்து மதிப்பும் 93,000 கோடி ரூபாய் என வைத்துக்கொண்டால்... அம்மா மற்றும் ஐயாவின் மொத்த சொத்து மதிப்பு 186,000 கோடி ரூபாய்கள். தமிழ்நாட்டின் ஜனத்தொகை 5 கோடி.(குடும்பத்துக்கு 4 பேர் என கணக்கு போட்டால் மொத்தம் 1.25 கோடி குடும்பங்கள்) 186,000 கோடியை 1.25 கோடியால் வகுத்தால் கிடைப்பது 148,800 ரூபாய். அதாவது ஐயாவிடமும், அம்மாவிடமும் உள்ள சொத்துக்களை பிரித்து கொடுத்தால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 148,800 ரூபாய் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு சுயதொழில் செய்தால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் முன்னேறும். தமிழ்நாடும் ஜப்பானுக்கும், அமெரிக்காவுக்கும் போட்டியாக வளர்ந்த நாடாகி விடும். ஏழ்மை என்பதே தமிழகத்தில் அதன்பின் இருக்காது. வறுமைக்கோடு, மலமள்ளுபவர்கள் என அனைத்து குடும்பமும் முன்னேற இதுதான் சிறந்த வழி. செய்வார்களா அம்மாவும், ஐயாவும்? பி.கு:பின்னூட்டம் இடுபவர்களின் வசதிக்கு சில டெம்ப்ளேட்டுகள் ஐயா மற்றும் அம்மாவின் சொத்தின் மீது கை வைக்க வேண்டுமென்றால் கூடவே விஜயகாந்த், அம்பானி, நாராயணமூர்த்தி, கார்ப்பரேட் சாமியார்கள் மற்றும் திருக்கோயில்களின் சொத்தையும் பிடுங்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படியா?ஆந்திரா, குஜராத், மணிப்பூர், சோமாலியா, பர்மா, மலேசியாவை பார். அங்கும் இப்படித்தான் ஊழல் நடக்கிறது ஒட்டுமொத்தமாக தனியார் சொத்தையே தடை செய்து பொதுவுடமை சமூகம் மலரவேண்டும். அப்படி செய்த பிறகு தான் ஐயா மற்றும் அம்மா சொத்தின் மீது கை வைக்க வேண்டும்.

30 comments:

Anonymous said...

இவ்வளவு சொத்தும் மக்களின் சொத்துத்தானே பறித்தெடுக்க மக்கள் தயார்,ஆனால் ஐயாவை,அம்மாவைக் காக்கும் காக்கிச் சட்டையும்,சட்டமும் விடுமோ?விடாது.அப்ப எது நமக்கு எதிரீங்க?

Unknown said...

அதே காக்கிசட்டையையும், சட்டத்தையும் வைத்துத்தான் சொத்தை பறிக்க சொல்கிறேன்.
சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. தேவை அதை செய்யக்கூடிய மன உறுதி உள்ள ஒரு முதல்வர்.

Anonymous said...

என்னய முதல்வரா ஆக்குங்க... நான் செஞ்சி காமிக்கிறேன்.... ஆனால் என் கல்யாண மண்டபத்த காப்பத்திக்குவேன். அத கட்டுறதுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தேன்னு எனக்குத்தான் தெரியும்.

Anonymous said...

அரசியலில் ,ப்படியரு கூட்டம் மக்களைச் சுரண்டும்போது,,வர்களைத் தொடர்ந்து சினிமாக்கூட்டம்,மக்களை ஒட்டச் சுரண்டுகிறது.தமிழர்களின் மொத்தச் சொத்தையும் அரசியலும்,சிமாவும்,கொயில்களும் அடியோடு மொட்டையடிக்கும் தறுவாயில் ,தைத் தடுப்பதற்கு விழிவகுக்கும் வியூகம் ஏதாவது உண்டாங்க?அதுபற்றியும் சொல்லுங்களேன் சாமி

Unknown said...

விஜயகாந்த்,

மனசை தளர விட்டுடாதிங்க. நல்லா யோசிச்சா இன்னும் நல்ல பதிலா கிடைக்கும். :-)

enRenRum-anbudan.BALA said...

செல்வன்,
யப்பா, என்ன ஒரு திறனாய்வு ???
வர வர ஒங்க ரவுசு தாங்க முடியல, சாமீ :)))
உண்மை என்னவென்றால், யாரும் எதுவும் பண்ண முடியாது :-(

Pl. read:
http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post_11.html

Unknown said...

மதன்,

சினிமாகாரர்கள் உழைத்து பிழைக்கின்றனர். கோயில் காசு அரசுக்கு போகிறது. ஆக இவர்கள் இருவர் மீதும் நான் தவறு காணவில்லை. ஆனால் அரசியல்வாதிக்கும், அதிகாரிக்கும் போகும் காசு மக்கள் வயிற்றில் அடித்து பிடுங்கிய காசு.

இதை தடுப்பது எப்படி என நாம் அனைவரும் யோசிக்க முதலில் தேவை விழிப்புணர்ச்சி.அதை வரவைக்க தான் இம்மாதிரி பதிவுகள்.

Unknown said...

பாலா

நன்றி.நம்ம ரவுசு எல்லாம் நம்ம ஐயா, அம்மாவின் ரவுசுக்கு முன் ஒன்றுமே இல்லை:-))

கால்கரி சிவா said...

ஐயாவும் அம்மாவும் அரசியலில் காலடி எடுத்துவைக்கும் நாளில் கையில் இருந்தது எவ்வளவு? என்பதையும் ஊகித்தால் நிறையபேர் சாப்ட்வேர் விட்டுவிட்டு அரசியலில் இறங்கிவிடுவர்

Unknown said...

சிவா,

உலகில் உள்ள பணக்காரர்களின் சொத்துமதிப்பை கணக்கிடும் போர்ஃப்ஸ் பத்திரிக்கையால் மட்டுமே அப்படி ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்த இயலும். சாமானியர்களால் இயலும் காரியமா அது?:-))

BadNewsIndia said...

Well, Everyone one in Tamilnadu knows about the crores that each party leads have.

When you split the amount and say that each family will get 1.4lakhs it does give a small jolt.

Roots has to be cut first.
We should start with small level corrupted officials in government jobs and random pick one of them and initiate a inquiry on them.

This 'anniyan' style random pick and destroy (legally) would make a difference.

The do-gooder should raise from amongst us.

Anonymous said...

நீஙகள் மிகக் குறைவாக மதிப்பிட்டதாக ;இருவரும் பேசிக்கொள்ளலாம்.
யோகன் பாரிஸ்

Anonymous said...

ஒரு சூத்திரன் பணக்காரனாகி விட்டானே என்ற பார்ப்பணீய பொச்சரிப்பு

Unknown said...

14

Unknown said...

//ஒரு சூத்திரன் பணக்காரனாகி விட்டானே என்ற பார்ப்பணீய பொச்சரிப்பு //

சும்மா இதை சொன்னால் மட்டும் போதாது. கூடவே "உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே, பொறுத்தது போதும், தர்மம் வெல்லும், மேட்டுக்குடி வர்க்கம், சதி" எல்லாம் சேத்துக்கணும். சரியா?:-)

Unknown said...

யோகன் பாரிஸ்,

உண்மைதான். முழு சொத்து மதிப்பையும் கணக்கிட கடவுளால் மட்டும்தான் முடியும்:-)

Unknown said...

Badnews India,

You are right in saying that we should start from corrupt officials.But the people who should initiate such process itself are corrupt.So we should start this from top.Change the government and bring in a new government.They will weed out corruption at lower level.

chinnathambi said...

i dont agree with your calculation.
kalanithi earns money from TV business.
//அரசியலில் சுத்தமாக ஈடுபடாத கலாநிதிமாறன் மட்டும் 9300 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்க்க முடிகிறது என்றால்//
this is bad assumption which implies as though politics is the most profitable than doing big corporate business. if it is so, i can say
"IF BILL GATES (WHO IS NOT IN POLITICS) HAS THIS MUCH MONEY THEN THINK ABOUT G.W.BUSH. HE MUST BE HAVINg MORE THAN BILL GATES WEALTH".
do you think the above statement is correct?

i agree both kk&jj have looted money. but compare that with kalanithi's.

மு.கார்த்திகேயன் said...

//ஒட்டுமொத்தமாக தனியார் சொத்தையே தடை செய்து பொதுவுடமை சமூகம் மலரவேண்டும். அப்படி செய்த பிறகு தான் ஐயா மற்றும் அம்மா சொத்தின் மீது கை வைக்க வேண்டும்.//

இதெல்லாம் நடக்குமா.. தக்கனூன்டு கல்யாண மண்டபதுக்கே விஜயகாந்த் இந்த குதி குதிக்கிறார்.. இவங்க எல்லாம் எல்லோரும் சொல்ற மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாங்க

chinnathambi said...

i mean "DON'T" compare with kalanithi's. amend my comment please. thanks.

வெங்கட்ராமன் said...

இதைப் பார்த்து, தி.மு.க அல்லது அ.தி.மு.க வில் இருக்கிற யாராவது ஒருவர் திருந்தினாலும் சந்தோஷமே . . . . ?

பகுத்தறிவாளர்கள், இந்த விஷயங்களை பகுத்து அறிய மாட்டார்களா. . . ?

Anonymous said...

உங்க சொத்து மதிப்பு என்ன முதலில அத சொல்லுங்க.

பெத்தராயுடு said...

செல்வன்,

வரவர பயங்கரமா ஜோக்கடிறீங்க.
93,000 கோடி என்பது virtual money ஆச்சே.

சன் டிவி பங்கின் விலை அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய சந்தையின் எதிர்பார்ப்பு மற்றும் சந்தையில் விற்பனைக்கு வரும் பங்குகளின் அளவை பொறுத்தே என்பது தாங்கள் அறியாததா?

கலாநிதி இன்னொரு 10/20 % பங்குகளை dilute செய்தாலே அல்லது ஓரிரு காலாண்டுகள் லாபம் சரிந்தாலே அவற்றின் தற்போதைய விலையிலிருந்து (1300 ரூபாய் சமீபம்) வீழ்ச்சியடையுமே?

சன் டிவியின் பிசினஸ் நேக்கு ஜெயா டிவியிடம் இல்லை என்பது கண்கூடு. ;-)

மத்தபடி, ஐயாவும் அம்மாவும் சிலபல பில்லியன் ரூபாய்களையாவது தேத்தியிருக்கக்கூடும்.

பிகு: இங்கு சன் டிவி குறிப்பிடப்படுவது ஒரு எடுத்துக்காட்டிற்காகவும், பதிவிற்கு தொடர்புடையதாலுமே.

Unknown said...

chainnathambi,

Bill gates did not develop his business through politics.He developed by his own talents and skills.

In Indonesia suhartho's sons made millions by starting companies.Can we call that as their talent?Similiar is the case here.

Unknown said...

கார்த்திகேயன் முத்துராஜன்,

நன்றி. அது சும்மா சண்டைக்கு பின்னூட்டம் போடுபவர்களை கலாய்க்க எழுதிய டெம்ப்ளேட் பின்னூட்டம்:-)

தனியார் கஷ்டப்பட்டு நேர்வழியில் சேர்த்த சொத்தை பறிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

Unknown said...

//இதைப் பார்த்து, தி.மு.க அல்லது அ.தி.மு.க வில் இருக்கிற யாராவது ஒருவர் திருந்தினாலும் சந்தோஷமே . . . . ?//

வெங்கட்ராமன்

அதுதான் என் ஆசையும். ஆனால் நடக்கும் என நம்பிக்கை இல்லை

Unknown said...

பெத்தராயுடு

சன்டிவியை ஒட்டுமொத்தமாக விலை பேசி விற்றால் பங்கு ஒன்றுக்கு 1500/- என்ற விகிதத்தை விட நல்ல விலைக்கு போகும். அதுவும் சர்வதேச டெண்டர் விட்டால் அருமையான விலைக்கு போகும்.

சன்டிவியோடு ஜெயாடிவியை ஒப்பிட முடியாது.ஆனால் அம்மா ஐயா அளவுக்கு சொத்து சேர்த்திருப்பார் என உறுதியாக நம்பலாம். மதுபான ஆலையில் மட்டும் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாய் வந்ததாம். ஒரே வருடத்தில் 3650 கோடி அதிலேயே வந்திருக்கிறது.(இப்ப அந்த 10 கோடி என்ன ஆச்சுன்னு யாராவது சொன்னால் தேவலை:-)

கூட்டிகழிச்சு பார்த்தால் கணக்கு சரிசமமாகத்தான் இருக்கும்:-)

Unknown said...

//உங்க சொத்து மதிப்பு என்ன முதலில அத சொல்லுங்க.
//

எனக்கு இருக்கும் விலைமதிக்க முடியாத சொத்து என் வாசகர்களாகிய நீங்கள் தான்:-)

Anonymous said...

ஐயா செல்வன் இதுல இன்னுருத்தர
விட்டுபுட்டிகளே அவருக்கிட்ட இருக்கிற
சொத்தும் இவங்களுக்கு கிட்டத்தில
வைச்சுகலாம் அவருதான் நடிகர் ரஜனி
இவருமட்டும் என்னவாம் தமிழனுக்கு
பிலிம்ஸ் காட்டியே கோடிகள் சேர்த்து
தமிழ் நாட்டுக்கு என்னத்த செய்தாரு.

ஏமாறவன் இருக்கிறவரைக்கும் ஏமாத்திறவனும் இருப்பான் சார்.

வேலு
.....

வெங்கட்ராமன் said...

/***********************************
நடிகர் ரஜனி
இவருமட்டும் என்னவாம் தமிழனுக்கு
பிலிம்ஸ் காட்டியே கோடிகள் சேர்த்து
தமிழ் நாட்டுக்கு என்னத்த செய்தாரு.
***********************************/

ரஜினி பணம் சேர்த்தார், அதால் யார் கஷ்டப்பட்டார்கள். நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் அப்படின்னு சொல்லி ஏமாத்தினாரா. . . ?

உட்டா டாடா, அம்பானியையும் இழுத்திடுவீங்க போலிருக்கே. . . ?